தன் சுகம், தன் வெறி, பெற்ற குழந்தைகளின் கதியென்ன தாயே!

கணவனும் பெற்றோரும் கள்ளக்காதலைக் கண்டித்ததால் கள்ளக் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டது. ஆனால் அந்தப் பெண்ணுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. அந்தக் குழந்தைகளைப் பற்றி பெற்ற தாய் எண்ணிப் பார்க்கவில்லை.

தாய்மையின் பெருமையைப் பற்றியெல்லாம் பழைய பஞ்சாங்கம் போல் பேசித் திரியாதீர். இது பெண்விடுதலைக் காலம். அந்தப் பெண்ணின் பாலியல் ஆசைகள் முழுமையாக திருப்தி செய்யப்படவேண்டும். அதுதான் முக்கியம். அதை விடுத்து குழந்தைகள், தாய்மை, பண்பாடு, கற்பு போன்ற பத்தாம் பசலிக் கோட்பாடுகளைக் கூறி பெண்ணினத்தை அடிமைப் படுத்த விடமாட்டோம்!

மனோரமா அம்மையாரின் கூற்றுப்படி அனைத்து கள்ளக்காதல்களும் கணவன்மார்கள் ஆண்மையில்லாமல் இருப்பதால்தான் நிகழ்கிறதாம். ஆண்மையின் அளவுகோல் என்ன, சில பெண்களிடம் மேலோங்கி நிற்கும் பாலியல் வெறியின் அளவுகோல் என்ன, கட்டின் புருஷனையும், பெற்ற பிள்ளைகளையும் விட்டுவிட்டு கள்ளக் காதலனோடு ஓடும் பெண்கள் கணவன் தன்னைத் திருப்தி செய்யாததால்தான் ஓடுகிறார்களா, அல்லது எளிதில் திருப்தியாகாமல் வகை வகையான செக்ஸ் அனுபவங்களைத் தேடி ஓடுகிறார்கள, அல்லது திருமணத்திற்கு முன்பே இருந்த கள்ள உறவை விடமுடியாமல் தொடர்கிறர்களா என்பதெல்லாம் நாம் அறியோம். வேண்டுமானால் இந்த விஷயத்தைப் பற்றிப் போராட இயக்கம் தொடங்கியிருக்கும் மனோரமா அம்மையாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

இனி இன்றைய செய்தியைப் பார்ப்போம்.

பேரணாம்பட்டு அருகே கள்ளக்காதல் ஜோடி தூக்கு போட்டு தற்கொலை

பேரணாம்பட்டு, செப்.17- 2009. செய்தி - தினத்தந்தி.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கள்ளக்காதல் ஜோடி

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த எருக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி மகன் வெங்கடேசன் (வயது 27). திருமணமாகாதவர். இவர் பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். மேலும் அங்கேயே ஒரு வீட்டில் வாடகைக்கு தங்கி இருந்தார். இவரது வீட்டின் பக்கத்தில் பேரணாம்பட்டு அருகே உள்ள பரவைக்கல் மந்திரிபட்டி பகுதியை சேர்ந்த காஞ்சனா (27) என்பவர் திருமணமாகி, தனது கணவர் வரதராஜனுடன் வசித்து வந்தார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். அப்போது வெங்கடேசனுக்கும், காஞ்சனாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இது காஞ்சனாவின் கணவர் வரதராஜுக்கு தெரிய வந்ததும் அவர் தனது மனைவியை கண்டித்துள்ளார்.

இதற்கிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெங்கடேசனும், காஞ்சனாவும் பெங்களூரில் இருந்து எருக்கம்பட்டுக்கு புறப்பட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் தனது மனைவியை காணாத வரதராஜன், வெங்கடேசனுடன் காஞ்சனா சென்றிருக்கலாம் என்று கருதி எருக்கம்பட்டு கிராமத்திற்கு வந்து வெங்கடேசனின் தந்தை சுப்பிரமணியிடம் நடந்த சம்பவம் குறித்து கூறினார். அதற்கு சுப்பிரமணி, அவர்கள் இருவரும் வந்ததும் பேசி முடிவு எடுக்கலாம் என்று கூறியதை அடுத்து வரதராஜன் அங்கிருந்து சென்று விட்டார்.

இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு வெங்கடேசனும், காஞ்சனாவும் எருக்கம்பட்டிற்கு வந்துள்ளனர். அப்போது சுப்பிரமணி, திருமணமான பெண்ணை அழைத்து கொண்டு வந்திருக்கிறாயே என்று வெங்கடேசனை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த வெங்கடேசன் அதே பகுதியில் உள்ள தனது நண்பர் கார்த்தி என்பவரது வீட்டிற்கு காஞ்சனாவுடன் சென்று உள்ளார்.

பின்னர் இருவரும் கார்த்தி வீட்டில் சாப்பிட்டு உள்ளனர். அப்போது கார்த்தி வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார்.

தூக்கு போட்டு தற்கொலை

இந்தநிலையில் கள்ளக்காதல் ஜோடி வெங்கடேசன், காஞ்சனா இருவரும் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். சிறிது நேரம் கழித்து வீட்டிற்குள் சென்று பார்த்த கார்த்தி, இருவரும் தூக்கில் தொங்குவது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து பேரணாம்பட்டு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பேரணாம்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பேரணாம்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பஞ்சாட்சாரம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

1 மறுமொழி:

')) said...

பேசாம சம்பாத்யம் செய்யாம நாக்க தொங்க போட்டுகிட்டு வீட்டுலயே இருக்கனும்...