கோவை கூட்டத்தைப் பற்றிய செய்திகள்

தினகரன் - கோவை பதிப்பு - பக்கம் - 13 (5-09-2009)

தம்பதிகள் ஒற்றுமைக்கு விழிப்புணர்வு இயக்கம்

கோவை, செப். 5: பிரிவில் இருந்து தம்பதிகளை பாதுகாக்க விழிப்புணர்வு இயக்கம் துவக்கப்பட்டுள்ளது.

சென்னை மந்தைவெளியில் இந்திய குடும்ப பாதுகாப்பு இயக்கம் செயல்படுகிறது. இதன், மாநில அமைப்பாளர் சுரேஷ்ராம் கோவையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

இந்தியாவில் குடும்ப பிரச்னை தொடர்பாக ஆண்டுக்கு 75 ஆயிரம் வழக்குகள் பதிவாகின்றன. ஒரு வழக்கு குறைந்தபட்சம் 3 ஆண்டு முதல் அதிகபட்சம் 5 ஆண்டு வரை நடக்கிறது. குடும்பம் சிதைந்து விடுகிறது. இந்திய அளவில் கடந்த 2005-ம் ஆண்டு புள்ளி விவரப்படி 52 ஆயிரத்து 483 கணவன்களும், 28 ஆயிரத்து 188 மனைவிகளும் குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 2006ல் 55 ஆயிரத்து 452 கணவன்களும், 29 ஆயிரத்து 869 மனைவிகளும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
குடும்ப வழக்குகள், குடும்ப பிரச்னை தொடர்பாக கணவன், மனைவி இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதில், 40 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். மாவட்ட அளவிலும் இந்த இயக்கம் விரிவு படுத்தப்படுகிறது.

கோவை மாவட்ட அமைப்பாளராக பிரகாஷ், ஈரோடு மாவட்ட அமைப்பாளராக கிருஷ்ணா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். குடும்ப பிரச்னையால் பாதிக்கப்பட்ட ஆண், பெண்கள் தங்கள் குடும்பம் மற்றும் இந்திய கலாச்சாரத்தை பாதுகாக்க இந்த இயக்கத்தை தொடர்பு கொள்ளலாம். சட்டஉதவி மற்றும் ஆலோசனை இலவசமாக அளிக்கப்படும். இதுதொடர்பான தகவல்களுக்கு 99410-12958, 96294-50331 ஆகிய மொபைல் போன்களில் தொடர்பு கொள்ளலாம்.

=================

முக்கிய குறிப்பு:-

மேற்கண்ட அறிவிப்பை வாசித்துவிட்டு சில பெண்மணிகள் இந்த இயக்கத்தின் செயல்வீரர்களைத் தொடர்பு கொண்டுள்ளார்கள். அவர்கள் அனைவருமே கண்வன்மார் மீது 498A வழக்குத் தொடுத்து தம் வாழ்க்கையைத் தொலைத்தவர்கள். அவர்களுடன் நிகழ்ந்த உரையாடல் பற்றிய விவரங்களை அடுத்த இடுகையில் காணலாம்!

==================

-------------------

7-9-2009. நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் - சென்னைப் பதிப்பு - பக்கம்: 6


2 மறுமொழிகள்:

')) said...

கொஞ்ச நாள் பத்திரிக்கயைில் வரதட்சணை கொடுமை நீயுசுக்கு லீவு விட்டிருந்தாங்க... இப்போ மறுபடியும் பல செய்திகள்...

1. ஐ.பி.எஸ்., அதிகாரி மீது புது மனைவி புகார்

http://www.dinamalar.com/new/fpnnewsdetail.asp?News_id=4887

2. மனைவியின் ஆபாச படங்களை காட்டி மிரட்டல்: கணவர் மீது புகார்

http://www.dinamalar.com/new/Incident_detail.asp?news_id=12653

')) said...

//மேற்கண்ட அறிவிப்பை வாசித்துவிட்டு சில பெண்மணிகள் இந்த இயக்கத்தின் செயல்வீரர்களைத் தொடர்பு கொண்டுள்ளார்கள். அவர்கள் அனைவருமே கண்வன்மார் மீது 498A வழக்குத் தொடுத்து தம் வாழ்க்கையைத் தொலைத்தவர்கள். அவர்களுடன் நிகழ்ந்த உரையாடல் பற்றிய விவரங்களை அடுத்த இடுகையில் காணலாம்!//

அந்தக் கண்ணீர் கதையைக் கேட்க ஆவலுடன் காத்திருக்கிறேன் :)