கணவன் மனைவி பிரச்னையில் அயலாரைப் புகவிடாதே, பொய்க் கேசு போடாதே!


கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே பாலப்பள்ளம் நடுப்பிடாகையை சேர்ந்தவர் கண்ணன். இவர் ஒரு ஏழை கூலித் தொழிலாளியின் பெண் கோபிகா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் ஆனவுடனேயே கண்னன் வீட்டார் அந்த கோபிகாவுக்கு சொத்து ஒன்றை எழுதி வைத்துள்ளனர்.

கர்ப்பமான கோபிகா 15 நாட்களிலேயே கர்ப்பத்தைக் கலைக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார். அதற்கு கண்ணனும் அவனுடைய பெற்றோரும் ஒப்புக் கொள்ளவில்லை.

அவர் காவல் நிலையத்திற்குச் சென்று தன்னை வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக கணவன் மற்றும் அவனுடைய பெற்றோர் மீது புகார் கொடுத்தார் (அதுதான் 498A செக்ஷன்).

அதன்மேல் குடும்ப வன்முறைச் சட்டத்தின்படியும் ஒரு புகார் கொடுத்தார்.

இத்தனை கேசுகள் போட்டதால் கண்ணன் அவரை வீட்டில் சேர்க்கவில்லை.

உடனே அந்த கோபிகா மார்க்சிஸ்டு கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, விஜயகாந்த் கட்சி போன்ற அரசியல் கட்சியினரைக் கூட்டு சேர்ந்துக் கொண்டு குழந்தையை கொளுத்தும் வெய்யிலில் போட்டு வாட்டி வதக்கி நடு ரோட்டில் போராட்டம் நடத்தினாள்.

கண்ணன் தரப்பினர் உயர் நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கியிருந்ததால் காவல் துறையினர் அவர்கள் மீது ஏதும் நடவடிக்கை எடுக்கவில்லை.

உடனே கோபிகாவும் அவருக்கு ஆதரவாகத் திரண்டிருந்த அரசியவாதிகளும் பெரிய போராட்டத்தை அறிவித்து முதலமைச்சர் தலையிடவேண்டும் என்று கூக்குரலிட்டனர். காவல் துறை மீதும் புகார்களைக் கூறிவந்தனர். (ஆமாம் ஐயா, இத்தகைய அரசியவாதிகள் இளம் பெண்கள் பின்னால் போவார்கள், பணத்தின் பின்னே போவார்கள், ஓட்டின் பின்னே போவார்கள். பின்னே நியாயத்தின் பின்னேயா போவார்கள்?)

மேற்கணட விவரமெல்லாவற்றையும் அந்த கண்ணன் "கலைஞர் டிவி"யில் நேரிடையாக இரண்டு நாட்களுக்கு முன் கூறினார் - தன் மனைவி இன்னொருவனுடன் உறவு வைத்துக் கொண்டிருக்கும் சந்தேகம் உட்பட!

ஆனால் நேற்று காவல் துறை அதிகாரிகள் அந்த தம்பதிகள் இரண்டு பேரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி சேர்ந்து வாழும்படி கூறி கண்ணனுடைய் பெற்றோரை விட்டுப் பிரிந்து தனிக் குடுத்தனம் போக அனுப்பியுள்ளனர்.

தினத்தந்தி செய்தியின்படி அந்த சேர்த்து வைக்கும் நடவடிக்கை குறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், "கோபிகாவும் கண்ணனும் சேர்ந்து வாழ்வதற்கு அவர்களது குடும்பத்தினர்தான் தடையாக இருந்தனர். இதனால் அவர்களை தனிக்குடித்தனமாக சேர்ந்து வாழ அனுப்பி வைத்துள்ளோம்" என்றார். (http://www.dailythanthi.com/article.asp?NewsID=517199&disdate=9/29/2009)

இதுபற்றி நேற்றைய (29-09-2009) தினகரன் செய்தி இது:

அதிகாரிகள் சமரச முயற்சி வெற்றி 20 நாள் போராட்டம் முடிந்தது கணவரோடு சேர்ந்தார் கோபிகா.

நாகர்கோவில், செப்.29: குமரி மாவட்டம் கருங்கல் அடுத்த பாலப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (25). இவருக்கும் இரணியல் பகுதியை சேர்ந்த கோபிகாவுக்கும் (23) ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. குடும்ப தகராறு காரணமாக இருவரும் பிரிந்தனர். கணவரோடு தன்னை சேர்த்து வைக்கக் கோரி கைக்குழந்தையுடன் கோபிகா பல போராட்டங்களை நடத்தினார்.

கடந்த 7ம் தேதி முதல் தொடர் போராட்டத்தை கணவர் வீட்டு முன் தொடங்கினார். பல்வேறு அரசியல் கட்சிகளும் அவருக்கு ஆதரவளித்தன.

இந்த நிலையில் நேற்று முன் தினம் இரு தரப்பையும் பேச்சு வார்த்தைக்கு வரும்படி எஸ்.பி. சண்முகவேல் அழைத்தார். அதன்படி கோபிகா மற்றும் கண்ணன் தங்களது உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களோடு வந்தனர். குடும்ப பிரச்னை என்பதால் கோபிகா, கண்ணனை தவிர வேறு யாரும் உள்ளே வர வேண்டாம் என போலீசார் கேட்டுக் கொண்டனர். சரியாக 11 மணி அளவில் எஸ்.பி. அலுவலகத்துக்குள் கண்ணனும், கோபிகாவும் சென்றனர். எஸ்.பி. சண்முகவேல், பத்மநாபபுரம் ஆர்.டி.ஓ. முருகவேல் ஆகியோர் அவர்களிடம் பேசினர்.

இருவருமே ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி தொடக்கத்தில் பேசினர். நேரம் செல்ல, செல்ல பேச்சு வார்த்தையில் மாறுதல் ஏற்பட்டது. கணவருக்காக கோபிகாவும், கோபிகாவுக்காக கண்ணனும் பரிந்து பேசும் அளவுக்கு நிலை வந்தது. 3 மணி நேர பேச்சுக்கு பிறகு இருவரும் சிரித்தபடியே வெளியே வந்தனர்.

இது தொடர்பாக எஸ்.பி. சண்முகவேல் கூறியது:

கோபிகா, கண்ணன் இருவரும் சேர்ந்து விட்டனர். குடும்ப விவகாரத்தை இப்படி பெரிதாக்க கூடாது. விட்டு கொடுத்து செல்ல வேண்டும். கணவன், மனைவிக்குள் ஈகோ பிரச்சினை கூடாது என்று பல அறிவுரைகளை கூறினோம். குழந்தையின் நலனையும் பார்க்க வேண்டும் என்றோம். இந்த பேச்சு வார்த்தையில் பலனாக இருவரும் தங்களது தவறை உணர்ந்தனர். அவர்கள் இனி தங்கள் குழந்தையோடு புது வாழ்க்கையை தொடங்க போகிறார்கள் என்றார்.

வெளியே வந்த கோபிகா, ‘கணவரோடு சேர்ந்தது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார்.

கண்ணன் கூறுகையில், ‘ஒரு சிலரின் தூண்டுதல்தான் இந்த பிரச்னைக்கு காரணம்’ என்றார்.

4 மறுமொழிகள்:

')) said...

Latest update:

இன்று மதுரை உயர் நீதிமன்றத்தில் கண்ணன் சென்று கோபிகாவுடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை என்றும், அந்தக் குழந்தை தனக்குப் பிறந்தது இல்லை எனவும் கூறியிருக்கிறார்.

வழக்கம்போல அந்தப் பெண் திலகம் கண்ணீர் சிந்தி பேட்டி கொடுத்துள்ளார்.

என்னவோ நடக்குது, மர்மமா யிருக்குது!

')) said...

கட்சிக்கார•களும் போலிஸ்கார•களும் மாமா (498A - பேய்களின் புரோக்கர்கள்) ரேஞ்சில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்!

')) said...

//கணவன் மனைவி பிரச்னையில் அயலாரைப் புகவிடாதே, பொய்க் கேசு போடாதே! //

அட எல்லா கேசையும் போட்டு மிரட்டி பாத்துட்டு அப்புறம் பெரிய போராட்டம் வேறு...
புருசன் கூட வாழனும்னு நினைச்சி பெரிய பெரிய போராட்டம் எல்லாம் நடத்துர வீரமங்கை என் பொய்வழக்கு போட வேண்டும்...?
எல்லா கேசும்போட்டு பெயில் எடுத்தபிறகு இனிமேலும் ஒன்னும் பன்னமுடியாதுன்னு தெரிஞ்ச பிறகு கெஞ்சி கூத்தாட வேண்டியது..

என்ன கொடுமை சார் இது...

Anonymous said...

http://www.maalaimalar.com/2009/09/30160613/MDU20300909.html

இந்த சூழ்நிலையில் எனது இன்னொரு மகன் கந்தன் செல்போனில் கண்ணன் பேசியிருக்கிறார். அப்போது போலீசார் என்னை மதுரையில் கடத்தி வைத்துள்ளனர். என் உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படும் என்னை காப்பாற்றுங்கள் என்று கண்ணன் கூறியிருக்கிறார்.

நான் இது குறித்து போலீஸ் ஐ.ஜி.விடம் மனு கொடுத்தேன். எனது மகனின் உயிருக்கு ஆபத்து உள்ளது. அவரை காப்பாற்றி மீட்டு தரவேண்டும். பாதுகாப்புடன் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் முருகேசன், கர்ணன் அடங்கிய டிவிசன் பெஞ்ச் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் அஜ்மல்கான், காந்தி ஆகியோர் ஆஜரானார்கள். வழக்கு விசாரணையின்போது இன்று கண்ணன், கோபிகா தனது கைக்குழந்தையுடன் கோர்ட்டில் ஆஜரானார்கள்.

கோர்ட்டில் நடந்த விவாதம் வருமாறு:-

கண்ணன்:- என்னுடைய மனைவியுடன் சேர்ந்து வாழ நான் விரும்பவில்லை. அவளது நடத்தை சரியில்லை. எனவே நான் அவளுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை.

கோபிகா: நான் ஏழை குடும்பத்தை சேர்ந்தவள். திருமணம் முடிந்த நாளிலிருந்தே என்னை வரதட்சணை கொடுமை செய்தனர். அதனால்தான் குடும்பத்தை விட்டு பிரிக்க பார்க்கின்றனர். என்னை எனது கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும்.

நீதிபதிகள்:- இது குடும்ப பிரச்சினையாக இருப்பதால் இது தொடர்பாக சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பி இந்த வழக்கில் முடிவு ஏற்பட அனுமதிக்கிறோம். அதுவரைக்கும் அவரவர் வீட்டில் இருக்கலாம் என்று கூறி வழக்கினை வருகிற திங்கட்கிழமைக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்