லேட்டஸ்ட் கள்ளக்காதல் கொலை

அவனியாபுரம்: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, காதலனுடன் சேர்ந்து கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.

மதுரை, பெருங்குடியைச் சேர்ந்தவர் முருகேசன்(45); தள்ளுவண்டியில் ஜூஸ் கடை நடத்தினார்.

மனைவி செல்வி (29). இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். ஜெய்ஹிந்புரம் சத்துணவு மையத்தில், செல்வி சமையல் உதவியாளராக உள்ளார். மூன்று மாதங்களுக்கு முன் அவனியாபுரம் அருகே கரிசல்குளத்தில் குடியிருந்தபோது, செல்விக்கும், கொத்தனார் சக்திவேல் (20) என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டது. இது தெரிந்ததால் பெருங்குடியில் குடும்பத்துடன் முருகேசன் குடியேறினார். ஆனாலும், செல்வியின் கள்ளக்காதல் தொடர்ந்தது.

நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்று விட்டு முருகேசன் வீடு திரும்பினார். கதவை தட்டியபோது திறக்கப்படவில்லை. சந்தேகப்பட்டு கதவின் மேல் இருந்த பெரிய துவாரம் வழியே வீட்டிற்குள் குதித்தார். அங்கு, செல்வியுடன் சக்திவேல் இருந்ததைக் கண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

"வெளியில் தெரிந்தால் அவமானம்' எனக்கருதி அவரை கொலை செய்ய செல்வியும், சக்திவேலுவும் முடிவு செய்தனர். தான் கொண்டு வந்த பட்டாக்கத்தியால், முருகேசனை பல இடங்களில் சக்திவேல் வெட்டினார். பின் கழுத்தை அறுத்து கொன்றார்.

உடலை, ஜூஸ் கடை தள்ளுவண்டியில் வைத்து சுடுகாட்டிற்கு கடத்தினர். ஆள்நடமாட்டம் இருந்ததால் நடுரோட்டில் நிறுத்திவிட்டு இருவரும் தப்பினர். இதுகுறித்து முருகேசன் தந்தை காந்திக்கு, அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.

கள்ளக்காதலனுடன் சேர்ந்து செல்வி கொலை செய்திருக்கலாம் என்று அவர், போலீசில் புகார் செய்தார்.பரம்புபட்டி ரோட்டில் பதுங்கியிருந்த அவர்களை, திருப்பரங்குன்றம் போலீசார் கைது செய்தனர்.

வாக்குமூலத்தில், "கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், கணவனை கொலை செய்ததாக' செல்வி தெரிவித்துள்ளார். அதே போல சக்திவேலுவும் தெரிவித்துள்ளார்.

தொடரும் கள்ளக்காதல் கொலைகள்:

சமீபகாலமாக கள்ளக்காதல் தொடர்பாக கொலைகள் நடப்பது அதிகரித்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன், விளாத்திக்குளத்தில் முன்னாள் எம்.எல்.ஏ., குமரகுருபர ராமநாதன் சகோதரர் ராஜராஜனை, கள்ளக்காதலன் ஷாஜகானுடன் சேர்ந்து மனைவி கிருஷ்ணகுமாரி கொலை செய்தார்.

கடந்த 4ம் தேதி மதுரை யாகப்பா நகரில் சந்தேகத்தின் பேரில் மனைவி தமிழச்செல்வியை, ரவுடி பாண்டி கொலை செய்தார். ஜூலை 29ல் பொன்மேனியில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகன் கிருஷ்ணமூர்த்தியை, காதலனுடன் சேர்ந்து தாயார் மேரி கூறு கூறாக வெட்டி கொலை செய்தார். இந்த பட்டியலில் தற்போது செல்வியும், சக்திவேலுவும் சேர்ந்துள்ளனர்.

==============

கள்ளக்காதல் கொலைக்கு வக்காலத்து வாங்கும் ஆச்சி மனோரமாவும், கள்ளக் காதல் தெரியவந்ததால் வெளியேற்றப்பட்டு பிறகு கணவன் மீது 498A, DVAct போன்ற வழக்குகளைப் போட்டு ரவுசு பண்ணும் பெண்ணைத் தூண்டி விட்டு பாலிடிக்ஸ் செய்யும் விஜயகாந்த் போன்றவர்களும் தங்கள் குறுகிய சுயநலனுக்காக முனைந்து நின்று நம் நாட்டில் திருமணம், குடும்ப வாழ்வு, குழந்தைகள் நலன், பண்பாடு போன்ற அனைத்தையும் குழி தோண்டிப் புதைக்க முற்படுகிறார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

1 மறுமொழி:

')) said...

காதலுக்கு கண்ணில் சொல்ரோம் இதுல கள்ளக்காதல் என்ன விதிவிலக்கா... "எனக்கு 28 உனக்கு 20" கொய்யால இதவச்சி படமே எடுக்கலாம்....