காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், பெற்றோர் உள்பட குடும்பத்தில் 7 பேரைக் கொன்ற இளம் பெண்!

ஆகா, இந்திய இளம் பெண்கள் முழு சுதந்திரம் அடைந்து விட்டனர். அவர்களின் ஆசைகளுக்குக் குறுக்கே யார் வந்தாலும் கொலைதான்! அது கணவனாயிருந்தலும், மாமியார், மாமனாராக இருந்தாலும், பெற்றோராக இருந்தாலும் சரி.

ஏனிந்த நிலை? அவர்களை எதிரிகளாக பாவிக்க வேண்டும் என்னும் மனப்பான்மையை வளர்ப்பவர்கள் யார்? இந்த சமூகத்திலுள்ள "ரவிக்" + "பாப்" தலைப் பெண்ணியத் தலைவிகளா? நம் பண்பாட்டு விழுமியங்களைத் தகர்த்து, அதுதான் பெண் விடுதலை என்னும் தொடர் போதனைகளா?

இத்தகைய பெண்ணியவாதிகளின் பேச்சைக் கேட்டுக்கொண்டு இயற்றப் பட்டுள்ள சட்டங்களின் அடிப்படையில், திருமணமான இளம் பெண்கள் தங்கள் கணவன்மார்களையும் அவர்தம் பெற்றோரையும் உற்றோரையும் தங்கள் வீட்டை விட்டே விரட்டலாம். அவர்கள் மீது மனம் போனபடி பொய் கிரிமினல் வழக்கு தொடுத்து கைது செய்விக்கலாம். ஆனால் என்ன பொய் சொன்னாலும் அந்த இளம் பெண்கள்மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க இயலாது.

அத்தகைய கொடுங்கோன்மைச் சட்டங்களைக் கையிலெடுத்து இந்தியாவில் இதுவரை 1,40,000 வயதான தாய்மார்களும், கண்வன்மார்களின் சகோதரிகளும், சிறு பெண் குழந்தைகளும் கைது செய்து சிறையிலடத்திருக்கிறார்கள்.

இந்த சீரழிவின் அடிப்படைக் காரணி என்ன? இளம் பெண்கள் மனத்தில் விஷ வித்தை விதைத்து, "உங்கள் இஷ்டம் போல் இருங்கள், சிலவு செய்யுங்கள். யாரோடு வெண்டுமானாலும் குலாவிக்கொண்டு உல்லாசமாக இருங்கள். எவர் குறுக்கே வந்தாலும் புறந்தள்ளுங்கள். ஏனெனில் பெண்கள் தன்னிச்சைப்படி வாழ்வதை இந்தப் பழமைவாதிகள் 'பண்பாடு, கலாச்சாரம், கற்பு' என்னும் பத்தாம் பசலிக் கோட்பாடுகளைக் கொண்டு அடக்கி வந்திருக்கிறார்கள். இனிமேல் அதற்கு இடம் கொடுக்க்காதீர்கள்" என்ற மனப்பான்மையை திட்டம் போட்டு வளர்த்து வருகின்றனர் பல பெண்ணியவாதிகளும், சமூகத்தில் பெரிய மனிதர்களாக உலாவி வரும் வயடானவர்களும். இத்தகைய தவறான போக்குக்கு அரசு இயந்திரமும், சட்டங்களும், தீதிமன்றங்களும், ஊடகங்களும் துணை போகின்றன என்பதுதான் விசனப்பட வேண்டிய விஷயம்.

இதன்கீழ் வரும் செய்தியைப் படித்துவிட்டு அதற்கு மனோரமா அம்மையார் என்ன பதில் வைத்திருக்கிறார் என்ற கேள்வியைக் கேளுங்கள். அதே நேரத்தில் "குடும்ப வன்முறை என்பது பெண்கள் செய்யவே மாட்டார்கள். ஆண்தான் செய்வான்" [*] என்று சட்டம் இயற்றியிருக்கும் செயலைக் கண்டித்து ஓரிரு வார்த்தைகள் பேசுங்கள்.

---------------------
[*] The Protection Of Women From Domestic Violence Act, 2005, Section 3

2. Definitions.-In this Act, unless the context otherwise requires,-
(a) "aggrieved person" means any woman who is, or has been, in a domestic relationship with the respondent and who alleges to have been subjected to any act of domestic violence by the respondent;


(q) "respondent" means any adult male person who is, or has been, in a domestic relationship with the aggrieved person and against whom the aggrieved person has sought any relief under this Act:Provided that an aggrieved wife or female living in a relationship in the nature of a marriage may also file a complaint against a relative of the husband or the male partner;
-----------------------------------------
நம் சமுதாயம் ஒரு எரிமலை வாயின்மேல் அமர்ந்திருக்கிறது என்பது மட்டும் நிச்சயம்.

இப்போது செய்தி:

ரோதக் (ஹரியாணா), செப்.21, 2009. செய்தி - தினத்தந்தி.

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், பெற்றோர் உள்பட குடும்பத்தில் 7 பேரை விஷம் கொடுத்தும், கழுத்தை நெரித்தும் கொன்றதாக 19 வயது இளம் பெண்ணையும் அவரது காதலனையும் போலீசார் கைது செய்தனர்.

அரியானாவில் நடந்த இந்த கொடூர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

அரியானா மாநிலம் ரோதக் மாவட்டத்தில் உள்ள கபூல்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேந்தர். இவரது மகள் சோனம் (வயது 19). இவரும் அதே ஊரைச் சேர்ந்த நவீன் என்ற வாலிபரும் ஒரே கல்லூரியில் படித்து வந்தனர். அவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர்.
அவர்களுடைய காதலுக்கு, சோனத்தின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சாப்பாட்டில் விஷம்

ஆனால் காதல், சோனத்தின் கண்களை மறைத்தது. குடும்பத்தில் உள்ளவர்களை தீர்த்துக் கட்டினால்தான் தனது காதல் நிறைவேறும் என்று கருதிய அவர், அதற்கான காரியத்தில் துணிச்சலுடன் இறங்கினார். விஷம் கொடுத்து எல்லோரையும் கொல்ல தீர்மானித்த சோனம், தனது காதலன் நவீனிடம் சொல்லி விஷத்தை வாங்கி வரச் செய்தார். பின்னர் அந்த விஷத்தை இரவில் யாருக்கும் தெரியாமல் சாப்பாட்டில் கலந்தார்.
அதை சாப்பிட்ட சோனத்தின் தந்தை சுரேந்தர், தாயார் புரோமில்லா, பாட்டி போரி, சகோதரர் அர்விந்த் மற்றும் விஷால், சோனிகா, மோனிகா என்ற 3 குழந்தைகள் ஆகிய 7 பேர் சிறிது நேரத்தில் படுக்கையில் மயங்கி விழுந்தனர்.

பரிதாப சாவு

உடனே சோனம் தனது காதலன் நவீனை வீட்டுக்கு வரவழைத்தார். மயக்கத்தில் கிடப்பவர்கள் பிழைத்துக் கொண்டால் என்ன செய்வது என்ற பயந்த இருவரும், அவர்களுடைய கழுத்தை நெரித்தனர். இதனால் 7 பேரும் பரிதாபமாக உயிர் இழந்தனர்.

ஒரே வீட்டில் 7 பேர் இறந்து கிடப்பது பற்றிய தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது, சோனம் வீட்டின் குளியல் அறையில் லேசாக மயங்கிய நிலையில் கிடந்தார்.

பின்னர் நடந்த பிரேத பரிசோதனையில், 7 பேரும் விஷம் கொடுத்தும் கழுத்தை நெரித்தும் கொல்லப்பட்டு இருப்பதாக தெரிய வந்தது.

இதனால், மயங்கிய நிலையில் கிடந்த சோனத்தின் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் போலீசார் துருவித் துருவி விசாரணை நடத்திய போது, 7 பேரும் விஷம் கொடுத்தும் கழுத்தை நெரித்தும் கொல்லப்பட்டது தெரிய வந்தது. மேலும், தான் சிக்கி விடக்கூடாது என்பதற்காக சோனம் மயக்க மாத்திரைகளை சாப்பிட்டு, தானும் பாதிக்கப்பட்டவர் போல் மயங்கி கிடந்ததும் தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து சோனத்தையும் அவரது காதலன் நவீனையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவத்தில் விஷம் கலந்த உணவை சாப்பிட்டவர்களில் சோனத்தின் தாத்தா தக்தீர் சிங்கும் ஒருவர். அவர் வீட்டுக்கு வெளியே தனியாக ஓர் இடத்தில் படுத்து இருந்ததால் அவரது கழுத்து நெரிக்கப்படவில்லை. இதனால் தக்தீர் சிங் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

மேற்கண்ட தகவல்களை மாவட்ட மூத்த போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார் ராவ் தெரிவித்தார்.

காதலனுடன் சேர்ந்து இளம்பெண் ஒருவர் ஈவு இரக்கம் இன்றி தனது குடும்பத்தையே தீர்த்துக் கட்டிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

3 மறுமொழிகள்:

')) said...

ஹூம்!
:-((

')) said...

ஐயோ என்ன இது.. என்ன காதலோ...

Anonymous said...

கவர்ச்சியினால் தூண்டப்படும் காமம் தான் காதலாக மாறுகிறது

சரியான தலைப்பு

காமத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், பெற்றோர் உள்பட குடும்பத்தில் 7 பேரைக் கொன்ற இளம் பெண்