ஆணின் உயிர் ஒரு செல்லாக்காசு!

ஒரு பெண் புகார் கொடுக்கிறார் என்றால் அதை உடனே கவனிக்கவேண்டியது நம் சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்தினருக்கும் விதிக்கப்பட்ட கடமையல்லவா!

அதுவும் தன் கணவன்மேல் புகார் கொடுத்தால் அதை தலைபோகிற அவசரமாகக் கருதி அந்தப் பெண்பாவையின் துயர் துடைக்க காவல்துறை அதிவேகமாக - அது இரவு நேரமாக இருந்தாலும் சரி - விரைந்து சென்று அந்த குற்றவாளியை (அதுதான் கணவன் - சட்டத்தின் கண்முன் ஒவ்வொரு மணமான ஆணும் குற்றவாளிதானே!) கைது செய்து அவனைச் செவ்வனே "விசாரணை" செய்து அந்தப் பெண்ணுலத் திலகத்தின் மனத்தில் மகிழ்ச்சியூட்ட வேண்டாமா! இதுதானே நம் சமூகத்தின் கடமை. அதற்காகத்தானே அடுக்குமேல் அடுக்காக பல ஆணழிப்புச் சட்டங்களை உருவாக்கி பழி வாங்கிக் கொண்டிருக்கிறோம்.

இப்போது செய்தி:

முதலில் இன்றைய (ஆகஸ்டு 19, 2009) தினமலரில் வெளிவந்தது:

நீலாங்கரை: மனைவி கொடுத்த புகாரின் பேரில், விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்லப்பட்ட நபர் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் நீலாங்கரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், செய்யார் அடுத்த பாலூரை சேர்ந்த நந்தன் என்பவரின் மகன் ரமேஷ் (34). இவரின் மனைவி உஷாராணி (32).கடந்த 14 ஆண்டுகளுக்கு முன், நீலாங்கரையில் உள்ள ஒரு தனியார் இறால் நிறுவனத்தில் வேலை பார்த்தபோது, உடன் வேலை பார்த்த உஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின், கொட்டிவாக்கம், வெங்கடேசபுரத்தில் வசித்து வந்தனர். இவர்களுக்கு, பிரியதர்ஷினி (12) என்ற மகளும், கீர்த்திவாசன் (9) என்ற மகனும் உள்ளனர். வெங்கடேசனுக்கு குடிப்பழக்கம் உண்டு. இதனால், குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டு வந்தது.

ரமேஷ் நேற்று முன்தினம் நள்ளிரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்தார். அப்போது, உஷாவுடன் தகராறு ஏற்பட்டது.இதில், மனைவியை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, 108 எண்ணுக்கு போன் செய்த உஷா, தன்னை கணவர் கொலை செய்ய முயற்சிப்ப தாக புகார் செய்தார்.இது தொடர்பாக, நீலாங் கரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இரவுப் பணி பார்த்த சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் மூன்று போலீசார், வெங்கடேசபுரம் சென்று தகராறில் ஈடுபட்ட ரமேஷை நீலாங்கரை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.பின், போலீஸ் ஸ்டேஷனில் வைத்து அவரை விசாரித்தனர்.

விசாரணை முடிந்ததும் ரமேஷிற்கு ஜாமீன் வழங்கி, வீட்டிற்கு அனுப் பினர். போலீஸ் ஸ்டேஷனை விட்டு வெளியேறிய ரமேஷ், திடீரென மயக்கம் போட்டு விழுந்தார்.உடனடியாக அவரை அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென் றனர். அங்கு மருத்துவர்கள் கை விரித்து விட்டதால், அடையாறில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.அங்கு ரமேஷை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ரமேஷ் இறந்த தகவலறிந்து அவரின் உறவினர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.அவர்களை போலீசார் சமாதானப் படுத்தினர். பின், ரமேஷின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப் பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.இச்சம்பவம் குறித்து ரமேஷின் உறவினர்கள் கூறுகையில்,"நேற்று (நேற்று முன்தினம்) நள்ளிரவு உஷா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வந்தனர்.

வீட்டிற்கு அருகிலேயே ரமேஷை அடித்து போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்து சென்றனர். அங்கும் ரமேஷை போலீசார் தாக்கினர்.போலீசார் அடித்ததால் தான் அவர் இறந்தார். எனவே, ரமேஷை கண்மூடித்தனமாக தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் தான் அவரின் உடலை பெற்றுக் கொள்வோம்,' என்றனர்.இது குறித்து, துரைப்பாக்கம் உதவிக் கமிஷனர் முரளி கூறுகையில்,அவரின் உடலில் எந்தவித காயமும் இல்லை. இதயகோளாறு காரணமாக அவர் இறந்ததாக கூறப் படுகிறது.இருப்பினும், பிரேத பரிசோதனைக்கு பிறகே தெரியவரும்,' என்றார். ரமேஷ் மரணம் குறித்து ஆர்.டி.ஓ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
-------------------------------------
Times of India Reports:

Ramesh’s relatives had a different version about the whole incident. According to them he had been staying away from his wife and was living with his sister. He was caught by a vehicle checking team when he was riding a two-wheeler and his bike was seized as he had no documents to support them. He had told the police that he would produce the papers for the two-wheeler and had gone to the house in Kottivakkam only to pick up the vehicle documents. His wife Usha thought that he had come to torture her and called the police, his relatives alleged. They said Ramesh had no history of any illness.

Ramesh had married Usha after a brief courtship, around
16 years ago. Police said the couple used to have regular fights and that they had been staying separately for a few months.

---------------------------------

அடுத்து தினத்தந்தியில் வெளிவந்துள்ள செய்தி:-

ஆலந்தூர், ஆக.19-

குடும்ப தகராறில் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட வாலிபர் மர்மமான முறையில் இறந்தார். போலீசார் அடித்து கொலை செய்து விட்டதாக கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுத்ததால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

காதல் திருமணம்

சென்னையை அடுத்த நீலாங்கரை அருகே உள்ள கொட்டிவாக்கம் வெங்கடேசபுரத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 35). இவரது சொந்த ஊர் செய்யூர் அருகே உள்ள பாலூர் கிராமம் ஆகும்.

இவருடைய மனைவி உஷாராணி (32). இவருக்கு சொந்த ஊர் தஞ்சாவூர். கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் ரமேஷ்-உஷாராணி ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகளும், 9 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

தகராறு

உள்ளகரத்தில் உள்ள பெட்ரோல் பங்க்கில் ரமேஷ் வேலை பார்த்து வந்தார். ரமேஷ் மது அருந்தி விட்டு வருவதால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படும். இதனால் கடந்த ஒரு வாரமாக ரமேஷ் வீட்டிற்கு வராமல் இருந்தார். நேற்று முன்தினம் இரவு ரமேஷ் குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது மீண்டும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. உடனே இது பற்றி உஷாராணி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார்.

உடனே நீலாங்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன், 4 போலீசாருடன் சம்பவ இடத்திற்கு வந்தார்.

சாவு

குடிபோதையில் மனைவியுடன் தகராறு செய்த ரமேசை போலீசார் வீட்டின் முன் அடித்ததாக கூறப்படுகிறது. பின்னர் நீலாங்கரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர் மயங்கி விழுந்தார்.

உடனே போலீசார் ரமேசை தூக்கிக் கொண்டு நீலாங்கரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளித்த டாக்டர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் பெரிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறினார்கள்.

இதையடுத்து போலீசார் தங்கள் காரில் அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ரமேஷ் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினார்கள்.

மறுப்பு

இது பற்றிய தகவல் கொட்டிவாக்கம் பகுதியில் காட்டு தீ போல் பரவியது. ரமேசின் உறவினர்கள் அடையாறில் உள்ள மருத்துவமனையை முற்றுகையிட்டனர். போலீசார் அடித்ததால் தான் ரமேஷ் இறந்து விட்டதாக கூறி உடலை வாங்க மறுத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் அடையாறு துணைக்கமிஷனர் திருஞானம், துரைப்பாக்கம் உதவி கமிஷனர் முரளி மற்றும் போலீசார் விரைந்து சென்று சமரசம் பேசினார்கள். போலீசார் அடித்ததால் தான் ரமேஷ் இறந்து இருப்பதால் போலீசார் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

நீண்ட நேரத்திற்கு பின் தனியார் மருத்துவமனையில் இருந்த ரமேஷ் உடலை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர்.

நடவடிக்கை

இது பற்றி போலீசார் கூறுகையில், ``குடிபோதையில் ரமேஷ் இருந்ததால் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தோம். சிறு வழக்கு போட்டு வீட்டிற்கு செல்லுமாறு கூறினோம். ஆனால் ரமேஷ் போலீஸ் நிலைய வாசலில் மயங்கி விழுந்தார். உடனே போலீசார் ரமேசை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே ரமேஷ் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மாரடைப்பு ஏற்பட்டதால் ரமேஷ் இறந்து இருக்கலாம்'' என்று தெரிவித்தனர்.

ஆனால் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 5 போலீசார் மீது நடவடிக்கை எடுக்கும் வரை ரமேசின் உடலை வாங்க மாட்டோம் என்று அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

ஆர்.டி.ஓ. விசாரணை

இந்த நிலையில் ரமேசின் மர்ம சாவு பற்றி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்திட சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார். ஆர்.டி.ஓ. விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை முடிவின் அறிக்கை பெற்றபிறகு தான் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தினால் கொட்டிவாக்கம், நீலாங்கரை கிழக்கு கடற்கரை சாலையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

1 மறுமொழி:

')) said...

அட நம்ப ஏரியா நீயுஸ்... அன்புமிக்க காவல் தெய்வங்களே... உங்கள் திறமைகளை ரொடி, அட்டையை போட்டு பிழைக்கும் அரசியல் வாதி மற்றும் கட்டப்பஞ்சயாத்து அல்லக்கைகளிடம் காட்டுங்கள்... அப்பாவி குடும்பத்தினரிடம் திறமையை காட்டி அவர்களை மிருகமாக்கி விடாதிர்கள்... பல பெரு பொய்கேசுல வேலைய வீடு எல்லத்தையும் விட்டுட்டு ரோட்டுல நிக்கிரான்...

நீங்க பிரியாணி துன்றதுக்கு அடுத்தவன் குடி கெடுக்காதீர்கள்....