Disclaimer:
ஏழை எளிய மக்களின் துயர் துடைக்க தமிழக அரசு தொடங்கியிருக்கும் "கலைஞர் காப்பீட்டுத் திட்டத்"திற்கும் இந்த இடுகைக்கும் தொடர்பு இல்லை. அதைக் குறைவு படுத்தும் நோக்கில் இந்த இடுகை எழுதப்படவில்லை.
எதெதெற்கோ இன்ஷ்யூர் செய்கிறார்கள். திருமணமான ஒரு கணவன், தன் மனைவியின் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கிறான் என்ற காரணத்தினால் என்றைக்கு மனைவி கையால் சாகடிக்கப் போகிறானோ தெரியாது. அதனால் திருமணம் செய்துகொள்ளும் ஒவ்வொரு ஆண்மகனுக்கும் ஒரு சிறப்பு காப்பீடு தேவை. அதாவது, கள்ளக்காதல் வெறியின் மேலீட்டால் கொலை செய்யப்படும் கணவனின் குழந்தைகள், பெற்றோர், உடன்பிறப்புகளுக்கு நிவாரணம் வழங்கவும், மற்றும் ஜீவனாம்சம், மெயின்டெனென்ஸ், 498A, DV Act போன்ற கேசுகளிலிருந்து கணவர்களை பாதுகாக்கவும், மேலும் கள்ளக்காதலைத் தேடி மணமான பெண்கள் அலைவதன் காரணம் கணவனின் ஆண்மைத்தன்மை (இதற்கு என்ன விளக்கம் என்பதை மனோரமா அம்மையாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும்) குறைவுதான் என்று கூறி ஒட்டுமொத்த ஆண்குலத்தையுமே இழிவு படுத்தும் மனோரமாவிடமிருந்து கணவர்களைக் காப்பாற்றவும், அவசியம் ஒரு "கள்ளக்காதல் காப்பீட்டுத் திட்டம்" தேவை. அப்போதுதான் எதிர்வரும் ஆண் சிசுக்கொலை நிகழ்வுகளிலிருந்து சமூகத்தைக் காப்பாற்ற முடியும்!
மேலும் கள்ளக்காதலன் கூட கணவன் போல் கண்ட்ரோல் செய்ய எத்தனித்தால் அவனையும் இந்தப் புதுமைப்பெண்கள் போட்டுத் தள்ளி விடுகிறார்கள். என்றாலும் கள்ளக் காதலனுக்கும் காப்பீடு வேண்டும் என்று கேட்பது ரொம்ப ஓவர். அதனால் கணவனுக்கு மட்டும் இப்போது கேட்போமே!
இப்போது கள்ளக்காதலினால் கணவனைக் கொலை செய்த காரிகை பத்து ஆண்டுகளுக்குப் பிறகு பிடிபட்ட கதையைப் படியுங்கள்.
சிவகிரி, நவ.2 - 2009. தினத்தந்தி
சிவகிரி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, காதலனுடன் சேர்ந்து பெண் கொலை செய்தார். 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கொலையில் துப்பு துலங்கியது.
கள்ளத்தொடர்பு
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள குலவிளக்கு நத்தக்காடு பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது45), விவசாயி. இவரது மனைவி பொன்னாத்தாள். இவருக்கும், திருப்பூர் மாவட்டம் முத்தூரை சேர்ந்த மர அறுப்பு மில் அதிபர் தங்கவேல் என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக தெரிகிறது.
இவர்களது கள்ளத் தொடர்பு பொன்னாத்தாளின் கணவர் சண்முகத்திற்கு தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவர் பொன்னாத்தாளை கண்டித்தார். இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
விவசாயி கொலை
இந்த நிலையில் கடந்த 12-3-2000 அன்று கரூர் மாவட்டம் தென்னிலை அருகே உள்ள மொஞ்சனூரில் சண்முகம் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவரது பிணத்தை தென்னிலை போலீசார் கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து தீவிர புலன் விசாரணை நடத்தி வந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் போலீசார் அந்தப்பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வந்த ஒரு நபரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அதில், அவரது பெயர் முருகேசன் என்ற முகிலன் என்பதும், முத்தூரில் உள்ள தங்கவேலின் மர அறுப்பு மில்லில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வருவதும் தெரியவந்தது. மேலும் முகிலன் முத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வீடு புகுந்து கைவரிசை காட்டி வந்ததும் தெரியவந்தது.
தீ வைத்து...
அவரிடம் போலீசார் தொடர் விசாரணை நடத்தினார்கள். அப்போது மேலும் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. குலவிளக்கு நாத்தக்காடு பகுதியை சேர்ந்த விவசாயி சண்முகத்தை, தானும், சண்முகத்தின் மனைவி பொன்னாத்தாள், மாமனார் ரங்கசாமி, மகள்கள் செல்வி என்கிற அச்சுதா, வசந்தி, கள்ளக்காதலன் தங்கவேல் ஆகியோரும் சேர்ந்து அரிவாளால் வெட்டி கொலை செய்து, அவரது உடலை டிராக்டரில் கொண்டு வந்து மொஞ்சனூர் பகுதியில் தீ வைத்து எரித்து விட்டு தப்பி சென்றதையும் விசாரணையில் அவர் போலீசாரிடம் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து போலீசார் முகிலனை சிவகிரி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செல்லமுத்து, சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து முகிலனை கைது செய்தனர்.
வலைவீச்சு
கொலை வழக்கில் தலைமறைவாக இருக்கும் பொன்னாத்தாள், அவரது கள்ளக் காதலன் தங்கவேல், தந்தை ரங்கசாமி, மகள்கள் செல்வி என்கிற அச்சுதா, வசந்தி ஆகிய 5 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே கணவனை கொலை செய்த சம்பவத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு துப்பு துலங்கி இருப்பது அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேவை கள்ளக்காதல் காப்பீட்டுத் திட்டம்!
குறிச்சொற்கள் 125, 498a, adultery, anti-male, biased laws, dv act, extortion, law, lust, maintenance, manorama, கள்ளக்காதல், கொலை, மனோரமா
கள்ளக்காதலில் கற்பை எதிர்பார்த்த சாமியார் கள்ளக்காதலியுடன் தீக்குளிப்பு
பழிக்கு பழி வாங்குவதற்காக உடலில் தீ வைத்து கொண்டு கள்ளக்காதலியை கட்டி பிடித்த சாமியார் இருவரும் கருகி பலியானார்கள்
சென்னை, அக். 13- 2009
சென்னை ஒட்டேரி கொசப்பேட்டை வெங்கடாத்திரி நாயக்கன் தெருவைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி (30). இவரது கணவர் யுவராஜ் (45). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விஜயலட்சுமி, கணவர் யுவராஜ் மற்றும் குழந்தைகளை விட்டு பிரிந்து சென்று விட்டார்.
பின்னர் விஜயலட்சுமி அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் (40) என்ற சாமியாருடன் தொடர்பு வைத்திருந்தார். சங்கருடன் தாலி கட்டாத கணவன் - மனைவியாக வாழ்ந்து வந்தார்.
விஜயலட்சுமிக்கு வேறு சில ஆண்களுடனும் கள்ளக்காதல் இருந்துள்ளது. இதை சங்கர் கண்டித்துள்ளார். ஆனால் விஜயலட்சுமியோ நான் உனக்கு பொண்டாட்டி இல்லை, கள்ளக்காதலி மட்டுமே. பிடிக்கவில்லை என்றால் பிரிந்து விடலாம் என்று திமிராக பேசி உள்ளார்.
இப்படி அடிக்கடி இருவருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு விஜயலட்சுமி வேறொரு கள்ளக் காதலனை பார்ப்பதற்கு வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். இதை சாமியார் சங்கர் எதிர்த்துள்ளார். மேலும் கண்டித்து அடித்து உதைத்துள்ளார். ஆனால் அதையும் மீறி விஜயலட்சுமி வீட்டை விட்டு புறப்படத் தயாரானார்.
திடீரென ஆவேசமான சங்கர் மண்ணெண்ணையை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். கொளுந்து விட்டு எரிந்த தீயுடன் ஓடிச்சென்று கள்ளக் காதலி விஜயலட்சுமியை கட்டிப் பிடித்தார். இதனால் அவர் மீதும் தீ பற்றியது.
விஜயலட்சுமி உடும்பு பிடியில் சிக்கியது போல் தப்பிக்க முடியாமல் அவதிப்பட்டார். அவரது உடலிலும் தீ கொளுந்து விட்டு எரிந்தது. இருவரும் தீயில் கருகினர்.
பலத்த காயம் அடைந்த இருவரையும் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இருவரும் பரிதாபமாக பலியானார்கள்.
ஓட்டேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
முன்னதாக ஓட்டேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுல் ஸ்டேன்லியிடம் விஜயலட்சுமி மரண வாக்குமூலம் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
"நான் மற்ற ஆண்களுடன் பழகுவதை தவறாக நினைத்து எனது கணவர் என்னை விட்டு பிரிந்து சென்றார். (அது அந்தக் கணவனின் தவறு. கள்ளக்காதலைப் போய் தவறாக நினைக்கலாமா? அது ஒவ்வொரு மணமான பெண்ணுக்கும் உள்ள அடிப்படை உரிமை அல்லவா! அதற்காகத்தானே மனோரமா போன்றவர்கள் அயராது பாடுபடுகிறார்கள்!)
அதன் பிறகு சாமியார் சங்கருடன் குடித்தனம் நடத்தினேன். அவரும் என்னை சந்தேகித்தார். வீட்டை விட்டு வெளியே புறப்பட தயாரான போது தீக்குளித்த அவர் என்னை கட்டி பிடித்து கொண்டு என் உடலிலும் தீ பரவ காரணமானார். ஆண் நண்பர்களின் தொடர்பு என் உயிருக்கு உலை வைத்து விட்டது."
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
செய்தி: மாலைமலர், தினத்தந்தி
=======================
ஐயோ, பாவம் அந்த விஜயலட்சுமி அம்மையார். அவர் மட்டும் தொடர்ந்து உயிரோடு இருந்திருந்தால் அவருக்கு சிறப்பான எதிர்காலம் இருந்திருக்கும். மாதர் திலகம் மனோரமா அவர்கள் கள்ளக்காதலுக்கு கணவனின் ஆண்மைக் குறைவுதான் காரணம் (அதாவது அவனுடைய ஆண்குறியின் விறைப்புத் தன்மை மனைவியின் தேவைக்கேற்ப இல்லை - அதுதானே பொருள்!) என்று போராடத் துவங்கியிருக்கும் இயக்கத்தில் சேர்ந்து அவர் புகழ் பெற்றிருக்கலாம். அவருடைய கள்ளக்காதலர்களுக்கும் சேர்த்து முன்னாள் கணவனையே படியளக்க வைத்திருக்கலாம். அதற்குத்தானே தேசிய பெண்கள் வாரியம் சட்டம் இயற்றக் கோரியிருக்கிறது!
கள்ளக்காதலர்களுக்கு இனிமேல் வளமான எதிர்காலம் காத்திருக்கிறது நம் நாட்டில்!
சரி, அந்த அப்பாவி கணவர்களின் கதி? அவன்தானே அய்யா கள்ளக்காதல் செய்யும் மனைவிக்கு பணம் கொடுத்து அழவேண்டும்? அவன் ஏன் திருமணம் செய்துகொண்டான்; அனுபவிக்கட்டும்!
குறிச்சொற்கள் 125, law, lust, maintenance, manorama, ncw, paramour, ஆண்பாவம், கள்ளக்காதல், கொலை, மனோரமா, ராமாத்தாள், வெறி
எம்.பி வரை எம்பியிருக்கும் 498A கேசுகள்!
முன்னாள் அமைச்சரும் இன்னாள் எம்.பியுமான செம்மலை மற்றும் அவர் குடும்பத்தினர் மீது 498A கேசு தொடுத்துள்ளனர்.
எம்.பி வரை படர்ந்துள்ள 498A பாம்பு சீக்கிறமே அமைச்சர்கள், நீதிபதிகள் போன்று சமூகத்தில் அனைத்து நிலைகளில் உள்ள பல பெரிய மனிதர்களையும் பீடித்த பின்னர்தான், பொய்க் கேசு போடுவதற்கென்றே அமைக்கப்பட்டுள்ள Sec 498A of IPC, Domestic Violence Act, Sec 125 of CrPC போன்ற கொடுங்கோன்மை சட்டங்களிலிருந்து மக்களுக்கு விமோசனம் கிடைக்கும்.
இப்போதெல்லாம் உங்களுக்கு யாரையாவது பிடிக்கவில்லை, அவர்களைப் பழி வாங்க வேண்டுமென்று தோன்றினால் அதற்கு சும்மா அடிச்சான், பிடிச்சான் போன்ற ஜுஜுபி கேசெல்லாம் வேலைக்கு ஆகாது! அதுக்குத்தான் கைவசம் நல்ல தீபாவளி லட்டு கணக்காக பொம்பளை சம்பந்தமான பல சட்டங்களைப் போட்டு வைத்திருக்கிறார்களே ஐயா! சமீபத்தில் தினமலர் செய்தி ஆசிரியரை எந்த சட்டத்தில் கைது செய்தார்கள் பார்த்தீர்கள் இல்லையா - பெண்கள் வன்கொடுமை சட்டத்தில்! அது தான் கூரான ஈட்டி. அதுபோல் 498A மற்றும் குடும்ப வன்முறைச் சட்டம் - இப்படி எதேனும் ஒரு பெண் கொடுமை தொடர்பான சட்டத்தை ஏவி விட்டால், ஆசாமி காலி!
குடும்ப வன்முறைச் சட்டம் (Prevention of domestic violence against women act) ஒரு கந்தல் சட்டம். இதை வைத்துக் கொண்டு யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் சிக்க வைக்கலாம். உதாரணத்திற்கு திருவாளர் டோண்டு தன் வீட்டில் மௌனமாக வலைப்பதிவு எழுதிக் கொண்டு குடும்ப வன்முறை செய்கிறார் என்று நீங்கள் (அவருக்குச் சம்பந்தமில்லாதவர்) புகார் கொடுக்கலாம். அதன் மீது ஆக்ஷன் எடுப்பார்கள். இது போல் நிகழ்ந்த சில கேசுகளைப் பற்றி சீக்கிறமே விரிவாக எழுதுகிறேன்.
இப்போதைக்கு செம்மலையின் நிலையைப் பாருங்கள்:-
வரதட்சணை கொடுமை வழக்கு.
அ.தி.மு.க. எம்.பி. செம்மலை மனைவி, மகனுடன் கோர்ட்டில் ஆஜர்.
சேலம், அக்.13- 2009. செய்தி - தினத்தந்தி.
சேலம் தொகுதி அ.தி.மு.க. எம்.பி. செம்மலை, மனைவி மற்றும் மகனுடன் சேலம் மகளிர் கோர்ட்டில் ஆஜரானார். வரதட்சணை கொடுமை வழக்கில் அவரிடம் விசாரணை நடந்தது.
அ.தி.மு.க. எம்.பி.
அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சரும், தற்போதைய சேலம் தொகுதி எம்.பி.யுமான செம்மலையின் 2-வது மகன் எழில் அமுதன். இவருக்கும், சேலம் மாவட்டம் குஞ்சாண்டினிரை சேர்ந்த முத்துசாமியின் மகள் வாணி பிரிதாவுக்கும் கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் வாணி பிரிதா, தன்னுடைய கணவர் எழில் அமுதன், மாமியார் புஷ்பா, மாமனார் செம்மலை ஆகியோர் மீது மேட்டூர் போலீசில், வரதட்சணை கொடுமை புகார் செய்தார். இந்த புகார் தொடர்பான விசாரணை சேலம் சூரமங்கலம் மகளிர் போலீசாராலும், பின்னர் ஈரோடு மகளிர் போலீசாராலும் நடத்தப்பட்டது.
விசாரணையை தொடர்ந்து செம்மலை எம்.பி., அவருடைய மனைவி புஷ்பா, மகன் எழில் அமுதன் ஆகியோர் மீது சேலம் அனைத்து மகளிர் கோர்ட்டில் வரதட்சணை கொடுமை வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்தது.
இந்த நிலையில் நேற்று காலை மகளிர் கோர்ட்டு நீதிபதி கோபால் முன்னிலையில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது.
கோர்ட்டில் ஆஜர்
செம்மலை எம்.பி., அவருடைய மனைவி புஷ்பா, மகன் எழில் அமுதன் ஆகியோர் நேற்று கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள். அப்போது சாட்சிகள் அளித்த தகவல்களின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்ட 3 பேரிடமும் கேள்விகள் கேட்கப்பட்டு பதில்கள் பெறப்பட்டன.
அப்போது செம்மலை எம்.பி. இந்த வழக்கு பொய்யான வழக்கு என்றும், அரசியல் காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கு என்றும் பதில் அளித்தார். இந்த பதில்கள் பதிவு செய்யப்பட்டன. அதேபோல் அவருடைய மனைவி புஷ்பா, மகன் எழில் அமுதன் ஆகியோர் அளித்த பதில்களும் பதிவு செய்யப்பட்டன.
விசாரணை தள்ளி வைப்பு
பின்னர் இந்த வழக்கு விசாரணை 14-ந் தேதிக்கு (நாளை) தள்ளி வைக்கப்பட்டது.
குறிச்சொற்கள் 498a, anti-male, biased laws, dv act, law, M.P, maintenance, misuse, குடும்வ வன்முறை, செம்மலை, பொய் வழக்கு
பொங்கிப் பெருகுது 498A கேசுகள்!
தொடரட்டும் பொய் 498A கேசுகளின் அறுவடை!
கூடிய சீக்கிறமே இந்திய ஜனத்தொகையில் பாதி இத்தகைய கேசுகளில் சிக்கி அல்லாடும் காலம் வரும். அப்பொதுதான் இந்தியா முழு வளர்ச்சி அடைந்துவிட்டதாகக் கருத முடியும்!
================
1.
சின்னமனூர் அருகே மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமை
சென்னை போலீஸ்காரர் மீது வழக்குபதிவு
உத்தமபாளையம்,செப்.29- 2009
சின்னமனூர் அருகே மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக சென்னையில் பணிபுரியும் போலீஸ்காரர் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
போலீஸ்காரர்
தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே உள்ள வெள்ளையம்மாள்புரத்தில் தெற்கு தெருவில் வசித்து வருபவர் தெய்வ கணேசன்(வயது 36). இவர் சென்னையில் போலீஸ் காரராக பணிபுரிந்து வருகி றார். இவருக்கும் வெள்ளை யம்மாள்புரம் தெற்கு தெரு வினை சேர்ந்த பிரியதர் சிணி(22) என்பவருக்கும் கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் நடை பெற்றது.
அப்போது 36 பவுன்தங்க நகையை வரதட்சணையாக பெண்வீட்டார் வழங்கி உள்ளனர். பின்னர் ஒரு ஆண்டு கூட்டுக்குடும்பமாக இருந்து விட்டு, அதன்பிறகு மதுரை மாநகர ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் இருந்த போது, ஆசிரியர் பயிற்சி பெறுவதற்கு ரூ.1 லட்சம் பணத்தை உனது பெற்றோரிடம் வாங்கிவா என்று தெய்வகணேசன் பிரியதர்சிணியிடம் கூறி அவரின் பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி உள்ளார்.
ஆனால் பிரியதர்சிணியின் பெற்றோர், திருமணத்திற்கு செலவு செய்து விட்டோம் பணம் இல்லை என்று சொன்னதால், திருமணத்தின் போது 100 பவுன் தங்க நகை பேசி போடவில்லை, 60 பவுன் நகையும், ரூ.40 ஆயிரம் பணமும் வரதட்சணையாக கொடுக்க வேண்டும் என்று பிரியதர்சிணியை அவரது கணவர் தெய்வகணேசனும், மாமியார் லீலாவதி(55) ஆகியோர் தினமும் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
வரதட்சணை கொடுமை புகார்
இதனை அடுத்து பிரியதர்சிணி உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அவர் தனது புகாரில், தனது கணவரும்,மாமியாரும் வரதட்சணை கேட்டு தினமும் கொடுமைப்படுத்தியதாகவும், என் மீது அவர்கள் மண் எண்ணையை ஊற்றி தீவைக்க முயற்சித்த போது, தப்பி வந்து போலீசில் புகார் அளிப்ப தாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதன்பேரில் உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து தெய்வகணேசன் மற்றும் லீலாவதியை தேடி வருகின்றனர்.
===============================
2.
காதலியிடம் வரதட்சணை கேட்ட வாலிபர் கைது
காரைக்குடி,செப்.27- 2009
காதலியிடம் வரதட்சணை கேட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்குடி அருகே உள்ள குன்றக்குடி அமரகாரத் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 24). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் மணிகண்டன் ஊருக்கு வந்தபோது, அவருக்கும் அதே தெருவை சேர்ந்த ரேகா (23) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது.
இருவரும் தனிமையில் சந்தித்து தங்களது காதலை வளர்த்துக்கொண்டனர். கடந்த ஜுன் மாதம் இருவரும் திருமயத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் அவரவர் வீட்டிலேயே வசித்து வந்தனர்.
தனது தங்கைக்கு திருமணம் ஆனவுடன் உன்னை என் வீட்டுக்கு அழைத்து செல்கிறேன் என்று மணிகண்டன் கூறினாராம். இதற்கிடையில் ரேகா தன்னை அழைத்துச் செல்லும்படி மணிகண்டனிடம் கூறியுள்ளார். அதற்கு மணிகண்டன் 25பவுன்
தங்கநகை கொண்டு வந்தால்தான் அழைத்து செல்வேன் கூறியதாக தெரிகிறது.
இது குறித்து ரேகா காரைக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜோஸ்பின் அமலராணி வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தார்.
===================
3.
காதலித்து திருமணம் செய்த 2 மாதத்தில் அழகு இல்லை எனக்கூறி, மனைவியிடம் வரதட்சணை கேட்ட கணவன் சித்ரவதை செய்ததாக கைது
கோவை,செப்.26- 2009
கோவையில் திருமணமான 2 மாதத்தில் அழகு இல்லை எனக்கூறி காதல் மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கணவனை போலீசார் கைது செய்தனர்.
கோவை செல்வபுரம் தெற்கு உக்கடம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜ். இவரது மகன் விக்னேஷ் (வயது 22). பெயிண்டர். இவர் கோவை குனியமுத்தூர் பிள்ளையார்புரம் கஸ்தூரி கார்டனை சேர்ந்த காவேரியை (19) காதலித்தார். அவர் ஒரு பிளாஸ்டிக் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இருவரும் கடந்த இரு மாதத்துக்கு முன்பு காதல் திருமணம் துகொண்டனர். இருவரது காதலை விக்னேஷின் பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை. அதையடுத்து இருவரும் பிள்ளையார் புரத்தில் உள்ள காவேரியின் வீட்டில் அவரது தாய், தங்கையுடன் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் விக்னேஷ் திடீரென மனைவி காவேரியிடம் `நீ அழகாக இல்லை. உன்னை காதலித்து திருமணம் செய்ததால் எந்த பயனும் இல்லை. அதனால் உன் அம்மாவிடம் கூறி மோட்டார் சைக்கிளை வரதட்சணையாக வாங்கி வரவேண்டும்'
என்று கூறி மிரட்டியதாக தெரிகிறது. மேலும் காவேரியை அவர் சித்ரவதை செய்ததாகவும் கூறப்படுகிறது.
அவரது தொந்தரவு தாங்கமுடியாமல் காவேரி வீட்டில் தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். படுகாயம் அடைந்த அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக கோவை குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஷை கைது செய்தனர்.
================
4.
இன்னொரு வழக்கு
கேரள மாநிலம் கோவில்கடவு ஸ்ரீ ஜெயலட்சுமி ஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் சவுந்தரராஜ். இவரது மகள் ஸ்ரீ ஜெயா. இவருக்கும் கோவை சுந்தராபுரம் இடையர்பாளையத்தை சேர்ந்த மூக்காண்டி மகன் ராஜா (32)வுக்கும் கடந்த 2005-ம் ஆண்டு ஜுன் மாதம் திருமணம் நடந்தது. அப்போது பெண்வீட்டார் தரப்பில் ராஜாவுக்கு 75 பவுன் நகையும், ரூ.1 லட்சம் ரொக்கப்பணமும் வரதட்சணையாக கொடுத்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் ராஜா தனது மனைவியிடம் ரூ.4 லட்சம் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின்பேரில் போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் ஸ்ரீ ஜெயாவின் கணவர் ராஜா, அவரது மாமியார் பிரமுயம்மாள், மைத்துணர் ராஜாரத்தினம், சுகுணா ஆகிய 4 பேர் மீது வரதட்சணை சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
==============
5.
வரதட்சணைக் கொடுமை - மனைவியை துன்புறுத்தியதாக கன்னட பாடகர் கைது
திங்கள்கிழமை, செப்டம்பர் 28, 2009
வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய பிரபல கன்னட பின்னணி பாடகர் ஹேமந்த் கைது செய்யப்பட்டார்.
இவருக்கும், பிரியதர்ஷினி என்பவருக்கும் 2007ம் ஆண்டு திருமணம் நடந்தது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கணவர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறி பிரிஷயதர்ஷினி தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
மேலும், கணவருடன், மாமியார், நாத்தனாரும் இவரை துன்புறுத்தியதாக தெரிகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அவர் பெங்களூர் பசவன்குடி மகளிர் காவல் நிலையத்தில் வரதட்சணை புகார் கொடுத்தார்.
இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீஸார் ஹேமந்தை கைது செய்தனர்.
குறிச்சொற்கள் 498a, anti-male, biased laws, harassment, husbands, law, misuse, ஆண்பாவம், பொய் வழக்கு
கருத்து யுத்தம் வீடியோ
காணுங்கள். உங்கள் கருத்துக்களைப் பதியுங்கள்!
குறிச்சொற்கள் 125, 498a, advocates, arrest, biased laws, CrPC, divorce, dv act, harassment, law, misuse, police officer, ஆண்பாவம், பொய் வழக்கு, வரதட்சணை
நீதிபதிகளுக்கு சட்ட அறிவு போதாதென்கிறார் தலைமை நீதிபதி
"உயர் நீதிமன்ற நீதிபதிகள் உட்பட பல நீதிபதிகளுக்கு சட்ட அறிவே இல்லை. சட்ட நுணுக்கங்களையோ, யதார்த்த நிலையையோ, சாட்சியங்களின் தன்மையையோ கருத்தில் கொள்ளாமலும், சமூகப் பிரக்ஞை இல்லாமலும் இஷ்டத்திற்கு தீர்ப்பு அளிக்கிறார்கள்."
இப்படிச் சொன்னவர் யார்? சும்மா அப்பை சப்பையான ஆளில்லையா சொன்னவர்! இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி திரு. கே.ஜி.பாலகிருஷ்ணன் அவர்கள்தான் அப்படிச் சொல்லி விசனப்பட்டிருக்கிறார்!
அவர் மேலும் கூறியிருப்பவை:-
என்ன ஆணையிடுகிறோம், அது செல்லுமா செல்லாதா, அது நிறைவேற்றத் தக்கதுதானா என்றெல்லாம் அலசிப் பார்க்காமல் தீர்ப்பு எழுதுகிறார்கள் நீதிபதிகள்.
அதுவும் 498A சட்டம் மிகவும் தவறான முறையில் பயன்படுத்தப்படுகிறது என்ப்தை மீண்டும் அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கிறார் தலைமை நீதிபதி அவர்கள்.
Balakrishnan pointed out that Section 498 (A) (anti-dowry law) under CrPC was one of the most abused laws.
“Judges are simply issuing summons and even warrants without properly verifying who are the accused. I have come across such cases in which the accused, sitting in Australia and other countries, are made accused when the case is lodged for the alleged offence of dowry,” he added.
தவிரவும் வழக்குகளை மிகவும் தாமதப் படுத்துகிறார்கள். நெறிப்படுத்துவதற்குத் தவறுகிறார்கள். அதனால் வழக்குகள் கோடிக் கணக்கில் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கின்றன.
இதுபோல் அவர் பேசியிருப்பது சென்ற ஆகஸ்டு 30-ம் நாள் போபாலில். "டெலிகிராஃப்" இதழில் வெளிவந்த அவருடைய பேச்சு விவரத்தின் சுட்டி இதோ.
ஆனால் என்ன பேசி என்ன ஆகப் போகிறது. நேற்று சென்னையில் 89 வயது முதியவர் மீது பிடி வாரண்டு அனுப்பியிருக்கிறார் ஒரு நீதிபதி. ஏன் தெரியுமா? அவருடைய மனைவிக்கு மாதம் 1500 ரூபாய் ஜீவனாம்சம் கொடுக்க வில்லையாம். அந்தக் கிழவனாரை அவருடைய குழந்தைகள் யாரும் கவனிப்பதில்லை. சோத்துக்கே லாட்டரி. குழந்தைகள் அனைவரும் அம்மா பக்கம். (அம்மாக்கள் செய்யும் முதல் வேலையே குழந்தைகள் மனத்தில் தகப்பன் மேல் வெறுப்பை ஊட்டி விஷ வித்தை விதைப்பதுதானே!)
அந்தக் கிழவனாரை சன் டிவியில் பேட்டி எடுத்தார்கள். அவர் பரிதாபமாக, "பணத்திற்கு நான் எங்கே போவேன் ஐயா, குழந்தைகள் கொடுத்தால் அதை மனைவிக்கு நீதிபதி சொல்லியபடி ஜீவனாம்சம் கொடுக்கிறேன்" என்று அழுதிருக்கிறார்.
ஆனால் அதையெல்லாம் நீதிபதி எங்கே காதில் வாங்கப் போகிறார். அவரைப் பொருத்த வரையில் மனைவி கேட்டு விட்டால் ஜீவனாம்சம் கொடுக்கவேண்டும். கொடுக்காவிட்டால் கைது செய்து சிறையில் அடைத்துவிடுவார்கள். இல்லையென்றால் கிட்னியை விற்றுத்தான் கொடுக்க வேண்டும். இத்தகைய அணுகுமுறையைத்தான் தலைமை நீதிபதி சாடியிருக்கிறார். ஆனால் என்ன பயன். ஆண்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படுகின்ற கொடுங்கோன்மை நிற்கப்போகிறதா என்ன!
ஆகையால் எந்த வயது ஆண்களும் 498A, ஜீவனாம்சச் சட்டங்கள் போன்றவற்றிலிருந்து தப்பவே முடியாது. "நமக்கு இருப்பது பெண் குழந்தைகள்தானே, ஆண்பிள்ளைகள் கிடையாதே" என்று எண்ணி இருமாப்புடன் பெண்ணியவாதம் பேசிக்கொண்டு, இங்கு வந்து அனானியாக பின்னூட்டமிட்டுச் செல்லும் பெரியவர்கள் கூட எதிர்வரும் நாட்களில் இதுபோன்ற நிலைக்கு ஆளாகலாம். யார் கண்டது!
இனி செய்தி. தட்ஸ்தமிழ் தளத்தில் வெளிவந்தது:
சென்னை: மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்காமல் நீதிமன்ற உத்தரவை அவமதித்த குற்றத்துக்காக 89 வயது முதியவர் ஒருவருக்கு சென்னை குடும்பல நல நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை வில்லிவாக்கம் பகுதியில் செங்குன்றம் ரோட்டில் வசித்து வருபவர் சிம்சன் கண்ணன்(89). இவருக்கும் இவரது மனைவி ராஜலட்சுமிக்கும் (80) கடந்த 1949ல் திருமணம் நடந்தது.
இவர்களுக்கு 4 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் மூலம் பல பேரன், பேத்திகளும் உள்ளனர். தற்போது சிம்சன் மனைவியுடன் கோபித்து கொண்டு தனியாக வசித்து வருகிறார்.
சமீபத்தில் அவர் தனது மனைவி, மகன்களுடன் சேர்ந்து கொண்டு தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், இதனால் தனக்கு அவரிடம் இருந்து விவாகரத்து வாங்கி தருமாறும் கேட்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
திருமணம் நடந்த சுமார் 60 வருடங்களுக்கு பின்னர் 89 வயதில் ஒருவர் விவாகரத்து கேட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கு நடந்து கொண்டிருந்த நிலையில் சிம்சனின் மனைவி, கணவர் தன்னை பிரிந்துவிட்டால் தனக்கு ஜீவனாம்சமாக மாதம் ரூ. 1500 வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு செய்தார். இதை விசாரித்த நீதிபதி சிம்சன் கண்ணன் அவரது மனைவிக்கு ரூ. 1500 ஜீவனாம்சம் கொடுக்க உத்தரவிட்டார்.
ஆனால், சிம்சன் நீதிமன்ற உத்தரவை ஏற்க மறுத்துவிட்டார். அவர் ஜீவனாம்சம் வழங்கவில்லை. இதையடுத்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையடு்த்து சென்னை குடும்ப நல நீதிமன்றம் சிம்சனை நேரில் வந்து ஆஜராக உத்தரவிட்டது. ஆனால், அவர் வரவில்லை. வழக்கை விசாரித்த நீதிபதி நாராயணசாமி, 89 வயது சிம்சனுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்
குறிச்சொற்கள் 498a, anti-male, biased laws, divorce, harassment, husbands, law, maintenance, misuse, ஆண்பாவம், பொய் வழக்கு, ஜீவனாம்சம்
மனைவிகளின் கொடுமையால் பாதிக்கப்பட்ட இந்திய கணவர்களின் மாநாடு
சிம்லாவில் மனைவியால் பாதிக்கப்பட்ட கணவர்கள் மாநாடு
சனிக்கிழமை, ஆகஸ்ட் 15, 2009.
சிம்லா: மனைவிகளின் கொடுமையால் பாதிக்கப்பட்ட இந்திய கணவர்களின் மாநாடு சுதந்திர தினமான இன்று சிம்லாவில் நடக்கிறது.
இந்தியாவில் கடந்த நூற்றாண்டு வரை பெண்கள் வீட்டு அடிமைகளாக நடத்தப்பட்டனர். திருமணத்துக்கு தந்தைக்கும், திருமணத்துக்கு பின் கணவருக்கும், வயதான காலத்தில் மகனுக்கும் அடிமைகளாக இருந்தனர்.
மேலும், ஒவ்வொருவரின் வாழ்க்கையின் முக்கிய கட்டமான திருமணத்தின் போது பெண்கள் வரதட்சனை என்ற பெயரில் பெரும் கொடுமைகளை அனுபவித்து வந்தனர். இதையடுத்து இந்தியாவில் வரதட்சனை ஒழிப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால், தற்போது 21ம் நூற்றாண்டில் தகவல் தொழில்நுட்பம், பொறியியல், வி்ஞ்ஞானம் என அனைத்து துறைகளிலும் பெண்கள் நன்றாக முன்னேற்றம் கண்டுள்ள நிலையில் சிலர் இந்த வரதட்சணை ஒழிப்பு சட்டம் போன்றவற்றை தங்களது சொந்த லாபத்துக்காக பயன்படுத்தி வருகின்றனர்.
கணவன்மார்களை தங்களது கைக்குள் வைத்துள்ளவும், பிடிக்காத கணவரை கழட்டிவிடவும் வரதட்சணை வழக்கு தொடருவேன் என மிரட்டும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. இது தொடர்பாக நீதிமன்றத்துக்கு போனால் மானம் போய்விடும், 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்பதால் பல ஆண்கள் அஞ்சி பேசாமல் இருந்துவிடுகின்றனர்.
மேலும், இது போன்ற வழக்குகளில் குழந்தைகள் தாயாரிடம் இருக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்படுவதால் குழந்தைகளை பிரிய விரும்பாத நல்ல தந்தையாக இருக்க நினைக்கும் ஆண்களும் பெரும் துன்பத்துக்கு ஆளாகி வருகிறார்கள்.
ஆண்கள் இது போன்ற பிரச்சனைகளை சந்தித்து வருவதை ஒரிசா பெண்கள் கமிஷனும் ஒத்துகொண்டுள்ளது. கணவனை கொடுமைப்படுத்த வரதட்சணை கேட்கபதாக பெண்கள் பொய் புகார் கொடுப்பது அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இது போன்ற பெண்களால் பாதிக்கப்பட்ட கணவர்கள் ஒன்றிணைந்து, ஹிமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் மாநாடு ஒன்றை இன்று துவக்கியுள்ளனர்.
இது குறித்து இந்திய குடும்ப அடிப்படைகளை காப்பாற்றுங்கள் என்ற பெங்களூர் அமைப்பின் உறுப்பினர் விரக் துலியா என்பவர் கூறுகையில்,
எங்கள் மாநாட்டை சுதந்திர தினத்தின் போது நடத்த திட்டமிட்டோம். இதன் மூலம் எங்கள் பிரச்சனையை அனைவரின் கவனத்துக்கும் கொண்டு வரலாம் என நம்புகிறோம்.
மூன்று நாள் நடக்கும் இந்த மாநாட்டில் சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களை சேர்ந்த 100 ஆண்கள் உரிமை அமைப்பிகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். அவர்கள் மனைவிகளால் பாதிக்கப்பட்ட சுமார் 30 ஆயிரம் கணவர்களின் பிரதிநிதிகளாக பங்கேற்கின்றனர்.
ஒரு வாரத்தில் 350 ஆண்களுக்கு பாதிப்பு...
ஆண்களின் உரிமைகளை காப்பதற்கு சுமார் 100 ஹெல்ப்லைன் எண்களை பயன்படுத்தி வருகிறோம். இந்த எண்களுக்கு வாரத்துக்கு 300 முதல் 350 போன்கள் வருகின்றன. எங்களது சங்கம் சார்பில் இது தொடர்பாக மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லியை சந்தித்து மனு கொடுக்க இருக்கிறோம் என்றார்.
செய்தி: தட்ஸ்தமிழ்
தனிக்குடித்தனம் வர மறுத்த கணவரை ஜெயிலுக்கு அனுப்பிய மனைவி
சென்னையில் தனிக்குடித்தனம் வர மறுத்த கணவர் மீது வரதட்சணை ஒழிப்பு சட்டத்தின் கீழ் போலீசில் புகார் கொடுத்து பட்டதாரி மனைவி ஜெயிலுக்கு அனுப்பினார்.
செய்தி: தினத்தந்தி 13-08-2009
=========================
இதுபோல் பொய் வழக்கு போடுவதற்காகவே ஒரு சட்டத்தை (498A) இயற்றி வைத்து அதைக் கொண்டு கணவர்களை நாள் தோறும் சிறைக்கு அனுப்பிக் கொண்டிருக்கும் நிலை தொடரும் போது சுதந்திரம் என்னய்யா எழவு வேண்டிக்கிடக்கிறது!
ஒவ்வொரு இந்தியனும் வெட்கித் தலை குனிய வேண்டிய நாள் தான் சுதந்திர தினம்!!
====================
செய்தி விவரம்:-
சென்னை மாம்பலம் முத்துரங்கன் தெருவைச் சேர்ந்தவர் குணா. இவர் எம்.பி.ஏ. பட்டதாரி. இவர் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு திருமணம் நடந்தது. இவர் மனைவி பெயர் பத்மபிரியா. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
பத்மபிரியாவும் எம்.சி.ஏ. பட்டதாரியாவார். அவரும் கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் கைநிறைய சம்பளத்தில் வேலை பார்க்கிறார்.
இனிதாக கழிந்த இவர்களின் இல்லற வாழ்க்கையில் தனிக் குடித்தன பிரச்சினை புயலை கிளப்பியது.
இவர்களோடு குணாவின் சித்தி மற்றும் சித்தப்பா சேர்ந்து வாழ்வதாக கூறப்படுகிறது. கூட்டுக் குடித்தனம் பிடிக்காத பத்மபிரியா, கணவரோடு தனியாக குடித்தனம் நடத்த விரும்பினார். குணா அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
இதனால் நேற்று மாம்பலம் மகளிர் போலீஸ் நிலையத்தில் பத்மபிரியா புகார் கொடுத்துவிட்டார். சித்தி, சித்தப்பாவின் பேச்சைக் கேட்டு கணவர் குணா தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், தனிக்குடித்தனம் வர மறுப்பதாகவும் புகாரில் கணவர் மீது சரமாரியாக பத்மபிரியா குற்றம்சாட்டி இருந்தார்.
உதவி கமிஷனர் கண்ணபிரான் மேற்பார்வையில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜானகி, இதுதொடர்பாக விசாரணை நடத்தினார். இருவரையும் அழைத்து கவுன்சிலிங் மூலம் போலீசார் அறிவுரை வழங்கினர்.
குணா தனிக்குடித்தனம் போக முடியாது என்று பிடிவாதம் பிடித்தார். பத்மபிரியா தனிக்குடித்தனம் போக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். தனிக்குடித்தனம் வராவிட்டால் கணவர் குணா மீது வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பத்மபிரியா போலீசாரிடம் உறுதிபட கூறிவிட்டார்.
கைதானார்
இதனால் வேறு வழியில்லாமல் நேற்றிரவு குணா மீது வரதட்சணை ஒழிப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்தனர். குணா கைது செய்யப்பட்டார். இரவோடு இரவாக கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
காதல் மற்றும் கலப்புத் திருமண தம்பதிகளான இவர்கள் சிறிய பிரச்சினைக்காக விட்டுக் கொடுக்காமல் இனிய இல்லற வாழ்க்கையை 2 பேருமே தொலைத்து விட்டார்கள் என்று பெண் போலீசார் வருத்தத்தோடு குறிப்பிட்டனர்.
குறிச்சொற்கள் 498a, father, harassment, husbands, law, lust, misuse, ஆண்பாவம், பொய் வழக்கு, வெறி
ஆணாகப் பிறந்த குற்றம்!
சில்மிஷத்தில் ஈடுபட்டது ஆணும் பெண்ணும் - முழுதும் இஷ்டப்பட்டு திருட்டுத்தனமாக. ஆனால் கைதாவது ஆண் மட்டும்தான். பெண்ணைக் கண்டித்து வீட்டு அனுப்பி விடுவார்களாம். ஆணை மட்டும் சிறையில் தள்ளுவார்களாம். ஏனெனில் அவன் ஆணாகப் பிறந்து விட்டானாம்!
இதுபோன்ற ஒருதலைப் பட்சமான கண்ணோட்டம் சமுதாயத்தின் ஒவ்வொரு அங்கத்திலும் இருக்கிறது. இது போன்ற ஆணெதிர்ப்பு அணுகுமுறையும், அவனை மட்டும் தண்டிக்கும் போக்கும் மாறாமல் இந்தத் தவறான போக்கு தொடருமேயானால் சீக்கிறமே ஆண்களில் பலர் வெறுப்பு மேலோங்கி சீரியல் கில்லர்களாக மாறக்கூடிய அபாயம் இருக்கிறது!
இனி செய்தி:-
நெல்லை, ஆக.9- 2009. செய்தி - தினத்தந்தி
நெல்லை சந்திப்பு மீனாச்சிபுரத்தை சேர்ந்த இஸ்ரேல் மைசன் பீட்டர்(23), ஜெபராஜ் ஆகிய வாலிபர்கள் நேற்று முன்தினம் பாளை. பஸ் நிலையம் பகுதிக்கு காரில் வந்தனர். அங்கு பள்ளிக்கு சென்று கொண்டிருந்த தங்களுக்கு தெரிந்த 2 மாணவிகளிடம் பேசி தங்களது காரில் ஏறும்படி கூறினார்கள். இதன்படி இஸ்ரேல் சைமன் பீட்டர் தனது காதலியுடன் சொகுசு காரில் முன்சீட்டிலும், ஜெபராஜ் தனது காதலியுடன் காரின் பின்சீட்டிலும் ஏறிக்கொண்டார்.
பின்னர் காரை மெதுவாக ஓட்டி இலந்தகுளம் கரை அருகே உள்ள ஒதுக்குப்புறமான சாலை ஓரத்தில் நிறுத்தினார்கள். அங்கு 2 வாலிபர்களும் மாணவிகளிடம் செக்ஸ் குறும்பில் ஈடுபட்டு உள்ளனர். இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து பாளை. போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் குருநாதன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று 2 வாலிபர்கள் மற்றும் மாணவிகளை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
2 பேர் கைது
பின்னர் மாணவிகளின் பெற்றோரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் மாணவிகளை கண்டித்து அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து மாணவியின் தந்தை ஒருவர் பாளை. போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். பாளை. போலீசார் ஈவ்-டீசிங் வழக்குப்பதிவு செய்து இஸ்ரேல் மைசன் பீட்டர், ஜெபராஜ் ஆகிய 2 பேரையும் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கார் மற்றும் 1 ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கள்ளத் தொடர்பு குற்றத்திற்கு ஆண் - பெண் சமமான தண்டனை வேண்டும்
சென்னை, ஜுலை.31- 2009. செய்தி - தினத்தந்தி
ஆண் - பெண் இருவருக்கும் கள்ளத் தொடர்புக்கு சமமான தண்டனை வழங்க வேண்டும் என்று ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர்.
தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்க தலைவர் டி.அருள்துமிலன், பொதுச் செயலாளர் எஸ்.மதுசூதனன் ஆகியோர் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே கள்ளத் தொடர்பும் அதனைத் தொடர்ந்த கொலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது தாங்கள் அறிந்ததே. பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான கடந்த ஆட்சியில் கள்ளத் தொடர்பு தொடர்பான குற்றங்களின் தண்டனையை அதிகரிக்கும் நோக்கில் இந்திய தண்டனை சட்டம் 497-ல் சில திருத்தங்களை கொண்டு வர விரும்பியது.
அதற்கான சுற்றறிக்கைகள் அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பப்பட்டன. ஆனால், இந்திய கலாச்சாரத்தை வேரோடு புதைக்க எண்ணுகின்ற சில பெண்கள் அமைப்புகளின் எதிர்பால் இந்த சட்டத் திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை.
மேலும், இந்திய தண்டனை சட்டம் 497-ல் தவறு செய்யும் பெண்களை பாதிக்கப்பட்டவர்களாக பாவித்து விடுவித்துவிடும் மென்மையான அணுகுமுறையால் இந்த சட்டத்தை மீறுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இதனால், ஏற்படும் கொலைகளின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும், இந்த கள்ளத் தொடர்பால் கணவனை கொல்வது சர்வ சாதாரண கதையாகி பல குடும்பங்கள் சீரழிந்து இந்திய கலாச்சாரத்திற்கே அச்சுறுத்தலாக மாறி வருவதை தங்களின் கனிவான பார்வைக்கு கொண்டு வருகிறேன்.
இந்த நிலையில், தான் பெற்ற 24 வயது மகனை, அவனை பெற்ற தாயே துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த கொடுமை நம் தமிழ் சங்கம் வளர்த்த மதுரையில் நடந்துள்ளது.
இந்த கொடுஞ்செயல் வன்மையான கண்டனத்திற்கு உரியது. எனவே, முதல்-அமைச்சர் கருணாநிதி, போர்க்கால நடவடிக்கை மேற்கொண்டு மத்திய அரசை வற்புறுத்தி இந்த பாராளுமன்ற கூட்டத் தொடரிலேயே இந்திய தண்டனை சட்டம் 497-ல் திருத்தம் செய்து கள்ளத் தொடர்பில் ஈடுபடும் ஆண்-பெண் இருவரும் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தும்படி சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
குறிச்சொற்கள் father, harassment, husbands, law, victims, ஆண்பாவம், கள்ளக்காதல், கொலை, கொலைகாரி, வெறி
முறை தவறிய காதலை மறைக்க மாணவி நடத்திய நாடகம்
ஜூலை 28,2009. செய்தி: தினமலர்
கோவை: பெரியப்பா மகனுடனான தவறான உறவை மறைக்க, பிளஸ் 2 மாணவி கடத்தல் நாடகமாடியது அம்பலமானது.
சேலம் மாவட்டம், மொரப்பூரைச் சேர்ந்த ஜவுளி வியாபாரியின் 17 வயது மகள், கோவை, காந்திபுரத்தில் உறவினர் வீட்டில் தங்கி, சாய் பாபா காலனியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். கடந்த 24ம் தேதி பள்ளிக்கு சென்ற இவர், தலைமை ஆசிரியரிடம் திடுக் புகார் தெரிவித்தார். "நான் பள்ளி அருகே நடந்து வந்த போது, காரில் வந்த நான்கு பேர் கடத்திச் சென்று மானபங்கம் செய்தனர். பின்னர், கையில் கடிதத்தை திணித்துவிட்டு, மீண்டும் பள்ளி அருகே தள்ளிவிட்டு தப்பிவிட்டனர்' என தெரிவித்திருந்தார்.
அக்கடிதத்தில், ஆபாச வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் நடந்ததாகக் கூறப்பட்ட கடத்தல் சம்பவம், பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் போலீசார் மத்தியில் பரபரப்பு ஏற்படுத்தியது.
விசாரணையில் திருப்பம்:
சம்பவம் குறித்து அந்த மாணவி முன்னுக்குப் பின் முரணான தகவலை தெரிவித்ததால் போலீசார் குழப்பமடைந்தனர். உண்மை கண்டறிய மாநகர போலீஸ் துணைக் கமிஷனர் காமினி, இன்ஸ்பெக்டர் நேரு தலைமையில் தனி குழு அமைக்கப்பட்டது.
சம்பவம் நடப்பதற்கு முன் மாணவியுடன் மொபைல் போனில் பேசியதாகக் கூறப்பட்ட, மேட்டூரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.அவருக்கு தொடர்பில்லை என தெரிந்ததும் விடுவிக்கப்பட்டார்.
மாணவி மீது சந்தேகமடைந்த போலீசார், அவரது பள்ளி நோட்டு புத்தகங்களை கைப்பற்றி பார்வையிட்டனர். அதில், பல்வேறு விதமான மிரட்டல் கடிதங்கள், மாணவியின் கைப்பட எழுதப்பட்டிருந்தன. இது குறித்து விசாரித்த போது, கடத்தல் நாடகமாடியது அம்பலமானது.
போலீசாரிடம் மாணவி அளித்த வாக்குமூலம்:
எனது பெற்றோர், குடும்பப் பிரச்னை காரணமாக பிரிந்துவிட்டனர். படிக்க வசதியில்லாமல் அவதிப்பட்ட என்னை, காந்திபுரத்தில் வசிக்கும் பெரியப்பா அழைத்து வந்து படிக்க வைக்கிறார். அவ்வீட்டில் தங்கியிருந்த போது அவரது மகன் அருண்குமாருடன் பழக்கம் ஏற்பட்டது; இருவரும் எல்லை மீறி நடந்து கொண்டோம். படிப்பில் ஆர்வம் குறைந்த நிலையில் தேர்வும் வந்தது. தேர்வில் பங்கேற்காமல் தவிர்க்க, நானும் அருண்குமாரும் கடத்தல் நாடகமாடினோம்.
போலீசாரையும், உறவினர்களையும் நம்ப வைக்க, கடத்தல்காரர்கள் எழுதியது போன்று போலி கடிதங்களையும் தயார் செய்து, அதில் ஒரு கடிதத்தை எடுத்துச் சென்றேன். நான் கடத்தப்பட்டு மானபங்கம் செய்யப்பட்டதாக, தலைமை ஆசிரியரிடம் கூறி அழுதேன். எனினும், போலீஸ் விசாரணையின் போது, பதிலளித்து தப்ப முடியாமல் சிக்கிக்கொண்டேன்.
இவ்வாறு மாணவி தெரிவித்தார்.
இதையடுத்து, அருண்குமார்(20) மீது இந்திய தண்டனைச் சட்டம் 376 (கற்பழிப்பு) வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இவர், டிப்ளமோ முடித்து, தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.
வழக்கின் விசாரணை அதிகாரி, இன்ஸ்பெக்டர் நேரு கூறியதாவது: பிளஸ் 2 மாணவி, தவறான உறவை மறைக்கவும், தேர்வில் பங்கேற்காமல் தவிர்க்கவும் கடத்தல் நாடகமாடி எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். சந்தேக நபர்களை ஒவ்வொருவராக அழைத்து காண்பித்த போதிலும், "இவன், அவனல்ல' என்றே பதிலளித்தார். எங்களுக்கு சந்தேகம் வலுக்கவே, நோட்டு புத்தகங்களை பார்வையிட்டோம்; நாடகம் அம்பலமானது. இவ்வாறு நேரு தெரிவித்தார்.
========================
உங்கள் சிந்தனைக்கு:-
இந்த அநியாயத்தைப் பாருங்கள். நடத்தை கெட்டு அண்ணனுடன் ஜல்சா செய்தவள் பெண். கடத்தல் பொய் நாடகமாடியது பெண். ஆனால் கைது செய்யப்பட்டது மட்டும் ஆண்! வேலிமேல் வேட்டி விழுந்தலும் வேலி வேட்டி மேல் விழுந்தாலும் கிழிந்து கந்தலாவது வேட்டி மட்டும்தான். இதுதான் இந்த சமூகத்தின் ஆணெதிர்ப்புச் சட்டங்களின் நடைமுறை!
ஆமாம், "கற்பழிப்பு" என்றால் என்ன? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்!!
தீவிரமாகும் விவாகரத்து நோய்
ஜூலை 27,2009: செய்தி - தினமலர்
பாரம்பரிய பெருமையும், கலாசார பின்னணியும் கொண்ட தமிழகத்தில் ஆண்டுதோறும், 4,000த்துக்கும் மேற்பட்ட விவாகரத்து வழக்குகள் தாக்கலாகின்றன. இதில், ஆண்டுக்கு 20 சதவீத, "வளர்ச்சி' இருப்பது, கூடுதல் வேதனை. .
குடும்பத்தில், கணவன் - மனைவிக்கிடையே ஏற்படும் பிரச்னைகளை, உறவினர்களால் தீர்க்க முடியாதபட்சத்தில், போலீஸ் துறையை அணுகுகின்றனர். அங்கு சமரச முயற்சியில் ஈடுபடும் போலீசாரின் முயற்சிகளும் தோல்வியடைந்தால், பிரச்னை கோர்ட்டுக்குச் செல்கிறது.இப்படி குடும்பம், நண்பர்கள், சமூகம் என எல்லாராலும் தீர்க்க முடியாமல், குடும்ப நல கோர்ட்டில் வழக்கு பதிவு செய்ய வரும் தம்பதியர்களுக்கு, கோர்ட்டில் கவுன்சிலிங் கொடுக்கப்படுகிறது. அந்த முயற்சியும் தோல்வியடையும்போது, வழக்கைச் சந்திக்கின்றனர்.சில வழக்குகளில், வக்கீல்கள் சொன்னபடி தம்பதியர்கள் சொல்வதாலும், அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகளாலும், தங்களது குடும்ப விவகாரங்கள் அனைத்தையும் வெளியே சொல்ல வேண்டிய நிலைக்கு தம்பதிகள் ஆளாகின்றனர்; கூடவே வழக்கையும் சந்திக்கின்றனர்.சென்னை குடும்ப நல கோர்ட்டில், 2006ம் ஆண்டில் மட்டும் 3,374 வழக்குகள், 2007ம் ஆண்டின் முடிவில் 3,874 வழக்குகள், 2008ம் ஆண்டில் 4,125 வழக்குகள் என விவாகரத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் அதிகரித்து கொண்டே போகின்றன. ஆண்டிற்கு 20 சதவீதம் அதிகரிக்கிறது.சென்னையில் மட்டும் திருமண முறிவு 5 சதவீதமாக இருந்த நிலை மாறி, சில ஆண்டுகளில் 12 முதல் 15 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது.
இந்த வழக்குகளில் நடிகர் பிரசாந்த் முதல் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல நடிகர் மற்றும் நடிகைகளும் அடங்குவர். இப்படி ஏழை, பணக்காரன், கூட்டுக் குடும்பம், தனிக்குடித்தனம் என்று எல்லாரையும் எளிதில் தாக்கும் நோயாகி விட்டது, விவாகரத்து.
இது குறித்து, சீனியர் வக்கீல் ஒருவர் கூறியதாவது: முன்பெல்லாம் பெண்கள் அறியாமையால், கண்ணைக் கட்டிக்கொண்டு வாழ்ந்தனர். அப்போது கூட தம்பதியருக்கிடையே விவாகரத்து பெரிதாக காணவில்லை. தற்போது பெண்களுக்கு சுதந்திரம் கிடைத்துள்ள இந்த காலகட்டத்தில் தான், விவாகரத்துகளும் பெருகியுள்ளன. பொருளாதார பாதிப்பும் சில விவாகரத்துகளுக்கு காரணமாய் அமைந்துவிடுகிறது.கூட்டுக் குடும்பங்கள் குறைந்து, தனிக்குடித்தனம் அதிகமாகி இருப்பதும் ஒரு காரணம் என்று சொல்கிற போதே, சில பெற்றோர்களாலும் விவாகரத்துகள் வருகின்றன என்பதையும், ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
குடும்பத்தில் கணவன் - மனைவிக்கிடையே, "தான்' என்கிற எண்ணத்தைக் (ஈகோ) குறைத்தாலே பல விவாகரத்து வழக்குகளை தவிர்த்துவிடலாம். இதேபோல, ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுக்கும் தன்மை, குழந்தைகளின் எதிர்காலம், திருமணம் என்ற பந்தத்திற்கு மரியாதை கொடுத்தல் போன்றவற்றை இருபாலரும் கடைபிடித்தால், விவாகரத்து பிரச்னையை குறைக்கலாம். முக்கியமாக கலாசாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றார்.
மொபைல் போன் பேச்சு: விவாகரத்து முடிச்சு!:
சமரச முயற்சிகள் தோல்வியடைவது பற்றியும், இந்திய திருமணச் சட்டங்கள் கூறுவது குறித்தும் ஸ்ரீரக்ஷா ஆலோசனை மற்றும் மத்தியஸ்த மையத்தின் கவுரவத் தலைவரும் வக்கீலுமான ஆதிலட்சுமி லோகமூர்த்தி கூறியதாவது:
குடும்பத்தில் எந்தப் பிரச்னையாக இருந்தாலும், அதை சரிசெய்ய முயற்சிப்பதே எங்கள் நிறுவனத்தின் பணி. குறிப்பாக, விவாகரத்து சம்பந்தப் பட்ட வழக்குகளில் கணவன் - மனைவி இடையே சமரச முயற்சியாக கவுன்சிலிங் கொடுக்கிறோம். அதன் பிறகும் எங்களுக்கு விவாகரத்து தான் வேண்டும் என்கிறபோது, அவர்கள் வழக்கைச் சந்திக்கின்றனர்.இந்திய திருமணச் சட்டங்களில் இந்துக்கள், கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள் என ஒவ்வொரு மதத்திற்கும் தனித்தனியே சட்டங்கள் இயற்றியுள்ளனர். கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு, சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன.
பிரிந்து வாழும் இருவரில், ஒருவர் சேர்ந்து வாழ விருப்பப்பட்டாலும், திருமண முறிவு என்றில்லாமல், சமுதாயத்தில் பிரிந்து மட்டும் வாழ விரும்புகிறோம் என்று விருப்பம் தெரிவித்தாலும், விவாகரத்து தேவை என்பவர்களுக்கும் சட்டங்களில் தனியே பிரிவுகள் உள்ளன.இன்றைய பரபரப்பான கால சூழ்நிலையில், குடும்பங்களில் கணவனோ, மனைவியோ தொடர்ந்து, "டிவி' பார்த்துக்கொண்டும், பல மணி நேரம் மொபைல் போனில் பேசிக்கொண்டும் இருந்துவிட்டு, குடும்பத்தைக் கவனிக்க மறந்துவிடுகின்றனர். இங்கே ஆரம்பிக்கும் மனதளவிலான பிரச்னை, பின் விஸ்வரூபம் எடுத்து விவாகரத்தில் முடிகிறது.இவ்வாறு ஆதிலட்சுமி கூறினார்.
=====================================
என் கருத்து:-
இவர்கள் சொல்லாமல் விட்ட முக்கிய காரணி ஒன்று உள்ளது. அது என்ன என்பது உங்களுக்கு முழுமையகத் தெரிந்திருக்கும். அதை சுட்டிக் காண்பிக்க இன்னொரு செய்தியை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்:-
----------------
பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லாமல் புத்தகப் பைகளுடன் கன்னியாகுமரியில் சுற்றும் காதல் ஜோடிகள் - போலீசார் எச்சரித்து அனுப்புகின்றனர்
கன்னியாகுமரி, ஜுலை.24- 2009. செய்தி: தினத்தந்தி
கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் மத்தியில் தற்போது காதல்ஜோடிகளின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது. அதிலும் பள்ளி-கல்லூரி காதல் ஜோடிகள்தான் அதிகம் என்பது அதிர்ச்சிதரும் தகவலாக உள்ளது.
நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் புத்தக பைகளையும் சுமந்துகொண்டு கன்னியாகுமரியில் காதல்ஜோடியாக வலம் வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் என்றால், மற்ற நாட்களில் மாணவ-மாணவிகள்தான் ஜோடியாக வலம் வருகின்றனர். அவர்கள் வீவ் டவர், காந்தி மண்டபம், சன்செட்பாய்ண்ட், ஆராட்டு மண்டபம் உள்ளிட்ட ஆள்நடமாட்டம் குறைந்த பகுதிகளில் ஒதுக்குப்புறமாக சென்று அமர்ந்துகொள்கின்றனர்.
நேரம் செல்லச் செல்ல காதல்ஜோடியினர் எல்லை மீறும் அவலமும் அரங்கேறி வருகிறது. எனவே, இதை பார்த்து ரசிப்பதற்காக சுற்றுப்புற பகுதியை சேர்ந்த பலரும் கன்னியாகுமரிக்கு வரும் அவலநிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே, காதல்ஜோடிகள் அத்துமீறுவதை தடுக்க கன்னியாகுமரி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தினமும் பள்ளி-கல்லூரி காதல்ஜோடியினரை பிடித்து எச்சரித்து அனுப்பி வருகின்றனர். இருப்பினும் காதல் ஜோடிகளின் வருகை குறைந்தபாடில்லை.
குறிச்சொற்கள் divorce, harassment, husbands, law, lust, ஆண்பாவம், கள்ளக்காதல், விவாகரத்து, வெறி
498A கூட செக்ஸ் கொடுமையும் சேர்த்துப் போடுவோம்!
முதலில் இந்தச் செய்தியை முழுதும் வாசியுங்கள்!
---------------------------
ஈரோடு, ஜுலை.16- 2009. செய்தி - தினத்தந்தி
செக்ஸ் கொடுமை செய்யும் கணவரின் அண்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கிராம மக்களுடன் வந்த பட்டதாரிப்பெண், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவிடம் புகார் செய்தார்.
ஈரோடு நாதகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் சத்தியப்பிரியா (வயது 24). எம்.எஸ்சி. பட்டதாரி. இவர் தனது பெற்றோர் சந்திரசேகர்-வளர்மதி, எம்.எஸ்.மங்கலம் பஞ்சாயத்து தலைவர் குமரேசன் மற்றும் கிராம மக்கள் நூற்றுக்கணக்கானவர்களுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு புகார் கொடுக்க வந்தார். இதனால் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு பரபரப்பான சூழ்நிலை உருவானது. இதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு அவிநாஷ்குமாரை நேரில் சந்தித்து புகார் மனுவை கொடுக்க சத்தியப்பிரியாவுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
அதன்பின்னர் அவர் போலீஸ் சூப்பிரண்டை நேரில் சந்தித்து புகார் மனு கொடுத்தார்.
புகார் மனு குறித்து சத்தியப்பிரியா நிருபர்களிடம் கண்ணீர் மல்க கூறியதாவது (கண்ணீர் பெண்களுக்கு ஒரு கைவந்த கலை; அது ஒரு சிறந்த ஆயுதம். அதை வைத்து யாரை வேண்டுமானாலும் வீழ்த்தலாம்!):-
எனது சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் நாதகவுண்டன்பாளையம். எனக்கும் முள்ளாம்பரப்பு வீரப்பம்பாளையத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் மகேஷ் (32) என்பவருக்கும் கடந்த 25-5-2008 அன்று திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது 50 பவுன் நகையும், ரூ.50 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்பட்டது.
கணவர் மகேஷ், மாமனார் ஆறுமுகம், மாமியார் தமிழரசி மற்றும் கணவரின் அண்ணன் தியாகு என்கிற தியாகராஜன் (37) ஆகியோருடன் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்தேன். தியாகராஜனுக்கு திருமணம் முடிந்து 2 குழந்தைகள் உள்ளனர். கணவர் வீட்டார் அனைவருமே சாக்கு வியாபாரம் செய்து வருகிறார்கள்.
என் கணவர் எப்போதும் தனது தாயார், அண்ணன் பேச்சை கேட்டுத்தான் நடப்பார். தாயார் இருக்கும்போது என்னிடம் அவர் சரியாக கூட பேசமாட்டார். திருமணம் ஆன முதல் 4 மாதங்கள்தான் அவருடன் சந்தோசமாக குடும்பம் நடத்தினேன். இந்த நிலையில் நான் கருவுற்றேன். அந்த சந்தோஷம் நிலைப்பதற்குள் எதிர்பாராதவிதமாக கரு கலைந்து விட்டது.
இதற்கிடையில் தியாகராஜன் என்னிடம் தவறாக நடக்க முயன்றார். அடிக்கடி செக்ஸ் கொடுமை செய்தார். இது குறித்து என் கணவரிடம் கூறினேன். ஆனால் அவர் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. கூட்டுக்குடும்பம் என்றால் அப்படி, இப்படி இருக்கத்தான் செய்யும் என்றார்.
பின்னர் தனியாக தொழில் தொடங்க வேண்டும். உன் தந்தையிடம் சென்று ரூ.1 லட்சம் வாங்கி வா என்று கட்டாயப்படுத்தினார். நானும் என் தந்தையிடம் கேட்டேன். ஆனால் அவ்வளவு பணம் கொடுக்க வசதி இல்லை என்று என் தந்தை கூறிவிட்டார். மேலும் எங்களுக்கு செட்டிப்பாளையத்தில் சொந்தமாக உள்ள ரூ.25 லட்சம் மதிப்பிலான காலி இடத்தை தன் பெயரில் எழுதி தரும்படி கேட்டு அடித்து சித்ரவதை செய்தார்.
கணவரின் வீட்டாரும், அந்த நிலத்தை எழுதி வாங்கி வந்தால்தான் அவருடன் சேர்ந்து குடும்பம் நடத்த விடுவோம். இல்லை என்றால் உன் பெற்றோர் வீட்டுக்கே துரத்தி விடுவோம் என்று மிரட்டினார். கணவரும் அடிக்கடி பணம் வாங்கி வா, அல்லது நிலத்தை எழுதி வாங்கி வா என்று கொடுமைப்படுத்தினார்.
அதன்பின்னர் எனது நகைகளை பிடுங்கிக்கொண்டு, வீட்டை விட்டு விரட்டிவிட்டனர். இனிமேலும் இவருடன் வாழ முடியாது என்று முடிவு செய்து என் பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டேன். எனது நிலை குறித்து பெற்றோரிடம் கூறினேன்.
அதைத்தொடர்ந்து ஊர் பஞ்சாயத்து தலைவர் குமரேசன் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. என் கணவர் மகேஷை அழைத்து பேசினார்கள். அவரிடம் ஊர்க்காரர்கள் பலரும் பேசினார்கள்.
அதைத்தொடர்ந்து, ஆவணி மாதம் வந்து என்னை அழைத்து செல்வதாக உறுதி அளித்துச்சென்றார். ஆனால் அதற்குள் விவாகரத்து நோட்டீசு அனுப்பி விட்டார்.
இதனால் நானும் என் குடும்பத்தாரும் அதிர்ச்சி அடைந்தோம். இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவிடம் புகார் மனு ஒன்றை கொடுத்து இருக்கிறேன். அதில் எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும். வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்த என் கணவர், மாமனார், மாமியார், கணவரின் அண்ணன் தியாகராஜன் ஆகியோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அவரும், என் கணவரையும், அவரது குடும்பத்தையும் அழைத்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
என் கணவர் மட்டும் என்னுடன் தனியாக குடும்பம் நடத்த வந்தால் அவரை என்னால் திருத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு சத்தியப்பியா கூறினார்.
இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவிடம் கேட்டபோது, சத்தியப்பிரிவின் புகார் மனுவை ஈரோடு அனைத்து மகளிர்போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி இருக்கிறேன். சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவர், மாமனார், மாமியாரை அழைத்து வந்து டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு முன்னிலையில் விசாரணை நடத்த உத்தரவிட்டு இருக்கிறேன். அதன்பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
------------
முன்னுக்குப்பின் முரணான புகார்கள். கடைசியில் விஷயம் என்னவென்றால், 498ஏ சட்டத்தைக் கையிலெடுத்து பயமுறுத்தி கூட்டுக் குடும்பத்திலிருந்து கணவனைப் பிரித்து தனிக்குடுத்தனத்திற்கு வரவேண்டும்; அங்கு தன் ஆட்சி நடக்கவேண்டும். இதற்காக எந்தவித செக்ஸ் கொடுமைப் புகாரையும் ஜோடனை செய்து பதிவு செய்ய இக்காலப் பெண்கள் தயார்.
இதெல்லாம் என்ன ஜுஜிபி!
3 மாதக் குழந்தையும், 3 வயதுப் பையனும் வரதட்சணைக் கொடுமை செய்தனர், தன் கையையே தூக்க சக்தியில்லாத 80 வயது மாமனார் என் கையைப் பிடித்து இழுத்தார் என்றெல்லாம் பொய் வழக்கு போட்டு, யாதொரு விசாரணையுமின்றி மேலும் இது இயற்கைக்கு முரணாக, சாத்தியமில்லாத புகாராக இருக்கிறதே என்ற சிந்தனை கூட இல்லாமல் அவர்கள் கைது செய்யப்பட்ட நிகழ்வுகள் அநேகம்.
Sec 498A of IPC நம் நாட்டிற்கு பெண்ணிய வியாதிகள் அளித்துள்ள வரப்பிரசாதம். இதை கையிலெடுத்துக் கொண்டு கீழ்த்தரமான புத்தி கொண்ட மனைவிமார்களும் அவர்களுடன் கூட்டுச் சேர்ந்து சில கெடுமதி வக்கீல்களும் அடிக்கிறார்கள் பகல் கொள்ளை (Every 498A case ends in outright extortion). இதை “சட்டபூர்வமான பயங்கரவாதம்” (Legal terrorism) என்று வர்ணித்திருக்கிறார் ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி. என்ன சொன்னால் என்ன, தினந்தோரும் பல அப்பாவிகள் இந்தக் கொடுங்கோன்மைச் சட்டத்திற்கு தொடர்ந்து பலியாகி வருகின்றனர் என்பதுதான் நிதர்சனம்.
ஆகையால் இந்திய ஆண்கள் இத்தகைய 498A of IPC மற்றும் (வன்முறை என்பது ஆண்தான் செய்வான், பெண் வன்முறையே செய்யமாட்டள் என்று வரையறுத்திருக்கும்) குடும்ப வன்முறைச் சட்டங்கள் திருத்தப்படும் வரை அல்லது நீக்கப்படும் வரை திருமணம் என்னும் புதைகுழியில் விழாமல் இருத்தல் நலம் - அவர்களுக்கும் அவர்தம் பெற்றோருக்கும்!
குறிச்சொற்கள் 498a, advocates, divorce, harassment, husbands, law, misuse, அராஜகம், ஆண்பாவம், கள்ளக்காதல், பொய் வழக்கு
எங்கெங்கு பார்த்தாலும் 498A
பட்டணத்துப் பெண்கள்தான் படிக்கும்போதே முழு விடுதலை அடைந்து, ”மணமானபின் கணவனையும் மாமியார், மாமனாரையும் நான் ஏன் மதிக்க வேண்டும், என் இஷ்டம்போல் இருப்பேன்” என்று எக்காளமிட்டு, அது போதாதென்று அவ்ர்கள்மேல் 498A சட்டத்தையும் ஏவிவிட்டு, அவர்கள் கைது செய்யப்படுவதைப் பார்த்து தன் வாழ்க்கையில் பெரு வெற்றியடைந்து விட்டதாக இருமாந்து, பின் அவர்களிடமிருந்து ஒரு பெருந்தொகையை கொள்ளையடித்தபின் அந்தப் புகாரை வாபஸ் வாங்கும் (quashing the case or settling it otherwise) நடைமுறைதான் இதுகாறும் நிகழ்ந்து வந்தது.
தற்போது இந்த 498A சீக்கு நகர்ப்புறங்களைத் தாண்டி, இழுத்தடிச்சான்பட்டி, தெக்கனாம்பட்டி, ஊத்தாங்கால் மங்கலம் போன்ற பட்டி தொட்டி வரை வியாபித்து செழித்து வளர்ந்து வருகிறது. அந்தந்த ஊர்களில் வக்கீல்கள், தரகர்கள், புதுமைப் பெண்கள் கொண்ட குழுக்கள் உருவாகி, அப்பாவி கணவன்மார்கள் மேல் பொய் வழக்கு போட்டு நாலு காசு கொள்ளையடிக்க வேண்டாமா! இதுதானே காந்தி கனவு கண்ட கிராமப்புற வளர்ச்சி!
இனி செய்தி:
திண்டிவனம் அருகே கொல்லார் கிராமத்தில் உள்ள பள்ளத்தெருவை சேர்ந்தவர் ரதி (25). இவருக்கும் திண்டிவனம் ரோஷனை பொன்னையன் நகரை சேர்ந்த தாஸ் (30) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. இரு வீட்டாரின் சம்மதத்தின் பேரில் கடந்த 27.8.04 அன்று கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடைபெற்றது.
திருமணம் நடைபெறுவதற்கு முன்பாக தாஸ் வீட்டார் 10 பவுன் நகையும், இரு சக்கர வாகனத்தையும் வரதட்சணையாக கேட்ட னர். அப்போது ரதியின் வீட்டார் 7 பவுன் நகையும் இரு சக்கர வாகனம் வாங்குவதற்காக 20 ஆயிரம் பணமும் கொடுத்தனர். இந்த நிலையில் தொடர்ந்து தாசின் தந்தை நந்தன், தாயார் சந்திரா, சகோதரி செங்கேனி ஆகியோர் சேர்ந்து தாசை தூண்டிவிட்டு ரூ.50 ஆயிரமும், 10 பவுன் நகையும் வாங்கி வரும்படி ரதியை வரதட்சணை கொடுமை செய்தனர்.
இதுகுறித்து திண்டிவனம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ரதி புகார் செய்தார். அதன் பேரில் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குறிச்சொற்கள் 498a, arrest, harassment, husbands, law, misuse, ஆண்பாவம், பொய் வழக்கு, வரதட்சணை
கல்லைத் தல்லையில் போட்டுக் கொன்றாள் கணவனை
மற்றுமொரு கள்ளக் காதல் கொலை.
கோகுல் என்பவர் மறுமொழியில் கூறியுள்ளதுபோல் விவாகரத்தை சுலபமாகப் பெற முடிந்தால் இத்தகைய கொலைகளையாவது தடுக்கலாம். ஆனல் விவாகரத்து சட்டங்கள் தெளிவாக இல்லை. தற்கால சமூக அமைப்பு, மனநிலை, கண்ணோட்டம், ஊடகங்களின் தாக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்தச் சட்டங்கள் மாற்றப்படவேண்டும்.
தவிர நீதிபதிகளும் மனத்தளவில் விவாக ரத்துக்கு எதிராக இருக்கிறார்கள்.
இதில் உள்ள மற்றுமொரு பிரச்னை, ஜீவனாம்சம், குழந்தைகளின் பொறுப்பை யார் கையில் ஒப்படைப்பது போன்றவை. இவற்றையெல்லாம் ஒழுங்கு செய்து சீராக்கினல் இந்த கள்ளக் காதல் கொலைக்கு முற்றுப் புள்ளி வைக்கலாம்.
ஆனால் நம் அரசியவாதிகளும் பெண்ணிய அமைப்பாளர்களும் வேறு வேலை இருக்கிறதே! ஆண்களையும் அவனைப் பெற்றவர்களையும் கைது செய்து பணம் கறப்பதிலேயே அவர்கள் குறியாயிருப்பதால் முறையான செயலாகத்திற்கு அவர்களுக்கு நேரமும் இல்லை, முனைப்பும் இல்லை!
இனி செய்தி:-
-----------------------
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரைக் கொன்ற மனைவி கள்ளக் காதலனுடன் கைது.
ஆப்பிள் ஜுசில் தூக்கமாத்திரை கலந்து கொடுத்து தலையில் கல்லை போட்டு கொன்றது அம்பலம்
ஓசூர், ஜுன்.29- 2009. செய்தி - தினத்தந்தி
கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொலை. செய்த மனைவி கள்ளக் காதலனுடன் கைது செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த சூளகிரி பக்கம் உள்ள காளிங்கவரம் பிரிவு ரோட்டில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் தலையில் கல்லை போட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தவர் கிருஷ்ணகிரி மாவட்டம் தவளம் கிராமத்தை சேர்ந்த திம்மராயன் மகன் முனிரத்தினம் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரது மனைவி காயத்ரி மற்றும் உறவினர்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அவர்களும் பிணமாக கிடந்தவர் முனிரத்தினம்தான் என்று உறுதி செய்தனர்.
திடுக்கிடும் தகவல்கள்
இதையடுத்து அவரை யார் கொலை செய்தார்கள்? எதற்காக கொலை செய்தார்கள்? என்று விசாரணை நடத்திய போது
இந்த கொலையில் துப்பு துலங்கியது. முனிரத்தினம் சொந்தமாக வேன் வாங்கி அதை அவரே ஓட்டி வந்தார். இந்த வேனை வாங்குவதற்கு கிருஷ்ணகிரி-சென்னை ரோட்டில் மெக்கானிக் கடை வைத்து இருக்கும் கிருஷ்ணன் என்கிற முத்து (வயது 29) உதவி செய்துள்ளார்.
அப்போது முனிரத்தினத்தின் வீட்டுக்கு கிருஷ்ணன் அடிக்கடி வந்து சென்றார். இந்த வேளையில் அவருக்கும் முனிரத்தினத்தின் மனைவி காயத்ரிக்கும் (32) பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர்.
இதை அறிந்த முனிரத்தினம் தனது மனைவி காயத்ரியை கண்டித்தார். இதனால் தங்களது கள்ளத் தொடர்புக்கு இடைனிறாக இருக்கும் கணவர் முனிரத்தினத்தை தீர்த்துக்கட்ட காயத்ரியும், கிருஷ்ணனும் திட்டம் போட்டதாக தெரிகிறது.
இதன்படி 17.6.09 அன்று இரவு முனிரத்தினத்தை கிருஷ்ணன், மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரிக்கு அழைத்து சென்றார். அங்கு ஏற்கனவே வாங்கி வைத்திருந்த 4 தூக்க மாத்திரையை ஆப்பிள் ஜுசில் கலந்து முனிரத்தினத்துக்கு கொடுத்தார்.
அதை குடித்த முனிரத்தினம் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது, அவரை கிருஷ்ணன் தனது பட்டறையில் இருந்த வேனில் ஏற்றிக்கொண்டு சூளகிரி அருகே உள்ள காளிங்கவரம் பிரிவு ரோட்டிற்கு சென்றார். தூங்கிக் கொண்டு இருந்த முனிரத்தினத்தின் தலை மற்றும் கை பகுதியில் பெரிய பாறாங்கல்லை போட்டு கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இந்த கொலைக்கு காயத்ரியும் உடந்தையாக இருந்தார்.
பின்னர் அவர்கள் தங்களுக்கு ஒன்றும் தெரியாதது போல நடித்து வந்தனர். இதைத்தொடர்ந்து காயத்ரியிடம் , போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் தனது கணவரை இழந்து துயரப்படுவதாக கூறி அழுது புலம்பினார். இருந்த போதிலும் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
எப்படியும் போலீசாரிடம் சிக்கி விடுவோம் என்று பயந்த காயத்ரி தனது கள்ளக் காதலன் கிருஷ்ணனுடன் திடீரென தலைமறைவாகிட்டார். இதையடுத்து அவர்கள் பெங்களூர், மும்பை, பூனா, அகமதாபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றி திரிந்தனர்.
காயத்ரி திடீரென தலைமறைவு ஆனதால் போலீசாருக்கு அவர் மீதான சந்தேகம் மேலும் வலுத்தது. அவரை போலீசார் வலை வீசி தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை ஓசூருக்கு திரும்பி வந்த காயத்ரி மற்றும் கிருஷ்ணனை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவரிடமும் நடத்திய விசாரணையில், அவர்கள் சேர்ந்து முனிரத்தினத்தை கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். பின்னர் நடந்ததை போலீசாரிடம் வாக்கு மூலமாக அளித்தனர்.
குறிச்சொற்கள் 498a, child custody, crisp, husbands, law, lust, parents, கள்ளக்காதல், கொலைவெறி, வெறி
இரண்டு மாத குழந்தைமீது வரதட்சணை புகார்!
”ஜோயா” (Zoya) என்னும் இரண்டே மாதக் குழந்தை (அதுவும் பெண் குழந்தை) மீது அக்குழந்தை தன்னை வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்தியதாக 498A வழக்கு பதிவு செய்துள்ளார் ஒரு பெண் குலத் திலகம். இதுவரை 3 வயதுக் குழந்தை மீதுதான் இத்தகைய புகார் கொடுக்கப்பட்டது. தற்போது இரண்டு மாதக் குழந்தை மேல் வரதட்சணைப் புகார் கொடுத்து சாதனை புரிந்துள்ளார் ஷகீலா என்னும் பெண் பேய்.
சும்சுதீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதனால், அவரின் சார்பில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டு, அது இன்று விசாரணைக்கு வருகிறது.ஜோயா குடும்பத்தினரின் வக்கீல் அனில் போலே இதுபற்றி கூறுகையில், "முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவில், குழந்தை ஜோயாவின் பெயர் மற்றும் வயதை குறிப் பிட்டிருந்தேன். ஆனால், போலீசாரோ, அரசு தரப்பு வக்கீலோ அதை கவனத்தில் கொள்ளவில்லை' என்றார்.
தந்தையர் தினப் போராட்டம்
குழந்தைகளுக்கு பெற்றோர் இருவரின் அன்பும் அரவணைப்பும் தேவை என்னும் உரிமையைப் பெறப் போராடும் அமைப்பான Children's Rights Initiative For Shared Parenting (CRISP) என்ற பெயரில் செயல்படும் அரசு சாரா பெற்றோர்களின் கூட்டமைப்பு வரும் ஜூன் 20, 2009 அன்று பெங்களூரில் ஒரு மாபெரும் தர்னா ஒன்றை நிகழ்த்தியிருக்கிறார்கள்.
அன்றைய தினம் தாங்கள் பெற்ற குழந்தைகளைக் கண்ணால் காணக்கூட வாய்ப்பு மறுக்கப்பட்ட பல தந்தையர்கள் பெங்களூரு எம்.ஜி. சாலையிலுள்ள மகாத்மா காந்தி சிலையருகே கூடி குழந்தைகளின் வாழ்வில் தந்தையருக்கு இருக்கும் முக்கிய பங்கு பற்றி சமுதாயத்தில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த முயன்றிருக்கிறார்கள்.
மணமுறிவுகள் பெருகிவரும் இன்னாளில் குழந்தைகளின் காப்புரிமையை நிதிமன்றங்கள் மனைவியின் கையில் மட்டுமே அளிக்கிறார்கள். இதனால் குழந்தைகளுக்கு தந்தையின் பாசமும் அன்பும் அரவணைப்பும் கிட்டுவதேயில்லை. அனைத்து தந்தைமார்களுக்கும் தங்கள் குழந்தைகளின் மேல் பாசமேயில்லாதது போல் ஒரு தவறான, உண்மைக்குப் புறம்பான, பயங்கரமான மற்றும் முட்டாள்தனமான கருத்தாக்கம் இன்று சமுதாயத்தில் பல பென்ணியவாதிகளால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய தவறான கண்ணோட்டத்தால் பாதிக்கப்படுவது குழந்தைகளின் மனநலம் தான் என்பதை இவர்கள் உணர்வதில்லை. உணர்ந்தலும் அதில் அவர்களுக்கு அக்கரையுமில்லை. தகப்பனிடமிருந்து குழந்தையைப் பிரித்து வைப்பதை ஏதோ ஒரு போரில் வெற்றி வாகை சூடியது போன்ற களிப்பில் போதை கொண்டு, தஙகள் ஈகோவை திருப்தி செய்துகொள்கிறார்கள். இதற்கு சட்டமும், நீதிமன்றங்களும் துணை போகின்றன. ஆனால் ஒரு குழந்தையின் சரியான வளர்ச்சிக்கு தந்தை, தாய் இருவரின் அன்பும் அரவணைப்பும் பங்களிப்பும் தேவை என்பதை இவர்கள் மறந்து விடுகிறார்கள்.
இது பற்றிய விரிவான செய்தி இங்கே.
குறிச்சொற்கள் child custody, crisp, father, husbands, law, protest-day, shared-parenting, ஆண்பாவம், கள்ளக்காதல், குடும்பம், தாய்மை
இவர்கள் பெண்கள் இல்லையா!
இந்தியாவில் இதுவரை 1,20,000 பெண்கள் Sec 498A IPC சட்டத்தின் கீழ் ஒரு விசாரணையுமின்றி கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் செய்த ஒரே குற்றம் ஒரு ஆணுக்கு ரத்த உறவினராக இருந்ததுதான்!
குறிச்சொற்கள் 498a, arrest, harassment, law, misuse, parents, அராஜகம், ஆண்பாவம், பொய் வழக்கு, வரதட்சணை
போலீசாருக்கு இதுதான் வேலையா!
ஏற்கனவே அரசியல்வாதிகளுக்கு பாராஉஷார் செய்து நொந்து போயிருக்கும் போலீசாருக்கு இந்த சினிமாவைப் பார்த்து அதுபோல் காப்பி அடித்து காதல் பண்ணும் பெண்குலங்கள் கொடுக்கும் டார்ச்சர் தாங்க முடியவில்லை.
தினசரி இதுபோல் பள்ளிக்குச் செல்லும் பெண்கள் “காதல் பன்ணிட்டேன், பெற்றோரை ஏமாற்றி சேர்த்து வையுங்கள்” என்று கிளம்புகிறார்கள். இல்லையெனில், “உல்லாசமாக” இன்னாருடன் இருந்தேன் (யாருடன் இருந்தாளோ!), அவனை கட்டாயப் படுத்தி கட்டி வையுங்கள் என்று ஒரு பெரிய கோஷ்டி பெண்கள்.
போலீசார் பாடு பாவம் அய்யா!
கீழ்க்காணும்ச் செய்தி இதுபோல் தினந்தோரும் வெளிவரும் டசன் கணக்கான செய்திகளில் ஒரு சாம்பிள்தான்!
திருமணத்துக்கு 2-நாட்களுக்கு முன்பு காதலன் மாயம் புறநகர் கமிஷனரிடம் காதலி புகார் ஆலந்தூர், மே. 29- 2009.
திருமணம் நடைபெற 2 நாட்கள் இருந்த நிலையில் காதலன் மாயமானதால் புறநகர் போலீஸ் கமிஷனரிடம் காதலி புகார் செய்தார். சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் எஸ்.ஆர்.ஜாங்கிட்டிடம் மடிப்பாக்கத்தை சேர்ந்த ஜெயலட்சுமி என்பவர் ஒரு புகார் மனு தந்தார். அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-
காதல் சென்னையில் உள்ள கால்சென்டரில் நான் பணிபுரிகிறேன். என்னுடன் ஒன்றாக பணிபுரியும் திருச்சியை சேர்ந்த செந்தில்குமார் என்பவரை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தேன். நாங்கள் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் செந்தில்குமாரின் பெற்றோர் திருமணத்தை ஏற்கவில்லை. இதனால் செந்தில்குமார் சம்மதத்துடன் சென்னையில் 28-ந் தேதி (நேற்று) திருமணம் செய்ய முடிவு செய்து ஏற்பாடு செய்தோம். இந்த நிலையில் கடந்த 2 தினங்களாக செந்தில்குமார் பற்றி எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. அவர் தங்கியிருந்த விடுதியிலும் சென்று பார்த்தோம். செந்தில்குமார் திடீரென மாயமாகி விட்டார். திருமணத்திற்கு 2 தினங்களுக்கு முன்பு மாயமாகிவிட்ட செந்தில்குமாரை மீட்டு எங்கள் திருமணத்தை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகார் மனுவில் ஜெயலட்சுமி கூறியிருந்தார்.
இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க மடிப்பாக்கம் போலீசாருக்கு புறநகர் கமிஷனர் எஸ்.ஆர்.ஜாங்கிட் உத்தரவிட்டார். மடிப்பாக்கம் உதவி கமிஷனர் சங்கரபாண்டியன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கரிகாலன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் திருச்சிக்கு விரைந்தனர்.
அங்கு இருந்த செந்தில்குமாரின் தந்தையிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது செந்தில்குமார் திருச்சிக்கு வரவில்லை என தெரியவந்தது. இதையடுத்து `திருமண ஏற்பாடுகளை செய்ய சொல்லிவிட்டு தலைமறைவான காதலனை திருமணம் செய்ய விருப்பம் இல்லை' என புதுமணப்பெண் ஜெயலட்சுமி போலீசாரிடம் எழுதிக்கொடுத்து விட்டு சென்றார். காதலன் ஓடியதால் திருமணம் நின்று போனது.
குடுமப நல வழக்குகளில் வக்கீல் தேவையில்லை
விவாகரத்து கேட்கும் தம்பதிகள் வக்கீல் இல்லாமலே கோர்ட்டில் ஆஜராகி வாதிடலாம். தமிழிலும் மனு தாக்கல் செய்ய முடியும்.
சென்னை, மே.13- 2009. செய்தி - தினத்தந்தி
விவாகரத்து வழக்குகளில் வக்கீல் இல்லாமலே கோர்ட்டில் ஆஜராகி கணவன் அல்லது மனைவி வாதிடலாம்.
நாளொன்றுக்கு சென்னையில் விவாகரத்து கோரும் மனுக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாளொன்றுக்கு 30 முதல் 40 மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. இவற்றில் 75 சதவீதம் வழக்குகள் விவாகரத்து கோரும் மனுக்களாகும். அதிகபட்சமாக ஒரே நாளில் 50 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட வரலாறும் உண்டு.
சென்னையில் 3 குடும்பநலக் கோர்ட்டுகள் இயங்குகின்றன. ஒவ்வொரு கோர்ட்டும் 40-க்கு 25 அடி பரப்பளவில் உள்ளன. நாளொன்றுக்கு சுமார் 100 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. நெரிசல் அதிகரிப்பு இந்த வழக்கு விசாரணைக்காக கணவன், மனைவி மட்டும் ஆஜரானாலே 200 பேருக்கு மேல் கோர்ட்டுக்குள் நிற்க வேண்டிய சூழல் உருவாகிவிடுகிறது. ஆனால் இவர்கள் அனைவரும் உறவினர்களோடு வருகின்றனர். எனவே கோர்ட்டுக்குள் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டே இருக்கிறது.
காலையிலேயே கோர்ட்டு விசாரணை தொடங்கி விடுகிறது. எனவே வழக்கு விசாரணைக்காக அனைவரும் வெளியே செல்லாமல் கோர்ட்டுக்கு உள்ளேயே சில மணி நேரம் இருக்க வேண்டிய நிலை உள்ளது. வழக்கு சம்பந்தப்பட்டவர்கள் தவிர வக்கீல்களும் ஆஜராவதால் நெரிசல் மேலும் அதிகரிக்கிறது. கூடுதல் கோர்ட்டு வருமா?
தற்போது 3 குடும்பநல கோர்ட்டுகளிலும் சேர்த்து 7 ஆயிரம் வழக்குக் கோப்புகள் நிலுவையில் உள்ளன. வழக்கின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. ஆனால் அந்தக் கோர்ட்டுகளுக்கு போதிய ஊழியர்கள் நியமிக்கப்படவில்லை.
எனவே, சென்னைக்கு கூடுதலாக ஒரு குடும்பநல கோர்ட்டு கேட்டு, குடும்பநல கோர்ட்டில் இருந்து ஐகோர்ட்டு மற்றும் தமிழக அரசுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டன. அதைத் தொடர்ந்து பல விவரங்களைக் கேட்டு அரசு பதில் கடிதம் எழுதியது. ஆனால் சாதகமான நிலை ஏற்படவில்லை. மற்ற மாவட்டங்களில் இதுபோன்ற கோரிக்கை வரவில்லை என்பதால் சென்னைக்கு மட்டும் கூடுதல் கோர்ட்டுக்கு அனுமதிக்க முடியுமா? என்ற கேள்வியோடு அரசு ஆலோசனை செய்து வருகிறது.
எனவே, கூடுதல் கோர்ட்டுக்கான அனுமதி வரும்வரை, சிட்டிசிவில் கோர்ட்டு கட்டிடத்தின் தரை தளத்துக்கு குடும்பநலக் கோர்ட்டுகளை மாற்ற வேண்டும் என்றும் கூட்ட நெரிசலை தவிர்க்க இதுதவிர வேறு வழியில்லை என்றும் கோர்ட்டு ஊழியர்கள் சிலர் தெரிவித்தனர். அங்கு நீண்ட வராண்டா இருப்பதால் மக்கள் நடமாட்டத்துக்கு வசதியாக இருக்கும்.
வக்கீல் தேவையில்லை:
விவாகரத்து, ஜீவனாம்சம் பெற விரும்புகிறவர்கள் பெரும்பாலும் வக்கீல்களை நாடுவதைத் தவிர்க்கலாம் என்று சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஏனென்றால் குற்ற வழக்குகள் போல் விசாரணை நடத்தும் இடம் குடும்பநல கோர்ட்டு அல்ல.
கணவனோ மனைவியோ, விவாகரத்து கேட்பதற்கு முதலில் வக்கீல்களையே நாடுகின்றனர். இது தேவையற்ற ஒன்று. குடும்பப் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக ஆலோசனை (கவுன்சிலிங்) பெறும் இடத்தில் கணவன்-மனைவி, உறவினர்கள் தவிர வேறு யாரும் தேவையில்லை.
ஆயிரக் கணக்கில் குடும்பநல கோர்ட்டுகளில் வழக்கு தொடர்வதற்கு திருமண புகைப்படத்துடன் மனு தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் இதற்கு சட்ட விதிகள் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. எப்போது, எங்கு திருமணம் நடந்தது? எதற்காக விவாகரத்து கோரப்படுகிறது? என்பதை மட்டும் எழுதி கையெழுத்து போட்டு கொடுத்தாலே போதும். எந்த சட்டவிதிகளின் கீழ் விவாகரத்து கோரப்படுகிறது என்பதையெல்லாம் கோர்ட்டு அதிகாரிகள் கவனித்துக் கொள்வார்கள்.
ஆனால் இந்த நடைமுறை கடந்த பல ஆண்டுகளாக மாற்றப்பட்டு உள்ளது. இப்போது ஒருவர் தரப்பில் ஆஜராவதற்காக `வக்கலாத்து' தாக்கல் செய்வதற்கே வக்கீல்கள் ஆயிரக் கணக்கில் பணம் பெறுகின்றனர். இந்த ஆரம்பச் செலவுகளை கணவன்-மனைவி தவிர்க்கலாம்.
ஆங்கிலம் அவசியம் இல்லை
மேலும், கோர்ட்டில் மனு தாக்கல் செய்வதற்கு ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. தமிழில் மனு எழுதி கொடுத்தாலே போதும். இந்த நடைமுறைகள் அமலுக்கு வந்தால் கோர்ட்டில் கூட்டம் கூடுவதும் குறையும், வழக்குகளும் துரிதமாக விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும்.
ஒவ்வொரு குடும்பநல கோர்ட்டிலும் மாதத்துக்கு சராசரியாக 190 வழக்குகள் முடித்து வைக்கப்படுகின்றன. முதன்மை குடும்பநல கோர்ட்டில் கடந்த ஏப்ரல் மாதம் முடித்து வைக்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 231. இதுதான் குடும்பநல கோர்ட்டு சரித்திரத்தில் இடம் பெற்றுள்ள அதிகபட்ச எண்ணிக்கையாகும்.
---------
குடுமப நல தீதிமன்றங்களில் சட்டப்படி வக்கீல்களை அனுமதிக்கக் கூடாது என்று இந்திய குடும்பப் பாதுகாப்பு இயக்கத்தினர் (Save Indian Family foundation) அரசுக்கும் உயர்நீதிமன்றத்திற்கும் மனு கொடுத்துள்ளனர்.