கள்ளக்காதலை கண்டித்த கணவன் தலையை கல்லால் நசுக்கி கொலை

கள்ளக் காதல் பத்தினிகள் கணவனைக் கொலை செய்து கண்டம் துண்டமாக வெட்டும் அலை ஓயவில்லை. உண்மையில் அந்தக் கலை மேன்மேலும் வளர்ச்சி கண்டிருக்கிறது.

கள்ளக் காதல் செய்யும் பெண்குலத்திலகங்கள் தனியாகவோ கள்ளக் கூட்டாளியுடன் சேர்ந்தோ இதுபோல் கொலை செய்வது ஒரு ரகம். அவர்களை விட அதிபுத்திசாலிகள் தங்கள் கைகளை கொலை செய்து அழுக்காக்கிக் கொள்ளாமல் காக்கிகளுக்கு ஃபோன் செய்து விடுகிறார்கள். அவர்கள் அந்தக் கணவனை கவனிக்க வேண்டியபடி கவனித்து சுபாரி போட்டு விடுகின்றனர். யாராவது கூக்குரலிட்டால் விசாரணைக் கமிஷன் போட்டால் போகிறது. இது நல்லாயிருக்கே!

சரி இப்போது லேட்டஸ்ட் கொலையைப் பற்றிப் படியுங்கள்:

செய்தி: தினமலர்.

பட்டுக்கோட்டை: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த பேராவூரணி வாத்தலைக்காடு பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (40). இவர் தோப்பில் கூலி வேலை செய்து வந்தார். இவரது மனைவி நீலாவதி (35). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

பட்டுக்கோட்டை சாக்கு வியாபாரியான செந்தில் (32), வாத்தலைக்காடு பகுதிக்கு வியாபார ரீதியாக அடிக்கடி வந்து சென்றபோது, நீலாவதிக்கும், செந்திலுக்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. பல நாட்களாக நீடித்தது. இவர்களின் கள்ளத்தொடர்பு மாரிமுத்துவுக்கு தெரியவர, அவர் இருவரையும் கண்டித்தார்.

இதில், ஆத்திரமடைந்த செந்தில், நீலாவதி ஆகியோர் நேற்று முன்தினம் (15ம் தேதி) அதிகாலை ஐந்து மணியளவில் தூங்கி கொண்டிருந்த மாரிமுத்துவின் தலையில் பாறாங்கல்லை தூக்கிப்போட்டு த லையை நசுக்கி கொன்றனர். பின் பிணத்தை சாக்குப்பையில் கட்டி வீட்டுக்குள் வைத்து விட்டனர்.

இரவு பத்து மணிக்கு மேல் டி.வி.எஸ்., 50 பைக்கில் மாரிமுத்துவின் உடலை எடுத்துச் செ ன்று தூரத்தில் வீசிவிட்டு வரலாம் எனக்கருதி செந்தில், நீலாவதி ஆகியோர் புறப்பட்டனர். வழியில், தில்லங்காடு பகுதியில் நின்ற கிராமமக்கள், "சாக்கு பையில் என்ன,' என விசாரித்தனர். இவர்கள் இருவரின் தடுமாற்றமான பேச்சில் சந்தேகமடைந்து, சாக்கு மூடையை பிரித்து பார்த்தனர். சாக்கில் கொலை செய்யப்பட்ட ஒருவரது உடல் இருப்பதை அறித்து, இருவரையும் பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். பேராவூரணி போலீஸார் இருவரையும் கைது செய்தனர்.

1 மறுமொழி:

Anonymous said...

தஞ்சாவூர்மகள் குழவிக்கல்லால் தாக்கியதில் காயமடைந்த தந்தை சாவு

First Published : 22 Aug 2009 05:55:26 AM IST

Last Updated :பட்டுக்கோட்டை, ஆக. 21: பட்டுக்கோட்டை அருகே மகள் குழவிக்கல்லை தலையில் போட்டதில் காயமடைந்த அவரது தந்தை மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையை அடுத்த துவரங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரங்கசாமி (50). இவர் மனைவி லதா (40), மகள் உதயா (23).

உதயாவுக்கு திருமணமாகி 4 வயதுப் பெண் குழந்தை உள்ளது. இவரது கணவர் சுப்பிரமணியன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். அதனால் உதயாவுக்கு துணையாக அவரது வீட்டில் ரங்கசாமி வசித்து வந்தார்.

இந்நிலையில், உதயாவை வெளியில் செல்லக் கூடாது; யாரிடமும் பேசக் கூடாது என ரங்கசாமி கண்டித்ததால் ஆத்திரமடைந்த உதயா செவ்வாய்க்கிழமை (ஆக. 18) அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ரங்கசாமி தலையில் கிரைண்டர் குழவிக் கல்லைத் தூக்கிப் போட்டாராம்.

இதில் பலத்த காயத்துடன் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரங்கசாமி அங்கு சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை மாலை இறந்தார்.

இதையடுத்து, இந்த வழக்கில் கைதாகி திருச்சி மகளிர் சிறையிலுள்ள உதயா மீது பட்டுக்கோட்டை போலீஸôர் ஏற்கெனவே தொடர்ந்த கொலை முயற்சி வழக்கு தற்போது கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


Email PrintDelicious Digg Facebook கருத்துக்கள் kanavan thunai illathathal uthaya mananoikku(mental) aalakkapattar.
By mani thuvarai
8/22/2009 7:36:00