பசை இருந்தால்தானே காதல் ஒட்டும்!

அயனாவரம் : காதலுக்கு, "குட்பை' சொல்லியும், ஏற்க மறுத்து தகராறு செய்த காதலனை போலீசார் ஈவ்-டீசிங் வழக்கில் கைது செய்தனர். (செய்தி: தினமலர் - 2009 ஆகஸ்டு 25)

சென்னை ஜி.கே.எம்., காலனியைச் சேர்ந்த டேரிக் யூட்டஸ் மகன் லியாநாத் யூட்டஸ்(27); ஷிப்பிங் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது பக்கத்து வீட்டில் கடந்த 14 ஆண்டுகளாக வசித்தவர் எட்வர்டின் மகள் ஷெரீல்(26). கடந்த ஓராண்டாக இருவரும் காலித்தனர். லியாநாத் சம்பாதிக்கும் 30 ஆயிரம் ரூபாய் பணத்தில், பாதி பணம் காதலிக்கு செலவழித்து வந்தார். இரண்டு மாதங்களுக்கு முன் லியாநாத் வேலை இழந்தார். இதையறிந்த ஷெரீல், வீட்டை அண்ணா நகருக்கு மாற்றிவிட்டார். அண்ணாநகர் வீட்டிற்கு அடிக்கடி சென்று காதலை ஏற்கும்படி லியாநாத் கூறினார்.

இதற்கிடையே, அயனாவரம் வெள்ளாளர் தெருவில் உறவினர் வீட்டிற்கு வந்த ஷெரீலை, லியாநாத், நடுரோட்டில் கையை பிடித்து இழுத்தார். இதனால், காதல் ஜோடியிடையே தகராறு ஏற்பட்டது. ஷெரீல் கொடுத்த புகாரின் பேரில், அயனாவரம் இன்ஸ்பெக்டர் எட்வர்டு, ஈவ்-டீசிங் வழக்கில் லியாநாத்தை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் அடைத்தார்.

--------------- ------------------

சுத்த விவரம் புரியாத ஆளய்யா, இவரு! இன்னொரு இலவச ஏ.டி.எம் மெஷினைத் தேடிப் போயிருப்பாள்(ர்) அந்தக் காதல் இளவரசி என்பது அறியாமல் பழைய டயலாகையெல்லாம் நம்பிப் போய் கையைப் பிடித்திருக்கிறார். சட்டம் தெரியாதவங்க!!

விட்டில் பூச்சிகள் பிழைப்பது எங்கே!!

3 மறுமொழிகள்:

')) said...

உண்மையிலேயே உங்கள் பதிவு ஒரு சிறப்பான முயற்சி . உங்களுக்கு இந்த பதிவின் மூலம் சரியான ஆதரவு கிடைக்கின்றதா ? எனென்றால் பெண்களுக்கு எதிராக பேசுவதும் எழுதுவதும் மிகப்பெரிய குற்றம் போல் உள்ளது. இந்த விஷயத்தில் பெண்களிடம் இருப்பதை போல் ஆண்களுக்குள் ஒற்றுமை இல்லை.

')) said...

சரியான சுனாபானா வா இருப்பாரு போலருக்கு... என்ன செய்வது ஒரு தடவை உள்ளப்போய்ட்டு வந்து தெளிவாயிடுவாரு... எல்லம் ஹார்மோன் படுத்துர பாடு...

')) said...

Little Boy அவர்களே,

நீங்கள் குறிப்பிட்டுள்ளதுபோல் ஆண்களிடையே ஒற்றுமையில்லாதது மட்டுமல்லாமல் அனைத்து மட்டத்திலும் ஆணினம் தொடர்ந்து வஞ்சிக்கப்படுவதை அறிந்து கொள்ளாமல் இன்னமும் பலர் பெண்ணியம் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

உதாரணத்திற்கு இன்றைய செய்தி ஒன்றைக் காணுங்கள்.

ஏழை மாணவர்களுக்கு இலவச சீசன் டிக்கட்டுகளை இரெயில்வே அளிக்கிறது. அதில்கூட ஓரவஞ்சனை! ஆண்களுக்கு 12-வது வகுப்பு வரையில்தானாம். ஆனால் பெண்களுக்கு பட்டப்படிப்பு முடியும் வரையிலாம். ஏழைகள் என்பதில் ஆண் ஏழையென்ன, பெண் ஏழையென்ன. படிக்கும் காலத்தில் ஏழ்மை என்பது அவர்களுடைய பெற்றோர்களின் பொருளாதார நிலையைத்தானே குறிக்கிறது.

இதுபோன்ற பல வழிகளில் நம் நாட்டு ஆணினம் ஒட்டுமொத்தமாக காயடிக்கப்படுகிறது. இதெற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் ஆண்களையும் அவர்களுடைய பெற்றோர்களையும் ஒரு காரணமோ, முகாந்திரமோ இல்லாமல் கைது செய்து சிறையிலடைக்கும் கொடுங்கோன்மை சட்டத்தால் IPC Sec 498A) பல்லாயிரக் கணக்கான படித்த இளைஞர்கள் பொய் கேசுகளால் பீடிக்கப்பட்டு காவல் நிலையத்திற்கும் கோர்ட்டுக்குமாக அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இன்று பெண்ணியம் பேசித்திரியும் ஆண்கள் இந்த நிலையின் பயங்கரத்தை ஒருநாள் உணர்வார்கள் - தாங்களும் பாதிக்கப்படும்போது. ஆனால் அதற்குள் காலம் கடந்துவிடும்.

நன்றி Little Man.