மனைவியின் புகாரால் கைது - கணவன் தற்கொலை

குடும்பத் தகராறுகள் காரணமாக பெண்கள்தான் பெருமளவில் தற்கொலை செய்துகொள்வதாக ஒரு பொய்யான கருத்து செய்தி ஏடுகளாலும் ஊடகங்களாலும் பரப்பப்படுகிறது. இது ஒரு மாயை. ஆனால் உண்மை நிலையின்படி, நம் நாட்டில் ஆண்கள்தான் பெண்களைவிட 50% அதிகம் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இது அரசே வெளியிட்டுள்ள (National Crime Records Bureau) தரவு. ஆனால் பெண்கள்தான் அதிக அளவு ஆண்களால் கொடுமைப் படுத்தப்படுவதாகவும், அதனால் அந்தப் பேதைகள் தற்கொலைக்குத் தள்ளப்படுவதாகவும் ஒரு கற்பனைக் கதையை சில பெண்ணியவாதிகள் கோரஸாக கூச்சல் போட்டு, ஊடகங்கள் மூலமாகப் பரப்பி வருகின்றனர். இதற்குக் காரணம் பணம்!

ஆம். இதுபோன்ற கட்டுக் கதையைப் பரப்பிக் கொண்டிருந்தால்தானே UNIFEM என்னும் அமைப்பிலிருந்தும், மற்றும் பல அரசுத் துறைகளிலிருந்தும், பெண்களை முன்னேற்றுகிறேன் பேர்வழி என்று பல கோடி ரூபாய்களைக் கறந்து, டை அடித்த "பாப்" தலையும் லிப்ஸ்டிக்குமாக ஏர்கண்டிஷன் ரூம்பில் உட்கார்ந்துகொண்டு, இந்த நாட்டின் அனைத்து மணமான ஆண்களையும் பொய் வழக்குகளில் சிக்கவைத்து கைது செய்து சித்திரவதை செய்வது பெண்கள் முன்னேற்றத்திற்கு எவ்வளவு அவசியம் என்பதைப் பற்றி டி.வி சேனல்களில் கால்மேல் கால் போட்டுக்கொண்டு நீட்டி முழக்கி பேசிக்கொண்டிருக்க இயலும்! இதுதான் பிழைப்பு பல மேட்டுக்குடிப் பெண்களுக்கு!

மேலும் National Commission for Women என்ற அமைப்பை ஏற்படுத்தி, பல கோடி ரூபாய்கள் வரிப்பணத்தை செலவு செய்து, ஏழைப் பெண்களைப் பற்றி துளியும் கவலைப் படாமல், Bar-இலும் Pub-இலும் தண்ணி போட்டு கூத்தடிக்கும் பணக்காரப் பெண்மணிகளுக்காக ஏரோப்பிளேனில் பறந்து கொண்டிருப்பார்கள் இந்த மேதைகள்!

இனி செய்தியை வாசியுங்கள்:-

ஆலந்தூர், ஆக.3- 2009. செய்தி - தினத்தந்தி

குடும்ப தகராறு பிரச்சினையில் மனைவி புகார் கொடுத்து சிறைக்கு அனுப்பியதால் அவமானம் தாங்காமல் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

சென்னையை அடுத்த பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்தவர் மோகன். இவரது தம்பி ஏழுமலை(வயது 38). இவர் புதுச்சேரி வில்லியனூர் பகுதியை சேர்ந்தவர். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏழுமலைக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இதில் ஏழுமலையை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஏழுமலை ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் புதுச்சேரியில் இருந்து பள்ளிக்கரணை பகுதியில் உள்ள அவரது அண்ணன் வீட்டிற்கு வந்தார். மனைவி தன்னை சிறைக்கு அனுப்பியதை எண்ணி அவர் மனமுடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் தனக்கு அவமானமாக உள்ளதாக அடிக்கடி ஏழுமலை கூறி வந்தார்.

இந்த நிலையில் ஏழுமலை தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீக்குளித்தார். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஏழுமலை பரிதாபமாக செத்தார். இது குறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 மறுமொழிகள்:

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

')) said...

தற்போதைய நாட்டு நடைமுறைப்படி இந்த உயிருக்கு ஒரு பைசா கூட மதிப்பு கிடையாது. யாராவது ஒரு கேள்வியாவது கேட்பார்களா?