திமுக முன்னாள் எம்.எல்.ஏயின் தம்பியை கள்ளக் காதலனுடன் சேர்ந்து கொலை செய்த மனைவி

முன்னாள் எம்.எல்.ஏ. தம்பி கொலையில் மனைவி, கள்ளக்காதலன் கைது. பரபரப்பு வாக்குமூலம்

விளாத்திகுளம், செப்.25- 2009. செய்தி - தினத்தந்தி, தினமலர்

முன்னாள் எம்.எல்.ஏ. தம்பி கொலை செய்யப்பட்டது தொடர்பாக அவரது மனைவி மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளனர். கைதான கள்ளக்காதலன் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அரியநாயகிபுரத்தை சேர்ந்தவர் சங்கரராமு மகன் குட்டி என்ற ராஜராஜன் (வயது 40). விவசாயி.

இவருக்கு கிருஷ்ணகுமாரி (36) என்ற மனைவியும், கோகுல் (13) என்ற மகனும், ரம்யா (8) என்ற மகளும் உள்ளனர். கிருஷ்ணகுமாரி சத்துணவு அமைப்பாளராக உள்ளார்.


ராஜராஜனின் அண்ணன் குமரகுருபர ராமநாதன் விளாத்திகுளம் முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. ஆவார். இவர் தற்போது ம.தி.மு.க. மாவட்ட பொருளாளராக உள்ளார். ராஜராஜன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில் ராஜராஜன் கொலை தொடர்பாக அதே ஊரை சேர்ந்த ஷாஜகான் (24) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

கைதான ஷாஜகான் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

எனது சொந்த ஊர் அரியநாயகிபுரம். எனக்கு திருமணம் ஆகவில்லை. 9-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். எங்களது வீட்டின் பக்கத்திலேயே ராஜராஜனின் வீடு உள்ளது. எனவே அவரிடம் பழக்கம் இருந்ததால் அவரது வீட்டிற்கு சென்று அனைவரிடமும் அன்பாக பழகுவேன்.

கடந்த 2 மாதங்களாக ராஜராஜன் மனைவி கிருஷ்ணகுமாரிக்கும், எனக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. ஆனால் என்னை யாரும் சந்தேகப்படவில்லை. நான் சென்னையில் ஒரு பழைய இரும்புக்கடையில் வேலை செய்து வருகிறேன். அவ்வப்போது ஊருக்கு வந்து செல்வேன்.

கடந்த மாதம் நான் சென்னையில் இருந்தபோது கிருஷ்ணகுமாரி, செல்போனில் என்னிடம், தனது கணவர் குடித்துவிட்டு வந்து அடிக்கடி தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறினார். இந்தநிலையில் கடந்த வாரம் நான் ரம்ஜான் கொண்டாடுவதற்காக ஊருக்கு வந்து இருந்தேன்.

அப்போது, தனது கணவரை கொலை செய்தால்தான் நாம் சந்தோஷமாக இருக்க முடியும் என்று கிருஷ்ணகுமாரி என்னிடம் கூறினார். இதனால் ரம்ஜான் பண்டிகை அன்று நான், ராஜராஜன் மற்றும் எனது நண்பர்கள் அலியாஸ், ராஜேந்திரன், காளிமுத்து, வேல்சாமி, முருகேசன் ஆகியோர் அரியநாயகிபுரம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் மது அருந்தினோம். பின்னர் அனைவரும் வீட்டுக்கு வந்துகொண்டு இருந்தோம்.

அப்போது மற்றவர்களை அனுப்பிவிட்டு ராஜராஜனை மட்டும் தனியாக அழைத்துக் கொண்டு வந்து மீண்டும் 2 பேரும் மது அருந்தினோம். இதனால் ராஜராஜன் அதிக போதையில் இருந்தார்.

அப்போது நான் அருகில் கிடந்த உருட்டைக்கட்டையால் ராஜராஜன் கழுத்தில் அடித்தேன். இதனால் படுகாயம் அடைந்த அவர் அந்த இடத்திலேயே செத்தார்.

பின்னர் அவரிடம் இருந்த செல்போனை எடுத்து அதில் இருந்த சிம்கார்டை தனியாக கழற்றிக்கொண்டு வந்து கிருஷ்ணகுமாரியிடம், செல்போனையும், சிம்கார்டையும் கொடுத்துவிட்டு ராஜராஜனை கொலை செய்ததை கூறினேன். பிறகு கிருஷ்ணகுமாரியிடம் என்னுடைய ரத்தக்கறை படிந்த சட்டையை கொடுத்துவிட்டு வேறு சட்டை வாங்கி அணிந்து கொண்டு வீட்டுக்கு சென்றுவிட்டேன். ஆனால் போலீசார் என்னை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை செய்ததில் ராஜராஜனை நான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டேன்.

இவ்வாறு ஷாஜகான் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக தெரிகிறது.

இதையொட்டி கிருஷ்ணகுமாரியை போலீசார் கைது செய்தனர். மேலும் ஷாஜகான் வீட்டில் இருந்த கிருஷ்ணகுமாரியின் தற்போதுள்ள போட்டோ மற்றும் சின்ன வயதில் எடுத்த போட்டோக்களையும் கைப்பற்றினர். கிருஷ்ணகுமாரியிடம் இருந்து ராஜராஜனின் செல்போன், சிம்கார்டை பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட 2 பேரும் விளாத்திகுளம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் காவலில் வைக்கப்பட்டனர்.

இவ்வாறு போலீசார் கூறினர். முதலில், கணவர் கொலை செய்யப்பட்டது குறித்து தனக்கு எதுவுமே தெரியாது என, கிருஷ்ணகுமாரி நாடகமாடினார். போலீசார், "உரிய முறையில்' விசாரித்தபோது நடந்த சம்பவம் அனைத்தையும் விவரித்தார். கிருஷ்ணகுமாரி, அவரது கள்ளக்காதலன் ஷாஜகானை விளாத்திகுளம் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார், பின்னர் அவர்களை சிறையிலடைத்தனர்.
===========
மனோரமா, ஆச்சி,
உங்க இயக்கம் என்ன ஆச்சீ?

5 மறுமொழிகள்:

Anonymous said...

kolaiyum seival pathini

')) said...

இது மிகவும் சந்தோசமான செய்தி தான். ஏனென்றால் ஒரு அரசியல்வாதி குடும்பத்தில் அல்லவா இது நடந்திருக்கிறது. இது போல பல சம்பவங்கள் பொய் கேசுகளுக்கு துணை போகும் வக்கீல், ஒரு தலைபட்சமான தீர்ப்பு வழங்கும் நீதிபதி, பொய் எனத் தெரிந்தும் கேசு பதிவு செய்யும் போலிஸ் இவர்கள் குடும்பத்திலெல்லாம் நடக்க வேண்டும்.

')) said...

if you are a politician, will you accept someone to kill your brother?.

Pls mind your words, think twice before you write.

there are so many honest people in politics.

-vM.Velsamy,

Anonymous said...

sariyaka sonnar veluchamy.......think befor writting!

Anonymous said...

sariyaka sonnar veluchamy.......think befor writting!