வீட்டுக்கு வீடு 498A வழக்கு

இப்போதிருக்கும் நிலவரத்தைப் பார்க்கும்போது கூடிய சீக்கிறமே நம் நாட்டில் வீட்டிற்கு ஒரு 498A வழக்கு போடப்பட்டிருக்கும் நிலைமை ஏற்படும் என்று தோன்றுகிறது.

"எங்கள் வீட்டில் எல்லாமே பெண்கள்தானே! எங்கள் மேல் எப்படி அந்த வழக்கு போடமுடியும்?" என்று கேட்கிறீர்களா? கொஞ்சம் பொறுங்கள். கீழ்க்கண்ட கேள்விகளில் ஏதேனும் ஒன்றிற்கு உங்கள் பதில் "ஆமாம்" என்றிருந்தால் நிச்சயம் நீங்கள் 498A கேசுகளிலிருந்து தப்ப முடியாது:

  • உங்கள் நண்பர், உறவினர் யார் வீட்டிலாவது ஆண் பிள்ளைகள் இருக்கிறார்களா?
  • உங்கள் நெருங்கிய நண்பர் அல்லது உறவினர் எவரேனும் திருமணம் செய்து கொண்டுள்ளார்களா? அவரோடு நெருங்கிப் பழகி அவருடைய வீட்டிற்குச் சென்று வருவதுண்டா?
  • அக்கம் பக்கத்தில் எவர் வீட்டிலாவது குடும்பப் பூசல் ஏற்பட்டு அங்கு சென்று நீங்கள் எப்போதாவது அறிவுரையோ உதவியோ கொடுத்ததுண்டா?
  • எந்த மணமான பெண்ணிடமாவது ஏதாவது ஒரு காரணத்தினல் தகராறு ஏற்பட்டதுண்டா?
  • உங்கள் கீழ் பணிபுரியும் பெண் எவரிடமாவது கடுமையாக நடந்து கொண்டதுண்டா? அல்லது அவர்கள் எதிர்பார்த்தபடி நடந்து கொள்ளத் தவறியதுண்டா?

சரி, அவர்கள் கொடுக்கும் புகார் எப்படியிருக்கும்?

பதில்: எப்படி வேண்டுமானாலும் இருக்கும். அது அவர்களுடைய வக்கீலின் கற்பனைத் திறமை, இதுபோன்ற பொய் வழக்கு போட ஏதுவான சட்டங்களைப் பற்றிய அவருடைய அறிவு, புகாரில் கையெழுத்து போடும் புதுமைப் பெண்ணின் கீழ்த்தர மனப்பான்மையின் பாதாள நிலை இதைப் பொருத்து மாறும்.

மாதிரிக்கு இன்றைய தினத்தந்தியில் வெளிவந்துள்ள செய்தியை படியுங்கள்:-

பரமக்குடி,செப்.9-

மனைவியிடம் கூடுதல் வரதட்சணை கேட்ட வெளிநாட்டு என்ஜினீயர் மீது பரமக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

என்ஜினீயர்

பரமக்குடி பவுண்டு தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மகன் ஜெயஆனந்த்(வயது 33). இவர் நெதர்லாந்தில் என்ஜினீயராக உள்ளார். இவருக்கும் திருச்சி உறையூரைச் சேர்ந்த மோகன்தாஸ் என்பவரது மகள் சங்கீதவாணிக்கும்(26) கடந்த 6.7.2006ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது பெண் வீட்டார் சார்பில் 60 பவுன் தங்க நகை மற்றும் சீர்வரிசைகள் கொடுத்துள்ளனர்.

இதற்கிடையே வாலிபர் ஜெயஆனந்த் தனக்கு தகுதி யில்லாத பெண்ணை திருமணம் செய்து வைத்து விட்டார்கள் என்று கூறி மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்தாராம். இதனைத் தொடர்ந்து திருமணம் முடிந்த ஒரு மாதத்தில் தம்பதிகள் நெதர்லாந்து சென்று விட்டனர். பின்னர் அங்கிருந்து சங்கீதவாணி பிரசவத்திற்காக தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். (இந்தக் கூற்றுகளில் தெரிகின்ற முரண்பாடுகளைக் கவனியுங்கள்)

வழக்கு

இந்த நிலையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் அதனை கணவன் உள்பட அவரது வீட்டார் யாரும் பார்க்க வரவில்லையாம். மேலும் சங்கீதவாணி யின் நடத்தை குறித்து தவறாக பேசியதுடன் கூடுதலாக பணம் மற்றும் நகை கேட்டுள்ளனர். இதனால் மனமுடைந்த சங்கீதவாணி இதுகுறித்து பரமக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் புகார் செய்தார்.

இதைத்தொடர்ந்து மனுவை விசாரித்த நீதிபதி புகார் குறித்து நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் வெளிநாட்டு என்ஜினீயர் ஜெய ஆனந்த், இவரது தந்தை பாலசுப்பிரமணியன் ஆகியோர் மீது பரமக்குடி அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலர் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 மறுமொழிகள்:

')) said...

இதொ இன்னொரு செய்தி...

இந்த வாரம் வரதட்சணை செய்திகள் வாரம்...

http://www.dinamalar.com/new/court_detail.asp?news_id=3960

//இது வரதட்சணை கேஸா.. தவறான கர்பம் கேஸா..!

7வருடங்கள் கொஞ்சம் ஓவர் தான்.//

இதுபோல் பல ஒவர் கள் சத்தமில்லாமல் நடந்து கொண்டிருக்கின்றது...

குறிபிட்டுள்ள செய்தில் எந்தளவிற்கு உண்மை என்பதை அந்த நிகழ்வு நடந்தவர்களுக்கு மட்டுமே வெளிச்சம்...

மற்றும் தற்பொழுது சர்வசாதரணமாக வரதட்சணை கொடுமை சட்டம் பயன்படுத்தப்படுகின்றது...
இந்த சட்டத்தால் இது வரைக்கும் நாட்டில் சுமார் 1,30,000 ஆயிரம் பெண்கள் மட்டும் (மாமியார் நாத்தனார்கள் மற்றும் உறவினர்கள்) விசாரணை கைதிகளாக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளர்... (எனது தாயர் மற்றும் தம்பி நண்பருடைய தாயர் உட்பட).. ஒரு பெண் (கொஞ்சம் வசதி படைத்தவர் ஆள் பலம் மிக்கவர் என்றார் இவர்கள் போடும் ஆட்டம் கேட்கவே வேண்டாம்) ஒரு புகாரில் எத்தனை பெயரை வேண்டுமானலூம் மற்றும் என்ன வேண்டுமானலூம் எழுதிக்கொடுக்கலம்... அதில் உள்ள அத்தனை பெயரையும் எந்த ஒரு விசாரணையின்று கைது செய்து சிறையில் அடைக்கலாம் (மும்பையில் நடந்த உலக சாதனையா இதுபோல் வழக்கில் 2மாத பச்சிளம் குழந்தைக்கு முன் ஜாமின் வழங்கியது தாங்கள் அறிந்திருப்பிர்கள் என்று நினைக்கின்றேன்). மற்றும் இது போல் வழக்குகளினால் ஆண்டொன்றுக்கு சுமார் 20.000 ஆயிரம் குழந்தைகள் தந்தையில்லாமல் வளர்கின்றது (எனது குழந்தை உட்பட)

இச்சட்டத்தால் பாதிக்கப்பட்டவன் என்ற முறையில் தங்களுக்கு இத்தகவலை தெருவிக்க விரும்புகின்றேன்

நன்றி,

தமிழ். சரவணன்

')) said...

//"எங்கள் வீட்டில் எல்லாமே பெண்கள்தானே! எங்கள் மேல் எப்படி அந்த வழக்கு போடமுடியும்?" என்று கேட்கிறீர்களா? கொஞ்சம் பொறுங்கள். கீழ்க்கண்ட கேள்விகளில் ஏதேனும் ஒன்றிற்கு உங்கள் பதில் "ஆமாம்" என்றிருந்தால் நிச்சயம் நீங்கள் 498A கேசுகளிலிருந்து தப்ப முடியாது://

ஆம் இது நூறு சதவிதம் உண்மை... என் திருமணத்திற்ககு வந்த பாவத்திற்காக எனது தம்பி நண்பருடைய தாயாரும் (இவரும் வரதட்சணை கேட்டு கொடுமை செய்யததற்கு உடந்தையாக இருந்தாராம்) விசாரணை என்று கூட்டி சென்று கைது செய்து சிறையில் அடைத்து கடமையை செய்தனர் தாம்பரம் மகளிர் காவல் தெய்வங்கள்.. இவர்களுக்கேன்று கைது செய்யும் தினம் இருக்கின்றது... புகார் கொடுத்தவுடன் கைது செய்யமாட்டார்கள் வியாழன் மாலை அல்லது வெள்ளிக்கிழமைகளிள்தான் இவர்கள் புலன் விசாரணையை தொடங்குவார்கள்... காரணம் என்னவென்றால் வெள்ளிக்கிழமைகளில் கைதிசெய்தால் தான் சனி ஞாயிறு நீதிமன்றங்கள் விடுமுறை. நாய்போல் அழைந்து ஜாமின் எடுக்கும் படலத்தை திங்கள் அன்று தான் தொடங்க முடியும்...

அரிப்பெடுத்து சொரிந்து விட்டவுடன்... இதெ காவல் தெய்வங்கள் அந்த கேடு கெட்ட கெடுமதிபெண்களுடன் சேர்ந்து வாழ் என்று மிரட்டல்கள் வேறு... அப்பாவி, இளிச்சவாயன் என்றால் இவர்கள் செய்யும் காமேடிகளுக்கும் நாடகங்களுக்கு அளவேயிறுக்காது...