ஓட்டப் பந்தய வீராங்கனை!

கணவனை கைவிட்டு விட்டு கள்ளக் காதலனுடன் மனைவி ஓட்டம்.

செய்தி: தினமலர் - 13-08-2009

கொடுமுடி: கொடுமுடி அருகே உள்ள வருந்தியாபாளையத்தில், கணவனை கைவிட்டு விட்டு காதலனுடன் ஓடிய பெண்ணிடம் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

கொடுமுடி அருகே வருத்தியாபாளையத்தைச் சேர்ந்தவர் நித்யா (23); விளக்கேத்தியைச் சேர்ந்த உலகநாதன் (28). இருவருக்கும் மூன்றாண்டுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப்பின், டி.பார்ம்., படிக்க நித்யா விரும்பினார். மனைவியின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு, பெருந்துறையில் உள்ள கல்லூரியில் படிக்க வைத்தார் உலகநாதன்.படிப்பு முடிந்த நிலையில், ஏற்கனவே தன்னை காதலித்த கல்வெட்டுப் பாளையத்தைச் சேர்ந்த துளசிமணியுடன் (30), நித்யா சில நாட்களுக்கு முன் மாயமானார். மனைவி வேறொருவருடன் மாயமானது குறித்து கொடுமுடி போலீசில் முறையிட்டார். துளசிமணியுடன் மாயமான நித்யாவை அழைத்து வந்த போலீசார், கணவருடன் சேர்ந்து வாழும்படி அறிவுரை கூறினர்;


ஆனால், கணவனுடன் செல்ல நித்யா மறுத்துவிட்டார்.கோபமான உலகநாதன், படிப்புக்காக செலவழித்த பணத்தை திருப்பித் தருமாறு கேட்டார்; அதற்கும் நித்யா மறுத்துவிட்டார். நொந்துபோன போலீசார், இருவரையும் நீதிமன்றம் சென்று தங்களது பிரச்னையை தீர்த்துக்கொள்ள அறிவுறுத்தினர்; இருவரும் தனித்தனியே பிரிந்து சென்றனர்.

===========

கள்ளக் காதலனுடன் ஓடிப் போனவளுடன் "பேச்சு வார்த்தை" நடத்துகிறார்களாம்! வெட்கக் கேடு!

அது சரி, இதேபோல் கணவன் மனைவியை விட்டுச் சென்றால் உடனே அவனைக் கைது செய்கிறார்களே, அது ஏன்?

மனைவி எப்போது வேண்டுமனாலும் கணவனை அம்போ என்று விட்டுவிட்டு கள்ளக் காதலனுடன் கைகோர்த்துச் சென்றுவிடலாம். அப்போது போலிசார் அவளுக்கு அறிவுரை கூறி தாஜா செய்வார்கள். அவள் முறுக்கிக் கொண்டு முடியாது என்று போய் விடுவாள். அவளை ஒன்றும் செய்யாமல் விட்டுவிடுவார்கள். ஆனால் கணவன் அதுபோல் செய்தால் அவனை உடனே கைது செய்து உள்ளே போட்டு விடுவார்கள். ஏனென்றால் சட்டங்கள் அப்படித்தான் சொல்கின்றனவாம்!

வெட்கக் கேடு ஐயா!

இப்போது இந்த நாட்டில் திருமணம் செய்துகொண்டு அடிமைப்பட்டுக் கிடக்கும் ஆண்களுக்கு சுதந்திர தினம் வேறு ஒரு கேடா!!

1 மறுமொழி:

')) said...

சோலி முடிஞ்சோன அத்தா இடத்த மாத்திரிச்சி... நல்ல வேலை கொய்யால எதும் டவுரி கேசு போட்டு அந்த ஏமாந்த சோனகிரிய உள்ள புடிச்சிபோடல... இப்ப எல்லாம் வீட்ல உள்ள குத்துவிளக்கயே கிளப்பிகிட்டு போய்ரானுங்க... இவர் பெரிய புடிங்கி மாதிரி படிக்க அனுப்பிச்சாரு அது அங்க போயி கள்ளக்காதல் பாடத்தை கத்துக்கிட்டு எஸ்கேப்ஆகிடிச்சி...