மருமகளுக்கு உரிமைகள் மட்டுமே, கடமையேதும் கிடையாது!

மருமகளிடம் வாடகை வசூலிக்க ஐகோர்ட் தடை
செப்டம்பர் 15,2009. தினமலர் செய்தி

புதுடில்லி: "தங்களுக்கு சொந்தமான வீட்டில் வசிக்கும் மருமகளிடம், கணவன் வீட்டார் வாடகை கேட்கக்கூடாது' என, கோர்ட் தெரிவித்துள்ளது.

டில்லியை சேர்ந்தவர் கவிதா; இவருக்கு இரண்டு குழந்தைகள். கணவர் இவருடன் வாழவில்லை.

எனினும், மாமனாருக்கு சொந் தமான மூன்றடுக்குமாடி முதல் தளத்தில், கவிதா வசித்து வந்தார். கணவன் உடன் இல்லாத நிலையில், கவிதாவிடம் வீட்டு வாடகை கேட்டு மாமனாரும், மாமியாரும் நச்சரித் தனர். இதை எதிர்த்து, கோர்ட் டில் வழக்கு தொடர்ந்தார் கவிதா. இந்த வழக்கை விசாரித்த கீழ் கோர்ட், வீட்டுக்கு மாத வாடகையாக, 3, 250 ரூபாய் செலுத் தும் படி, கவிதாவுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து கவிதா, டில்லி ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி பாஷின், "திருமணமானதும், பிறந்த வீட்டை விட்டு புகுந்த வீட்டுக்கு செல்லும் பெண், அந்த வீட்டின் ஒரு அங்கத்தினராகி விடுகிறாள். கவிதாவுடன் அவர் கணவர் சேர்ந்து வாழாத போதும், புகுந்த வீட்டில் அவரும் ஒரு உறுப்பினர் தான். எனவே, அவரிடம் வாடகை வசூலிக்கக் கூடாது' என, உத்தரவிட்டுள்ளார்.