நீதிபதிகளுக்கு சட்ட அறிவு போதாதென்கிறார் தலைமை நீதிபதி

"உயர் நீதிமன்ற நீதிபதிகள் உட்பட பல நீதிபதிகளுக்கு சட்ட அறிவே இல்லை. சட்ட நுணுக்கங்களையோ, யதார்த்த நிலையையோ, சாட்சியங்களின் தன்மையையோ கருத்தில் கொள்ளாமலும், சமூகப் பிரக்ஞை இல்லாமலும் இஷ்டத்திற்கு தீர்ப்பு அளிக்கிறார்கள்."

இப்படிச் சொன்னவர் யார்? சும்மா அப்பை சப்பையான ஆளில்லையா சொன்னவர்! இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி திரு. கே.ஜி.பாலகிருஷ்ணன் அவர்கள்தான் அப்படிச் சொல்லி விசனப்பட்டிருக்கிறார்!

அவர் மேலும் கூறியிருப்பவை:-

என்ன ஆணையிடுகிறோம், அது செல்லுமா செல்லாதா, அது நிறைவேற்றத் தக்கதுதானா என்றெல்லாம் அலசிப் பார்க்காமல் தீர்ப்பு எழுதுகிறார்கள் நீதிபதிகள்.

அதுவும் 498A சட்டம் மிகவும் தவறான முறையில் பயன்படுத்தப்படுகிறது என்ப்தை மீண்டும் அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கிறார் தலைமை நீதிபதி அவர்கள்.

Balakrishnan pointed out that Section 498 (A) (anti-dowry law) under CrPC was one of the most abused laws.

“Judges are simply issuing summons and even warrants without properly verifying who are the accused. I have come across such cases in which the accused, sitting in Australia and other countries, are made accused when the case is lodged for the alleged offence of dowry,” he added.

தவிரவும் வழக்குகளை மிகவும் தாமதப் படுத்துகிறார்கள். நெறிப்படுத்துவதற்குத் தவறுகிறார்கள். அதனால் வழக்குகள் கோடிக் கணக்கில் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கின்றன.

இதுபோல் அவர் பேசியிருப்பது சென்ற ஆகஸ்டு 30-ம் நாள் போபாலில். "டெலிகிராஃப்" இதழில் வெளிவந்த அவருடைய பேச்சு விவரத்தின் சுட்டி இதோ.

ஆனால் என்ன பேசி என்ன ஆகப் போகிறது. நேற்று சென்னையில் 89 வயது முதியவர் மீது பிடி வாரண்டு அனுப்பியிருக்கிறார் ஒரு நீதிபதி. ஏன் தெரியுமா? அவருடைய மனைவிக்கு மாதம் 1500 ரூபாய் ஜீவனாம்சம் கொடுக்க வில்லையாம். அந்தக் கிழவனாரை அவருடைய குழந்தைகள் யாரும் கவனிப்பதில்லை. சோத்துக்கே லாட்டரி. குழந்தைகள் அனைவரும் அம்மா பக்கம். (அம்மாக்கள் செய்யும் முதல் வேலையே குழந்தைகள் மனத்தில் தகப்பன் மேல் வெறுப்பை ஊட்டி விஷ வித்தை விதைப்பதுதானே!)

அந்தக் கிழவனாரை சன் டிவியில் பேட்டி எடுத்தார்கள். அவர் பரிதாபமாக, "பணத்திற்கு நான் எங்கே போவேன் ஐயா, குழந்தைகள் கொடுத்தால் அதை மனைவிக்கு நீதிபதி சொல்லியபடி ஜீவனாம்சம் கொடுக்கிறேன்" என்று அழுதிருக்கிறார்.

ஆனால் அதையெல்லாம் நீதிபதி எங்கே காதில் வாங்கப் போகிறார். அவரைப் பொருத்த வரையில் மனைவி கேட்டு விட்டால் ஜீவனாம்சம் கொடுக்கவேண்டும். கொடுக்காவிட்டால் கைது செய்து சிறையில் அடைத்துவிடுவார்கள். இல்லையென்றால் கிட்னியை விற்றுத்தான் கொடுக்க வேண்டும். இத்தகைய அணுகுமுறையைத்தான் தலைமை நீதிபதி சாடியிருக்கிறார். ஆனால் என்ன பயன். ஆண்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படுகின்ற கொடுங்கோன்மை நிற்கப்போகிறதா என்ன!

ஆகையால் எந்த வயது ஆண்களும் 498A, ஜீவனாம்சச் சட்டங்கள் போன்றவற்றிலிருந்து தப்பவே முடியாது. "நமக்கு இருப்பது பெண் குழந்தைகள்தானே, ஆண்பிள்ளைகள் கிடையாதே" என்று எண்ணி இருமாப்புடன் பெண்ணியவாதம் பேசிக்கொண்டு, இங்கு வந்து அனானியாக பின்னூட்டமிட்டுச் செல்லும் பெரியவர்கள் கூட எதிர்வரும் நாட்களில் இதுபோன்ற நிலைக்கு ஆளாகலாம். யார் கண்டது!

இனி செய்தி. தட்ஸ்தமிழ் தளத்தில் வெளிவந்தது:

சென்னை: மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்காமல் நீதிமன்ற உத்தரவை அவமதித்த குற்றத்துக்காக 89 வயது முதியவர் ஒருவருக்கு சென்னை குடும்பல நல நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை வில்லிவாக்கம் பகுதியில் செங்குன்றம் ரோட்டில் வசித்து வருபவர் சிம்சன் கண்ணன்(89). இவருக்கும் இவரது மனைவி ராஜலட்சுமிக்கும் (80) கடந்த 1949ல் திருமணம் நடந்தது.
இவர்களுக்கு 4 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் மூலம் பல பேரன், பேத்திகளும் உள்ளனர். தற்போது சிம்சன் மனைவியுடன் கோபித்து கொண்டு தனியாக வசித்து வருகிறார்.

சமீபத்தில் அவர் தனது மனைவி, மகன்களுடன் சேர்ந்து கொண்டு தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், இதனால் தனக்கு அவரிடம் இருந்து விவாகரத்து வாங்கி தருமாறும் கேட்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

திருமணம் நடந்த சுமார் 60 வருடங்களுக்கு பின்னர் 89 வயதில் ஒருவர் விவாகரத்து கேட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கு நடந்து கொண்டிருந்த நிலையில் சிம்சனின் மனைவி, கணவர் தன்னை பிரிந்துவிட்டால் தனக்கு ஜீவனாம்சமாக மாதம் ரூ. 1500 வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு செய்தார். இதை விசாரித்த நீதிபதி சிம்சன் கண்ணன் அவரது மனைவிக்கு ரூ. 1500 ஜீவனாம்சம் கொடுக்க உத்தரவிட்டார்.

ஆனால், சிம்சன் நீதிமன்ற உத்தரவை ஏற்க மறுத்துவிட்டார். அவர் ஜீவனாம்சம் வழங்கவில்லை. இதையடுத்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதையடு்த்து சென்னை குடும்ப நல நீதிமன்றம் சிம்சனை நேரில் வந்து ஆஜராக உத்தரவிட்டது. ஆனால், அவர் வரவில்லை. வழக்கை விசாரித்த நீதிபதி நாராயணசாமி, 89 வயது சிம்சனுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்

2 மறுமொழிகள்:

')) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவன்
உலவு.காம்

')) said...

ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது என்று பள்ளியில் படித்ததற்கு விளக்கம் இந்திய நீதிமன்றங்கள் சட்டப் புத்தகத்தை மட்டும் நம்பி நீதி சொல்லும் முறையிலிருந்து நன்றhக புரிகிறது.

கடைசியில் பாதிக்கப்படுவது சுரைக்காயும் அல்ல, சமைப்பவரும் அல்ல. கட்டாயப்படுத்தி வாயில் தினிக்கப்படும் அப்பாவிகள் தான்.