அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்

சென்ற இரண்டு நாட்களில் செய்தித்தாள்களில் வெளியான இரண்டு 498A வழக்கு விவரங்களை இதன்கீழ் இட்டிருக்கிறேன். சேலம், போடி மற்றும் அந்த ஊர்களின் அருகாமையில் வசிப்பவர்கள் அல்லது அங்கு சென்று விசாரிக்க இயன்றவர்கள் தயவுசெய்து குற்றம் சாட்டப்பட்டிருக்கும் நபர்கள் தரப்பு விவரங்களையும் கேட்டு தங்கள் பதிவிலோ அல்லது இங்கு மறுமொழியாகவோ அல்லது tamil498a [at] gmail [dot] com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கோ எழுதியனுப்பும்படி கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில் செய்தித்தாட்களில் நிருபர்கள் காவல் நிலையத்திலும் குற்றவியல் நீமன்றங்களிலும் பதிவாகியுள்ள வழக்கு விவரங்களைத்தான் சேகரித்துப் போடுகிறார்கள். எதிர்த்தரப்பு நியாயத்தைப் பற்றி அவர்களுக்கு அக்கறையில்லை. அப்படியே அவர்கள் எழுதினாலும் செய்தி ஆசிரியர் அதைப் பிரசுரிக்கமாட்டார். இதுதான் நிதர்சனம்.

மேலும் "ஐயகோ! "இளம்" பெண்ணை வரதட்சணைக் கொடுமை செய்துவிட்டார்களே" என்று எழுதினால்தான் அது நம் நாட்டில் பரபரப்பான நியூஸ்! ஆனால், "அநியாயமாக கணவனையும், மாமியாரையும், நாத்தனாரையும் அவளுடைய 3 மாதக் குழந்தையையும் பொய் வரதட்சணை கேசில் பிடித்து உள்ளே போட்டார்களே, இது நியாயமா" என்றால் அது நியூஸ் வேல்யூ இல்லை. உடனே அந்த பேப்பர் ஆபீஸ் முன் பெண்ணியவியாதிகள் கொடி பிடிப்பார்கள். டோண்டு போன்றவர்கள் (பிரச்னை எவனுக்கோ தானே, தமக்கில்லையே என்ற கெத்தில்) "க்"கன்னாவில் புள்ளி வைக்கவில்லை என்று எழுதி தங்கள் மேதாவிலாசத்தை காண்பிப்பார்கள்.

உங்கள் உதவியை எதிர்நோக்குகிறோம். நன்றி.

இப்போது செய்திகள்:-

1.

சேலம், ஜுலை.22- 2009.

சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்தவர் ரகமத்துல்லா. இவரது மகன் சபீக்(வயது29). இவர் வெள்ளிப்பட்டறை ஒன்றில் வேலை செய்துவருகிறார். சபீக்குக்கும் சேலம் கோட்டை பகுதியைசேர்ந்த சாகிபானு(25) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்தின்போது வரதட்சணையாக நகை மற்றும் பணம் சாகிபானுவின் பெற்றோர் கொடுத்துள்ளனர். மேலும் வீட்டுக்கு தேவையான சீர்வரிசை பொருட்களும் கொடுத்துள்ளனர்.

திருமணம் முடிந்து சாகிபானுவின் வாழ்க்கை சில காலம் சந்தோஷமாக கழிந்தது. இந்த நிலையில் கணவர் சபீக், மாமனார் ரகமத்துல்லா, மாமியார் சூரியபானு, அத்தான் இஸ்மாயில் ஆகியோர் சேர்ந்து சாகிபானுவிடம் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தியதாக கூறப்படுகிறது.

பெற்றோரிடம் சென்று ரூ.15 ஆயிரம் ரொக்கம், 20 பவுன்நகை வரதட்சணையாக வாங்கி வரும்படி கூறி சாகிபானுவை துன்புறுத்தியுள்ளனர். அதற்கு அவர் மறுத்து காலம் கடத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் சாகிபானுவை வீட்டுக்குள் வைத்து சமையல் கியாசை திறந்து விட்டு கொல்லமுயன்றுள்ளனர்.
அதில் இருந்து உயிர்தப்பிய அவர், தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று நடந்த கொடுமைகளை கூறி கண்ணீர் வடித்தார். அதைத்தொடர்ந்து சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.

இது குறித்து இன்ஸ்பெக்டர் ஜெயம் வரதட்சணை கொடுமை மற்றும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ரபீக்கை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் மாமனார் ரகமத்துல்லா, மாமியார் சூரியபானு, உறவினர் இஸ்மாயில் ஆகியோரை வலைவீசி தேடிவருகிறார்கள்.
--------

2.

தேனி மாவட்டம், போடி டி.வி.கே.கே.நகரைச் சேர்ந்த வர் மூக்கையா. இவருடைய மகன் சேகர் (வயது30). எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி பெயர் நாட்டரசி(20). இவர்களுக்கு திருமணம் ஆகி 11/2 வருடம் ஆகிறது. 6 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது.

திருமணத்தின் போது 7 பவுன் தங்கநகை, வரதட் சணையாக கொடுக்கப்பட்ட தாக தெரிகிறது. சேகர் மதுப் பழக்கத்திற்கு அடிமையான தாக தெரிகிறது. இதனால் நகைகளை அடகு வைத்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மின்சார சாதனங்கள் கடை வைக்க வீட்டில் இருந்து பணம் வாங்கி வா என்று நாட்டரசியை கணவர் சேகர் மாமியார் மீனாட்சி(55), மாமனார் மூக்கையா ஆகியோர் கொடுமை படுத்தியதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து நாட்டரசி போடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நிர்மலாதேவி வழக்கு பதிவு செய்து கணவர் சேகர், மாமியார் மீனாட்சி ஆகியோரை கைது செய்து போடி கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். அவர்களை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.