கணவனுக்கு ஒரு வெட்டு கள்ளக் காதலனுக்கு ஒரு வெட்டு

முதலில் கணவனைக் கொன்ற கதை (தினமலர்)

குடிபோதை கணவரை வெட்டி கொலை செய்த மனைவி கைது: கழிவுநீர் தொட்டியில் உடல் மீட்பு .செப்டம்பர் 16,2009.

தூத்துக்குடி மாவட்டம் கலியாவூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கல்யாணி(55). அவரது மனைவி பூலம்மாள்(47). திருமணமாகி 30 ஆண்டுகள் ஆன அவர்களுக்கு குழந்தையில்லை.

மதுகுடிக்கும் பழக்கமுள்ள கல்யாணி, பணம் கேட்டு அடிக்கடி மனைவி பூலம்மாளை அடித்து உதைப்பார். கடந்த 10ம் தேதி குடிபோதையில் வந்த கல்யாணி, பணம் கேட்டு பூலம்மாளிடம் வாக்குவாதம் செய்தார். தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த பூலம்மாள், கணவர் கல்யாணியை கீழே தள்ளினார். அரிவாளால் அவரது கழுத்தில் வெட்டினார்.

படுகாயமடைந்த கல்யாணி சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது உடலை வீட்டின் முன்புறமுள்ள கழிவு நீர்த் தொட்டிக்குள் போட்டு அதில் மண்ணைப் போட்டு, தொட்டியை மூடினார்.

"கணவர் எங்கே?' என கேட்டவர்களிடம், வெளியூர் சென்று விட்டதாக கூறினார். வீட்டின் அருகே துர்நாற்றம் வீசியதால் முறப்பநாடு போலீசுக்கு தகவல் சென்றது. போலீசார், பூலம்மாளிடம் விசாரித்துள்ளனர். "முறைப்படி'யான விசாரணையில், கணவரைக் கொன்று உடலை கழிவுநீர் தொட்டிக்குள் போட்டு மறைத்ததை ஒப்புக் கொண்டார்.

பூலம்மாளை போலீசார் நேற்று கைது செய்து, கல்யாணி உடலை மீட்டனர். கள்ளத்தொடர்பு காரணமாக, கொலை நடந்திருக்கலாம் என சந்தேகப்படும் போலீசார், கொலையில் உடந்தையாக இருந்ததாக பூலம்மாள் உறவினர் ஒருவரை தேடிவருகின்றனர்.
====================

செய்தி - 2

கள்ளக்காதலனை அரிவாளால் வெட்டிய பெண் போலீசில் சரண்

ஓட்டப்பிடாரம், செப்.16- 2009 (தினத்தந்தி)

கள்ளக்காதலனை அரிவாளால் வெட்டிய பெண் போலீசில் சரண் அடைந்தார். "கள்ளக்காதலனை நம்பி கணவரை கைவிட்டதாக" அவர் வாக்குமூலம் அளித்தார்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள மேலமங்கலத்தை சேர்ந்த கலைச்செல்வன் மனைவி காஞ்சனா (வயது 35). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கலைச்செல்வன் நீண்ட காலமாக வெளிநாட்டில் வேலைபார்த்து வந்தார்.

காஞ்சனாவும், அவரது குழந்தைகளும் ஊரில் வசித்து வந்தனர். அப்போது காஞ்சனாவுக்கும், அதே ஊரை சேர்ந்த சேர்மராஜ் (35) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சேர்மராஜ் தங்கை சேர்மக்கனிக்கும், காஞ்சனா தம்பி ரத்தினவேலுவுக்கும் திருமணம் நடந்தது.

இதன் பின்னர் சேர்மராஜும், காஞ்சனாவும் உறவினர்கள் ஆகினர். இதன் பின்னர் அவர்களின் தொடர்பு மேலும் வலுத்தது. இந்த விவகாரம் வெளிநாட்டில் வேலைபார்த்த காஞ்சனாவின் கணவர் கலைச்செல்வனுக்கு தெரியவந்தது. ஊருக்கு வந்த அவர் மனைவியை கண்டித்தார். ஆனால் காஞ்சனாவுக்கு, சேர்மராஜை கைவிட மனம் இல்லை.

கடைசியில் கணவரா?, கள்ளக்காதலனா? என்ற கேள்வியில், காஞ்சனா கணவரை பிரிந்தார். இதனால் 2 ஆண்டுகளுக்கு முன்பு கலைச்செல்வன், காஞ்சனாவை விவாகரத்து செய்துவிட்டார். பின்னர் குழந்தைகளுடன், காஞ்சனா தனி வீட்டில் வசித்து வந்தார்.

இதன் பின்னர் சேர்மராஜ் அடிக்கடி காஞ்சனா வீட்டுக்கு வந்து போனார். இது அவரது குழந்தைகளுக்கு பிடிக்கவில்லை. எனவே சேர்மராஜை விட்டு பிரிய காஞ்சனா முடிவு செய்தார். ஆனால் நீண்ட நாட்களாக நீடித்த கள்ளத்தொடர்பை விட்டுவிட சேர்மராஜவக்கு மனம் இல்லை.

இதனால் அவர்களுக்குள் தகராறு இருந்துவந்தது. இந்த பிரச்சினைக்கு முடிவுகட்ட நேற்று முன்தினம் இரவு தனது வீட்டுக்கு வரும்படி காஞ்சனா, சேர்மராஜை அழைத்தார். அதன்படி அவரும் சென்றார். அப்போது இருவருக்கும் நீண்டநேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.

தகராறு முற்றியதால் ஆத்திரம் அடைந்த காஞ்சனா அரிவாளால், சேர்மராஜ் கழுத்தின் பின்புறத்தில் வெட்டியதாக கூறப்படுகிறது.

சேர்மராஜ் அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். உடனே காஞ்சனா அங்கிருந்து ஓடிவிட்டார். படுகாயம் அடைந்த சேர்மராஜை, தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் பசுவந்தனை சப்-இன்ஸ்பெக்டர் ஜெயசங்கரி வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) இசக்கி விசாரணை நடத்தினார். இந்த நிலையில் போலீசாரால் தேடப்பட்ட காஞ்சனா சரண் அடைந்தார்.

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், "எனக்கும், சேர்மராஜுக்கும் நேற்று முன்தினம் இரவு வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, எனது கணவரை பிரிய நீதான் காரணம் என்றும், கள்ளக்காதலனை நம்பி கணவரை கைவிட்டு வாழ்க்கையை தொலைத்துவிட்டேன் என்றும் சேர்மராஜிடம் கூறினேன்.

இனிமேல் என்னை சந்திக்க வர வேண்டாம் என்றும் அவரிடம் தெரிவித்த போது, அவர் அலட்சியப்படுத்தினார். இதனால் ஆத்திரத்தில் அரிவாளால் வெட்டினேன்" என்று காஞ்சனா வாக்குமூலம் அளித்ததாக தெரிகிறது.

================

இரண்டு நிகழ்வுக்குமே கணவனின் ஆண்மையின்மைதான் காரணமாக இருந்திருக்குமோ? நமக்கென்ன தெரியும்? மனோரமா அம்மையார் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்!

2 மறுமொழிகள்:

')) said...

புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...
நீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு தானாகவே இணையும்...
பல தள செய்திகள்...
ஓட்டுப்பட்டை வேண்டாம்...
எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
முழுவதும் தமிழில் படிக்க....

தமிழ்செய்திகளை வாசிக்க

(இது புதுசு) - உங்கள் தளத்தின் டிராபிக்கை அதிகரிக்க 100 சர்ச் என்ஜின் சப்மிட்

(விரைவில்) - இலவசமாய் இந்திய புக்மார்க் தளங்களில் (தமிழ், ஆங்கிலம்) உங்கள் பதிவை சில நொடிகளில் (Auto Submit) புக்மார்க் செய்ய

தமிழ்செய்திகளை இணைக்க

ஆங்கில செய்திகளை வாசிக்க

வலைப்பூ தரவரிசை

சினிமா புக்மார்க்குகள்

சினிமா புகைப்படங்கள்

')) said...

மனதை உருக்கும் சம்பவம் செங்கல் பட்டில்...

1.குப்பைத் தொட்டியில் பச்சிளம் குழந்தை நாய்கள் கடித்து குதறிய கொடுமை

http://www.dinamalar.com/new/district_main.asp?ncat=Kanchipuram#230335