தனிக்குடித்தனம் வர மறுத்த கணவரை ஜெயிலுக்கு அனுப்பிய மனைவி

சென்னையில் தனிக்குடித்தனம் வர மறுத்த கணவர் மீது வரதட்சணை ஒழிப்பு சட்டத்தின் கீழ் போலீசில் புகார் கொடுத்து பட்டதாரி மனைவி ஜெயிலுக்கு அனுப்பினார்.

செய்தி: தினத்தந்தி 13-08-2009
=========================

இதுபோல் பொய் வழக்கு போடுவதற்காகவே ஒரு சட்டத்தை (498A) இயற்றி வைத்து அதைக் கொண்டு கணவர்களை நாள் தோறும் சிறைக்கு அனுப்பிக் கொண்டிருக்கும் நிலை தொடரும் போது சுதந்திரம் என்னய்யா எழவு வேண்டிக்கிடக்கிறது!

ஒவ்வொரு இந்தியனும் வெட்கித் தலை குனிய வேண்டிய நாள் தான் சுதந்திர தினம்!!

====================

செய்தி விவரம்:-

சென்னை மாம்பலம் முத்துரங்கன் தெருவைச் சேர்ந்தவர் குணா. இவர் எம்.பி.ஏ. பட்டதாரி. இவர் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு திருமணம் நடந்தது. இவர் மனைவி பெயர் பத்மபிரியா. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
பத்மபிரியாவும் எம்.சி.ஏ. பட்டதாரியாவார். அவரும் கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் கைநிறைய சம்பளத்தில் வேலை பார்க்கிறார்.

இனிதாக கழிந்த இவர்களின் இல்லற வாழ்க்கையில் தனிக் குடித்தன பிரச்சினை புயலை கிளப்பியது.

இவர்களோடு குணாவின் சித்தி மற்றும் சித்தப்பா சேர்ந்து வாழ்வதாக கூறப்படுகிறது. கூட்டுக் குடித்தனம் பிடிக்காத பத்மபிரியா, கணவரோடு தனியாக குடித்தனம் நடத்த விரும்பினார். குணா அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

இதனால் நேற்று மாம்பலம் மகளிர் போலீஸ் நிலையத்தில் பத்மபிரியா புகார் கொடுத்துவிட்டார். சித்தி, சித்தப்பாவின் பேச்சைக் கேட்டு கணவர் குணா தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், தனிக்குடித்தனம் வர மறுப்பதாகவும் புகாரில் கணவர் மீது சரமாரியாக பத்மபிரியா குற்றம்சாட்டி இருந்தார்.

உதவி கமிஷனர் கண்ணபிரான் மேற்பார்வையில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜானகி, இதுதொடர்பாக விசாரணை நடத்தினார். இருவரையும் அழைத்து கவுன்சிலிங் மூலம் போலீசார் அறிவுரை வழங்கினர்.

குணா தனிக்குடித்தனம் போக முடியாது என்று பிடிவாதம் பிடித்தார். பத்மபிரியா தனிக்குடித்தனம் போக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். தனிக்குடித்தனம் வராவிட்டால் கணவர் குணா மீது வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பத்மபிரியா போலீசாரிடம் உறுதிபட கூறிவிட்டார்.

கைதானார்

இதனால் வேறு வழியில்லாமல் நேற்றிரவு குணா மீது வரதட்சணை ஒழிப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்தனர். குணா கைது செய்யப்பட்டார். இரவோடு இரவாக கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

காதல் மற்றும் கலப்புத் திருமண தம்பதிகளான இவர்கள் சிறிய பிரச்சினைக்காக விட்டுக் கொடுக்காமல் இனிய இல்லற வாழ்க்கையை 2 பேருமே தொலைத்து விட்டார்கள் என்று பெண் போலீசார் வருத்தத்தோடு குறிப்பிட்டனர்.

2 மறுமொழிகள்:

')) said...

Add-Tamil விட்ஜெட் இன்ஸ்டால் செய்யுங்கள். தமிழின் முதன்மை திரட்டிகளில் உங்கள் பதிவுகளை எளிதில் வெளிஎட முடியும் , உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடையும்.
தரவிறக்கம் செய்ய www.findindia.net

')) said...

//பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜானகி, இதுதொடர்பாக விசாரணை நடத்தினார். இருவரையும் அழைத்து கவுன்சிலிங் மூலம் போலீசார் அறிவுரை வழங்கினர்.//

ஆஆ.. நம்ம தாம்பரம் மகளிர் காவல் நிலையத்தில் சிறப்பாக பணி புரிந்த திருமதி. ஜானகி ஆய்வாளர அவர்களா...?
இவர் நன்றாக புலன் விசாரனை செய்வதில் வல்லவர்... பல முறை இவருடைய புலன் விசாரனைக்காக சென்றிருக்கின்றேன்.... தொடரட்டும் இவருடைய புலன் விசாரனைகள்....