கள்ளக்காதலில் பிடிபட்டால் போடு 498A கேசு!

இது பிரமாதாதமான வழியாயிருக்கே! எந்தவிதக் கேள்வி முறையுமில்லாமல் பொய் வழக்கு போடுவதற்கென்றே கட்டமைக்கப்பட்டுள்ள செக்ஷன் 498A மூலம் கணவன் மற்றும் அவனுடைய பெற்றோர் மேல் தொடுக்க இயலும் ஆயுதம் கையில் இருக்கும்போது பகிரங்கமாக கள்ளக் காதலில் மணமான பெண்கள் ஈடுபடலாம். பிடிபட்டவுடன் கேள்வி கேட்டால் "இந்தா பிடி 498A கேசு" என்று கேள்வி கெட்டவங்களை உள்ளே பிடித்துப் போட்டுவிடலாம். இதற்கென்றே ஸ்பெஷலிஸ்டு வக்கீல்கள்தான் இருக்கின்றனரே!

போதாததற்கு "கள்ளக் காதல் காவலர்" மனோரமா வேறு தற்போது புதிதாகத் தோன்றியுள்ளார். தவிர விஜயகாந்த் வேறு களத்தில் இறங்கியிருக்கிறார்.

பிறகென்ன, பெருகி வளரட்டும் கள்ளக் காதல்கள், பொய் வழக்குகள்!

ஆண்கள் திருமணத்தை நம்புவதை விடுத்து தங்கள் திருக்கரத்தை நம்பலாம்!

இப்போது செய்தி (தினத்தந்தி 30-09-2009)

நடத்தையில் சந்தேகம்
கார், வீட்டுமனை கேட்டு இளம்பெண் சித்ரவதை
கல்லூரி பேராசிரியர் உள்பட 3 பேர் கைது

போளூர், செப்.30-

சேத்துப்பட்டு அருகே கார் மற்றும் வீட்டுமனை கேட்டு இளம்பெண்ணை சித்ரவதை செய்த கல்லூரி பேராசிரியர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

நடத்தையில் சந்தேகம்

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே உள்ள மேலத்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் முரு கேசன் (வயது63) ஓய்வுபெற்ற தலையாரி. இவரது மகன் சசிகுமார். தனியார் கல்லூரி பேராசிரியர்.

இவருக்கும், ஸ்ரீமதி (23) என்ற பெண்ணுக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் ஸ்ரீமதியின் நடத்தையில் சசிகுமாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

கார், வீட்டுமனை

இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. குழந்தை தனக்கு பிறக்கவில்லை என்று சசிகுமார் கூறியிருக்கிறார். இதனால் பஞ்சாயத்து பேசப் பட்டது. அப்போது குழந் தைக்கு மரபணு சோதனை நடத்தவேண்டும் என்று சசிகுமார் கூறியிருக்கிறார்.

பின்னர் ஸ்ரீமதியை அவரு டைய பெற்றோர் வீட்டுக்கு சென்று சென்னையில் ஒரு வீட்டுமனையும், ஒரு காரும் வாங்கி வரும்படி கூறி துன்புறுத்தி உள்ளார். அதற்கு அவருடைய தந்தை, தாய் மற்றும் சகோதரர்கள் துணையாக இருந்துள்ளனர்.

3 பேர் கைது

இது குறித்து போளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஸ்ரீமதி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சசிகுமார், அவருடைய தந்தை முருகேசன், தாய் ராதா ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

கேரளாவில் போலீசாக வேலைபார்க்கும் சசிகுமாரின் அண்ணன் ரவிந்சந்திரன், சென்னையில் ஆசிரியையாக பணிபுரியும்சகோதரி நளினி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

3 மறுமொழிகள்:

')) said...

நீங்கள் பதிவிட்டுள்ள செய்தியும் தலைப்பும் பொருத்தமாக இல்லை. தயவுசெய்து விளக்கமாக தெரிவிக்க இயலுமா?
நன்றி.
வான்முகிலன்

')) said...

விளக்கம்தானே வேண்டும்!

சீக்கிறமே அடுத்தடுத்த வீடுகளில் இதுபோன்ற 498A கேசுகள் வரத்தான் போகின்றன. அப்போது உங்களுக்கு மட்டுமில்லை, இன்றைக்கு பெண்ணியம் பேசித்திரியும் பல முட்டாள்களுக்கும் முழுதும் புரியத்தான் போகிறது (உங்களைச் சொல்லவில்லை).

இருந்தாலும் உங்களுக்கு நாட்டு நடப்பு தெரியாததால் கேட்கிறீர்கள் என்று நினைத்து விளக்குகிறேன்.

நாய்க்கு எங்கு அடிபட்டாலும் ஒரு காலைத் தூக்கிக் கொண்டு வாலை பின்னக்கால்களினூடே இடுக்கிக் கொண்டு ஓடும். அதுபோல் குடும்பத்தில் எந்த வகை பிரச்னை இருந்தாலும் இப்போதெல்லாம் மணமான பெண்கள் கையிலெடுப்பது இந்த 498A சட்டத்தைத்தான். ஏனெனில் அதை பிரயோகிப்பது சுலபம். ஒரு சின்ன புகார் கொடுத்தால் போதும், கணவனையும் மாமியாரையும் உள்ளே போட்டுவிடுவர்கள் (ஐயா, ஜாலி!!). அதற்கென்றே வக்கீல்கள் டெம்பிளேட் தயார் செய்து வைத்திருப்பார்கள்.

இந்தச் செய்தியைப் பாருங்கள். மனைவியின் நடத்தையில் சந்தேகம், அதைச் சொன்னவுடன் அந்த மனைவி கையிலெடுத்திருப்பது வரதட்சணைக் கொடுமைப் புகார் (498A) தான்.

இதுதான் விஷயம். சில மாதங்களுக்கு முன்னால் விஜய் டிவியில் "இப்படிக்கு ரோஸ்" நிகழ்ச்சியில் AIDWA வைச் சேர்ந்த ஒரு பெண் வக்கீல் வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார், எந்தக் குடும்பப் பிரச்னையுடன் ஒரு மனைவி வந்தாலும் உடனே 498A கேசுதான் போடுவோம் என்று.

கவலைப் படாதீர்கள். பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் இத்தகைய கேசுகளில் சிக்குகிறார்கள். ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, நீதிபதிகள், அமைச்சர்கள் இது போல் எல்லா நிலைகளிலும் பல்கிப் பெருகிய பின் அந்த சட்டத்திற்கு ஒரு விமோசனம் செய்யத்தான் போகிறார்கள்.

வேடிக்கை பார்ப்போம்!

')) said...

//கேரளாவில் போலீசாக வேலைபார்க்கும் சசிகுமாரின் அண்ணன் ரவிந்சந்திரன், சென்னையில் ஆசிரியையாக பணிபுரியும்சகோதரி நளினி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.//

குடும்பத்திலுள்ள அனைவரையும் கைது செய்யத் துடிக்கும் இந்த அராஜகத்தை அடக்கப்போவது யாரோ? என்னைக்குத்தான் இந்த முட்டாள் கூட்டம் திருந்துமோ?

அதிலும் ஒரு நல்ல செய்தி "கேரளாவில் போலீசாக வேலைபார்க்கும்" - ஒரு போலிஸ்.