மிஸ்டு காலுக்கு மயங்காதே!

ஆண்டிப்பட்டி,ஆக.28- 2008. தினத்தந்தி

செல்போனில் `மிஸ்டு கால்' கொடுத்து அழைத்ததால் ஏற்பட்ட காதலில் சிக்கிய வாலிபரை மகளிர் போலீசார் கைது செய்தனர்.

மிஸ்டுகால் காதல்

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி பேரூராட்சி சக்கம்பட்டியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவருடைய மகன் அறிவழகன்(வயது22). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அடிக்கடி செல் போனில் `மிஸ்டு கால்' வந்தது.

இதைத்தொடர்ந்து அந்த செல்போன் எண்ணில் அறிவழகன் பேசத்தொடங்கினார். எதிர்முனையில் ஒரு பெண் பேசியதை தொடர்ந்து அடிக்கடி இருவரும் செல்போனில் பேசினார்கள்.

தொடர்ந்து `மிஸ்டு கால்' மூலம் பேசியதில் அந்த பெண்ணுக்கும் அறிவழகனுக்கும் காதல் மலர்ந்தது. அப்போது தான் அந்த பெண் வேலூர் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள அப்துல்லா புரத்தை சேர்ந்த தனபால் என்பவரின் மகள் உஷா(16) என்பது தெரிய வந்தது. பின்னர் இருவரும் சென்னையில் சந்தித்து தங்கள் காதலை வளர்த்துக் கொண்டதாக தெரிகிறது.

இந்நிலையில் காதலனை சந்திக்க சென்னைக்கு சென்ற உஷாவை வாலிபர் அறிவழகன் தனது சொந்த ஊரான ஆண்டிப்பட்டிக்கு கடத்தி வந்து விட்டதாக கூறப்படுகிறது. மகளை காணாததால் தேடிய தனபால் மகள் ஆண்டிப் பட்டியில் இருப் பதை அறிந்து இங்கு வந்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பூங்கோதை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது இருவரும் டி.சுப்புலாபுரத்தில் இருப்பது தெரியவந்தது. அதன்பேரில் அறிவழகனையும், உஷாவையும் போலீசார் அழைத்து வந்தனர். பின்னர் 2 பேரையும் போலீசார் ஆண்டிப்பட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தினார்கள்.

வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு சுந்தரய்யா குற்றம் சாட்டப்பட்ட அறிவழகனை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இளம் பெண் உஷாவை மருத்துவ பரிசோதனை செய்து அதன் அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மேலும் அவரை அரசு பெண்கள் காப்பகத்தில் வைக்கவும் மாஜிஸ்திரேட்டு அறிவுறுத்தி இருக்கிறார்.

கள்ளக்காதலில் உள்ள ரிஸ்குகள்

இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு 57,500 மணமான ஆண்கள் குடும்பச் சச்சரவின் காரணமாக, அதாவது மனைவியின் நடத்தைகளின் காரணமாக, தற்கொலை செய்துகொண்டு சாகிறார்கள். ஆனால் ஆண்டொன்றுக்கு மணமான பெண்கள் தற்கொலை அளவு 30,000 தான். இந்தத் தரவு இந்திய அரசே வெளியிட்டது (National Crime Records Bureau).

ஆனால் தாங்கள் கொள்ளை அடிப்பதற்காக இந்த உண்மையை மறைத்து ஏதோ இன்னமும் இந்தியாவில் மணமான பெண்கள் வரதட்சணைக்காக அன்றாடம் கொலை செய்யப்படுவது போன்ற பிரமையை உண்டாக்கி அந்தப் புனைசுருட்டை நாளிதழகள் மற்றும் ஊடகங்கள் மூலம் பரப்பி வருகிறார்கள் ஒரு கூட்டத்தினர். அவர்கள் ஏன் அப்படிச் செய்கின்றனர் என்பதைத் தெரிந்துகொள்ள நீங்கள் ராக்கெட் தொழில்நுட்பம் பயில வேண்டியதில்லை. ஆங்கிலத்தில் "vested interests" என்று அழைக்கப்படும் அதிசுயநல ஆர்வம்தான்!

தேசிய பெண்கள் வாரியம் (National Commission for Women) என்னும் தனி அமைப்பு உள்ளது. இதன் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் சிலவுக்கு பல கோடி ரூபாய்களை அரசு ஒதுக்குகிறது. தவிர ஐக்கிய நாடுகள் சபை (UNIFEM) மூலம் பல கோடி டாலர்கள் கொட்டுகின்றன. மேலும் பல வக்கீல்களுக்கு இத்தகைய கேசுகள் மூலம் ஏராளமான வருமானம் கிட்டுகிறது. தவிர All India Democratic Women Association போன்ற அரசியல் கட்சி சார்ந்த அமைப்புகள் பல பெண்கள் பெயரைச் சொல்லி பகல் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கின்றன. வரதட்சணைக் கொடுமைப் பிரச்னை இன்னும் இருக்கிறது என்று தொடர்ந்து கூக்குரலிட்டுக் கொண்டிருந்தால் தானே இவர்களின் உண்டியல் நிரம்பிக் கொண்டிருக்கும்! அதனால் இந்த மேட்டுக்குடி ரவிக்-டை-லிப்ஸ்டிக் பெண்மணிகள் "ஐயகோ, நம் நாட்டில் இன்னமும் பல கோடி பெண்கள் ஆண்களாலும் அவர்களுடயை பெற்றோர் மற்றும் உடன்பிறப்புகளாலும் வரதட்சணைக் கொடுமையால் எரிக்கப் படுகிறார்களே, அவர்களைத் தண்டிக்க இன்னமும் கடுமையான சட்டங்கள் தேவையாயிற்றே" என்று கோஷ்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அத்தகைய சட்டங்களில் ஒன்றுதான் இபிகோ 304-B என்னும் "வரதட்சணைச் சாவு" சட்டம். அதாவது சாதாரண மனிதர்கள் செத்தால் சாதாரணச் சட்டம்; மணமாகி 7 வருடங்களுக்குள் மனைவி செத்தால் அது சிறப்புச் சட்டம். இந்தச் சட்டத்தின் அடிப்படையில் மனைவியின் பெற்றோரோ உறவினர்களோ, அந்த மனைவியின் சாவுக்கு வரதட்சணைதான் காரணம் என்று சொன்னால் பொதும், as an afterthought. யாதொரு சாட்சியமோ, நிரூபணமோ தேவையில்லை. மற்ற எல்லாவித வழக்குகளுக்கும் பொருந்தும் Evidence Act இந்தச் சட்டத்திற்குப் பொருந்தாது. எவ்வித தடயமோ, சாட்சியமோ, ஆதாரமோ தேவையில்லாமல் விசாரணையுமில்லால் அந்த கணவனையும் அவனது பெற்றோரையும் 7 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை போட்டுத் தள்ளி விடுவார்கள் அதற்கு இந்தச் சட்டம் வழி செய்கிறது. அதற்குத் தேவை அந்த மனைவி இறந்து போன பிறகு அந்தப் பெண்ணின் பெற்றோரோ, அல்லது ஒன்றுவிட்ட மாமனின் மைத்துனன் மகளோ, "அவள் வரத்ட்சணைக் கொடுமையால்தான் இறந்தாள் என்று எனக்குத் தோன்றுகிறது" என்று புகார் கொடுத்தால் போதும்!

சாதாரண சொத்து விவரம் வெளியிடுவதற்கே அது தவறாகப் பயன்படுத்தப்படுமோ என்று பயப்படுவதாகச் சொல்லி அந்த விவரங்களை வெளியிடத் தயங்கும் நீதிபதிகள், இந்த 304-B, 498A சட்டங்கள் எல்லாவித விதிவிலக்குகளும் செய்யப்பட்டு தவறாகப் பயன்படுத்துவதற்கென்றே கட்டமைக்கப்பட்டுள்ளதை ஏன் மாற்றச் சொல்லக்கூடாது!

அதிருக்கட்டும், கள்ளக் காதல்கள் பெருகிவிட்ட தற்காலத்தில் கள்ளக் காதலனுடன் "உல்லாசமாக" இருக்கும் வேளையில் அல்லது அவனுடன் ஏற்படும் பிணக்கினால் இறந்தால் எப்படி வரதட்சனை வழக்கு போடுவது? பிரச்னைதான். ஆனால் சொல்ல முடியாது, இந்தச் சட்டங்கள் கள்ளக் காதலனுக்கும் பொருந்தும்படியான மாற்றங்கள் வந்தாலும் வரும்.

இந்தச் செய்தியை வாசியுங்கள்:

ஸ்டவ்' கசிந்து தீப்பிடித்ததால் கள்ளக்காதலன் வீட்டில் சமையல் செய்த பெண் கருகி சாவு

அம்பத்தூர், ஆக.26- 2009. செய்தி - தினத்தந்தி

கள்ளக் காதலன் வீட்டில் சமையல் செய்தபோது `ஸ்டவ்' கசிந்து தீப்பிடித்ததால் பெண் கருகி செத்தாள். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொளத்தூர் பொன்னியம்மன்மேடு லட்சுமியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வேணு. இவர் துணிப்பின்னல் (எம்பிராய்டரி) வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி பாரதி (வயது 35). சித்தாளாக வேலை பார்த்து வந்தாள். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.

பாரதி வேலை பார்த்த இடத்தில் மேஸ்திரியாக இருந்தவர் ரவி (42). இவருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மகள்களுக்கு திருமணமாகி விட்டது. இவர் அம்பத்தூர் சூரப்பேடு கிராமத்தில் வசித்து வருகிறார்.

கடந்த 2 வருடங்களாக ரவிக்கும், பாரதிக்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. கொளத்தூர் அம்பேத்கார் நகர் 3-வது தெருவில் தனியாக வீடெடுத்து பாரதியுடன், ரவி குடும்பம் நடத்தி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வேலைக்கு செல்வதாக கூறி விட்டு இருவரும் அங்கு சென்றனர். அங்கு தங்கி இருந்து மது அருந்தினார்கள். பின்னர் சமையல் செய்தபோது `ஸ்டவ்' கசிந்து வீட்டில் தீப்பிடித்தது.

இதில் பாரதி தீக்காயம் அடைந்தாள். அவளை காப்பாற்ற சென்ற ரவிக்கு லேசான காயம் ஏற்பட்டது. கருகிய நிலையில் பாரதி, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டாள். அங்கு சிகிச்சை பலனின்றி பாரதி பரிதாபமாகச் செத்தாள்.

இது குறித்து கொளத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருணாபாய் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

ஓடிப்போன மனைவியின் கைச்சிலவுக்காக கிட்னியை விற்கும் கணவன்!

சினிமாவைப் பார்த்து லவ் பண்ணி, கைக்காசெல்லாம் காதலிக்காக சிலவு செய்து ஒருபாடாக அவளைத் திருமணம் செய்துகொண்டு விடுகிறீர்கள். "ஆகா, என் மனத்தைக் கவர்ந்த காரிகையையே மணம் புரிந்து கொண்டேன், எனக்கு நிகர் இப்பாரில் யார் உளர்" என்று இறுமாந்து நிற்கிறீர்கள். ஆனால் அந்த மகிழ்ச்சியின் காலக்கெடு ஓரிரு மாதங்களே. காதல் மனைவியின் உள்ளக் கிடக்கை எது என்பது ஆண்களால் அறிய முடியாத புதிர். தன்னிஷ்டப்படி நடக்க கணவன் இடைஞ்சலாக இருந்தான் என்பதனால் சல்லி பெறாத விஷயத்திற்காக கோபித்துக் கொண்டு பிறந்த வீட்டிற்கு சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிடுகிறாள் அந்த வீராங்கனை. அங்கு சென்றவுடன் அவள் அறிவுரை கேட்பது சகுனி மாமாக்களிடமும் பெண்ணிய வாதம் பேசும் கிழக் கோட்டான்களிடமும்தான்.

"திரும்பியும் அவன் கிட்ட போய் நிக்க மாட்டேன்! அவனைப் பார்த்து விடணும் ஒரு கை!" என்பாள். உடனே அவர்கள், "சட்டங்கள் எல்லாமே உன் பக்கம்தான். எனக்குத் தெரிந்த வக்கீல் ஒருவர் இருக்கிறார். போலீசிடமும் மேலும் நீதி மன்றத்திலும் மிகுந்த செல்வாக்குள்ளவர். அவர் மூலம் ஒரு டஜன் கேசுகளை ஒண்ணு மேல ஒண்ணா போட்டு, ஜீவனாம்சம் (alimony), பராமரிப்புத்துகை (maintenance) என்று பல வகையில் தீட்டிப்பிடலாம் தீட்டி. அவனை ஓட்டாண்டியாக்கி நடுத்தெருவில் நிக்க வைத்து விடலாம். கவலைப் படாதே!" என்று கூறும் அறிவுரைகளினால் ஞானம் பெற்று, "ஆகா! பார்க்கிறேன் ஒரு கை!" என்று அடுக்கடுக்காக கேசுகளைப் போடத் தொடங்குகிறாள் அந்த புரட்சிப் பெண் திலகம்.

இப்படித்தான் முடிகின்றன 90%-க்கு மேற்பட்ட திருமணங்களும் (காதல் ரூட்டில் வந்தவை உட்பட).

ஆனால் ஒன்று மட்டும் உண்மை. இந்தியாவின் திருமணம் சார்ந்த சட்டங்களின் அடிப்படையில் தன்னிச்சைப்படி கணவனை விட்டு ஓடிப்போன மனைவியின் லிப்ஸ்டிக் சிலவுக்கும், செல்ஃபோன் சிலவுக்கும், அவள் தன்னிஷ்டப்படி உல்லாச வாழ்வு வாழ்வதற்கான சிலவுக்கும் சேர்த்து அந்தக் கண்வன் மாதாமாதம் பணம் கொடுத்து அழவேண்டும். அது அவன் கடமை.

ஆனால் அவனுக்கு அந்த மனைவியிடம் ஏதேனும் உரிமை இருக்கிறதா? ஒன்றும் கிடையாது. "சரீய்யா, அதான் மாசாமாசம் பணம் கொடுக்கிறேனே, இன்னமும் சட்டப்படி அவள் மனைவிதானே, ஒரு இரவு படுக்கை சுகத்தையாவது நான் கொடுக்கிற காசுக்கு கூலியா கொடுக்கக்கூடாதா" என்று கேட்டால், உடனே உங்களை "மனைவியை ரேப் பண்ண முயற்சித்தான்" என்று சொல்லி உள்ளே போட்டுவிடுவார்கள். நான் சும்மா சொல்லவில்லை. சட்டங்களும் அவற்றின் அடிப்படையில் அமைந்த தீர்ப்புக்களும் இப்படித்தான் சொல்கின்றன.

திருமணம் சம்பந்தப்பட்ட சட்டங்களில் இதுபோன்று ஓடிப்போன மனைவிகள் பல சட்டப் பிரிவுகளின் அடிப்படையில் மையிண்டெனன்ஸ் கேட்கலாம். அதாவது:

  1. குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் (Protection of Women against Domestic Violence Act) - இது போன்ற முட்டாள்தனமான சட்டம் உலகத்திலேயே கிடையாது. இதுதான் "பெண்குலம் வன்முறையே செய்யாது. ஆண்கள் மட்டும்தான் வன்முறையில் ஈடுபடுவார்கள்" என்று இருபாலரிடையே பிளவு செய்து வரையறுக்கிறது. இந்த சட்டத்தின்படி வீட்டை விட்டு ஓடிப்போன மனைவி புகார் கொடுத்தால் அவளுடைய கணவனும் அவனுடைய பெற்றோரும் தங்களுக்குச் சொந்தமான வீட்டைவிட்டே ஓடிவிடவேண்டும். கேசு போட்ட ராணியம்மா தன் மனத்துக்குகந்தவர்களுடன் அங்கு குடியேறி "உல்லாசமாக" வாழ்ந்து கொண்டிருக்கலாம்!

  2. Sec 125 of CrPC (இது மிகக் கொடுமை. பணம் கொடுக்காவிட்டால் உடனே கைதுதான்)

  3. Sec 24 of Hindu Marriage Act (உங்கள்மேல் கேசு போட அவளுக்கு நீங்களே பணம் கொடுக்கவேண்டும்!)

  4. Under Hindu Adoptions and Maintenance Act

இப்படிப் போட்டுப் பிரட்டிப் பிரட்டி செத்த பாம்பு அடிப்பதுபோல் அடித்து விடுவார்கள். "ஐயா எசமான்களே, இப்போ பொருளாதார நிலை சரியில்லை. மூணு மாசமா எனக்கு சம்பளமே வரல்ல. அப்படி இனிமே வந்தாலும் பாதி சம்பளம்தான் கிடைக்கும் போல இருக்கு. மெயிண்டனென்சை ரத்து செய்ங்க, அல்லது குறைச்சுப் போடுங்க" என்று அந்தப் புருஷன் கதறினால்கூட நீதிபதிகள் செவி சாய்க்கமட்டார்கள். "எப்படியாவது அந்தப் பெண் கேட்கிற பணத்தைக் கொடுத்துப்போடு. இல்லாவிட்டால் ஜெயிலுக்குப் போ" என்று ஆணையிட்டு விடுவார்கள். பிறகென்ன, அந்த முட்டாள் கணவன் தன் கிட்னியைத்தான் விற்க வேண்டும்!

ஆகையினால் மகா ஜனங்களே, நீங்களோ உங்கள் பையன்களோ திருமணத்தைப் பற்றி யோசிப்பதற்கு முன்னால் இந்தச் சட்டங்களைப் பற்றிய அறிவைப் பெறுங்கள். சீக்கிறமே எங்கள் அமைப்பு (Save Indian Family Foundation) ஒரு சட்ட விழிப்புணர்வுப் பட்டறையை நடத்தவிருக்கிறது. அது பற்றிய அறிவிப்பு விரைவிலேயே இங்கு வெளிவரும்.

இனி மேலே இடது பக்கத்தில் இருக்கும் செய்தியைப் படித்துவிட்டு இரண்டு சொட்டு கண்ணீர் விடுங்கள். வேறு என்ன செய்ய முடியும் நம்மால்!

ஆண்கள் ஆசிட் வீசினால் என்கவுண்டர். பெண்கள் வீசினால்?

சில மாதங்களுக்கு முன் ஹைதராபாத்தில் இரு பெண்கள் மீது ஆசிட் வீசியதற்காக மூன்று ஆண்களை என்கவுண்டரில் போட்டுத் தள்ளினார்கள் போலீசார். உடனே பல பெண்கள் இயக்கத்தினரும், பெண்ணிய வியாதிகளும், "பெண்" என்ற சொல்லைக் கேட்டவுடனேயே ஜொள்ளு விட்டு ஸ்கலிதமாகும் வெத்துவேட்டு ஆண்களும், "அவர்களை அப்படித்தான் கொல்ல வேண்டும். அநியாயமாக பெண்கள்மேல் ஆசிட் வீசியதற்கு அந்த ஆண்களை அப்படித்தான் கேள்வி முறையின்றி சுட்டுக் கொல்ல வேண்டும்" என்று கிரீச்சென்று கூக்குரலிட்டுக் கூத்தாடினார்கள்.

ஆனால் நேற்று ஒரு பெண், ஒரு போலீஸ்காரர் மீதே கலெக்டர் ஆபீசில் ஆசிட் ஊற்றினாளே, அவளை ஏன் என்கவுண்டரில் போடச் சொல்லிக் கேட்கவில்லை? எங்கே போனீங்க பெண்ணியவியாதிகளே! அன்று டை அடித்த தலையை பரப்பி வைத்துக் கொண்டு லிப்ஸ்டிக் போட்டு, கால் மேல் கால் போட்டுக்கொண்டு டிவி சேனலில் "அப்படிதான் ஆண்களை கொல்லவேண்டும். அதுதான் மிகவும் சரியான தண்டனை" என்று கோஷம் போட்ட பெரிய இடத்துப் பெண்மணிகள் எங்கே போனார்கள் இப்போது?

இந்த நாட்டில் வெகு சிக்கிறமே ஆண் குழந்தைகளை கருவிலேயே கொன்று விடுவார்கள். அல்லது கள்ளக் காதலுக்கு இடைஞ்சலாக இருக்கிறான் என்று வளர்ந்த பிறகு கொன்று விடுவார்கள் நம் பாரதி கண்ட புதுமைப் பெண்கள்.

சீ, வெட்கங்கெட்ட சமுதாயமடா இது!

இனி படியுங்கள் அந்த கண்றாவி செய்தியை:

திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம்

திருவள்ளூர் கலெக்டர் ஆபீசில் பரபரப்பு போலீஸ் காதலன் முகத்தில் ஆசிட் வீசிய காதலி கைது

திருவள்ளூர், ஆக. 26-

'திருமணம் செய்ய மாட்டேன்' என்று கூறிய காதலனின் முகத்தில் ஆசிட் வீசிய இளம்பெண் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரி முன்னிலையில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பாக்கம் முருகன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முத்து. இவரது மகள் சாந்தினி (எ) புவனேஸ்வரி (30). சென்னையில் உள்ள தனியார் ஏற்றுமதி கம்பெனியில் வேலை செய்கிறார். தினமும் பஸ்சில் வேலைக்கு செல்லும்போது சென்னை ராமாபுரம் வெங்கடேஸ்வரா நகர் பகுதியைச் சேர்ந்த சரவணன் (25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. சரவணன், சென்னை ஆயுதப்படையில் போலீஸ்காரராக இருக்கிறார். பஸ்சில் ஏற்பட்ட பழக்கம், காதலாக மாறியது.

இந்நிலையில், திருமணம் செய்துகொள்ளும்படி சாந்தினி வற்புறுத்தி வந்தார். திருமணத்துக்கு மறுத்த சரவணன், சாக்குபோக்கு சொல்லி தட்டிக் கழித்துவந்தார். ஆத்திரமடைந்த சாந்தினி, இதுபற்றி திருவள்ளூர் கலெக்டர் பழனிகுமாரிடம் புகார் செய்தார். புகாரை விசாரிக்க சமூகநலத் துறைக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
அதன்படி, சமூக நல அலுவலர் லதா, கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் வைத்து சாந்தினி, சரவணனிடம் நேற்று விசாரணை நடத்தினார். அப்போது சாந்தினிக்கும் சரவணனுக்கும் திடீரென தகராறு ஏற்பட்டது. கோபத்தில் எழுந்த சாந்தினி, கைப்பையில் மறைத்து வைத்திருந்து ஆசிட்டை எடுத்து சரவணன் முகத்தில் வீசினார். முகம் வெந்து வலியால் துடித்த அவரை உடனடியாக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சரவணன் கொடுத்த புகாரின்பேரில், திருவள்ளூர் நகர போலீஸ் எஸ்ஐ லட்சுமிபதி வழக்குபதிவு செய்து சாந்தினியை கைது செய்தார். பின்னர் அவரை திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, புழல் மத்திய சிறையில் அடைத்தார். கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

(செய்தி: தமிழ் முரசு. 27-08-2009)

கணவனென்னடா குழந்தையென்னடா கள்ளக்காதல் உலகினிலே!வெட்கக்கேடு. இந்த லட்சணத்தில் காதல் கல்யாணம் வேறு!

ஆனால் ஒரு ஆறுதல். அந்தக் குழந்தை ஒரு கள்ளக் காதல் சூழலில் வளராது. கணவனும் வரதட்சணை பொய் வழக்கிலிருந்து தப்பித்தான்!

பசை இருந்தால்தானே காதல் ஒட்டும்!

அயனாவரம் : காதலுக்கு, "குட்பை' சொல்லியும், ஏற்க மறுத்து தகராறு செய்த காதலனை போலீசார் ஈவ்-டீசிங் வழக்கில் கைது செய்தனர். (செய்தி: தினமலர் - 2009 ஆகஸ்டு 25)

சென்னை ஜி.கே.எம்., காலனியைச் சேர்ந்த டேரிக் யூட்டஸ் மகன் லியாநாத் யூட்டஸ்(27); ஷிப்பிங் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது பக்கத்து வீட்டில் கடந்த 14 ஆண்டுகளாக வசித்தவர் எட்வர்டின் மகள் ஷெரீல்(26). கடந்த ஓராண்டாக இருவரும் காலித்தனர். லியாநாத் சம்பாதிக்கும் 30 ஆயிரம் ரூபாய் பணத்தில், பாதி பணம் காதலிக்கு செலவழித்து வந்தார். இரண்டு மாதங்களுக்கு முன் லியாநாத் வேலை இழந்தார். இதையறிந்த ஷெரீல், வீட்டை அண்ணா நகருக்கு மாற்றிவிட்டார். அண்ணாநகர் வீட்டிற்கு அடிக்கடி சென்று காதலை ஏற்கும்படி லியாநாத் கூறினார்.

இதற்கிடையே, அயனாவரம் வெள்ளாளர் தெருவில் உறவினர் வீட்டிற்கு வந்த ஷெரீலை, லியாநாத், நடுரோட்டில் கையை பிடித்து இழுத்தார். இதனால், காதல் ஜோடியிடையே தகராறு ஏற்பட்டது. ஷெரீல் கொடுத்த புகாரின் பேரில், அயனாவரம் இன்ஸ்பெக்டர் எட்வர்டு, ஈவ்-டீசிங் வழக்கில் லியாநாத்தை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் அடைத்தார்.

--------------- ------------------

சுத்த விவரம் புரியாத ஆளய்யா, இவரு! இன்னொரு இலவச ஏ.டி.எம் மெஷினைத் தேடிப் போயிருப்பாள்(ர்) அந்தக் காதல் இளவரசி என்பது அறியாமல் பழைய டயலாகையெல்லாம் நம்பிப் போய் கையைப் பிடித்திருக்கிறார். சட்டம் தெரியாதவங்க!!

விட்டில் பூச்சிகள் பிழைப்பது எங்கே!!

கள்ளக்காதலை கண்டித்த கணவன் தலையை கல்லால் நசுக்கி கொலை

கள்ளக் காதல் பத்தினிகள் கணவனைக் கொலை செய்து கண்டம் துண்டமாக வெட்டும் அலை ஓயவில்லை. உண்மையில் அந்தக் கலை மேன்மேலும் வளர்ச்சி கண்டிருக்கிறது.

கள்ளக் காதல் செய்யும் பெண்குலத்திலகங்கள் தனியாகவோ கள்ளக் கூட்டாளியுடன் சேர்ந்தோ இதுபோல் கொலை செய்வது ஒரு ரகம். அவர்களை விட அதிபுத்திசாலிகள் தங்கள் கைகளை கொலை செய்து அழுக்காக்கிக் கொள்ளாமல் காக்கிகளுக்கு ஃபோன் செய்து விடுகிறார்கள். அவர்கள் அந்தக் கணவனை கவனிக்க வேண்டியபடி கவனித்து சுபாரி போட்டு விடுகின்றனர். யாராவது கூக்குரலிட்டால் விசாரணைக் கமிஷன் போட்டால் போகிறது. இது நல்லாயிருக்கே!

சரி இப்போது லேட்டஸ்ட் கொலையைப் பற்றிப் படியுங்கள்:

செய்தி: தினமலர்.

பட்டுக்கோட்டை: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த பேராவூரணி வாத்தலைக்காடு பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (40). இவர் தோப்பில் கூலி வேலை செய்து வந்தார். இவரது மனைவி நீலாவதி (35). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

பட்டுக்கோட்டை சாக்கு வியாபாரியான செந்தில் (32), வாத்தலைக்காடு பகுதிக்கு வியாபார ரீதியாக அடிக்கடி வந்து சென்றபோது, நீலாவதிக்கும், செந்திலுக்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. பல நாட்களாக நீடித்தது. இவர்களின் கள்ளத்தொடர்பு மாரிமுத்துவுக்கு தெரியவர, அவர் இருவரையும் கண்டித்தார்.

இதில், ஆத்திரமடைந்த செந்தில், நீலாவதி ஆகியோர் நேற்று முன்தினம் (15ம் தேதி) அதிகாலை ஐந்து மணியளவில் தூங்கி கொண்டிருந்த மாரிமுத்துவின் தலையில் பாறாங்கல்லை தூக்கிப்போட்டு த லையை நசுக்கி கொன்றனர். பின் பிணத்தை சாக்குப்பையில் கட்டி வீட்டுக்குள் வைத்து விட்டனர்.

இரவு பத்து மணிக்கு மேல் டி.வி.எஸ்., 50 பைக்கில் மாரிமுத்துவின் உடலை எடுத்துச் செ ன்று தூரத்தில் வீசிவிட்டு வரலாம் எனக்கருதி செந்தில், நீலாவதி ஆகியோர் புறப்பட்டனர். வழியில், தில்லங்காடு பகுதியில் நின்ற கிராமமக்கள், "சாக்கு பையில் என்ன,' என விசாரித்தனர். இவர்கள் இருவரின் தடுமாற்றமான பேச்சில் சந்தேகமடைந்து, சாக்கு மூடையை பிரித்து பார்த்தனர். சாக்கில் கொலை செய்யப்பட்ட ஒருவரது உடல் இருப்பதை அறித்து, இருவரையும் பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். பேராவூரணி போலீஸார் இருவரையும் கைது செய்தனர்.

வன்முறையில் ஈடுபட்ட மனைவி மீது வழக்கு

புதுடில்லி : கண்டபடி திட்டினாள் மனைவி; பொறுத்துப் பார்த்த கணவன், கோர்ட்டுக்குப் போய் விட்டார். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஸ்ருதி; பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இருவருக்கும் சிறிய அளவில் அவ்வப்போது மோதல் வரும். ஆனால், அப்போதே சரியாகிவிடும். சில சமயம், பெரிதாக வெடித்துவிடும். இப்படித்தான் கடந்தாண்டு ஒரு நாள் சாதாரண விஷயம், பெரிதாகி இவர்களிடையே மோதலை அதிகப்படுத்தியது.

"பள்ளிக்கு நேரமாகி விட்டது; காரில் இறக்கி விடுங்கள்' என்று மனைவி கூறியிருக்கிறாள். ஆனால், "எனக்கும் வேலை இருக்கிறது; என்னால் முடியாது' என்று கணவன் கூறி விட்டார். இது தான் நடந்தது. ஆனால், இது பெரிதாகி இருவரிடையே மோதல் வெடித்தது. "சரி, என் தந்தை உன்னைக் காரில் போய் இறக்கி விடுவார்' என்று கணவர் சொல்ல, "என்னை இறக்கி விட உங்களால் முடிந்தால் சரி; மாமனார் உதவியை நான் கேட்கவில்லை' என்று கணவனைக் கண்டபடி திட்டியிருக்கிறாள் மனைவி.

இது மட்டுமின்றி, தன் குடும்பத்தினரை அழைத்துச்சென்று, கணவரையும், அவர் தந்தையையும் தாக்க முயற்சி செய்துள்ளார் மனைவி. அறையில் அடைத்து சில ரவுடிகளை வைத்தும் தாக்க முயற்சி நடந்துள்ளது. மாமனாருக்கு சில அடிகளும் விழுந்துள்ளது. இதனால், வெறுத்துப்போன அவரது கணவர், கோர்ட்டில் மனைவிக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். "ஸ்ருதி மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் உள்ளது. அதனால், அவர் மீது விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யலாம்' என்று மாஜிஸ்திரேட் ரவீந்தர் சிங் தெரிவித்தார்.

செய்தி - தினமலர் - 20.08.2009

ஆணின் உயிர் ஒரு செல்லாக்காசு!

ஒரு பெண் புகார் கொடுக்கிறார் என்றால் அதை உடனே கவனிக்கவேண்டியது நம் சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்தினருக்கும் விதிக்கப்பட்ட கடமையல்லவா!

அதுவும் தன் கணவன்மேல் புகார் கொடுத்தால் அதை தலைபோகிற அவசரமாகக் கருதி அந்தப் பெண்பாவையின் துயர் துடைக்க காவல்துறை அதிவேகமாக - அது இரவு நேரமாக இருந்தாலும் சரி - விரைந்து சென்று அந்த குற்றவாளியை (அதுதான் கணவன் - சட்டத்தின் கண்முன் ஒவ்வொரு மணமான ஆணும் குற்றவாளிதானே!) கைது செய்து அவனைச் செவ்வனே "விசாரணை" செய்து அந்தப் பெண்ணுலத் திலகத்தின் மனத்தில் மகிழ்ச்சியூட்ட வேண்டாமா! இதுதானே நம் சமூகத்தின் கடமை. அதற்காகத்தானே அடுக்குமேல் அடுக்காக பல ஆணழிப்புச் சட்டங்களை உருவாக்கி பழி வாங்கிக் கொண்டிருக்கிறோம்.

இப்போது செய்தி:

முதலில் இன்றைய (ஆகஸ்டு 19, 2009) தினமலரில் வெளிவந்தது:

நீலாங்கரை: மனைவி கொடுத்த புகாரின் பேரில், விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்லப்பட்ட நபர் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் நீலாங்கரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், செய்யார் அடுத்த பாலூரை சேர்ந்த நந்தன் என்பவரின் மகன் ரமேஷ் (34). இவரின் மனைவி உஷாராணி (32).கடந்த 14 ஆண்டுகளுக்கு முன், நீலாங்கரையில் உள்ள ஒரு தனியார் இறால் நிறுவனத்தில் வேலை பார்த்தபோது, உடன் வேலை பார்த்த உஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின், கொட்டிவாக்கம், வெங்கடேசபுரத்தில் வசித்து வந்தனர். இவர்களுக்கு, பிரியதர்ஷினி (12) என்ற மகளும், கீர்த்திவாசன் (9) என்ற மகனும் உள்ளனர். வெங்கடேசனுக்கு குடிப்பழக்கம் உண்டு. இதனால், குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டு வந்தது.

ரமேஷ் நேற்று முன்தினம் நள்ளிரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்தார். அப்போது, உஷாவுடன் தகராறு ஏற்பட்டது.இதில், மனைவியை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, 108 எண்ணுக்கு போன் செய்த உஷா, தன்னை கணவர் கொலை செய்ய முயற்சிப்ப தாக புகார் செய்தார்.இது தொடர்பாக, நீலாங் கரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இரவுப் பணி பார்த்த சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் மூன்று போலீசார், வெங்கடேசபுரம் சென்று தகராறில் ஈடுபட்ட ரமேஷை நீலாங்கரை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.பின், போலீஸ் ஸ்டேஷனில் வைத்து அவரை விசாரித்தனர்.

விசாரணை முடிந்ததும் ரமேஷிற்கு ஜாமீன் வழங்கி, வீட்டிற்கு அனுப் பினர். போலீஸ் ஸ்டேஷனை விட்டு வெளியேறிய ரமேஷ், திடீரென மயக்கம் போட்டு விழுந்தார்.உடனடியாக அவரை அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென் றனர். அங்கு மருத்துவர்கள் கை விரித்து விட்டதால், அடையாறில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.அங்கு ரமேஷை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ரமேஷ் இறந்த தகவலறிந்து அவரின் உறவினர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.அவர்களை போலீசார் சமாதானப் படுத்தினர். பின், ரமேஷின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப் பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.இச்சம்பவம் குறித்து ரமேஷின் உறவினர்கள் கூறுகையில்,"நேற்று (நேற்று முன்தினம்) நள்ளிரவு உஷா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வந்தனர்.

வீட்டிற்கு அருகிலேயே ரமேஷை அடித்து போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்து சென்றனர். அங்கும் ரமேஷை போலீசார் தாக்கினர்.போலீசார் அடித்ததால் தான் அவர் இறந்தார். எனவே, ரமேஷை கண்மூடித்தனமாக தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் தான் அவரின் உடலை பெற்றுக் கொள்வோம்,' என்றனர்.இது குறித்து, துரைப்பாக்கம் உதவிக் கமிஷனர் முரளி கூறுகையில்,அவரின் உடலில் எந்தவித காயமும் இல்லை. இதயகோளாறு காரணமாக அவர் இறந்ததாக கூறப் படுகிறது.இருப்பினும், பிரேத பரிசோதனைக்கு பிறகே தெரியவரும்,' என்றார். ரமேஷ் மரணம் குறித்து ஆர்.டி.ஓ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
-------------------------------------
Times of India Reports:

Ramesh’s relatives had a different version about the whole incident. According to them he had been staying away from his wife and was living with his sister. He was caught by a vehicle checking team when he was riding a two-wheeler and his bike was seized as he had no documents to support them. He had told the police that he would produce the papers for the two-wheeler and had gone to the house in Kottivakkam only to pick up the vehicle documents. His wife Usha thought that he had come to torture her and called the police, his relatives alleged. They said Ramesh had no history of any illness.

Ramesh had married Usha after a brief courtship, around
16 years ago. Police said the couple used to have regular fights and that they had been staying separately for a few months.

---------------------------------

அடுத்து தினத்தந்தியில் வெளிவந்துள்ள செய்தி:-

ஆலந்தூர், ஆக.19-

குடும்ப தகராறில் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட வாலிபர் மர்மமான முறையில் இறந்தார். போலீசார் அடித்து கொலை செய்து விட்டதாக கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுத்ததால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

காதல் திருமணம்

சென்னையை அடுத்த நீலாங்கரை அருகே உள்ள கொட்டிவாக்கம் வெங்கடேசபுரத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 35). இவரது சொந்த ஊர் செய்யூர் அருகே உள்ள பாலூர் கிராமம் ஆகும்.

இவருடைய மனைவி உஷாராணி (32). இவருக்கு சொந்த ஊர் தஞ்சாவூர். கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் ரமேஷ்-உஷாராணி ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகளும், 9 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

தகராறு

உள்ளகரத்தில் உள்ள பெட்ரோல் பங்க்கில் ரமேஷ் வேலை பார்த்து வந்தார். ரமேஷ் மது அருந்தி விட்டு வருவதால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படும். இதனால் கடந்த ஒரு வாரமாக ரமேஷ் வீட்டிற்கு வராமல் இருந்தார். நேற்று முன்தினம் இரவு ரமேஷ் குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது மீண்டும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. உடனே இது பற்றி உஷாராணி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார்.

உடனே நீலாங்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன், 4 போலீசாருடன் சம்பவ இடத்திற்கு வந்தார்.

சாவு

குடிபோதையில் மனைவியுடன் தகராறு செய்த ரமேசை போலீசார் வீட்டின் முன் அடித்ததாக கூறப்படுகிறது. பின்னர் நீலாங்கரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர் மயங்கி விழுந்தார்.

உடனே போலீசார் ரமேசை தூக்கிக் கொண்டு நீலாங்கரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளித்த டாக்டர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் பெரிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறினார்கள்.

இதையடுத்து போலீசார் தங்கள் காரில் அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ரமேஷ் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினார்கள்.

மறுப்பு

இது பற்றிய தகவல் கொட்டிவாக்கம் பகுதியில் காட்டு தீ போல் பரவியது. ரமேசின் உறவினர்கள் அடையாறில் உள்ள மருத்துவமனையை முற்றுகையிட்டனர். போலீசார் அடித்ததால் தான் ரமேஷ் இறந்து விட்டதாக கூறி உடலை வாங்க மறுத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் அடையாறு துணைக்கமிஷனர் திருஞானம், துரைப்பாக்கம் உதவி கமிஷனர் முரளி மற்றும் போலீசார் விரைந்து சென்று சமரசம் பேசினார்கள். போலீசார் அடித்ததால் தான் ரமேஷ் இறந்து இருப்பதால் போலீசார் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

நீண்ட நேரத்திற்கு பின் தனியார் மருத்துவமனையில் இருந்த ரமேஷ் உடலை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர்.

நடவடிக்கை

இது பற்றி போலீசார் கூறுகையில், ``குடிபோதையில் ரமேஷ் இருந்ததால் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தோம். சிறு வழக்கு போட்டு வீட்டிற்கு செல்லுமாறு கூறினோம். ஆனால் ரமேஷ் போலீஸ் நிலைய வாசலில் மயங்கி விழுந்தார். உடனே போலீசார் ரமேசை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே ரமேஷ் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மாரடைப்பு ஏற்பட்டதால் ரமேஷ் இறந்து இருக்கலாம்'' என்று தெரிவித்தனர்.

ஆனால் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 5 போலீசார் மீது நடவடிக்கை எடுக்கும் வரை ரமேசின் உடலை வாங்க மாட்டோம் என்று அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

ஆர்.டி.ஓ. விசாரணை

இந்த நிலையில் ரமேசின் மர்ம சாவு பற்றி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்திட சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார். ஆர்.டி.ஓ. விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை முடிவின் அறிக்கை பெற்றபிறகு தான் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தினால் கொட்டிவாக்கம், நீலாங்கரை கிழக்கு கடற்கரை சாலையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

தனிக்குடித்தனம்

தனிக்குடித்தனம் வர மறுத்த கணவனை பொய் வரதட்சணை கேசு போட்டு (498A) உள்ளே தள்ளிய மனைவியின் வீர சாகசத்தைப் பற்றி முந்தைய இடுகை ஒன்றில் கண்டோம்

இதேபோல் இன்னொரு தனிக்குடித்தனம் பற்றிய சண்டை கொலையில் முடிந்திருக்கிறது.

இன்றைய (18-08-2009) தினத்தந்தியில் வெளிவந்துள்ள செய்தியை வாசியுங்கள்:

தனிக்குடித்தனம் நடத்த வராவிட்டால், தனது பெற்றோரை உணவில் விஷம் வைத்து கொலை செய்வேன் என மிரட்டியதால் மனைவியை கொலை செய்ததாக, கைதான கணவர் செந்தில்குமார் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.

காதலித்து கலப்பு திருமணம்

மனைவி ஜெயஸ்ரீயை கொலை செய்த வழக்கில் கைதான கணவர் செந்தில்குமார், தனியார் செல்போன் நிறுவன வாடிக்கையாளர் சேவை பிரிவு அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். கொலை பற்றி போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

கடந்த 2005-ம் ஆண்டு நானும் ஜெயஸ்ரீயும் காதலித்து கலப்பு திருமணம் செய்துக் கொண்டோம். எங்களுக்கு வந்தனா என்ற 1 1/2 வயது பெண் குழந்தை உள்ளது. எங்களுடன் எனது பெற்றோர் கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர். இதற்கு எனது மனைவி எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

தனிக்குடித்தன தகராறு

தனிகுடித்தனம் போக வேண்டும் என்று என்னை அடிக்கடி வற்புறுத்தி வந்தார். அதற்கு மறுப்பு தெரிவித்து வந்தேன். இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்படும். நேற்று இரவு குழந்தையை தூங்க வைக்கும் போதும் தனிக்குடித்தனம் போவது பற்றி எங்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது.

நள்ளிரவு 1-30 மணி வரை எங்களுக்குள் சண்டை நடந்தது. அப்போது ஜெயஸ்ரீ தனிக்குடித்தனம் வர தடையாக உள்ள எனது பெற்றோரை உணவில் விஷம் வைத்து கொன்று விடுவேன் என்று மிரட்டினார். மனைவியின் இந்த வார்த்தைகள் எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

துண்டால் கழுத்தை இறுக்கி

சிறிது நேரத்தில் ஜெயஸ்ரீ படுக்கையின் கதவை திறந்து வெளியே வந்தார். இவளை கொன்றால் தான் பெற்றோரை பாதுகாக்க முடியும் என தீர்மானித்தேன். உடனே நான் பயன்படுத்தும் துண்டை(டவல்) எடுத்து சென்று ஜெயஸ்ரீயின் முகத்தை கழுத்து வரை இறுக்கினேன்.

இதில் ஜெயஸ்ரீ மயங்கி விழுந்தார்.

மூச்சு பேச்சின்றி கிடந்த அவரை பார்த்தபோது வாயில் நுரை தள்ளியிருந்தது. உடனே நான் வீட்டில் இருந்த கத்தியை கொண்டு கழுத்தை அறுத்தேன். போலீசாரிடம் இருந்து தப்பிக்க நகைகளை கொள்ளையடிப்பதற்காக கொலை நடந்ததுபோல் நாடகம் ஆடினேன்.

கதறி அழுதார்

ஜெயஸ்ரீயின் கழுத்தில் கிடந்த தாலி செயினை பறித்தேன். பாதியை கழுத்தில் போட்டு மிதமுள்ள நகைகளை ஹெல்மட்டில் மறைத்து வைத்தேன். கத்தியை கட்டிலின் கீழ் போட்டேன். போலீசை நம்ப வைக்க நான் நடத்திய நாடகம் அம்பலமானதால் சிக்கிக்கொண்டேன்.

பெற்றோரை கொலை செய்வேன் என மிரட்டியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அன்பான என் மனைவியை கொலை செய்து, மகளை அனாதையாக்கி விட்டேன் என கூறி, செந்தில்குமார் கதறி அழுதார்.

வரதட்சணை கொடுமை என்று சொல்லி உள்ளே தூக்கி போட்டு விடுவேன்!

சிம்லாவில் 2 நாட்கள் நடக்கிறது
மனைவியின் கொடுமைக்கு ஆளான கணவர்களின் மாநாடு
சென்னை ஆண்களும் பயணம்

செய்தி - தினத்தந்தி

சிம்லா, ஆக.15-

மனைவியின் கொடுமைக்கு ஆளான கணவர்களின் மாநாடு சிம்லா நகரில் 2 நாட்கள் நடைபெறுகிறது. இதில் சென்னையை சேர்ந்த ஆண்களும் கலந்து கொள்கிறார்கள்.

வரதட்சணை கொடுமை

`கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்' என்று சொல்லிக் கொண்டிருந்த காலமெல்லாம் மலையேறி விட்டது. கணவன் அடித்தாலும், உதைத்தாலும் அவன் காலடியிலேயே கிடந்து வாழ்க்கையையே தியாகம் செய்யும் பெண்கள் வாழ்ந்த காலம் கிட்டத்தட்ட முடிந்து விட்டது.

இப்போதெல்லாம், "உனக்கும் எனக்கும் பிடிக்கவில்லையா? வா, விவாகரத்து செய்து கொள்வோம்'' என்று கூறி கணவனை கோர்ட்டுக்கு இழுத்து சட்டரீதியாக அவரை விட்டு பிரிந்து செல்லும் துணிச்சல் பெண்களுக்கு வந்து விட்டது. இதுபோன்ற பெரும்பாலான வழக்குகளில் சம்பந்தப்பட்ட பெண்கள் கூறும் காரணம், `வரதட்சணை கொடுமை', `அவரோடு இனிமேலும் என்னால் சேர்ந்து வாழ முடியாது' என்பதுதான்.

மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள்

சமீபத்திய சில ஆண்டுகளாக இதுபோன்ற விவாகரத்துகள் அதிகரித்து உள்ளன. கணவன் சேர்ந்து வாழ விரும்பினாலும். சில பெண்கள் இதுபோன்ற காரணங்களை கூறி வாழ்க்கையில் இருந்து அவரை `கழற்றி' விடுவதில் வெற்றி பெற்று விடுகிறார்கள்.

கையை ஓங்கினால் கூட, "வரதட்சணை கொடுமை என்று சொல்லி உள்ளே தூக்கி போட்டு விடுவேன்'' என்று கணவனை மிரட்டும் துணிச்சல் பெண்களுக்கு வந்து விட்டது.

இப்படி மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவன்மார்கள் பல்வேறு மாநிலங்களிலும் ஒன்று சேர்ந்து சங்கங்களை தொடங்கி தங்களுடைய உரிமைகளுக்காக போராடி வருகிறார்கள்.

சிம்லா நகரில் மாநாடு

மனைவிமார்களின் கொடுமைக்கு ஆளான கணவர்களின் மாநாடு இமாசலபிரதேச மாநிலம் சிம்லா நகரில் இன்று (சனிக்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது. இதில் சென்னை, பெங்களூர், மும்பை, ஐதராபாத், டெல்லி, சண்டிகார் உள்ளிட்ட பல்வேறு நகரங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொள்கிறார்கள்.

இந்த தகவலை குமார் வி.ஜகீதார் என்பவர் நேற்று சிம்லா நகரில் நிருபர்களிடம் தெரிவித்தார். இவர் பெங்களூர் நகரில், `குழந்தைகள் மீது கணவன்-மனைவி இருவருக்கும் உள்ள சம உரிமைக்காக பாடுபடும் சங்க'த்தின் தலைவராக இருந்து வருகிறார்.

தற்போதுள்ள வரதட்சணை கொடுமை சட்டம் பெண்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும், பெரும்பாலான விவாகரத்து வழக்குகளில் குழந்தைகள் தாயிடமே இருக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்படுவதை சில பெண்கள் தங்களுக்கு சாதமாக எடுத்துக் கொண்டு கணவரை கொடுமைப்படுத்துவதாகவும் அவர் கூறினார். கோர்ட்டுக்கு போனால் அவமானப்பட்டு விடுவோம் என்று கருதி பல ஆண்கள் மனைவியின் இத்தகைய கொடுமையை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவித்துக் கொண்டு இருப்பதாகவும் ஜகீர்தார் தெரிவித்தார்.

மத்திய மந்திரியிடம் மனு

இதுபோன்ற சம்பவங்களில் பாதிக்கப்படுவது பெரும்பாலும் ஆண்கள்தான் என்றும், அவர்கள் புகார் கொடுத்தால் போலீசார் அதை பதிவு செய்வது இல்லை என்றும் கூறிய அவர், ஆண்-பெண் இருபாலாருக்கும் சமமாக இருக்கும் வகையிலான விவாகரத்து சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று கோரி மத்திய சட்ட மந்திரி வீரப்ப மொய்லியிடம், பாதிக்கப்பட்ட கணவன்மார்களின் சங்கத்தின் சார்பில் மனு கொடுக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

போகிற போக்கை பார்த்தால், `சிவம் இல்லையேல் சக்தி இல்லை; சக்தி இல்லையேல் சிவம் இல்லை' என்ற வார்த்தைக்கே அர்த்தம் இல்லாமல் போய் விடும் போலிருக்கிறது.
========================

இந்த செய்தியையும் வாசித்துவிடுங்கள்!

========================

வரதட்சணை கொடுமை கணவன்,மாமனார் கைது (செய்தி - தினமலர்)

திண்டுக்கல்: ஆத்தூர் அருகேயுள்ள அய்யம்பாளையத்தை சேர்ந்த ஆண்டிச்சாமி மகள் தேவி(24). இவருக்கும் உடுமலைப் பேட்டையை சேர்ந்த முத்துப்பாண்டி(29)க்கும் கடந்த 2.6.2006ம் ஆண்டு திருமணம் நடந்தது. 20 பவுன் நகை, 20 ஆயிரம் ரூபாய் வரதட்சணையாக கொடுத்துள்ளனர். தற்போது 70 ஆயிரம் ரூபாயும், 20 பவுன் நகையும் கேட்டு மனைவியை துன்புறுத்தியுள்ளனர்.மாமனார் தேவராஜ்(54), மாமியார் பாண்டியம்மாள் உட் பட 9 பேர் மீது தேவி நிலக்கோட்டை அனைத்துமகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து கணவன்,மாமனாரை கைது செய்தனர்.

மனைவிகளின் கொடுமையால் பாதிக்கப்பட்ட இந்திய கணவர்களின் மாநாடு

சிம்லாவில் மனைவியால் பாதிக்கப்பட்ட கணவர்கள் மாநாடு
சனிக்கிழமை, ஆகஸ்ட் 15, 2009.

சிம்லா: மனைவிகளின் கொடுமையால் பாதிக்கப்பட்ட இந்திய கணவர்களின் மாநாடு சுதந்திர தினமான இன்று சிம்லாவில் நடக்கிறது.

இந்தியாவில் கடந்த நூற்றாண்டு வரை பெண்கள் வீட்டு அடிமைகளாக நடத்தப்பட்டனர். திருமணத்துக்கு தந்தைக்கும், திருமணத்துக்கு பின் கணவருக்கும், வயதான காலத்தில் மகனுக்கும் அடிமைகளாக இருந்தனர்.

மேலும், ஒவ்வொருவரின் வாழ்க்கையின் முக்கிய கட்டமான திருமணத்தின் போது பெண்கள் வரதட்சனை என்ற பெயரில் பெரும் கொடுமைகளை அனுபவித்து வந்தனர். இதையடுத்து இந்தியாவில் வரதட்சனை ஒழிப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், தற்போது 21ம் நூற்றாண்டில் தகவல் தொழில்நுட்பம், பொறியியல், வி்ஞ்ஞானம் என அனைத்து துறைகளிலும் பெண்கள் நன்றாக முன்னேற்றம் கண்டுள்ள நிலையில் சிலர் இந்த வரதட்சணை ஒழிப்பு சட்டம் போன்றவற்றை தங்களது சொந்த லாபத்துக்காக பயன்படுத்தி வருகின்றனர்.

கணவன்மார்களை தங்களது கைக்குள் வைத்துள்ளவும், பிடிக்காத கணவரை கழட்டிவிடவும் வரதட்சணை வழக்கு தொடருவேன் என மிரட்டும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. இது தொடர்பாக நீதிமன்றத்துக்கு போனால் மானம் போய்விடும், 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்பதால் பல ஆண்கள் அஞ்சி பேசாமல் இருந்துவிடுகின்றனர்.

மேலும், இது போன்ற வழக்குகளில் குழந்தைகள் தாயாரிடம் இருக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்படுவதால் குழந்தைகளை பிரிய விரும்பாத நல்ல தந்தையாக இருக்க நினைக்கும் ஆண்களும் பெரும் துன்பத்துக்கு ஆளாகி வருகிறார்கள்.

ஆண்கள் இது போன்ற பிரச்சனைகளை சந்தித்து வருவதை ஒரிசா பெண்கள் கமிஷனும் ஒத்துகொண்டுள்ளது. கணவனை கொடுமைப்படுத்த வரதட்சணை கேட்கபதாக பெண்கள் பொய் புகார் கொடுப்பது அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இது போன்ற பெண்களால் பாதிக்கப்பட்ட கணவர்கள் ஒன்றிணைந்து, ஹிமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் மாநாடு ஒன்றை இன்று துவக்கியுள்ளனர்.

இது குறித்து இந்திய குடும்ப அடிப்படைகளை காப்பாற்றுங்கள் என்ற பெங்களூர் அமைப்பின் உறுப்பினர் விரக் துலியா என்பவர் கூறுகையில்,

எங்கள் மாநாட்டை சுதந்திர தினத்தின் போது நடத்த திட்டமிட்டோம். இதன் மூலம் எங்கள் பிரச்சனையை அனைவரின் கவனத்துக்கும் கொண்டு வரலாம் என நம்புகிறோம்.

மூன்று நாள் நடக்கும் இந்த மாநாட்டில் சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களை சேர்ந்த 100 ஆண்கள் உரிமை அமைப்பிகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். அவர்கள் மனைவிகளால் பாதிக்கப்பட்ட சுமார் 30 ஆயிரம் கணவர்களின் பிரதிநிதிகளாக பங்கேற்கின்றனர்.

ஒரு வாரத்தில் 350 ஆண்களுக்கு பாதிப்பு...

ஆண்களின் உரிமைகளை காப்பதற்கு சுமார் 100 ஹெல்ப்லைன் எண்களை பயன்படுத்தி வருகிறோம். இந்த எண்களுக்கு வாரத்துக்கு 300 முதல் 350 போன்கள் வருகின்றன. எங்களது சங்கம் சார்பில் இது தொடர்பாக மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லியை சந்தித்து மனு கொடுக்க இருக்கிறோம் என்றார்.

செய்தி: தட்ஸ்தமிழ்

ஓட்டப் பந்தய வீராங்கனை!

கணவனை கைவிட்டு விட்டு கள்ளக் காதலனுடன் மனைவி ஓட்டம்.

செய்தி: தினமலர் - 13-08-2009

கொடுமுடி: கொடுமுடி அருகே உள்ள வருந்தியாபாளையத்தில், கணவனை கைவிட்டு விட்டு காதலனுடன் ஓடிய பெண்ணிடம் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

கொடுமுடி அருகே வருத்தியாபாளையத்தைச் சேர்ந்தவர் நித்யா (23); விளக்கேத்தியைச் சேர்ந்த உலகநாதன் (28). இருவருக்கும் மூன்றாண்டுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப்பின், டி.பார்ம்., படிக்க நித்யா விரும்பினார். மனைவியின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு, பெருந்துறையில் உள்ள கல்லூரியில் படிக்க வைத்தார் உலகநாதன்.படிப்பு முடிந்த நிலையில், ஏற்கனவே தன்னை காதலித்த கல்வெட்டுப் பாளையத்தைச் சேர்ந்த துளசிமணியுடன் (30), நித்யா சில நாட்களுக்கு முன் மாயமானார். மனைவி வேறொருவருடன் மாயமானது குறித்து கொடுமுடி போலீசில் முறையிட்டார். துளசிமணியுடன் மாயமான நித்யாவை அழைத்து வந்த போலீசார், கணவருடன் சேர்ந்து வாழும்படி அறிவுரை கூறினர்;


ஆனால், கணவனுடன் செல்ல நித்யா மறுத்துவிட்டார்.கோபமான உலகநாதன், படிப்புக்காக செலவழித்த பணத்தை திருப்பித் தருமாறு கேட்டார்; அதற்கும் நித்யா மறுத்துவிட்டார். நொந்துபோன போலீசார், இருவரையும் நீதிமன்றம் சென்று தங்களது பிரச்னையை தீர்த்துக்கொள்ள அறிவுறுத்தினர்; இருவரும் தனித்தனியே பிரிந்து சென்றனர்.

===========

கள்ளக் காதலனுடன் ஓடிப் போனவளுடன் "பேச்சு வார்த்தை" நடத்துகிறார்களாம்! வெட்கக் கேடு!

அது சரி, இதேபோல் கணவன் மனைவியை விட்டுச் சென்றால் உடனே அவனைக் கைது செய்கிறார்களே, அது ஏன்?

மனைவி எப்போது வேண்டுமனாலும் கணவனை அம்போ என்று விட்டுவிட்டு கள்ளக் காதலனுடன் கைகோர்த்துச் சென்றுவிடலாம். அப்போது போலிசார் அவளுக்கு அறிவுரை கூறி தாஜா செய்வார்கள். அவள் முறுக்கிக் கொண்டு முடியாது என்று போய் விடுவாள். அவளை ஒன்றும் செய்யாமல் விட்டுவிடுவார்கள். ஆனால் கணவன் அதுபோல் செய்தால் அவனை உடனே கைது செய்து உள்ளே போட்டு விடுவார்கள். ஏனென்றால் சட்டங்கள் அப்படித்தான் சொல்கின்றனவாம்!

வெட்கக் கேடு ஐயா!

இப்போது இந்த நாட்டில் திருமணம் செய்துகொண்டு அடிமைப்பட்டுக் கிடக்கும் ஆண்களுக்கு சுதந்திர தினம் வேறு ஒரு கேடா!!

தனிக்குடித்தனம் வர மறுத்த கணவரை ஜெயிலுக்கு அனுப்பிய மனைவி

சென்னையில் தனிக்குடித்தனம் வர மறுத்த கணவர் மீது வரதட்சணை ஒழிப்பு சட்டத்தின் கீழ் போலீசில் புகார் கொடுத்து பட்டதாரி மனைவி ஜெயிலுக்கு அனுப்பினார்.

செய்தி: தினத்தந்தி 13-08-2009
=========================

இதுபோல் பொய் வழக்கு போடுவதற்காகவே ஒரு சட்டத்தை (498A) இயற்றி வைத்து அதைக் கொண்டு கணவர்களை நாள் தோறும் சிறைக்கு அனுப்பிக் கொண்டிருக்கும் நிலை தொடரும் போது சுதந்திரம் என்னய்யா எழவு வேண்டிக்கிடக்கிறது!

ஒவ்வொரு இந்தியனும் வெட்கித் தலை குனிய வேண்டிய நாள் தான் சுதந்திர தினம்!!

====================

செய்தி விவரம்:-

சென்னை மாம்பலம் முத்துரங்கன் தெருவைச் சேர்ந்தவர் குணா. இவர் எம்.பி.ஏ. பட்டதாரி. இவர் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு திருமணம் நடந்தது. இவர் மனைவி பெயர் பத்மபிரியா. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
பத்மபிரியாவும் எம்.சி.ஏ. பட்டதாரியாவார். அவரும் கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் கைநிறைய சம்பளத்தில் வேலை பார்க்கிறார்.

இனிதாக கழிந்த இவர்களின் இல்லற வாழ்க்கையில் தனிக் குடித்தன பிரச்சினை புயலை கிளப்பியது.

இவர்களோடு குணாவின் சித்தி மற்றும் சித்தப்பா சேர்ந்து வாழ்வதாக கூறப்படுகிறது. கூட்டுக் குடித்தனம் பிடிக்காத பத்மபிரியா, கணவரோடு தனியாக குடித்தனம் நடத்த விரும்பினார். குணா அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

இதனால் நேற்று மாம்பலம் மகளிர் போலீஸ் நிலையத்தில் பத்மபிரியா புகார் கொடுத்துவிட்டார். சித்தி, சித்தப்பாவின் பேச்சைக் கேட்டு கணவர் குணா தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், தனிக்குடித்தனம் வர மறுப்பதாகவும் புகாரில் கணவர் மீது சரமாரியாக பத்மபிரியா குற்றம்சாட்டி இருந்தார்.

உதவி கமிஷனர் கண்ணபிரான் மேற்பார்வையில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜானகி, இதுதொடர்பாக விசாரணை நடத்தினார். இருவரையும் அழைத்து கவுன்சிலிங் மூலம் போலீசார் அறிவுரை வழங்கினர்.

குணா தனிக்குடித்தனம் போக முடியாது என்று பிடிவாதம் பிடித்தார். பத்மபிரியா தனிக்குடித்தனம் போக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். தனிக்குடித்தனம் வராவிட்டால் கணவர் குணா மீது வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பத்மபிரியா போலீசாரிடம் உறுதிபட கூறிவிட்டார்.

கைதானார்

இதனால் வேறு வழியில்லாமல் நேற்றிரவு குணா மீது வரதட்சணை ஒழிப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்தனர். குணா கைது செய்யப்பட்டார். இரவோடு இரவாக கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

காதல் மற்றும் கலப்புத் திருமண தம்பதிகளான இவர்கள் சிறிய பிரச்சினைக்காக விட்டுக் கொடுக்காமல் இனிய இல்லற வாழ்க்கையை 2 பேருமே தொலைத்து விட்டார்கள் என்று பெண் போலீசார் வருத்தத்தோடு குறிப்பிட்டனர்.

பரந்து விரியும் 498A கேசுகள்

இப்போதெல்லாம் நம் பெண்குலத் திலகங்கள் திருமணம் செய்துகொள்வதே 498A கேசு போடுவதற்காகத்தானோ என்று தோன்றும் வகையில் ஊருக்கு ஊர் இத்தகைய கேசுகள் கப்பும் கிளையுமாக வளர்ந்துகொண்டே செல்கின்றன.

கல்யாண புரோக்கர்கள் இருப்பதுபோல் இப்போது 498A புரோக்கர்கள் தோன்றிவிட்டனர். இது எவ்வளவு உண்மை என்பது உங்களுக்கு விளங்க வேண்டுமானால் உங்கள் அருகாமையிலுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கோ, குடும்ப நிதிமன்ற வாசல்களுக்கோ சென்று பாருங்கள். "என்னம்மா, குடும்பத் தகறாரா? கவலையே படாதீங்க, நம்ம பலான வக்கீல் கிட்ட அளைச்சுக்கிட்டு போறேன். புருசன், மாமனார், மாமியார், நாத்தி, அவளோட கொயந்தை அத்தனை பேரையும் புடிச்சு உள்ள போட்டுடலாம். அப்பறம் புருசன்காரன் கிட்டேயிருந்து கணிசமா கறந்துடலாம்." இப்படிச் சொல்லி ஆசை காண்பித்து அழைத்துச் செல்ல ஆட்கள் அலைந்து கொண்டிருப்பார்கள். புருஷனையும் மாமியாரையும் உள்ள போடலாம்னு சொன்னவுடனேயே நம் பெண் பாவைக்கு வாயில் ஜலம் ஊறும். "ஆகா! ஜாலி" என்று குதித்துக்கொண்டு அந்த ஆளுடன் பலான வக்கீலிடம் சென்று அவர் எழுதிக் கொடுக்கும் 498A டெம்பிளேட் புகாரில் கையெழுத்துப் போட்டு விடுவார்.

மேலும் குற்றவாளிகளாக கணவன் வீட்டினர், மற்றும் அவனுடைய உறவினர், நண்பர்கள் இவர்களில் யார் யார் மேல் அந்த புதுமைப் பெண்ணுக்கு கோபம் இருக்கிறதோ, அவர்கள் அனைவரும் என்னை வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்தினார்கள். அதிலும் மாமியார் என்னை காலால் உதைத்தார் (அவர் பாவம், டயாபிடீஸ், பிளட் பிரஷரில் அவஸ்தைப் பட்டுக்கொண்டு காலைத்தூக்க சீவனற்றுக் கிடப்பார்), மாமனார் புளூ ஃபிலிம் பார்த்தார், என்னைக் கையைப் பிடித்து இழுத்தார் (அவர் தன் கையையே தூக்க இயலாதவராக இருப்பார். இந்த மருமகளோ அத்லெடிக் சாம்பியனாக இருப்பார்) என்றெல்லாம் ஜோடிக்கப்பட்ட புகாரில் மனமொப்பி கையெழுத்திட்டு விடுவார், இந்த பாரதி கண்ட புதுமைப் பெண்!

பிறகென்ன, கணவனிடம் பேரம் பேசிக் கறக்கவேண்டியதுதான் பாக்கி. 99% கேசுகள் (498A) இத்தகைய Extortion-ல் தான் முடிகின்றன!

இப்போது சமீபத்திய அறுவடைக் கேசுகளைப் பாருங்கள்:-

1. திருப்பரங்குன்றம், ஆக.11- 2009

வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்ததாக 2 பெண்கள் திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் அவர்களின் கணவர் குடும்பத்தார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கூடுதல் வரதட்சணை

திருப்பாலை எம்.எம். நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் அங்கயற்கண்ணி(வயது 38). இவருக்கும் நாகை மாவட்டம் சீர்காழியை சேர்ந்த

சிவகாசி மகன் சுரேசுக்கும்(40) கடந்த 98-ம் ஆண்டு திருமணம் நடந்தது. சுரேஷ் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். திருமணத்தின்போது அங்கயற்கண்ணிக்கு அவரது பெற்றோர் 50 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசைகள் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அங்கயற்கண்ணியிடம் அவருடைய மாமனார் சிவகாசி, மாமியார் சகுந்தலா, மைத்துனர் ரமேஷ் ஆகிய 3 பேரும் கூடுதலாக வரதட்சணை

வாங்கிவரும்படி வற்புறுத்தினார்களாம். அவர் மறுக்கவே அவரை அடித்து சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.

இது பற்றி திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அங்கயற்கண்ணி புகார் செய்தார். அதன் பேரில் சிவகாசி, சகுந்தலா, ரமேஷ்

ஆகியோர் மீது இன்ஸ்பெக்டர் கோகிலா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
==================
2. மதுரை :: என்ஜினீயர் மனைவி புகார்

மதுரை உத்தங்குடி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் ரேகா(வயது 23). இவருடைய கணவர் பாபு(25). இவர்களுக்கு கடந்த 2008-ம் ஆண்டு திருமணம் நடந்தது. பாபு என்ஜினீயராக இருக்கிறார். இவர்கள் மேலூர் மூவேந்தர் நகரில் வசித்து வந்தனர். திருமணத்தின்போது ரேகாவின் பெற்றோர் அவருக்கு 55 பவுன் நகையும் பாபுக்கு 6 பவுன் தங்க செயினும் போட்டனர். மேலும் ரொக்கமாக 50 ஆயிரம் ரூபாயும், ரூ. 1 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசைகளும் கொடுத்தாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரேகாவிடம் மேலும் ரூ. 5 லட்சம் வரதட்சணை கேட்டு பாபு, அவருடைய தந்தை ராஜேந்திரன், உறவினர்கள் அடக்கி ஜெயலட்சுமி, விஜயலட்சுமி,

மணிகண்டன் ஆகியோர் சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீசில் ரேகா புகார் செய்தார்.

சப்-இன்ஸ்பெக்டர் சாரதா 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
=============
3. திருவாரூர், ஆக.10- 2009

திருவாரூர் சுந்தரவிளாகம் பகுதியைச் சேர்ந்தவர் நல்ல முகமது. இவரது மனைவி ஆசியாபீவி. இவர்களது மகன் சம்சுசித்திக். இவருக்கும், சென்னை ஆலத்தூரைச் சேர்ந்த ஜாபர் அலி மகள் கதிஜாபானுவுக்கும் திருமணம் நடந்தது. இந்நிலையில் சம்சுசித்திக், தனது மனைவி கதிஜாபானுவிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளார். இதற்கு அவரது குடும்பத் தினரும் உடந்தையாக இருந்துள்ளனர். இது குறித்து திருவாரூர் அனைத்து மகளிர் போலீசில் கதிஜாபானு புகார் கொடுத்தார். புகாரில் திருமணத்திற்கு வரதட்சணையாக கொடுத்த நகையை எனது கணவர் வீட்டினர் பறித்துக்கொண்டனர். மேலும் ரூ.50 ஆயிரம் வரதட்சணையாக கேட்டு துன்புறுத்தி கொடுமைப் படுத்தியதாக தெரிவித்திருந் தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்சுசித்திக்கை கைது செய்தனர். மேலும், அவரது தாய் ஆசியாபீவி, சகோதரர் மாலிக், ஆயிஷா ஆகிய 3 பேரையும் தேடி வருகின்றனர்.

===========================
4. சூளகிரி, ஆக.6- 2009

ஓசூர் அருகே இளம் பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக காதல் கணவர் கைது செய்யப் பட்டார்.
இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

காதல் திருமணம்

ஓசூர் அடுத்த மூக்கண்டப்பள்ளி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் பெருமாள் (வயது 29). தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி

சுதா (20). கடந்த ஓராண்டுக்கு முன் திருமணம் நடந்தது.

சுதாவின் வீட்டில் குடியிருந்த போது, "மலர்ந்த காதலால்" பெருமாள் திருமணம் செய்து கொண்டார். அதே நேரத்தில், இவர் இன்னொரு பெண்ணுடன் ஏற்கனவே

தொடர்பு வைத்திருப்பதாக கூறப்படுகிறது. தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் அவர் நர்சாக வேலை பார்த்து வருகிறார். பெருமாளின் காதல் திருமணம் அறிந்த அவர்

வேதனைப்பட்டுள்ளார்.

கள்ள தொடர்பு

தன்னுடைய `மலரும் நினை வுகளை' ஞாபகப்படுத்தி அடிக்கடி பெருமாளுக்கு கடிதம் எழுதியுள்ளார். குறிப்பாக, கடிதத்தில் ``உன்னை மறக்க முடியவில்லை. நீ

இல்லாமல் என்னால் வாழ முடியாது'' என குறிப்பிட்டிருந்தார். இந்த கடிதத்தை பார்த்து சுதா வெகுண்டெழுந்தார்.

அதனால், காதல் தம்பதி களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது. வேறு பெண்ணின் தொடர்பை கைவிடும்படி சுதா கண்டித்துள்ளார். எனினும் பெருமாள் வழக்கம் போல

அந்த பெண்ணுடன் ரகசியமாக பழகி வந்துள்ளார். அதன் காரணமாக, அவர்களுக்குள் தகராறு முற்றியது.

கணவர் கைது

பிரச்சினையை திசை திருப்ப (யார் திசை திருப்புகிறார்கள் என்பதைக் கவனியுங்கள்!) சுதாவிடம் வரதட்சனை கேட்டு பெருமாள் கொடுமைப் படுத்தி உள்ளார். மேலும், வீட்டையும் தனது பெயருக்கு எழுதி தரக்கோரி அடித்து, உதைத்து சித்ரவதை செய்துள்ளார்.

பெருமாளின் கொடுமை தாங்க முடியாமல் சுதா ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

டவுன் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுரேஷ்குமார் வழக்குபதிவு செய்து பெருமாளை கைது செய்தார். தொடர்ந்து, விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் எம்.

ஜி.ஆர்.நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற் படுத்தி உள்ளது.

====================

5. ஸ்ரீவில்லிபுத்தூர், ஆக.6- 2009

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ரூ. 10 லட்சம் பணம் கேட்டு மனை வியை கொடுமைப்படுத்திய கணவன் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள்.

திருமணம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது குன்னூர். இந்த பகுதியை சேர்ந்தவர் ஜெய ஆனந்தன். இவரது மகள் சுபா (வயது 32). இவருக்கும் திருச்சி

அருகே உள்ள அரியமங்கலத்தை சேர்ந்த மனோகரனுக்கும் சிலஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

திருமணத்தின் போது சுபாவுக்கு 101 பவுன் நகை மற்றும் ரூ.25 லட்சம் ரொக்கம் கொடுக்கப்பட்ட தாக தெரிகிறது. இந்தநிலையில் புதிய தொழில் தொடங்க வேண்டும் என்று கூறி மனோ கரன், மனைவி சுபாவிடம் உன் பெற்றோர் வீட் டில் ரூ.10 லட்சம் வாங்கி வருமாறு கூறினார்.

வழக்குபதிவு

ஆனால் பணம் வாங்கி வர சுபா மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மனோகரன், சுபாவை சித்ரவதை செய்ததாக தெரிகிறது. இதற்கு மனோகரனின் தந்தை வெங்கடேஷ்வரன், தாய் சுகுணாபாய், சகோதரர் பிரபாகரன், அவரது மனைவி பிரபாவதி ஆகியோர் உடந்தையாக இருந்தனர்.

இதுகுறித்து சுபா ஸ்ரீவில்லி புத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் மனோகரன், வெங்கடேஷ்வரன், சுகுணாபாய், பிரபாகரன், பிரபாவதி மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

==================

6. தேனி,ஆக.10- 2009

பெரியகுளம் அருகே பெண்ணிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக, அந்த பெண்ணின் கணவர் உள்பட 3 பேர் மீது தேனி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

வரதட்சணை கொடுமை

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் கிராமத்தில், டாக்டர் ராஜேந்திர பிரசாத் தெருவினை சேர்ந்தவர் ராதாகிருஷ் ணன்(வயது 31). இவருக்கும், சின்னமனூர் வ.உ.சி.நகரை சேர்ந்த கலைவாணி(26) என்பவருக்கும் கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது, 25 பவுன் தங்க நகையும், ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசையும் மணமகள் வீட்டார் கொடுத்ததாக தெரிகிறது.

6 மாதம் கணவருடன் தனிக்குடித்தனம் இருந்து விட்டு, கலைவாணியும் அவரது கணவரும் தாமரைக் குளத்திற்கு வந்துள்ளனர். அங்கு கணவர் ராதாகிருஷ்ணன்,

மாமனார் பாலகிருஷ்ணன், மாமியார் ராமுத்தாய் ஆகியோர் சேர்ந்து மேலும் 10 பவுன் தங்கநகையும், ஒரு லட்சம் பணமும் வரதட்சணை கேட்டு கலைவாணியை துன் புறுத்தியதாக கூறப்படுகிறது. கலைவாணியின் கழுத்தில் துண்டைப்போட்டு இறுக்கியும் துன்புறுத்தியதாக தெரிகிறது.

வழக்குபதிவு

இதுகுறித்து தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கலைவாணி புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனார்கலி, சப்-இன்ஸ்பெக்டர்

பாரிஷா பேகம் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
================

7. திருக்கோவிலூர், ஆக.10- 2009

திருக்கோவிலூர் அருகே வரதட்சணை கேட்டு பெண்ணை கொடுமைப் படுத்தியதாக கணவர் கைது செய்யப் பட்டார்.

வரதட்சணை கொடுமை

திருக்கோவிலூர் அருகே உள்ள புதுகருவாச்சியை சேர்ந்த சரவணன் (வயது 35) கூலி தொழிலாளி. இவரது மனைவி பூமாதேவி (31). இவர்களுக்கு கடந்த 14

வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் சரவண னுக்கும், காமாட்சி என்ற பெண்ணுக்கும் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கணவன் - மனைவி இருவருக்கும்

தகராறு ஏற்பட்டது.

2-வது திருமணம்

இதன் பிறகு சரவணன் தனது மனைவி பூமாதேவி யிடம் ரூ.50 ஆயிரம் பணம், 15 பவுன் நகை வரதட்சணை யாக வாங்கி வரும்படி கொடுமைப்படுத்தியதாக

கூறப்படுகிறது.

இந்த சம்பவத்திற்கு பிறகு சரவணன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த காமாட்சி என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இது பூமாதேவிக்கு தெரிய வந்தது.

இதனால் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீசில் பூமாதேவி தனது கணவர் மீது புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் ராஜகுமாரி, ஏட்டு சந்திரா ஆகியோர் வழக்குப் பதிவு செய்து சரவணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

(செய்தி - தினத்தந்தி)
====================

பெற்ற குழந்தைகளை நடுத்தெருவில் விட்டு கள்ளக் காதலனுடன் ஓடிய தாய்

"பெண் என்றால் பேயும் இரங்கும்" என்பது பழமொழி. ஆனால் பெண்ணே, அதுவும் பெற்ற தாயே பேயானால்?

இதுபோல் பெண்கள் weaker sex, அவர்களுக்கு ஆண்கள் விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற patriarchal மனப்பான்மையால் தான் (இதற்கு தக்கதொரு தமிழ்ச் சொல்லை அறியத்தாருங்கள்!) இன்றைக்கு பல பெண்களுக்கு " தாங்கள் என்ன வேணுமானாலும் செய்யலாம், எந்தவித குற்றங்களையும் புரியாம். நமக்கு எந்த தண்டனையும் கிட்டாது" என்ற மனப்பான்மை ஊறி, அதனால் மிகவும் திமிர் பிடித்தவர்களாக மாறி விட்டார்கள் என்பதுதான் நாம் நிதர்சனமாகக் காணும் கசப்பான உண்மை!

நாள் தோறும் நிகழும் கள்ளக்காதலால் உந்தப்படும் கொலைகளைப் பற்றி எழுத பல வலைப் பதிவுகள் தேவை என்னும் நிலை தோன்றிவிட்டது. நாளிதழ்களில் கள்ளக் காதல்களை தெரியப்படுத்த தனி இதழ்களைத்தான் வெளியிடவேண்டும்.

இயற்கையில் பாலுணர்வு உந்துதல் பெண்களுக்குத்தான் அதிகம் படைக்கப்பட்டிருக்கிறது. ஏனெனில் அவர்கள் ருதுவான காலம் முதல் சினை முட்டை தயார் நிலையை எய்தும்போது இன விருத்திக்கான குறியீடுகளால் ஆண் விந்தணுவைத் தேடும். அப்போது அந்தப் பெண்ணுக்கு பாலுணர்வு மேலிடும். அப்போது பொங்கியெழும் அந்த இச்சையை கட்டுப் படுத்தி கணவன், மனைவி என்னும் குடும்ப அமைப்பின் அடிப்படையில் அதை ஒழுக்கமாக வகைப்படுத்துவது நம் பண்பாடும், சமூகக் கட்டமைப்பும்தான். ஆனால் தற்காலத்தில் பல பெண்ணியவாதிகளின் ஓயாத கூக்குரலால் உந்தப்படும் சமுதாய பண்பாட்டு மறுப்பாலும், ஊடகங்கள், சினிமா போன்ற சாதனங்கள் மூலம் நடக்கும் போதனைகளாலும் நம் சமுதாய, கலாசார விழுமியங்கள் சிதைந்து சீரழிந்த காரணத்தால்தன் கள்ளக்காதல் கொலைகள் பெருகி விட்டன.

"டை" அடித்த கிராப் தலையும், லிப்ஸ்டிக்குமாக கால் மேல் கால் போட்டு, ஏர் கண்டிஷன் அறைகளில் அமர்ந்து கொண்டு, "ஏழைப் பெண்களை முன்னேற்றுகிறோம்" என்று அறை கூவும் பெண்ணிய வாதிகள் தங்கள் நுணி நாக்கால் பேசும் ஆங்கிலத்தில் சொல்லும் அறிவுரைகள் எல்லாமே:

"ஏ இந்தியப் பெண்களே! கற்பு, கலாசாரம், பண்பாடு என்று சொல்லியே நம்மை காலங்காலமாக சிறைப் படுத்தி விட்டனர் இந்த ஆண்கள். அவைகளை சுக்கு நூறாக கட்டுடையுங்கள். மனம் போனபடி வாழுங்கள். நாங்கள் இருக்கிறோம் உங்களுக்குத் துணையாக. நம் சட்டங்கள் இருக்கின்றன. நீங்கள் கள்ளக் காதலுக்காக கணவனையும் ஏன், உங்கள் பெற்றோர்களையும் மற்றும் நீங்கள் பெற்ற பச்சிளம் பாலகர்களையும் கூட ஈவு இரக்கமின்றிக் கொன்று போட்டால் உடனே நாங்கள் 'கள்ளக் காதல் என்னும் சொல்லாட்சி தவறு. பெண்கள் கொன்றாலும் அவர்கள் பேதைகள். அவர்களை அவ்வாறு தங்கள் குழந்தைகளையே கொல்லத் தூண்டும் வகையில் நடந்து கொண்ட இந்த ஆண் சமுதாயத்தின் மேல் தான் தவறு' என்று அறிக்கை கொடுப்போம். நீங்கள் நடத்துங்கள்" - இந்த வகையில்தான் இருக்கும்!

கடந்த சில நாட்களில் செய்திதாளில் வெளிவந்துள்ள கள்ளக் காதல் நிகழ்வுகளும் அதில் ஈடுபட்ட தாய்மார்களின் ஈவு இரக்கமற்ற நடத்தைகளும் படிப்பவர் மனத்தில் மிகுந்த கவலையை அளிக்கும் என்பது திண்ணம். அதுவும் தன் குழந்தைகளை நடுத்தெருவில் தவிக்க விட்டு கள்ளக் காதலனுடன் ஓடியுள்ள அந்தத் தாய்க்குலத் திலகத்தின் விவரம் உங்கள் மனத்தை மிகவும் கிலேசப்படுத்தும்.
மனதை திடப்படுத்திக்கொண்டு செய்திகளை வாசியுங்கள்:

முறையற்ற உறவால் தொடரும் விபரீதம்!
கள்ளக்காதலனுடன் தாய் ஓடியதால் நடுவழியில் தவித்த 2 குழந்தைகள்
ஊர் மக்கள் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்

குழித்துறை, ஆக.10- 2009

கள்ளக்காதலனுடன் தாய் ஓடியதால் அனாதையாக நடுவழியில் தவித்த 2 குழந்தைகளை பொது மக்கள் போலீஸ் நிலை யத்தில் ஒப்படைத்தனர்.

மனித மான்பை கெடுக்கும் கள்ளக்காதலால் நடந்த இந்த கொடூர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

2 குழந்தைகளின் தாய்

மார்த்தாண்டம் அருகே உள்ள காஞ்சிரகோடு பகுதியை சேர்ந்தவர் வசந்தகுமாரி என்ற பாப்பா (வயது 30). இவருக்கு திருமணமாகி கணவரும், 2 குழந்தைகளும் உள்ளனர். மூத்த மகள் சால்மா (7) 2-ம் வகுப்பு படித்து வருகிறாள். 2-வது மகன் சானு (6) ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறான்.

இந்த நிலையில் வசந்த குமாரிக்கும், அதே பகுதியில் உள்ள ஒரு ஆட்டோ டிரைவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சில மாதங்களுக்கு முன் வசந்தகுமாரி முதல் கணவரை விட்டு விட்டு 2 குழந்தைகளு டன் ஆட்டோ டிரைவருடன் ஓடிச்சென்றாள்.

இவர்கள் இருவரும் மத்தி கோடு என்ற இடத்தில் ஒரு வாடகை வீட்டில் 2 குழந்தை களுடன் குடும்பம் நடத்தி வந்ததாக தெரிகிறது.

2-வது கள்ளக்காதல்

இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள வேறு ஒருவருடன் வசந்தகுமாரிக்கு தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது. சம்பவத்தன்று வசந்த குமாரி 2 குழந்தைகளையும், ஆட்டோ டிரைவராகிய கள்ளக்காதலனையும் விட்டு விட்டு 2-வது கள்ளக்காதலனுடன் ஓடிப்போய் விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த ஆட்டோ டிரைவர் 2 குழந்தைகளையும் நேற்று முன்தினம் மார்த்தாண்டம் அருகே உள்ள சிராயன்குழி நுள்ளிவிளை என்ற இடத்தில் விட்டு விட்டு தலைமறை வானார்.

நடுவழியில் பரிதவிப்பு

தாய்-தந்தை உயிரோடு இருந்தும் அனாதைகளாக தள்ளப்பட்ட 2 குழந்தைகளும் ஆதரவின்றி நடுவழியில் நின்று கதறி அழுதன. இதை பார்த்த அந்த ஊர் மக்கள் மனதிரங்கி குழந்தைகளை குழித்துறை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் குழந்தைகளை ஏற்றுக்கொண்டு ஓடி போன வசந்தகுமாரி குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

================

ராமநத்தம் அருகே கள்ளக்காதலனுடன் 2 குழந்தைகளின் தாய் ஓட்டம்

திட்டக்குடி,ஆக.10- 2009

ராமநத்தம் அருகே கள்ளக்காதலனுடன் சென்ற 2குழந்தைகளின் தாயை போலீசார் தேடிவருகிறார்கள்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருமணமாகி 9 ஆண்டுகள்

ராமநத்தத்தை அடுத்த ஆவட்டியை சேர்ந்தவர் வெள்ளிவேல். விவசாயி. இவரது மனைவி அம்புரோஸ்(வயது27). திருமணமாகி 9 ஆண்டுகள்ஆகின்றன. இவர்களுக்கு ஆகாஷ்(5), அபிஷேக்(11/2) என்ற இரு மகன்கள் உள்ளனர்.

இவர்களின் பக்கத்து வீட்டில் வசிப்பவர் காமராஜ். இவரது மகன் பிரதிவிராஜ் (22). இவர் வெள்ளிவேலுக்கு உறவினர் ஆவார்.

கள்ளக்காதலனுடன் ஓட்டம்

அம்புரோசுக்கும் பிரதிவிராஜவக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 1-ந்தேதியில் இருந்து பிரதிவிராஜ், அம்புரோஸ் ஆகியோர் அம்புரோசின் 11/2 வயதுகுழந்தையுடன் காணவில்லை. அம்புரோசின் வீட்டில் இருந்த18 பவுன் தங்கநகை மற்றும் ரூ.65ஆயிரம் ரொக்கப்பணத்துடன் அவர்கள் ஓடிவிட்டது தெரியவந்தது.

போலீசில் புகார்

இது குறித்து ராமநத்தம் போலீசில் வெள்ளிவேல் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து,விசாரணை நடத்திவருகிறார்.

===================

ஓடும் ரெயில்முன் பாய்ந்து 2 குழந்தைகளின் தாய் கள்ளக்காதலனுடன் தற்கொலை

திருவனந்தபுரம், ஆக.6- 2009

ஓடும் ரெயில்முன் பாய்ந்து 2 குழந்தைகளின் தாய், கள்ளக்காதலனுடன் தற்கொலை செய்து கொண்டார்.

குடும்பம்

வெஞ்ஞாரமூடு அருகே உள்ள பிரப்பன்கோடு பகுதி யைச் சேர்ந்தவர் கோபன். ரப்பர் வெட்டும் தொழிலாளி. இவருடைய மனைவி கிரிஜா (வயது35). இவர்களுக்கு கோபிகா, கோகுல் ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.

இவர்களின் பக்கத்து வீட்டில் வசிப்பவர் தீப குமார் (வயது28). கட்டுமான தொழி லாளியான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

உறவினர் என்பதால் தீபகுமார் அடிக்கடி கிரிஜா வீட்டுக்குச் சென்று அவருடன் பழகி வந்தார். நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறிய தாக தெரிகிறது. இருவரும் தங்கள் குடும்பத்தினருக்கு தெரியாமல் பல நாட்கள் கள்ளக்காதலை வளர்த்து வந்துள்ளனர்.

இது பற்றி வெளியே தெரியவந்ததும், அவர்கள் இருவரையும் அவரவர் குடும்பத்தினர் கண்டித்தனர்.

தற்கொலை

இதனால் மனம் உடைந்த தீபகுமாரும், கிரிஜாவும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் இருவரும் தங்கள் வீட்டை விட்டு வெளியேறி கடைக்காவூர் ரெயில் நிலையம் அருகே உள்ள கொச்சுபாலம் சென்றனர். அப்போது அந்த வழியாக கொல்லத்தில் இரு ந்து திருவனந்தபுரம் நோக்கி வந்த ஐலண்டு எக்ஸ்பிரஸ் ரெயில் முன் அவர்கள் இருவரும் பாய்ந்தனர். இதில் அவர்கள் உடல் சிதறி அதே இடத்தில் பலியாகினர்.

இது பற்றி அறிந்ததும் கடைக்காவூர் போலீசார் அங்கு விரைந்து சென்று, இருவரின் பிணங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

(செய்தி: நன்றி - தினத்தந்தி)

அடங்கா வெறி

கட்டிலடங்கா வெறியுடன் திரியும் மனைவிகளின் கள்ளக் காதல்கள் இன்னும் எத்தனை உயிர்களைக் காவு வாங்கப் போகிறதோ!

இனி மெல்லச் சாகும் குடும்ப வாழ்க்கை முறை!

காம வெறி பிடித்தலையும் காரிகைகள் Black Widow spider போல் கண்டவனுடன் கலவை கொண்டு காரியம் முடிந்தபின் "என்னைக் கற்பழித்தான் இந்தக் காமுகன்" என்று கூக்குரலிட்டால் போதும், உடனே கொண்டு செல்வர் அந்த அசட்டு ஆணை காராக்கிரகத்திற்கு. அந்தப் பெண் பேதையோ தேடிச் செல்வாள் அடுத்த விட்டில் பூச்சியை நோக்கி. ஏன்? அவள் காமம் தான் இன்னும் தணியவில்லையே! கண்டிக்க வேண்டிய சமூகம்தான் அவளுக்கு சாதகமான சட்டங்கள் மற்றும் தீர்ப்புகள் மூலம் கட்டவிழ்த்து விட்டதே!

பூதப்பாண்டி அருகே நிகழ்ந்த பயங்கரத்தைக் காணுங்கள்! குழந்தைகளை எண்ணிப் பார்த்தாளா அந்த வெறி விடித்த பேய்!

மனைவியுடன் என்ஜினீயர் சரமாரியாக வெட்டிக்கொலை
கள்ளக்காதலன் கைது

அழகியபாண்டிபுரம், ஆக.10- 2009. செய்தி - தினத்தந்தி

நாகர்கோவிலை அடுத்த பூதப்பாண்டி அருகே என்ஜினீயரும் அவருடைய மனைவியும் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப் பட்டனர். இந்த வெறிச்செயலில் ஈடு பட்ட மனைவியின் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

இதுபற்றி போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

என்ஜினீயர்

குமரி மாவட்டம் பூதப்பாண்டியை அடுத்த தடிக்காரன்கோணம் அருகே உள்ள சைபன் ஏரியா காமராஜபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரகுமார் (வயது 46). என்ஜினீயர். பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலைபார்த்தார். இவ ருடைய மனைவி லீலா (40). இவர்களுக்கு அஜின் குமார் (14), விஜின்குமார் (13) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

இந்தநிலையில், ராஜேந்திர குமாருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மனநிலை பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. அதைத்தொடர்ந்து அவர் பெங்களூரில் தான் பார்த்து வந்த வேலையை விட்டுவிட்டு தடிக்காரன் கோணம் அருகில் உள்ள சைபன் ஏரியாவுக்கு குடும்பத்தோடு குடி வந்தார்.

காவலாளியுடன் தவறான உறவு

அப்போது அவரது வீட்டு தோட்ட காவலாளியாக தடிக் காரன்கோணம் குட்டி பொத்தை பகுதியைச் சேர்ந்த சார்லஸ்(46) என்பவரை வேலைக்கு அமர்த்தினார். இவருக்கு திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர். ஆனால் சார்லசின் மனைவி விவாகரத்து வாங்கிக் கொண்டு தனியாக தனது பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார்.

இதனால், சார்லஸ் கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக ராஜேந்திரகுமாரின் வீட்டி லேயே சாப்பிட்டு, அங்கேயே தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார். ராஜேந்திரகுமாருக்கு மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததால் அவருடைய மனைவி லீலா தனது வீட்டில் தங்கியிருந்த சார்லசுடன் தவறான உறவு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சார்லஸ் சொல்வதை யெல்லாம் லீலா கேட்டு வந்ததாக தெரிகிறது.

திருவிழாவுக்கு செல்வதில் பிரச்சினை

இந்தநிலையில் நேற்று முன் தினம் மாலை தடிக்காரன் கோணம் பகுதியில் உள்ள ஒரு ஆலய திருவிழாவுக்கு ராஜேந்திரகுமார் மற்றும் லீலா தங்களது மகன்களுடன் புறப்பட்டனர். அப்போது வீட்டில் இருந்த சார்லஸ் லீலாவிடம், "நீங்கள் திரு விழாவுக்கு செல்லக்கூடாது " என்று கூறினார்.

ஆனால் லீலா அதை கேட்காமல் தனது கணவர் ராஜேந்திரகுமாருடன் ஆலய திருவிழாவுக்கு சென்றார். இதுவரை தனது பேச்சை கேட்டு நடந்த லீலா தற்போது தான் சொல்லியும் கேட்காமல் திருவிழாவுக்கு செல்கிறாளே என்ற ஆத்திரம் சார்லசுக்கு ஏற்பட்டது. இதனால் லீலாவை தீர்த்துக்கட்ட வேண்டும் என்ற முடிவோடு கையில் அரிவாளுடன் சார்லஸ் வீட்டிலேயே காத்திருந்தார்.

சரமாரி வெட்டிக்கொலை

அப்போது கணவன்- மனைவி இருவரும் மகன்களை ஆலயத்தில் விட்டுவிட்டு, இரவு சுமார் 9.30 மணி அளவில் வீட்டுக்கு வந்தனர். வீட்டுக்குள் சென்ற அவர்களை சார்லசும் அரிவாளுடன் பின்தொடர்ந்து சென்றார். பின்னர் சார்லஸ் லீலாவைப் பார்த்து, "நான் சொல்லச் சொல்ல கேட்க மாட்டாயா?" என்று கேட்டுக்கொண்டே அரிவாளால் லீலாவின் கழுத்தில் பலமுறை வெட்டியதாக தெரிகிறது.

இதில் பயங்கர சத்தத்துடன் லீலா ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். இந்த சத்தம் கேட்டு பக்கத்து அறையில் இருந்த ராஜேந்திரகுமார் ஓடிவந்து சார்லசை தடுக்க வந்தார். அவரையும் சார்லஸ் காது, கன்னம், கழுத்து ஆகிய பகுதிகளில் சரமாரியாக வெட்டினார். இதனால் ராஜேந்திரகுமாரும் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். சிறிது நேரத்தில் கணவன்- மனைவி 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து இறந்தனர்.

கிராம நிர்வாக அதிகாரியிடம் சரண்

இதைத்தொடர்ந்து, சார்லஸ் அங்கிருந்து தப்பியோடி கழுவன்திட்டை பகுதியில் மறைந்திருந்தார். பின்னர் அவர் தெரிசனங்கோப்பு கிராம நிர்வாக அதிகாரியிடம் நேற்று காலையில் சரண் அடைந்து, மேற்கண்ட தகவல்களை தெரிவித்தார்.

அதையடுத்து கிராம நிர்வாக அதிகாரி மருதநாயகம் புகாரின்பேரில் கீரிப்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுதேசன், சப்-இன்ஸ்பெக்டர் கோகிலா ஆகியோர் கொலை வழக் குப்பதிவு செய்து சார்லசை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கதறி அழுதனர்

கொலை செய்யப்பட்ட என்ஜினீயர் ராஜேந்திரகுமார்- லீலா ஆகியோரின் மகன்களில் அஜின்குமார் 9-ம் வகுப்பும், விஜின்குமார் 8-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.

அதிகாலையில் ஆலயத்தில் இருந்து திரும்பிய அவர்கள் பெற்றோர் பிணமாக கிடப்பதைப் பார்த்து கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது

ஆணாகப் பிறந்த குற்றம்!

சில்மிஷத்தில் ஈடுபட்டது ஆணும் பெண்ணும் - முழுதும் இஷ்டப்பட்டு திருட்டுத்தனமாக. ஆனால் கைதாவது ஆண் மட்டும்தான். பெண்ணைக் கண்டித்து வீட்டு அனுப்பி விடுவார்களாம். ஆணை மட்டும் சிறையில் தள்ளுவார்களாம். ஏனெனில் அவன் ஆணாகப் பிறந்து விட்டானாம்!

இதுபோன்ற ஒருதலைப் பட்சமான கண்ணோட்டம் சமுதாயத்தின் ஒவ்வொரு அங்கத்திலும் இருக்கிறது. இது போன்ற ஆணெதிர்ப்பு அணுகுமுறையும், அவனை மட்டும் தண்டிக்கும் போக்கும் மாறாமல் இந்தத் தவறான போக்கு தொடருமேயானால் சீக்கிறமே ஆண்களில் பலர் வெறுப்பு மேலோங்கி சீரியல் கில்லர்களாக மாறக்கூடிய அபாயம் இருக்கிறது!

இனி செய்தி:-

நெல்லை, ஆக.9- 2009. செய்தி - தினத்தந்தி

நெல்லை சந்திப்பு மீனாச்சிபுரத்தை சேர்ந்த இஸ்ரேல் மைசன் பீட்டர்(23), ஜெபராஜ் ஆகிய வாலிபர்கள் நேற்று முன்தினம் பாளை. பஸ் நிலையம் பகுதிக்கு காரில் வந்தனர். அங்கு பள்ளிக்கு சென்று கொண்டிருந்த தங்களுக்கு தெரிந்த 2 மாணவிகளிடம் பேசி தங்களது காரில் ஏறும்படி கூறினார்கள். இதன்படி இஸ்ரேல் சைமன் பீட்டர் தனது காதலியுடன் சொகுசு காரில் முன்சீட்டிலும், ஜெபராஜ் தனது காதலியுடன் காரின் பின்சீட்டிலும் ஏறிக்கொண்டார்.

பின்னர் காரை மெதுவாக ஓட்டி இலந்தகுளம் கரை அருகே உள்ள ஒதுக்குப்புறமான சாலை ஓரத்தில் நிறுத்தினார்கள். அங்கு 2 வாலிபர்களும் மாணவிகளிடம் செக்ஸ் குறும்பில் ஈடுபட்டு உள்ளனர். இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து பாளை. போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் குருநாதன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று 2 வாலிபர்கள் மற்றும் மாணவிகளை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

2 பேர் கைது

பின்னர் மாணவிகளின் பெற்றோரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் மாணவிகளை கண்டித்து அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து மாணவியின் தந்தை ஒருவர் பாளை. போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். பாளை. போலீசார் ஈவ்-டீசிங் வழக்குப்பதிவு செய்து இஸ்ரேல் மைசன் பீட்டர், ஜெபராஜ் ஆகிய 2 பேரையும் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கார் மற்றும் 1 ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

கள்ளக்காதல் விபரீதம்...

ஜூனியர் விகடனில் வெளியான நெஞ்சை கலங்க வைக்கும் சம்பவம்...

வணிகச் செய்திகள், வேலைவாய்ப்புச் செய்திகள் என்பது போல் கள்ளக் காதல் செய்திகள் என்றுஊடகங்களில் இனி, தனிப் பகுதி வந்துவிடுமோ?அடுத்தடுத்து நடக்கும் கள்ளக்காதல் தொடர்பான கொலைகள் இப்படி ஒரு பயத்தை இயல்பாகவே ஏற்படுத்தி விட்டன!

கள்ளக்காதலுக்கு இடைஞ்சலாக இருந்த மகனையே வெட்டி ஃப்ரிட்ஜுக்குள் வைத்த மதுரை கொடூரம் ஒரு பக்கம் என்றால், விருத்தாசலத்தில் நடந்திருக்கும் விபரீதம் விதிர்விதிர்க்க வைக்கிறது!


வசதியாக வாழ்வதற்குப் பணம் தேவை என்பதால், ஏழு வயது பையனைக் கடத்திக் கொலை செய்திருக்கிறது ரத்த வெறி பிடித்த கள்ளக்காதல் ஜோடி.
விருத்தாசலத்தை அடுத்துள்ள கார் குடல் கிராமமே கண்ணீர்க் கடலாகிக் கிடக்கிறது. தெருவில் ஓடி விளையாடி எல்லோரிடமும் அன்பாக பழகிய ஏழு வயதுச் சிறுவன் சுரேஷ் சாக்குமூட்டையில் பிணமாகக் கிடப்பதை எப்படித்தான் தாங்கிக் கொள்ள முடியும்?

கொளஞ்சிநாதன்-மகேஸ்வரி தம்பதிக்கு மூன்று பெண் குழந்தைகளுக்கு பிறகு, தவமாகத் தவமிருந்து வரம் வாங்கிப் பிறந்த ஆண் குழந்தை சுரேஷ். அருகிலுள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 27-ம் தேதி காலையில் பள்ளிக்குப் போனவன் மாலை வரை வீடு திரும்பவில்லை.

அப்பா கொளஞ்சிநாதன் வெளி நாட்டில் இருப்பதால், அம்மா மகேஸ்வரி, சுரேஷை தேடி அலைந்தார்.

இரண்டு நாட்கள் கழித்து... 29-ம் தேதி மதியம் வயலாப் பாடி என்னும் கிராமத்தின் ஒடையில் சாக்குமூட் டையில் கட்டப்பட்டு பிணமாகத்தான் அவனைப் பார்க்க முடிந்தது.


கலங்கிப் போயிருந்த கார்குடல் கிராமத்தின் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சித்திரைச்செல்வன் நம்மிடம், ''ஸ்கூல் போன புள்ளைய காணோம்னு சொன்னதும், பதறிப்போய் தேடினோம். அன்னிக்கு ராத்திரி மகேஸ்வரி செல்லுக்கு பேசின ஒருத்தன், 'நாங்கதான் சுரேஷை கடத்தி வச்சிருக்கோம். அஞ்சு லட்ச ரூபா ரெடி பண்ணி வையி'னு மிரட்டியிருக்கான். உடனே, போலீஸ்ல புகார் கொடுத்துட்டோம். எஸ்.பி. விறுவிறுனு ஆக்ஷன் எடுக்க ஆரம்பிச்சாங்க. ஆனா, வெண்ணெய் திரண்டு வர்ற நேரத்துல, தாழி உடையுற மாதிரி... போலீஸ் அவங்கள நெருங்குற நேரத்துல, இப்படி இதயமே இல்லாத அந்த பிஞ்சுப் பையனை கொன்னுட்டாங்களே... அந்த படுபாவிங்க!'' என்று அதிர்ச்சி விலகாமல் சொல்கிறார்.

போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம்.

"தகவல் கிடைத்ததும் கடலூர் எஸ்.பி-யான அஸ்வின் கோட் னிஸ் மூன்று தனிப் படைகளை அமைத்து, விசாரிக்க உத்தரவிட்டார். அவர்கள், மகேஸ்வரியின் செல்லுக்கு வரும் அனைத்து அழைப்புகளையும் கண்காணிக்க ஆரம்பித்தனர். அதில் இரண்டாவது முறையாகப் பணம் கேட்டு வந்த அழைப்பை, பதிவு செய்து விசாரித்தபோது, பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து வந்திருப்பதை கண்டுபிடித்தனர். அங்கே செங்குனம் கிராமத்தில் மகேஸ்வரியின் சித்தி முறையான பாலாயி என்பவர் இருப்பதாகத் தெரிந்தது. உடனே, பாலாயியை தேடிச் சென்றோம். பாலாயியோடு உடனிருந்த சுந்தர்ராஜ் என்ற ஜே.சி.பி. டிரைவரையும் சேர்த்து அள்ளிக் கொண்டு வந்து விசாரித்த போதுதான், இந்த கொடுமைகள் வெளியே வந்தன!" என்றனர் போலீஸார்.

ஏன் சுரேஷை கடத்திக் கொலை செய்தார்கள்?

போலீஸில் பாலாயி கொடுத்த வாக்குமூலம் இதோ...

"மகேஸ்வரியின் பிறந்த ஊரான திட்டக்குடி பக்கம் கூடலூர்லதான் நான் வாக்கப்பட்டேன். மகேஸ்வரியோட சித்தப்பா புகழேந்திக்கு என்னைக் கட்டிக் கொடுத்தாங்க. அவரு வெளிநாட்டுல இருக்காரு. இங்க தனிமை என்னை ரொம்பப் படுத்தி எடுத்துசசு. அப்ப எங்க ஊருக்கு ஜே.சி.பி. ஓட்ட வந்த சுந்தர்ராஜுக்கும் எனக்கும் பழக்கமாச்சு. விஷயம் ஊர்ல தெரிஞ்சு, என் வீட்டுக்காரர் வரைக்கும் போயிடுச்சு. அவர் இங்க வந்து என்னைய கண்டிச்சாரு. ஆனா, அவரு திரும்பவும் வெளிநாடு போன பின்னாடி, என்னால சும்மா இருக்க முடியல. சுந்தர்ரஜைத்தான் தேடிப் போனேன். இது தெரிஞ்சதும் என் வீட்டுக்காரர் ஒரேடியா என்னை வெரட்டி விட்டுட்டாரு.அப்புறம் நானும் சுந்தர்ராஜும் ஒண்ணாவே இருக்கோம். இருந்த காச வச்சு கொஞ்ச காலம் சந்தோஷமா இருந்தோம். அது தீர்ந்ததும், காசு சம்பாதிக்க என்ன பண்றதுனு நாங்கபேசிக்கிட்டி ருந்தப்பதான்... சென்னையில ஒருத்தரை கடத்தி வச்சு காசு கேட்ட சம்பவத்தை டி.வி-யில பாத் தோம்...'' என்ற பாலாயி, அதற்குப் பிறகு நடந்த தையும் அழுத்தமான குரலில் கக்கியிருக்கிறாள்.

''டி.வி-யைப் பாத்ததுமே யாரையாச்சும் கடத்தி பணம் கேக்கலாம்னு தோணுச்சு. யாரைக் கடத்தறதுன்னு யோசிச்சப்பதான் சட்டுனு சுரேஷ் ஞாபகம் வந்துச்சு. ஏன்னா, அவன் எனக்கும் சுந்தர்ராஜுக்கும் நல்லா பழக்கமானவன். கூப்பிட்டாவே வந்துடுவான். அவங்க அப்பா வெளிநாட்டுல இருக்கிறதால, கேட்டதும் பணமும் சிக்கல் இல்லாமல் கிடைச்சுடும்னு முடிவெடுத்தோம்.

உடனே, போன 27-ம் தேதி சாயந்தரம் போய் சுரேஷை, சுந்தர்ராஜ் கூப்பிட்டிருக்கான். சிரிச்சுக்கிட்டே சுரேஷ் வந்துட்டான். அவனை எங்க வீட்லயே ஒரு ரூம்ல கட்டிப் போட்டுட்டு, மகேஸ்வரிக்கு போன் போட்டோம். இந்த தகவல் மறுநாள் பேப்பர்ல வந்ததும், எங்க ரெண்டு பேருக்கும் பயமாயிடுச்சு. 'இறங்கினது இறங்கிட்டோம்'னு தைரியம் சொன்ன சுந்தர்ராஜ், மறுபடியும் மகேஸ்வரிக்கு போன் பண்ணி பணம் கேட்டான். அப்பதான், நாங்க இருக்கற இடத்தை போலீஸ்காரங்க கண்டுபிடிச்சிட்டாங்க. இந்த நியூஸும் உடனே டி.வி-யில வர, எங்களுக்கு என்ன பண்றதுன்னே தெரியலை. உடனே, சுரேஷை முகத்தில் துணியை வைத்து அழுத்தினோம். ரொம்பக் கத்தினவன், கொஞ்ச நேரத்துல அடங்கிட்டான். பிணத்தை வயலாப்பாடிக்கு எடுத்துக்கிட்டு போய், குளத்துல வீசிட்டோம்...'' என்றாளாம் பாலாயி.

அருமைப் பையனை பறிகொடுத்து நிற்கும் மகேஸ்வரி,

"புள்ளைங்கள பத்திரமா பாத்துக்கடின்னு சொல்லிட்டு வெளிநாடு போன எம் புருஷன், திரும்ப வந்து கேட்டா, நான் என்ன பதில்சொல்லுவேன்?'' என்று தன் மூன்று பெண் குழந்தைகளையும் கட்டிக் கொண்டு அழுத காட்சி இதயத்தைநசுக்கியது.

கள்ளக் காதல் ஜோடியிடமிருந்து வாக்குமூலம் பெற்றுக் கொண்ட போலீஸார், இருவரையும் பத்திரிகையாளர்களுக்கும் காட்டாமல் அழைத்துச் சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.

"ஏற்கெனவே போலீஸின் நடவடிக்கைகள்ஊடகங்கள் மூலமாக வெளியே தெரிந்ததால்தான் சிறுவன் கொல்லப் பட்டான். அதனால்தான் இந்த ஏற்பாடு..." என்கிறார்கள் போலீஸார். காலம் கடந்த எச்சரிக்கையல்லவா இது!

- கரு.முத்துபடங்கள்: ஜெமினி படமனை. நன்றி: ஜூனியர் விகடன்

பொங்கியெழும் கணவர்கள்!

"ரௌத்ரம்" - ஆம், அநியாயத்தை எதிர்த்துப் பொங்கியெழும் நியாயமான கோபம்!

இதைத்தான் காண்கிறோம் அவர்களின் கண்களில்!

ஆண்களை வதைக்கும் கொடுங்கோன்மை சட்டங்களைக் கைக்கொண்டு தொடுக்கப்படும் பொய் வழக்குகளில் சிக்கி, வயதான பெற்றோர்களுடன் சேர்ந்து கைதாகி சிறைக்குச் சென்று தங்கள் வாழ்வைத் தொலைத்து நிற்கும் பாதிக்கப்பட்ட கணவர்களின் கண்களில்!

ஆம். அவர்கள் முடிவெடுத்து விட்டனர். அவர்களுக்கு விடுதலை இல்லை. சுதந்திரம் இல்லை. ஒட்டுமொத்தமான ஆண்களுக்கும் அவர்களுடைய பெற்றோர் மற்றும் உடன்பிறப்புகளுக்கும் எதிராக தொடுக்கப்பட்டுள்ள ஒருதலைப்பட்சமான சட்டங்கள் களையப்படும் வரை. அவை 100% துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கெடுமதியும் கள்ளக்காதல் வெறியும் பிடித்து அலையும் பல பெண்கள், அவர்களுக்குத் துணை போகும் சில பெண்ணியவாதிகள், சில பணத்தாசை பிடித்த வக்கீல்கள் மற்றும் பல மேட்டுக்குடிப் பெண்டிரைக் கொண்ட பெண்கள் இயக்கக் கும்பல் - இவர்கள் ஒன்று சேர்ந்து பல லட்சங்களைக் கொள்ளையடிக்கும் (extortion and legal terrorism) இந்த நடைமுறை தடுக்கப்படும் வரை அவர்களுக்கு சுதந்திரம் இல்லை.


அதனால் வரும் ஆகஸ்டு 15-ம் நாள் சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் பங்கு கொள்ளப் போவதில்லை என்று இத்தகைய பாதிக்கப்பட்ட கணவர்கள் மற்றும்
அவர்களின் பெற்றோர், உடன்பிறப்புகளுக்காகப் பாடுபடும் இந்திய குடும்பப் பாதுகாப்பு இயக்கத்தினர் (Save Indian Family Foundation) முடிவெடுத்துள்ளனர்.

இந்தச் செய்தியை அவ்வியக்கத்தின் சென்னைப் பிரிவின் அமைப்பாளர் திரு. சுரேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.


நம் நாட்டின் பல இடங்களில் இத்தகைய கொடுங்கோன்மைச் சட்டங்களின் தவறான பயன்பட்டால் பொய் வழக்கு போடப்பட்டு சீரழியும் ஆண்கள் மற்றும் அவர்களுடைய் பெற்றோர் துயர் களைய இந்த இயக்கம் பாடுபடுகிறது. இத்தகைய சட்டங்களில் முக்கியமானவை இந்திய குற்றவியல் சட்டம் 498A பிரிவு (IPC Sec 498A) மற்றும் குடும்ப வன்முறைச் சட்டம் (Domestic Violence Act) ஆகும்.


திரு. சுரேஷ் மேலும் கூறுகிறார்:-


ஆண்களுக்கு எதிராக ஒருதலைப் பட்சமான சட்டங்கள் பல நம் நாட்டில் இருக்கின்றன. உதாரணமாக கள்ளக்காதலில் ஒரு ஆண் ஈடுபட்டால் அது குற்றம். அந்த ஆண் உடனே கைது செய்யப்படுவான். ஆனால் ஒரு பெண் சோரம் போனால் அது சட்டப்படி குற்றமில்லை. அதாவது உங்கள் மனைவி உங்கள் எதிரிலேயே இன்னொருவனுடன் கலவியில் ஈடுபட்டால் அந்த மனைவியின்மீது நடவடிக்கை எடுக்க இந்தியாவில் எந்த சட்டமும் இல்லை. ஆனால் கணவன் இது போல்
செய்தால் உடனே கைது. அவன்மேல் அத்துணை சட்டங்களும் பாயும். இதுதான் இந்திய சட்டங்களின் ஒருதலைப் பட்சமான கட்டமைப்பு (Blatant discrimination against men).


அதே போல் குடும்ப வன்முறைச் சட்டம் மனைவிக்கு எத்தகைய வன்முறையிலும் ஈடுபட சுதந்திரம் கொடுத்திருக்கிறது. ஏனெனில் கணவன் மட்டும்தான் வன்முறையில் ஈடுபடுவான் என்று கூறுகிறது அந்தச் சட்டம். அதன்படி கணவன் முகத்தைத் திருப்பிக் கொண்டாலோ, கேள்விக்கு பதில் சொல்லாமல் மௌனமாக இருந்தாலோ அது குற்றம்; அந்த மனைவி உடனே கிரிமினல் கோர்ட்டில் புகார் கொடுத்து அந்தக் கணவன்மீது நடவடிக்கை எடுக்க வைக்கலாம். ஆனால் அந்த மனைவி கணவனையும் அவனுடைய பெற்றோரையும் கண்டபடித் திட்டலாம், உணவு கொடுக்க மறுக்கலாம், அடிக்கலாம், அனைத்து வன்முறைகளிலும் ஈடுபடலாம். அவை குற்றமேயில்லை, இந்தச் சட்டத்தின்படி!இப்படி ஒரு பாலருக்கு மட்டும் எத்தகைய குற்றமும் புரிய முழுச் சுதந்திரம் கொடுத்துவிட்டு, அனைத்து ஆண்களையும் அவர்கள் ஆணாகப் பிறந்ததாலேயே குற்றம் புரிந்தவர்களாகக் கருதப்படும் நிலை இந்தியாவில் இன்று இருக்கிறது (It is a crime to be born a male in India!).இந்தச் சட்டங்களின் அடிப்படையில் ஆண்களுக்கு மட்டும் பொறுப்புக்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. அவனை விட்டுப் பிரிந்தபின்னும் அவனது முன்னாள் மனைவிக்கு கணவன் ஜீவனாம்சம் கொடுக்கவேண்டும். ஆம், விவாகரத்து பெற்ற பின்னும் கூட மாஜி மனைவிக்கு மெயிண்டெனென்ஸ் என்ற பெயரில் பணம் கொடுத்து அழவேண்டும்! ஆனால் மனைவிக்கு மட்டும் எவ்விதப் பொறுப்பும் கிடையாது, கடமையும் கிடையாது! மனைவிக்கு இருப்பது உரிமை மட்டுமே, கணவனுக்கு இருப்பதெல்லாம் கடமை மட்டுமே, எவ்வித உரிமையும் கிடையாது! என்ன அநியாயமய்யா இது! இப்படித்தான் இந்திய திருமணச் சட்டங்களும் குற்றவியல் பிரிவு 125 (Sec 125 of CrPC) போன்ற பல சட்டங்களும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.


பெற்றோர் இருவருடைய அரவணைப்பும் குழந்தைகளுக்குத் தேவை என்பதற்காகப் பாடுபடும் இயக்கமான "Children's Rights Iniative for Shared Parenting" (CRISP) என்னும் அமைப்பின் தலைவர் திரு. குமார் ஜாகீர்தார் (இவர்தான் கிரிகெட் விளையாட்டுக்காரர் அனில் கும்ப்ளேயின் மனைவியுடைய முந்தைய கணவர் - தான் பெற்ற குழந்தையை கண்ணால் காணும் உரிமையைக் கூட நீதிமன்றங்களின் மூலம் பெற இயலாமல் தவிப்பவர்) இன்னொரு மிகவும் பரபரப்பான சிக்கலைப் பற்றிச் சொல்கிறார்:


"இந்திய ஜனத்தொகையில் 40% குழந்தைகள். ஆனால் அந்தக் குழந்தைகளின் நலத்தை கவனிக்க ஒரு தனி அமைச்சகம் கிடையாது. குழந்தை என்றாலே பெண்கள்தான் அவர்களின் போஷகர்கள் என்று முடிவு செய்துவிடுகிறார்கள். தந்தைகளின் உரிமைகளைப் பற்றியோ, அந்தத் தந்தையின் அரவணைப்பு குழந்தைகளுக்கு கட்டாயம் தேவை என்பதைப் பற்றியோ இந்தச் சமுதாயமும் சட்டங்களை இயற்றுபவர்களும் சிந்திப்பதில்லை. பெண்களின் தேவைகளும் குழந்தைகளின் தேவைகளும் ஒன்றல்ல. விவகரத்து பெற்ற பெண் மறுமணம் செய்துகொள்வது அந்தப் பெண்ணின் நோக்கில் தேவையாக இருக்கலாம். ஆனால் அது அந்தக் குழந்தைக்கு நன்மை விளைவிக்கக் கூடியதா என்பதை எண்ணிப் பார்ப்பதில்லை. ஆனால் தம்பதிகள் பிரியும்போது குழந்தைகளை பெரும்பாலும் பிரிந்து சென்ற மனைவியின் வசம்தான் நீதிபதிகள் ஒப்படைக்கிறார்கள். அவர்கள் கணிப்பில் ஒட்டுமொத்த ஆண்கள் சமுதாயமும் கிரிமினல்கள், பொறுப்பற்றவர்கள் போலும்! இயற்கையின் நியதிப்படி ஒரு தந்தை தன் குழந்தைகளுக்கு அளிக்கும் பங்களிப்பை தாய் ஈடு செய்யமுடியாது. ஒரு குழந்தையின் வளர்ச்சியில் தந்தையின் பங்கு கணிசமானது. அது இந்தக் குழந்தைகளுக்கு மறுக்கப்படுகிறது."


இந்திய குடும்பப் பாதுகாப்பு இயக்கம் வரும் ஆகஸ்டு 15 அன்று மேற்கொள்ளப்போகும் நடவடிக்கைகள் பற்றி திரு. சுரேஷ் விளக்கினார்:


"அன்றைய தினம் காலையில் சென்னையில் நாங்கள் எங்கள் பிரச்னைகளைப் பற்றியும், இன்றைய சமூகத்தில் இத்தகைய ஆணெர்ப்புச் சட்டங்களால் நம் குடும்ப வாழ்வு முறையே எப்படிச் சிதறிப்போகின்றது என்பதைப் பற்றியும் இந்தச் சட்டங்களில் உடனடியாகத் திருத்தங்கள் செய்யவேண்டிய கட்டயம் பற்றியும் விளக்கும் துண்டுப் பிரசுரங்களை மெரீனா கடற்கரையில் வினியோகிக்கப் போகிறோம். மேலும் தமிழக ஆளுனர் அவர்களிடமும் சட்ட அமைச்சரிடமும் எங்கள் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் அளிக்க இருக்கிறோம்.


அன்றைய தினம் நாடு தழுவிய அளவில் எங்கள் போராட்டம் நிகழவிருக்கிறது. ஆகஸ்டு 15, 16 தேதிகளில் சிம்லாவில் நாட்டின் பல மாநிலங்களிலிருந்தும் இந்த இயக்கத்தின் தொடர்புள்ள 14 அரசு சாரா குழுமத்தினர் வந்து கூடி இரண்டாவது தேசிய மகாநாட்டை நடத்துகிறார்கள்."


இதுபற்றி Save Indian Family Foundation இயக்கத்தின் உறுப்பினர் திரு. விராக் அவர்கள் கூறுகிறார்:-


"இந்த அமைப்பின் முதல் மாநாடு கோவாவில் சென்ற ஆண்டு நடந்தது. இந்த ஆண்டின் மாநாட்டில் இந்த அமைப்பைச் சார்ந்த 14 அரசு சாரா இயக்கங்களிலிருந்து நாட்டின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் சுமார் 100 செயல் வீரர்கள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். எங்கள் வாழ்வாதாரங்கள்யும், பெற்றோர் நலத்தையும் பாதிக்கும் இந்த மாபெரும் பிரச்னைகளை நாங்கள் எதிர்கொள்வதற்கான செயல் திட்டங்கள் பற்றியும், ஆண்கள் நலத்திற்காக ஒரு பிரத்தியேக ஆணையம் மற்றும் அமைச்சகம் - National Commission for Men and a seperate ministry for men's welfare (பெண்களுக்கு இருப்பது போலவே) கொண்டு வரவேண்டிய கட்டாயத்தை உணர்த்துவது பற்றியும் விவாதித்து செயல் திட்டங்களை வகுத்து முடிவெடுக்க இருக்கிறோம்.
இந்த மாநாட்டிற்கு சென்னையிலிருந்து 9 உறுப்பினர்கள் கலந்து கொள்ள விருக்கிறார்கள்.


வெகு நாட்களாக தங்கள் மேல் சுமத்தப்படும் கொடுமைகளையும் சித்திரவதைகளையும் மௌனமாக தாங்கிக் கொண்டிருந்த ஆண்கள் கடைசியில் இனிப் பொறுக்கமுடியாது என்று பொங்கியெழுந்துவிட்டனர்!

(செய்தி மற்றும் படம் உதவி - டைம்ஸ் ஆஃப் இந்தியா)

தாய்க்குலத்தின் பெருமை

தன் தாயின் பல கணவர்களைப் பற்றியும், அந்தத் தாய் தன் மகளையே விபசாரத்திற்கு ஈடுபடுத்தச் செய்த முயற்சிகளைப் பற்றியும் இதன்கீழ் இட்டுள்ள கட்டுரையில் ஒரு பெண் விளக்குவதைப் பாருங்கள்.

தவறு செய்வதில் ஆண், பெண் பாகுபாடு இருக்கிறதா? இருபாலரும்தான் தவறிழைக்கிறார்கள். பின்னர் நம் நாட்டில் ஆண்களுக்கு மட்டும் எதிராக ஒருதலைப் பட்சமான சட்டங்கள் கட்டமைத்திருப்பது ஏன்?

ஒரு பெண்ணின் வாக்குமூலமே போதும், அதை மட்டுமே வைத்து வேறு எந்த சாட்சியமும் இல்லாமலேயே ஒரு ஆண் தூக்கிலிடப்படுகிறானே இந்த நாட்டில், ஆனால் அதே போல் ஆண்களின் வாக்குமூலம் ஏற்கப்படுவதில்லையே, இது அநியாயமில்லையா?

ஏன் இந்த சமுதாயம் ஒட்டுமொத்த ஆண்களுக்கும் எதிராக சமதர்மமில்லாமல் செயல்படுகிறது?

ஆண்கள் தவறிழைத்தால் அவர்களைக் கல்லாலடித்துக் கொல்லலாம் என்கிறார் ஒரு பெண்ணிய அரசியல்வியாதி. அப்படியென்றால் ஆஃப்கானிஸ்தானில் தாலிபான்கள் பெண்களுக்கு எதிராகச் செயல்பட்டவிதமும் சரியென்றே ஆகிவிடுகிறது அல்லவா? அதை ஏன் தவறு என்கிறார்கள்? ஆண்களுக்கு ஒரு நீதி, பெண்களுக்கு தனி நீதியா?

ஆண்களைப் பெற்ற தாய்களும், உடன் பிறந்த சகோதரிகளும் பெண்ணினத்தில் சேர்ந்தவர்கள் இல்லையா?

இப்படியே போனால் இந்நாட்டு ஆண்கள் அனைவரும் தாலிபானிய ஷரியத் சட்டத்தை வரவேற்கத் தொடங்கிவிடுவார்கள் என்று தோன்றுகிறது!

இப்போது குமுதம் ரிப்போர்ட்டரில் வெளிவந்த செய்திக் கட்டுரையைப் படியுங்கள்:-


மனைவியின் புகாரால் கைது - கணவன் தற்கொலை

குடும்பத் தகராறுகள் காரணமாக பெண்கள்தான் பெருமளவில் தற்கொலை செய்துகொள்வதாக ஒரு பொய்யான கருத்து செய்தி ஏடுகளாலும் ஊடகங்களாலும் பரப்பப்படுகிறது. இது ஒரு மாயை. ஆனால் உண்மை நிலையின்படி, நம் நாட்டில் ஆண்கள்தான் பெண்களைவிட 50% அதிகம் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இது அரசே வெளியிட்டுள்ள (National Crime Records Bureau) தரவு. ஆனால் பெண்கள்தான் அதிக அளவு ஆண்களால் கொடுமைப் படுத்தப்படுவதாகவும், அதனால் அந்தப் பேதைகள் தற்கொலைக்குத் தள்ளப்படுவதாகவும் ஒரு கற்பனைக் கதையை சில பெண்ணியவாதிகள் கோரஸாக கூச்சல் போட்டு, ஊடகங்கள் மூலமாகப் பரப்பி வருகின்றனர். இதற்குக் காரணம் பணம்!

ஆம். இதுபோன்ற கட்டுக் கதையைப் பரப்பிக் கொண்டிருந்தால்தானே UNIFEM என்னும் அமைப்பிலிருந்தும், மற்றும் பல அரசுத் துறைகளிலிருந்தும், பெண்களை முன்னேற்றுகிறேன் பேர்வழி என்று பல கோடி ரூபாய்களைக் கறந்து, டை அடித்த "பாப்" தலையும் லிப்ஸ்டிக்குமாக ஏர்கண்டிஷன் ரூம்பில் உட்கார்ந்துகொண்டு, இந்த நாட்டின் அனைத்து மணமான ஆண்களையும் பொய் வழக்குகளில் சிக்கவைத்து கைது செய்து சித்திரவதை செய்வது பெண்கள் முன்னேற்றத்திற்கு எவ்வளவு அவசியம் என்பதைப் பற்றி டி.வி சேனல்களில் கால்மேல் கால் போட்டுக்கொண்டு நீட்டி முழக்கி பேசிக்கொண்டிருக்க இயலும்! இதுதான் பிழைப்பு பல மேட்டுக்குடிப் பெண்களுக்கு!

மேலும் National Commission for Women என்ற அமைப்பை ஏற்படுத்தி, பல கோடி ரூபாய்கள் வரிப்பணத்தை செலவு செய்து, ஏழைப் பெண்களைப் பற்றி துளியும் கவலைப் படாமல், Bar-இலும் Pub-இலும் தண்ணி போட்டு கூத்தடிக்கும் பணக்காரப் பெண்மணிகளுக்காக ஏரோப்பிளேனில் பறந்து கொண்டிருப்பார்கள் இந்த மேதைகள்!

இனி செய்தியை வாசியுங்கள்:-

ஆலந்தூர், ஆக.3- 2009. செய்தி - தினத்தந்தி

குடும்ப தகராறு பிரச்சினையில் மனைவி புகார் கொடுத்து சிறைக்கு அனுப்பியதால் அவமானம் தாங்காமல் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

சென்னையை அடுத்த பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்தவர் மோகன். இவரது தம்பி ஏழுமலை(வயது 38). இவர் புதுச்சேரி வில்லியனூர் பகுதியை சேர்ந்தவர். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏழுமலைக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இதில் ஏழுமலையை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஏழுமலை ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் புதுச்சேரியில் இருந்து பள்ளிக்கரணை பகுதியில் உள்ள அவரது அண்ணன் வீட்டிற்கு வந்தார். மனைவி தன்னை சிறைக்கு அனுப்பியதை எண்ணி அவர் மனமுடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் தனக்கு அவமானமாக உள்ளதாக அடிக்கடி ஏழுமலை கூறி வந்தார்.

இந்த நிலையில் ஏழுமலை தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீக்குளித்தார். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஏழுமலை பரிதாபமாக செத்தார். இது குறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளத் தொடர்பு குற்றத்திற்கு ஆண் - பெண் சமமான தண்டனை வேண்டும்

சென்னை, ஜுலை.31- 2009. செய்தி - தினத்தந்தி

ஆண் - பெண் இருவருக்கும் கள்ளத் தொடர்புக்கு சமமான தண்டனை வழங்க வேண்டும் என்று ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர்.

தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்க தலைவர் டி.அருள்துமிலன், பொதுச் செயலாளர் எஸ்.மதுசூதனன் ஆகியோர் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே கள்ளத் தொடர்பும் அதனைத் தொடர்ந்த கொலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது தாங்கள் அறிந்ததே. பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான கடந்த ஆட்சியில் கள்ளத் தொடர்பு தொடர்பான குற்றங்களின் தண்டனையை அதிகரிக்கும் நோக்கில் இந்திய தண்டனை சட்டம் 497-ல் சில திருத்தங்களை கொண்டு வர விரும்பியது.

அதற்கான சுற்றறிக்கைகள் அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பப்பட்டன. ஆனால், இந்திய கலாச்சாரத்தை வேரோடு புதைக்க எண்ணுகின்ற சில பெண்கள் அமைப்புகளின் எதிர்பால் இந்த சட்டத் திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை.

மேலும், இந்திய தண்டனை சட்டம் 497-ல் தவறு செய்யும் பெண்களை பாதிக்கப்பட்டவர்களாக பாவித்து விடுவித்துவிடும் மென்மையான அணுகுமுறையால் இந்த சட்டத்தை மீறுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இதனால், ஏற்படும் கொலைகளின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும், இந்த கள்ளத் தொடர்பால் கணவனை கொல்வது சர்வ சாதாரண கதையாகி பல குடும்பங்கள் சீரழிந்து இந்திய கலாச்சாரத்திற்கே அச்சுறுத்தலாக மாறி வருவதை தங்களின் கனிவான பார்வைக்கு கொண்டு வருகிறேன்.

இந்த நிலையில், தான் பெற்ற 24 வயது மகனை, அவனை பெற்ற தாயே துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த கொடுமை நம் தமிழ் சங்கம் வளர்த்த மதுரையில் நடந்துள்ளது.

இந்த கொடுஞ்செயல் வன்மையான கண்டனத்திற்கு உரியது. எனவே, முதல்-அமைச்சர் கருணாநிதி, போர்க்கால நடவடிக்கை மேற்கொண்டு மத்திய அரசை வற்புறுத்தி இந்த பாராளுமன்ற கூட்டத் தொடரிலேயே இந்திய தண்டனை சட்டம் 497-ல் திருத்தம் செய்து கள்ளத் தொடர்பில் ஈடுபடும் ஆண்-பெண் இருவரும் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தும்படி சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.