Showing posts with label பொய் வழக்கு. Show all posts
Showing posts with label பொய் வழக்கு. Show all posts

எல்லா திருமணங்களையும் இனி பதிவு செய்ய வேண்டும் - அரசு உத்தரவு

இன்றைய முக்கிய செய்தி:-

"அனைத்து திருமணங்களும் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும். உரிய நாளுக்குள் பதிவு செய்யாவிட்டால் அல்லது தவறான தகவல் அளித்தால் குற்ற வழக்கு தொடரப்படும்” என்று பதிவுத் துறை தலைவர் தெரிவித்துள்ளார். கடந்த நவம்பர் 24ம் தேதி முதல் இது அமலுக்கு வந்துள்ளது.


திருமணப் பதிவு விண்ணப்பத்தின் முக்கிய பகுதி வரதட்சணை பற்றியது. அந்தப் படிவத்தில் கணவன், மனைவி இருவரும் ”வரதட்சணை கேட்கவோ, கொடுக்கவோ, பெறவோ” இல்லை என்று வாக்குமூலமளித்து சாட்சியங்கள் முன் கையொப்பமிடவேண்டும். அதன் பிறகே திருமணம் பதிவு செய்யப்படும்.

9. We hereby declare:-
...
(v) no dowry was demanded, given and taken.


இதனால் கணவன்மார்களுக்கு ஒரு நன்மை, இனிமேல் கெடுமதிப் பெண்கள் திடீரென்று நினைத்துக்கொண்டு தற்போது பொய் 498A புகார்களில் சொல்வதுபோல், “திருமணத்தன்று ஒரு கோடி ரூபாய் வரதட்சணை கொடுத்தேன்” என்று அண்டப்புளுகு புளுக முடியாது. ஆனால், இதையும் தாண்டி இந்த சட்டத்தில் இண்டு இடுக்கு கண்டுபிடித்து, வேறு வித பொய்ப் புகார்கள் கொடுப்பதற்கு வழிவகைகள் தேடி வன்கொடுமை செய்யலாம், அதற்கென்றெ இருக்கும் ஸ்பெஷலிஸ்ட் வக்கீல்கள் இதற்குத் துணை போகலாம். பொய் சொல்பவர்களையும், சோரம் போகிறவர்களையும் சட்டம் போட்டு முழுவதும் தடுக்க இயலாது.

ஆனால் இந்த அரசாணை ஒரு “ஸ்பீட் பிரேக்கர்”. அவ்வளவுதான்!

இனி இந்த செய்தியின் மேல்விவரம்:-

தமிழக அரசின் பதிவுத் துறை தலைவர் சிவக்குமார் வெளியிட்டுள்ள உத்தரவு:தமிழக அரசு இந்த ஆண்டு இயற்றிய திருமணங்கள் பதிவுச் சட்டப்படி, பல மதங்களைச் சேர்ந்த இந்திய குடிமக்கள், நவம்பர் 24ம் தேதி முதல், தமிழகத்தில் நடக்கும் அனைத்து திருமணங்களையும் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். பல்வேறு மதச் சட்டங்களின் கீழ் திருமணம் பதிவு செய்திருந்தாலும், இந்தச் சட்டத்தின் மூன்றாவது பிரிவின் கீழும் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.இந்த சட்டப்படி, பதிவுத் துறைத் தலைவர், தலைமை திருமணப் பதிவாளராகவும், மாவட்ட பதிவாளர்கள் அனைவரும் மாவட்ட திருமணப் பதிவாளர்களாகவும், சார்பதிவாளர்கள் அனைவரும் திருமணப் பதிவாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.திருமணப் பதிவுக்கான விண்ணப்பங்கள் இலவசமாக, அனைத்து பதிவு அலுவலகங்களிலும் வழங்கப்படும்.

கட்டாய திருமணப் பதிவுக்கான விவரங்கள் மற்றும் படிவங்கள், துறையின் இணையதளத்தில் (www.tnreginet.net) வெளியிடப்பட்டுள்ளன. இதிலிருந்து விவரங்களை அறிந்து, படிவங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.திருமணப் பதிவுக்கான படிவம் மற்றும் விண்ணப்பத்தில் எவ்வித அடித்தலோ அல்லது பிழைகளோ இன்றி பூர்த்தி செய்து, மணமக்கள், திருமணம் நடத்தி வைத்தவர் மற்றும் இரு சாட்சிகளின் கையெழுத்துடன், திருமணம் நடந்ததற்கான ஆதாரம், இருப்பிட மற்றும் வயது தொடர்பான ஆதார ஆவணங்களுடன், திருமணம் நடந்த 90 நாட்களுக்குள் 100 ரூபாய் கட்டணத்துடன் (90 நாட்களுக்கு மேலானால், 150 ரூபாய் கட்டணம்) திருமணம் நடந்த எல்லைக்கு உட்பட்ட சார்பதிவாளரிடம் அளிக்க வேண்டும். அல்லது அஞ்சல் வழி அனுப்ப வேண்டும்.

திருமணத்துக்கான சாட்சிகளின் முகவரி மற்றும் ஆள் அறிவதற்கான அடையாள சான்று நகல்கள் இணைக்க வேண்டும். விண்ணப்பமும், ஆதாரங்களும் முறையாக இருந்தால், சம்பந்தப்பட்ட திருமணப் பதிவாளர், மனுதாரருக்கு ஒப்புதல் அளிப்பார். உரிய வகையில் இல்லாத மனுக்கள், குறைகளை சரிசெய்து திரும்ப அளிக்குமாறு மனுதாரரிடம் திரும்ப அளிக்கப்படும்.மணமக்கள் அல்லது சாட்சிகளின் அடையாளங்கள் குறித்தும், அவர்கள் அளித்த தகவல்களின் உண்மைத்தன்மை குறித்தும் சந்தேகம் ஏற்பட்டால், மணமக்களுக்கு வாய்ப்பளித்து, விசாரணைக்குப் பின், திருமணப் பதிவாளர் திருப்தி அடையாவிட்டால், அத்தகைய திருமணப் பதிவுகள் அவரால் மறுக்கப்படும்.இந்த மறுப்பு உத்தரவு மீது, சம்பந்தப்பட்ட நபர்கள், உத்தரவு பெற்ற 30 நாட்களுக்குள் மாவட்ட பதிவாளரிடம் மேல்முறையீடு செய்யலாம்.

அந்த மேல்முறையீடு மீது மாவட்ட பதிவாளர் பிறப்பிக்கும் உத்தரவு திருப்தி இல்லையெனில், 30 நாட்களுக்குள் பதிவுத் துறைத் தலைவருக்கு மேல்முறையீடு செய்யலாம். பதிவுத் துறை தலைவரின் உத்தரவே இறுதியானது.திருமணங்கள் பதிவுச் சட்டம் அமலுக்கு வந்துள்ள நவம்பர் 24ம் தேதி முதல் நடக்கும் அனைத்து திருமணங்களும், எந்த ஜாதி மற்றும் மதமாயிருப்பினும், உரிய நாளில் பதிவு செய்யாவிட்டாலோ, தவறான தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிந்தாலோ, விதி மீறல் இருந்தாலோ, சம்பந்தப்பட்ட நபர் மீது குற்ற வழக்கு தொடரப்பட்டு, நிரூபிக்கப்பட்டால், அபராதம் விதிக்கப்படும்.இவ்வாறு பதிவுத் துறை தலைவர் தெரிவித்துள்ளார்.

பணம் கேட்டு மாமனாரை மிரட்டிய மருமகளுக்கு வலைவீச்சு

பெண்ணியவாதிகள் “போராடிப்” பெற்ற பொய்வழக்கு சட்டங்கள் எதற்குப் பயன்படுகின்றன பாருங்கள்?

வரதட்சணை முறை ஒழிய வேண்டுமானால், வரதட்சணை கேட்போரையும் கொடுப்போரையும் ஒருங்கே கைது செய்து சிறையிலடைக்க வேண்டும். குற்றம் நடந்த உடனேயே இரண்டு பேரையும் கைது செய்து வழக்கு நடத்தி தூக்கில் போடவேண்டும். இப்பொது உள்ளதுபோல் சாவகாசமாக ”ஒரு கல்ப கோடி காலம் முன் என்னிடம் வரதட்சணை கேட்டர்கள். நானும் கொடுத்தேன்” என்று புகார் கொடுப்போரை உடனே கைது செய்யவேண்டும்!

தற்போது உள்ள 498A சட்டம், திருமணம் நடந்து பல ஆண்டுகள் கழித்து கள்ளக்காதல், மிரட்டிப் பணம் பறித்தல், தனிக்குடித்தனம் போன்ற காரணங்களுக்காக பொய் வழக்கு போட்டுப் பணிய வைக்கத்தான் இந்தச் சட்டம் பயனபடுகிறது. பெண்கள் துயர் துடைக்கவோ, வரதட்சணை முறையை ஒழிக்கவோ இச்சட்டங்கள் பயன்படுவதில்லை.

இனி செய்தி:

மாலைமுரசு - மதுரை. நவ. 28, 2009

மதுரையில் ரூ. 5 லட்சம் கேட்டு மாமனாரை மிரட்டிய மருமகளை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை எச்.எம்.எஸ் கலனியை சேர்ந்தவர் எஸ்.ஏ.ராஜன் (62). இவரது மகன் சீனிவாசன். இவருக்கும் சீதா பிரியதர்ஷினி என்பவருக்கும் கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணமான சில மாதங்களிலேயே சீதாபிரியதர்ஷினிக்கு ஏற்கனவே 2003-ம் ஆண்டு திருமணமாகி இருப்பது தெரியவந்தது.

இதனால் இவருக்கும் சீனிவாசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதுதொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டும், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் இருக்கிறது.

இந்நிலையில் எச்.எம்.எச் காலனி வீட்டில் சீனிவாசனின் தந்தை ராஜன் இருந்தார். அப்போது சீதாபிரியதர்ஷனி மற்றும் சில பெண்கள் நுழைந்தனர்.

வீட்டில் நுழைந்த சீதாபிரியதர்ஷினி ராஜனிடம் ரூ. 5 லட்சம் கேட்டு மிரட்டினார். கொடுக்காவிட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

இது குறித்து எஸ்.எஸ்.காலனி போலீசில் ராஜன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சீதாபிரியதர்ஷினியை வலைவீசி தேடி வருகின்றனர்.

கணவன்கள் ஏ.டி.எம்., மிஷின்களா? மனைவிகளுக்கு எதிராக போர்க்கொடி!

நவம்பர் 27,2009. செய்தி - தினமலர் (http://www.dinamalar.com/General_detail.asp?news_id=19275)

புதுடில்லி:"கணவன் என்பவன் மனைவிக்கு எப்போதும் பணம் கறக்கும் ஏ.டி.எம்., மிஷினா?' என்று ஆண்கள் உரிமை சங்கத்தினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.கடந்த 19ம் தேதி உலக ஆண்கள் தினமாக அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் பலர் டில்லியில் "இந்தியன் பேமிலி பவுன்டேஷன் (ஐ.எப்.எப்.,)' சார்பில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த பேரணியில் கலந்து கொண்டனர்.

பெண்களுக்கு அதிகாரம் கொடுத்து ஆண்களை அதிகாரமற்றவர்களாக மாற்றி விட்டனர்; ஆண்கள் ஏ.டி.எம்., மிஷின்கள் அல்ல' என இந்த பேரணியில் கலந்து கொண்டவர்கள் கோஷம் எழுப்பினர்.டில்லியில் ஆசாத் மைதானத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஐ.எப்.எப்., நிறுவனர் பந்தி ஜெயின் குறிப் பிடுகையில், "கணவர் மீது பெண்கள் புகார் கொடுத்தால் 498ஏ பிரிவின் கீழ் ஆண்கள் தண்டிக்கப்படுகின்றனர். எந்த விசாரணையும் ஆண்களிடம் நடத்தப்படுவதில்லை. இந்த சட்டம் பெண்களுக்கு ஆதரவானது என்பதை விட மனைவிகளுக்கான சட்டம் என்று தான் சொல்ல வேண்டும்.

ஏனென்றால், மனைவிகள் புகார் கொடுத்ததும் கணவர் மட்டுமல்லாது, கணவரது தாய், சகோதரிகளும் கைது செய்யப்படுகின்றனர். 498ஏ பிரிவின் கீழ் பதிவு செய்யப்படும் பெரும்பாலான புகார்கள் அடிப்படையில்லாதவை. நானும் எனது மனைவியால் பாதிக்கப்பட்டவன் தான். கணிசமான தொகையை ஜீவனாம்சமாக கொடுத்து வருகிறேன்' என்றார்.

பேரணியில் கலந்து கொண்ட ராகேஷ் ஜெய்ஸ்வால் குறிப்பிடுகையில், "என் மனைவி என்னை விட்டு பிரிந்து சென்று இரண்டு ஆண்டுகள் ஆகிறது. தற்போது, ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்திருக் கிறார். ஓராண்டில் இரண்டரை லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் அவர் ஜீவனாம்சம் கேட்டு விண்ணப்பித்திருப்பது நியாயமில்லாதது' என்றார்.

கமல் கபாடியா(59) என்பவர் குறிப்பிடுகையில், "என் மருமகள் என் மகன் மீதும் மனைவி மற்றும் என் மீதும் 23 குற்றச்சாட்டுகளை சுமத்தி புகார் கொடுத்துள்ளார். இதில் ஒன்று கூட உண்மையில்லை. ஆனால், போலீசார் 498ஏ பிரிவை பயன்படுத்தி எங்களை தொல்லை செய்கின்றனர்' என்றார்.

பணம் இல்லாமல் நடுத்தெருவில் நிற்கிறேன்: மனைவியிடம் ரூ.25 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் கணவர்

சென்னை, நவ. 22 - 2009. செய்தி: மாலைமலர்

திருச்சியை சேர்ந்தவர் கலைசெல்வன் குவைத்தில் என்ஜினீயர் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி மலர்விழி. இவர்களுக்கு 1997-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2002-ல் கோர்ட்டில் விவாக ரத்துக்கு மனு செய்தனர். கடந்த ஆண்டு கோர்ட்டு உத்தரவுபடி குழந்தை கலைச் செல்வன் வசம் வந்தது.

விவாகரத்து வழக்கு தொடர்பாக 20-க்கும் மேற்பட்ட முறை குவைத்தில் இருந்து தமிழகம் வந்து சென்றார். இதற்கு ஏராளமான பணம் செலவானது. இடைப்பட்ட காலத்தில் அவரது வேலையும் பறிபோனது.

வருமானத்திற்கு வழியின்றி சேமிப்பு பணத்தை செலவிட்டார். இதற்கிடையே மலர்விழி கொடுத்த வர தட்சணை கொடுமை வழக்கிலும் கலைசெல்வன் சிக்கினார். இதில் 3 மாதம் வரை ஜெயிலில் இருந்தார். ஒருவழியாக வெளியே வந்த அவர் மனைவி கொடுத்த புகாரில் இருந்து வெளியே வந்தார்.

ஒரு பக்கம் குழந்தையின் செலவு, தனது வழக்கு செலவு என்று கலைசெல்வன் சாப்பாட்டுக்கே திண்டாடும் நிலைக்கு செல்லப்பட்டார். தனது கஷ்ட நிலைமைக்கு காரணமான முன்னாள் மனைவி மலர்விழியின் நிலைமையோ தலைகீழ் என் கிறார் கலைசெல்வன்.

மேலும் கூறியதாவது:-

நான் திருமணம் செய்து கொண்டபோது மலர்விழி வேலை இல்லாமல் இருந்தார். நான் உழைத்து சம்பாதித்து அனுப்பிய பணத்தில், வேலைக்கு செல்ல முன்னேற்பாடுகள் செய்தாள். ஏராளமான பணத்தையும் வைத்து கொண்டார். தற்போது கல்லூரி ஒன்றில் பேராசிரியராக நல்ல சம்பளத்தில் உள்ளார். நானோ குழந்தையுடன் நடுத் தெருவில் நிற்கிறேன்.

எனவே மலர்விழியிடம் இருந்து மொத்தமாக ரூ.25 லட்சம் அல்லது மாதம் ரூ.3 ஆயிரம் வீதம் ஜீவனாம்சம் பெற்று தரவேண்டும் என கேட்டு குடும்ப நல கோர்ட்டில் மனு செய்துள்ளேன். அது வருகிற டிசம்பர் 15-ந்தேதி விசாரணைக்கு வருகிறது என்றார்.

கட்டியவனை கட்டம் கட்டிடுவாய்ங்கப்பா உஷார்!

திருமணமானவுடனேயே நம் அபலைப் பெண்கள் மனத்தில் தோன்றும் கேள்விகளைப் பாருங்கள்!


(நன்றி: ஆனந்த விகடன்)


"சமீபத்தில்தான்" திருமணம் ஆகியது. உடனேயே, கணவன் மண்டையைப் போட்டவுடன் அவனுடைய இன்ஷ்யூரன்ஸ், பேங்க் சேமிப்பு இவற்றை, விள்ளாமல் விரியாமல் தான் கல்லா கட்டுவதில் ஏதேனும் சிக்கல் இருக்குமா என்று ஆலோசனை கேட்டு தெளிவுபடுத்திக் கொள்கிறார் இந்த பெண்குல விளக்கு. குடும்ப வாழ்க்கை எப்படி நன்றாக நடத்துவது போன்ற ஆலோசனைகள் எல்லாம் அனாவசியம், இதுதானப்பா தலையாய விஷயம்! அப்படி அந்த சோப்பிளாங்கி சாகாமல் அழும்பு பண்ணினால் இருக்கவே இருக்கிறது 498A, D.v.Act போன்ற ஆயுதங்கள். போட்டுத் தள்ளிட மாட்டோமா!

தேவைதான்!

சுயம்வரம், மேட்ரிமனி என்று காசு பார்க்கும் திருமண வியாபாரக் கடைக்காரர்களே இது போன்ற ஆலோசனைகளை இனிமேல் வழங்கி ஒரு பாவமும் அறியாத அபலைப் பெண்களுக்கு சேவை செய்யத் தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கலாம்!

பொய்ப் புகார் கொடுத்து ஆட்டிப் படைக்கும் பெண்கள் : விடுபட தேசிய ஆண்கள் ஆணையம் தேவை

சென்னை : தினமலர் - நவம்பர் 20,2009

"புகார் மேல் புகார் கொடுத்து இஷ்டம் போல் ஆட்டிப் படைக்கும் பெண்களிடமிருந்து விடுபட, தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்க வேண்டும்' என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு ஆண் கள் பாதுகாப்பு சங்கம், சென்னையில் ஆர்ப்பாட் டம் நடத்தியது. நாடு முழுவதும் ஆண்கள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் தங்களின் கோரிக் கைகளை வலியுறுத்தி, சென்னை மெமோரியல் ஹால் முன் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

சங்கத்தின் மாநில தலைவர் அருள் துமிலன் தலைமை வகித்தார். "பெண்கள் கொடுக்கும் போலியான வரதட்சணை புகார்களின் மீது வழக்கு பதிவு செய்யக்கூடாது; வரதட்சணைக் கொடுமையில் சிக்கும் அரசு ஊழியர் களை பணி நீக்கம் செய்யக் கூடாது; கள்ளக்காதல் கொலைகளைத் தடுக்க இந்திய தண்டனைச் சட்டம் 497ல் திருத்தம் செய்து, ஆண், பெண் இருவருக்கும் தண்டனை வழங்க வேண்டும். புகார் மேல் புகார்களைக் கொடுத்து இஷ்டம் போல் ஆட்டி வைக்கும் பெண்களிடமிருந்து விடுபட, தேசிய ஆண்கள் ஆணையத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும்; இந்திய கலாசாரத் திற்கும், குடும்ப அமைப்புகளுக்கும் எதிராக 2005ல் கொண்டு வரப்பட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்' என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், ஏராளமான ஆண்கள் பங்கேற்றனர்.

சங்கத்தின் தலைவர் அருள் துமிலன் பேசுகையில், "சமூகத்தில் ஆண்களுக்கு பெண்களால் ஏற்படும் கொடுமைகள் அதிகம். ஆண்கள் வெளியில் சொல்வதில்லை. சொன்னாலும் நிவாரணம் கிடைப்பதில்லை. பெண்களால் பாதிக்கப்படும் ஆண்களுக்கு சங்கத் தின் மூலம் சட்ட உதவியும், பாதுகாப்பும் தருகிறோம். ஆண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் சங்கம் தொடர்ந்து ஈடுபடும். தேசிய ஆண்கள் ஆணையம் அமைய வேண்டியதன் அவசியத்தை மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம்' என்றார்.

உலக ஆண்கள் நாள் தர்ணா

இன்று உலக ஆண்கள் தினம் சென்னையில் அகில இந்திய ஆண்கள் நலச் சங்கம் (AIMWA)மற்றும் ஆண்கள் உரிமை பாதுகாப்புச் சங்கம் இவற்றின் ஆதரவில் விமரிசையாக கொண்டாடப்பட்டது. கோரிக்கைகளைக் கொண்ட கையேடுகள் நகரத்தில் பல இடங்களில் வினியோகிக்கப் பட்டன. பின்னர் "மெமோரியல் ஹால்" எதிரில் தர்ணா மற்றும் கோஷமிடுதலும் நடைபெற்றது. அவற்றின் முழு விவரங்கள் படங்களுடன் நாளை வெளிவரும்.

இன்று வினியோகிக்கப்பட்ட கோரிக்கைகள் அடங்கிய கையேட்டை இங்கு காணலாம்:



அகில இந்திய ஆண்கள் நலச் சங்கத்தின் உறுப்பினர்களின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்களை இதன்கீழ் காணலாம். மனைவியின் கொடுமையாலும் வன்முறையாலும் பாதிக்கப்படும் ஆண்களும் அவர்களது பெற்றோர், உடன்பிறந்தோர் மற்றும் உறவினர்களும் இந்த எண்களில் தொடர்பு கொண்டு இலவச உதவி பெறலாம்.

முக்கிய அறிவிப்பு:

இவர்கள் அனைவரும் இது போன்ற கொடுங்கோன்மைச் சட்டங்களின் தவறான பயன்பாட்டாலும் பொய் வழக்குகளாலும் கெடுமதி கொண்ட மனைவிகளின் கைகளில் சிக்கி பாதிக்கப்பட்ட தன்னார்வலர்கள். வக்கீல்களல்ல!

பிரபல பெண் சாராய வியாபாரி கைது

இந்தச் செய்தி அப்பட்டமான பொய்! நம்பாதீர்கள்!

பெண்கள் தவறே செய்ய மாட்டார்கள். குற்றம் செய்வது ஆண் மட்டும் தான்!
பெண்கள் அனைவருமே அபலைகள்! அவர்கள் கேட்கும் போது ஆண்கள் பணம் கொடுத்து அழவேண்டும். அதுதான் இந்நாட்டின் சட்டம்!! அதுதான் நீதியின் தீர்ப்பு!!

இப்போது செய்தி:

சென்னை, நவ.19 - 2009. செய்தி: தினத்தந்தி

அண்டாவில் வைத்து நள்ளிரவில் கூவி, கூவி வியாபாரம்

அரசு மதுவில் அதிக போதைக்காக ரசாயன பவுடர் கலந்து விற்பனை

பிரபல பெண் சாராய வியாபாரி கைது

அரசு மதுவில் அதிக போதைக்காக ரசாயன பவுடர் கலந்து விற்பனை செய்த பிரபல பெண் சாராய வியாபாரி கைது செய்யப்பட்டார்.

சாராய வியாபாரி அப்பம்மா

சென்னை வால்டாக்ஸ் ரோடு பகுதியில் உள்ள ஜமரா தோட்டத்தில் வசிப்பவர் அப்பம்மா(வயது 40). பிரபல சாராய வியாபாரியான இவர் 4 முறை ஜெயிலுக்கு போய் இருக்கிறார். இவர் தற்போது அரசு மது பாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்து, நள்ளிரவில் அந்த மது பாட்டில்களை திறந்து அதில் உள்ள மதுவை அண்டாவில் ஊற்றி, பின்னர் அதில் தண்ணீரையும் ஊற்றி, அடுத்து அதில் அதிக போதைக்காக ரசாயன பவுடரையும் கலந்து "குவாட்டர்'' பாட்டில் ரூ.100-க்கு விற்பனை செய்வதாக அப்பம்மா மீது போலீசாருக்கு ரகசிய புகார் தெரிவிக்கப்பட்டது.

அப்பம்மாவை கையும், களவுமாக பிடித்து கைது செய்ய இணை கமிஷனர் சேஷசாயி உத்தரவிட்டார்.துணை கமிஷனர் பெரியய்யா, உதவி கமிஷனர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மேற்பார்வையில் பூக்கடை இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில் இதற்காக தனி போலீஸ் படை அமைக்கப்பட்டது.

கைதானார்

நேற்று முன்தினம் நள்ளிரவில் அப்பம்மா அதிக போதை மதுவை அண்டாவில் வைத்து கூவி, கூவி, விற்கும் போது தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

ருசி கண்ட பூனை திரிக்கும் கயிறு!

பாதிரியார் கற்பழித்ததாக போலீசில் பெண் புகார்
நவம்பர் 18,2009. தினமலர்

திருச்சி : பாதிரியார் தன்னை கற்பழித்ததோடு, கொலை மிரட்டலும் விடுப்பதாக, பாதிக்கப்பட்ட பெண் (!), திருச்சி மகளிர் போலீசில் புகார் அளித்தார்.

திருச்சி கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் போலீசில், பூங்கோதை நேற்று அளித்த புகார் மனு விவரம்:

சிதம்பரத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகளான நான், சில ஆண்டுக்கு முன், சுந்தரவேல் என்பவரை காதலித்து திருமணம் செய்தேன். வரதட்சணை விவகாரம் தொடர்பாக கணவரை பிரிந்து வாழ்ந்தேன்.

திருச்சி செவன்த் டே கிறிஸ்தவ அமைப்பைச் சேர்ந்த பாதிரியார் சுதாகர், நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் உள்ள சிறுவர் விடுதியில், காப்பாளராக எனக்கு வேலை வாங்கிக் கொடுத்தார். இதை பயன்படுத்தி, அடிக்கடி அங்கு வந்த பாதிரியார் சுதாகர், கட்டாயப்படுத்தி என்னை கற்பழித்தார் ("அடிக்கடி" கற்பழிக்கும்போது இவர் என்ன செய்து கொண்டிருந்தார்? அதிருக்கட்டும் இவர் பாஷையில் "கற்பு" என்றால் என்ன அர்த்தம்? பதில்: இப்படித்தான் புகார் எழுதணும். அப்பத்தான் ரேப் செக்ஷன் சேர்க்கலாம்!).

வேறு ஒருவருக்கு என்னை திருமணம் (என்ன ஆச்சு முதல் புருஷன்? விவாகரத்து ஆச்சா இல்லையா?) செய்து வைத்த பாதிரியார், அதன்பிறகும் கட்டாய உறவை தொடர்ந்தார் (அடடா! இந்தப்பெண் பாவைக்குத் தெரியாமலெயே தொடர்ந்தாரா! அதெப்படி "கட்டாய உறவை" தொடர்ந்து செய்ய முடியும்? அதாவது, இவருக்கு அந்தப் பாதிரியாரின் உதவி தேவையாயிருந்த வரையில் அது நல்ல உறவு. வேலை முடிந்தவுடன் கட்டாய உறவு. உடனே போலீஸில் புகார். என்னய்யா "கற்பு" இது! ).

இதன் விளைவால் கர்ப்பம் தரித்த நிலையில், பெண் குழந்தை ஒன்று இறந்து பிறந்தது. இதன் பிறகும், பாதிரியாரின் செக்ஸ் டார்ச்சர் தாங்க முடியவில்லை (எவ்வளவு நாளா நடக்குதாம்?). இதனால், கணவருடன் அங்கிருந்து வெளியேறியதோடு, பாதிரியாரின் செயல் குறித்து ஓசூரில் உள்ள தலைமை அலுவலக நிர்வாகியிடம் புகார் கொடுத்தேன். ஆத்திரமடைந்த பாதிரியார், அடியாட்கள் உதவியுடன் என்னை அடித்து துன்புறுத்தினார். கட்டாயப்படுத்தி கற்பழித்ததோடு, கொலை மிரட்டலும் விடுத்து வரும் பாதிரியார் சுதாகர் மற்றும் அவருக்கு உறுதுணையாக உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகார் மனுவில் கூறியுள்ளார் (ஏன் இப்ப புகார்? உள் கதை என்ன?).

பூங்கோதையின் புகார் குறித்து, திருச்சி மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர்.

ஆண்களுக்கென்று ஒரு நாள்!

அகில உலக ஆண்கள் தினம் (International Men's Day) நாளை (19-11-2009) அன்று கொண்டாடப்படுகிறது. இது 1999-இல் மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள டிரினிடாட் & டொபாகோ நாட்டில் தொடங்கப்பட்டது. ஐ.நா-வால் அங்கீகரிக்கப்பட்ட தினமாகவும் இது விளங்குகிறது.

உலகில் ஆண்களைக் கெளரவப்படுத்தவும் ஆண்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வு கருதியும் இது கொண்டாடப்படுகிறது. மகத்தான தியாகங்கள் பல புரிந்து வரும் ஆண்குலத்தின் பெருமையை சமுதாயம் அங்கீகரிக்க இந்த நாள் ஒரு நினைவு படுத்தும் நாளாகவும் அமைகிறது.

இவ்வாண்டுக்கான உலக ஆண்கள் தினம் (International Men's Day) 2009 நவம்பர் 19-ம் நாள் இந்தியா மற்றும் உலக நாடுகள் அனைத்திலும் அனுசரிக்கிறார்கள். அன்றைய தினம் இந்தியாவில் டில்லி, மும்பை, லக்னௌ, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை போன்ற பல நகரங்களில் தர்ணாவும் ஊர்வலமும் நிகழ்த்தத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

ஆண்களுக்கென்று ஏன் ஒரு தனியான நாள் கொண்டாடப்பட வேண்டும் என்னும் கேள்வி இன்னும் சிலருக்கு எழுகிறது. சிறப்பான செயல்பாடுகள் அனைத்துமே பெண்களை முன்னிறுத்தித்தான் செய்யப்பட வேண்டும் என்னும் மனப்போக்கு மக்கள் மனத்தில் ஆழப் பதிந்து நிற்கிறது. ஆணுக்கும் பிரச்னைகள் உண்டு, அவனுக்கும் தீமைகள் இழைக்கப் படுகின்றன என்பதை அங்கீகரிக்கவே ஒரு போராட்டம் நடத்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது!

சென்னையில் நாளை (19-11-2009) அன்று காலை அகில இந்திய ஆண்கள் நல சங்கம் - "AIMWA" (All India Men's Welfare Association) சில ஆண்கள் கல்லூரிகளுக்குச் சென்று கொள்கை விளக்கக் கையேடுகளை வினியோகம் செய்வர். பிறகு கார், மற்றும் இரு சக்கர ஊர்தியில் ஊர்வலமாகச் சென்று "ஆண்கள் பாதுகாப்பு இயக்கம்" நிகழ்த்தப் போகும் தர்ணாவில் கலந்து கொள்வர்.

இந்த தர்ணா நாளை (19-11-2009) காலை 11-00 மணி முதல் 12-00 மணி வரை சென்னை பார்க் டவுன் "மெமோரியல் ஹால்" எதிரில் நிகழ இருக்கிறது. இந்த இடம் சென்னை பொது மருத்துவ மனைக்கு எதிரிலும், இன்னொரு பக்கம் பார்க் டவுன் அஞ்சல் நிலையத்திற்கு எதிரிலும் உள்ளது.

ஆர்வமுள்ளவர்கள் சென்று பங்கெடுத்துக் கொள்ளலாம்.

நாளை இது பற்றி ஒரு செய்திக் குறிப்பும் வெளியாகும்.

நன்றி.

மன்னிக்க முடியாத குற்றம்!

ஆஞ்சனேயரை வணங்கிவிட்டு தன் அருமை மகனுடன் சிரித்துக்கொண்டு நிற்கும் இந்த அம்மையாருக்கு வயது சுமார் 60 இருக்கும். ஆனால் அவர்கள் முகத்தில் நீங்கள் காணும் மகிழ்ச்சி நெடுநாள் நீடிக்கவில்லை. ஏன்? என்னதான் நடந்தது?

பெங்களூரில் வசிக்கும் இவர் வீட்டுக் கதவு ஒருநாள் நள்ளிரவில் திடீரென்று தட்டப்பட்டது. அதிரடியாக உள்ளே நுழைந்தனர் சென்னையைச் சேர்ந்த சுமார் பதினோரு போலீசார். அவர்கள் இவரது முடியைப் பிடித்து அடித்து குண்டுக் கட்டாக அவர்கள் வந்த வண்டியில் தூக்கிப் போட்டு, பலநூறு கிலோமீட்டர் தூரம் இரவோடு இரவாக பொட்டலம் கட்டி இழுத்து வந்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

ஏன் இந்த அவசரம்? அவர் என்ன உலகம் முழுதும் தேடப்படும் ஒரு பயங்கரவாதியா? எங்காவது குண்டு வைத்தாரா?

ஐயோ, உங்களுக்கு என்ன தெரியும் - அந்த அம்மையார் சாதாரண குற்றத்தையா செய்திருக்கிறார்! கேட்டால் அதிர்ந்துபோய் அந்த நடவடிக்கை சரியானதுதான் என்பதை நீங்கள் உடனே ஒப்புக் கொள்வீர்கள். "எல்லாம் தெரிந்த" பெண்ணியவாத போலி அறிவுஜீவிகள் கூட அது சரிதான் என்பர்!

அந்த வயது முதிர்ந்த அம்மணியை அப்படி அடாவடியாகக் கைது செய்து இழுத்து வந்து சிறையிலடைக்காமல் மட்டும் இருந்திருந்தால் நம் நாட்டின் பாதுகாப்பு என்ன ஆகியிருக்கும், சட்டம், ஒழுங்கு என்ன கதியாகியிருக்கும், நினைத்துப் பாருங்கள்!

அப்படி அந்தப் பெண்மணி செய்ததாகச் சாட்டப் பட்டிருக்கும் குற்றம்தான் என்ன?

நம் நாட்டில் புகுந்து நம் நாட்டு அப்பாவி மக்களை இஷ்டப்படி சுட்டுப் பொசுக்கிவிட்டு, தற்போது நம் வரிப்பணத்தில் (சுட்டி) ஜெயிலில் சுக வாழ்க்கையை அனுபவித்து வரும் அஜ்மல் கசாப் போன்று தீவிரவாதம் ஏதாவது செய்தாரா?

சர்க்காருக்குச் சொந்தமான நூற்றுக் கணக்கான ஏக்கர் நிலத்தை கபளிகரம் செய்து ஏப்பம் விட்டாரா?

இன்னொருவர் நிலத்தை அபகரிக்க அதன் சொந்தக்காரரை மிரட்டினாரா?

2000 கோடி ஹவாலா மோசடி செய்தாரா?

57 கோடி ரூபாய் பி.எஃப் (PF) மோசடி செய்தாரா?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்காரர்கள் குற்றம் சாட்டும் (சுட்டி) 60,000 கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்தாரா?

இதெல்லாம் செய்திருந்தால்தான் பரவாயில்லையே. சாதாரணக் குற்றம்தானே என்று அவரை சும்மா விட்டிருக்கலாமே, அல்லது ஆசுபத்திரியில் படுக்க வைத்து ஃபிலிம் காட்டியிருக்கலாமே!

அவர் இவற்றையெல்லாம் விட மிகக் கொடிய பாதகம் அல்லவா புரிந்திருக்கிறார்!

அவர் செய்துள்ள அக்குற்றத்தின் முழுப் பரிமாணத்தை நீங்கள் அறிய வேண்டுமென்றால் சமீபத்தில் நம் நாட்டின் உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பியுள்ள அதிகாரபூர்வ சுற்றறிக்கையை நீங்கள் அவசியம் வாசிக்க வேண்டும்.

அந்த சுற்றறிக்கை அப்படி என்னதான் சொல்கிறது?

"IPC Sec 498A சட்டம் பரவலாக தவறாக பயன்படுத்தப் படுகிறது. ஆகையால் ஒரு மனைவி புகார் கொடுத்தவுடன் அதில் சுட்டிய மனிதர்களைக் கைது செய்யாதீர்கள்."

இப்படி ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் (498A போன்று) 7 ஆண்டுகளுக்குக் குறைவாக தண்டனை விதிக்கப் பட்டிருக்கும் குற்றங்களின் அடிப்படையில் புகார் வந்தால் கைது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று தடை விதித்து ஒரு சட்ட மாற்றத்தை இந்திய அரசின் சட்ட அமைச்சகத்தினர் கொண்டுவந்தார்கள். காரணம், பல லட்சக் கணக்கானவர்கள் சிறுசிறு குற்றம் புரிந்தவர்களாக குற்றம் சாட்டப்பட்டதால் கைது செய்ய்யப்பட்டு, ஆண்டுக் கணக்கில் ஒரு தீர்வும் இல்லமல் சிறையில் வாடுகிறார்கள்; அதனால் தனி மனித சுதந்திரம் பெருமளவில் பாதிக்கப்படுகிறது; சிறைகள் நிரம்பி வழிகின்றன; அரசுக்கு வெட்டிச் செலவும் ஆகிறது என்பதால் இதனைத் தடுக்க இந்த சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அத்திருத்தம் பாராளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரும் அதற்கு ஒப்புதல் அளித்துவிட்டார். ஆனால் இன்னமும் அந்த சட்டத் திருத்தம் ஒரு முறையான அரசு ஆணைமூலம் நடைமுறைக்குக் கொண்டு வரப்படவில்லை. காரணம்? வக்கீல்கள் தங்கள் வருமானம் போய்விடுமே என்று அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்களாம் (சுட்டி). இப்படிச் சொல்வது யார்? உள்துறை அமைச்சர் திரு. சிதம்பரம் அவர்கள்தான்! (மேல் விவரங்கள் இங்கே)

சரி, இந்த அரசாணையை நடைமுறைப் படுத்த வேண்டிய அமைச்சகம் எது? மத்திய உள்துறை அமைச்சகம்தான். ஏன் இன்னமும் அதை சட்ட பூர்வமாக்காமல் நாடாளுமன்றத்தையே கேலிக் கூத்தாக ஆக்கிக் கொண்டிருகிறார்கள்? அரசின் கடமை மக்களின் நன்மையை கருத்தில் கொள்வதா அல்லது பொய்க்கேசுகள் மூலம் ஜாமீன் எடுப்பது, ஈரங்கி வாங்குவது போன்ற வகைகளில் கட்சிக்காரர்களின் தலையைத் தடவி சில வக்கீல்கள் சம்பாதிப்பதற்குத் துணை போவதா? நீங்கள் இந்தக் கேள்வியை அமைச்சராவதற்குமுன் வக்கீல் தொழில் செய்தவராகிய தற்போதைய உள்துறை அமைச்சர் சிதம்பரம் அவர்களைத்தான் கேட்கவேண்டும்! (அவருடைய மனைவி திருமதி. சிதம்பரம் அவர்களும் ஒரு வக்கீல்தான் என்பது இங்கு தொடர்பில்லாத விஷயம்!)

இப்போது இந்த சுற்றறிக்கை மூலம் திரு. சிதம்பரம் அமைச்சராக இருக்கும் உள்துறை அமைச்சகம் இந்தச் சட்டம் வெகுவாக துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது என்று் ஒரு ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறது! சட்டத் திருத்ததை அமுல் செய்யாமல் வெறும் சுற்றறிக்கை விட்டுக் கொண்டிருப்பதன் மர்மம் என்ன?

மேற்குறிப்பிட்ட சுற்றறிக்கையில் கண்டுள்ள மேல் விவரங்களைப் பார்ப்போம்:-

In a communication sent to the Chief Secretaries and DGPs of all states and the Administrations of the Union Territories on October 13, the MHA has cited misuse of the clause.

“In some cases, every member of the husband’s family has been arrested, irrespective of whether they had a role in inflicting cruelty on the married woman or not. In some cases, the provisions have been used to settle personal scores. Cases have been reported where momentary anger has resulted in invocation of Section 498A, which resulted in the arrest of the members of the family shutting down any possibility of reconciliation in future and total collapse of the marriage. Even where there is a divorce proceeding, the case under Section 498A continues to persist because of the offence being non-compoundable,” the letter says.

இந்த 498A சட்டத்தின் துஷ்பிரயோகத்தால் அத்தகைய பொய்க் கேசு போடும் பெண்களின் கதி கடைசியில் என்ன ஆகிறது என்ப்தைப் பற்றி இந்தக் கடிதம் என்ன சொல்கிறது என்ப்தைப் பார்த்தீர்கள் அல்லவா! தீயது விதைத்தால் நல்லதா விளையும்!

சரி. அரசே ஒப்புக் கொள்கிறது. இந்த சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது என்றும், அதனால் பெண்கள் நலனே பதிக்கப்படுகிறது என்றும். பிறகு இந்த சட்டத்தைத் திருத்துவதுதானே?

இந்தக் கேள்விக்கு அந்தக் கடிதமே பதில் சொல்கிறது பாருங்கள்:-

The MHA letter, incidentally, says that in light of judicial pronouncements, an attempt was made earlier to find a via media by amending Section 498A to make the offence compoundable. “However, this could not be pursued because of the opposition from women organisations,” the letter says.

இப்பொது புரிகிறதா, வில்லன்கள் யாரென்று?

ஒரு சட்டத்திருத்தத்தை பாரளுமன்றம் நிறைவேற்றியும் வக்கீல்களின் வருமானத்தைக் காப்பாற்றுவதற்காக நிறுத்தி வைத்துள்ளனர்.

இன்னொரு சட்டத் திருத்தம் கொண்டுவருவதை பெண்ணிய இயக்கங்கள் "தங்கள் வருமானம் போய்விடுமே" என்ற பயத்தில் எதிர்ப்பதால் நிறுத்தி வைத்துள்ளார்கள்!

மக்களைப் பற்றி இவர்களுக்கு என்ன கவலை. It is evident that the government is playing into the hands of certain vested interests.

இந்த 498A சட்டம் முழுமையாக் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது என்று இதற்கு முன்னமையே ஒப்புக் கொண்டு அறிக்கை விட்டுள்ளவர்கள் யார்யார்?
  1. நம் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில் அவர்கள்
  2. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் அவர்கள்
  3. இதை சட்டபூர்வ பயங்கரவாதம் என்று குறிப்பிட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் திரு.அர்ஜித் பசாயத் மற்றும் திரு.ஹெச்.கே.சீமா அவர்கள்
  4. ஆற்காடு இளவரசர் நவாப் முகம்மது அப்துல் அலி அவர்கள்

மற்றும் பல நீதிபதிகள், அரசியல்வாதிகள், மக்கள் நலத்தில் உண்மையான அக்கறை கொண்டோர்...

இதுதான் நம் நாட்டின் நிலைமை.

இது புரியாமல் பல ஜொள்ளுக் கிழங்கள் " ஐயகோ, பல அப்பாவி இளம் பெண்கள் இந்த ஆணாதிக்க சமூகத்தில் அபலைகளாக அலைகிறார்களே" என்று பிலாக்கணம் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தச் சட்டத் திருத்தங்கள் நடைமுறைக்கு வரும் வரையில் மேலே நீங்கள் கண்ட படத்திலிருக்கும் வயதான அம்மமையார் போன்ற அப்பாவி முதியோர்களும், திருமணம் செய்து கொண்ட பாவத்திற்காக இளம் கணவர்களும், அவர்களின் சுற்றமும் சூழலும் ஒட்டு மொத்தமாகக் கைதாகி ஜெயிலுக்குப் போய்க்கொண்டிருக்க வேண்டியதுதான்!

ஆம். அந்த அம்மையார் ஒரு ஆணைப் பெற்றெடுத்து அவனுக்கு திருமணமும் செய்வித்த மன்னிக்க முடியாத குற்றத்தைத்தான் செய்துள்ளார்! அவர் நிச்சயம் கைது செய்யப்பட வேண்டியவர்தான் என்பதை இப்போது ஒப்புக் கொள்கிறீர்கள் அல்லவா?!

அவர் அனுபவித்த கொடுமைகளைப் பட்டியலிட்டு காவல் துறைத் தலைவருக்கு வடித்துள்ள கடிதத்தின் மூலம் அந்த சோகக்கதையை அறியலாம். நெஞ்சை திடப்படுத்திக் கொண்டு இங்கிருந்து அதனை டவுன்லோடு செய்து வாசியுங்கள்.

உங்கள் மனத்தில் தற்போது எழப்போகும் கேள்விகள்:-

  • தேசிய பெண்கள் வாரியத்தின் நோக்கில் இந்த முதிய அம்மையார் பெண்ணினத்தில் சேர்ந்தவராகக் கருத்தப்பட மாட்டாரா?

  • அது போன்ற இயக்கங்கள் தவறு செய்யும் பெண்களுக்காகத் தானா?

  • ஆண் பிள்ளையைப் பெறுவதே இந்நாட்டில் பெருங்குற்றமா?

  • இதுபோல் ஒருதலைச் சார்பான சட்டங்களின் தவறான பயன்பாடு இன்னும் அதிகமாகப் பெருகி ஒரு கட்டத்தில் சமூகக் கிளர்ச்சி ஒன்று ஏற்படும் அபாயம் உள்ளதே, ஏன் ஒருவரும் இதற்கான தீர்வை செயல்படுத்த மறுக்கிறார்கள்?

  • இந்நாட்டு ஆண்களைப் பொறுத்தவரை திருமணம் என்பதே பாம்புப் புற்றில் கைவிடுவது போன்று ஆகிவிட்டதே; சீக்கிறமே ஆண்சிசுக் கொலைகள் நடக்கத் தொடங்கிவிடுமா?"


பதில் உங்கள் கையில்!

பெருகுது 498A அறுவடை, ரொம்புது கல்லா!

கீழ்க்கண்ட புகார்களின் நடைமுறைக்கு ஒவ்வாத "டெம்பிளேட்" தன்மையையும், கற்பனை வளத்தையும், வெளிநாடுகளில் இதுபோன்ற பொய் வழக்கு ஜோடனைகளின் பருப்பு வேகாது என்பதால் அங்கு நடந்தவைக்கு நம்மூரில் வந்து புகார் கொடுக்கும் அவலத்தையும் காணுங்கள். இங்குதானே "ஐயோ பாவம், அபலைப் பெண்கள்" என்று கண்ணீர் விட்டுக் கதறி உருக வைத்து, "உன்னுடன் வாழாத மனைவி கேட்கும் ரொக்கத்தைக் கொடு, இல்லாவிடில் ஜெயிலுக்குப் போ" என்று உத்தரவுகள் பெற்று, ஆண்களை இலவச ஏ.டி.எம் மெஷீனாக மாற்றும் சடங்கு நடக்கும்!

தினந்தோறும் அறங்கேற்றப்படும் நம் புதுமைப் பெண்களின் புனிதத்தன்மையைக் கண்டு களித்து கலியாணம் செய்து கொண்டு வயதான பெற்றோருடன் கூட்டாக கைது செய்யப்பட்டு ஜெயிலுக்குப் போங்கள்!

1.
அருப்புக்கோட்டையில் இளம்பெண்ணிடம் வரதட்சணை கொடுமை; 4 பேர் மீது வழக்கு

அருப்புக்கோட்டை, நவ.10 - 2009. தினத்தந்தி

அருப்புக்கோட்டை அருகே வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக கணவன் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய் யப்பட்டுள்ளது.

திருமணம்

அருப்புக்கோட்டை நல்லூர் முஸ்லிம் வடக்குத்தெருவைச் சேர்ந்தவர் செய்யது அலிபாத் திமா (வயது 22). இவருக்கும் அஜீஸ்நகர் பஜீருல் ஹக் என்பவருக்கும் கடந்த 2008-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது, மணமகள் வீட்டார் சார்பில் 10 பவுன் நகையும், 70 ஆயிரம் ரொக்கமும் தருவதாக பேசப்பட்டது. ஆனால் அப்போது 10 பவுன் நகையும், 16 ஆயிரம் ரொக்கமும் கொடுக்கப்பட் டது. மீதி ரொக்கப்பணத்தை 2 மாதம் கழித்து தருவதாக மணமகள் வீட்டார் சார்பில் பேசப்பட்டதாக தெரிகிறது.

கொடுமை

ஆனால் அதன்படி மீதி பணத்தை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இத னால் மீதி பணத்தை வாங்கி வரும்படி செய்யது அலி பாத்திமாவை கணவர்பஜீருல் ஹக், அவரது தாயார் ஆயிஷா பீவி, அண்ணன் காட்டுபாவா, தம்பிரியாஸ் ஆகியோர் துன் புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து செய்யது அலி பாத்திமா அருப்புக் கோட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி வழக்குப்பதிவு செய்து

பஜீருல் ஹக் உள்பட 4 பேரை தேடி வருகின்றனர்.

2.
வரதட்சணை கொடுமை: கணவர் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு

திண்டுக்கல்,அக்.28 - 2009. தினத்தந்தி

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக, கணவர் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வரதட்சணை கொடுமை

திண்டுக்கல் மீனாட்சி நாயக்கன்பட்டி வடக்குபாறைப்பட்டியை சேர்ந்தவர் கவிதா (வயது 24). இவருக்கும், மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த சங்கர் (30) என்பவருக்கும் இடையே கடந்த 3.12.2009-ந்தேதியன்று திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 27 பவுன் தங்கநகை மற்றும் ரூ.45 ஆயிரம் ரொக்கபணம் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. இதற்கிடையே கவிதா கறுப்பாக இருப்பதாகவும், படிக்கவில்லை என்றும் கூறி சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் கூறியதாக தெரிகிறது.

மேலும் கூடுதலாக 15 பவுன் தங்கநகை மற்றும் மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கு ரூ.25 ஆயிரம் பணம் கேட்டு வீட்டை விட்டு விரட்டி விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திண்டுக்கல் 2-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கவிதா மனுதாக்கல் செய்தார்.

பெண் கைது

இந்த மனுவினை விசாரித்த மாஜிஸ்திரேட்டு உமாராணி, புகார் கூறிய சங்கர் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கீதாதேவி புகார் கூறப்பட்ட சங்கர், அவரது தாயார் கமலா (57), உறவினர்கள் பாமா (38), பாக்கியலெட்சுமி (35), சுதர்கனா தேவி (46), ராஜேந்திரன் (46), ரகுநாதன் (40) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தார். இதில் திண்டுக்கல் முருகபவனத்தை சேர்ந்த சுதர்கனாதேவியை நேற்று போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

3.
தனி அறையில் அடைத்து கொடுமை: லண்டன் கணவர் மீது மனைவி புகார்

நவம்பர் 08,2009. தினமலர்

காரைக்குடி: வரதட்சணை கேட்டு தனி அறையில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்திய கணவர் உட்பட மூவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த பிரதீபாவுக்கும் (23), கல்லலை சேர்ந்த சண்முகம் மகன் ராமநாதனுக்கும் (29) கடந்த 2007 ல் திருமணம் நடந்தது.

கணவர் குடும்பத்தினர் லண்டனில் தொழில் செய்து வந்தனர். சில மாதங்களில் பிரதீபா அங்கு சென்றார்.ஐந்து லட்ச ரூபாய் வரதட்சணை கேட்டு, அங்கு தனி அறையில் பிரதீபா அடைக்கப்பட்டார். கணவருடன் தொடர்பு இல்லாத நிலையில், பெற்றோரிடம் பேசவும் தடை விதித்தனர். அங்குள்ள உறவினர்கள் உதவியுடன் கடந்த டிசம்பரில் பிரதீபா நாடு திரும்பினார்.கணவருடன் சேர்த்து வைக்க கோரி சென்னை குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். தற்போது நிலுவையில் உள்ளது.

கடந்த ஒன்றாம் தேதி லண்டனில் இருந்து பிரதீபாவின் மாமனார் சண்முகம், மாமியார் வசந்தா நாடு திரும்பினர். அவர்களிடம் பிரதீபாவின் பெற்றோர் பேச்சு நடத்தினர்.ஐந்து லட்ச ரூபாய் வரதட்சணை கொடுத்தால் மகனோடு சேர்ந்து வைப்பதாக கூறினர்.இதுகுறித்து காரைக்குடி மகளிர் போலீசில் பிரதீபா புகார் செய்தார்.கணவர் ராமநாதன்,அவரது பெற்றோர் மீது இன்ஸ்பெக்டர் ஜோஸ்பின் அமலராணி வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்.

4.
ஐதராபாத்தில் வரதட்சணை கொடுமை புகார்

கோவை : ஐதராபாத்தில் கணவர் குடும்பத்தினரால் துன்புறுத்தப்பட்ட பெண், நடவடிக்கை கோரி கோவை போலீசில் புகார் கொடுத்தார்.கோவைப்புதூர், சிறுவாணி நகரைச் சேர்ந்தவர் தேவா(32). இவருக்கும் இதே பகுதியைச் சேர்ந்த சுமலதா(28)வுக்கும் 2007ல் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பின் தேவா தனது குடும்பத்துடன் ஐதராபாத், குருமூர்த்தி லேன் பகுதியில் குடியேறினார்.சில நாட்களுக்கு முன், ஐதராபாத்திலிருந்து பெற்றோர் வீட்டுக்கு திரும்பிய சுமலதா, தன்னை கணவரும், அவரது குடும்பத்தினரும் கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாகத் தெரிவித்தார். இது தொடர்பாக குனியமுத்தூர் போலீசில் சுமலதா புகார் கொடுத்தார். அதில், கணவர் தேவா, மாமியார் பட்டம்மாள், மாமனார் ராஜகோபால் மற்றும் உறுவினர் ரோகிணி ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

வழக்குப்பதிவு செய்த கோவை போலீசார், சம்பவம் நடந்த இடம் ஐதராபாத் என்பதால், மேல் நடவடிக்கைக்காக, முதல் தகவல் அறிக்கையை ஐதராபாத் போலீசாருக்கு அனுப்பி வைத்தனர்.

5.
வரதட்சணை கேட்டு மிரட்டல்:
பெண் வக்கீலை ஏமாற்றி திருமணம் செய்த போலி வக்கீல் கைது

சென்னை, அக்.25- 2009. செய்தி - தினத்தந்தி

பெண் வக்கீலை ஏமாற்றி திருமணம் செய்ததுடன், வரதட்சணை கேட்டு மிரட்டிய 'போலி' வக்கீல் கைது செய்யப்பட்டார்.

பெண் வக்கீல்

தஞ்சாவூர் முனிசிபல் காலனியை சேர்ந்தவர் மோசஸ். இவருடைய மகள் உஷா மோசஸ் (வயது 39). சென்னையில் வக்கீலாக வேலைபார்த்து வருகிறார். உஷா மோசஸ் போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் கடந்த 2004-ம் ஆண்டு சென்னை ஜார்ஜ் டவுண் கோர்ட்டில் வக்கீல் ஒருவரிடம் ஜுனியராக வேலை பார்த்தேன். அப்போது மற்றொரு வக்கீல் ஒருவரின் அலுவலகத்தில் வேலைபார்த்து வந்த ஸ்ரீராமுலு என்ற பால் ஸ்ரீராம் (34) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. ஸ்ரீ ராமுலு திருத்தணி கிருஷ்ணசமுத்திரம் காலனி பகுதியை சேர்ந்தவர். வக்கீல் தொழில் பார்த்து வருவதாக கூறினார். அதற்கான அடையாள அட்டையையும் காண்பித்தார். அவருடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது.

மோசடி

அதைத் தொடர்ந்து ஸ்ரீ ராமுலுவும் நானும் திருமணம் செய்ய முடிவு செய்தோம். திருத்தணியில் கிறிஸ்தவ முறைப்படி எங்களுடைய திருமணம் 14.9.2005 அன்று நடந்தது. அதன் பிறகு சென்னை வரத முத்தையப்பன் தெருவில் வசித்து வந்தோம். திருமணத்திற்கு பிறகுதான் அவர் போலி வக்கீல் என்பது தெரியவந்தது.

பி.ஏ. பொருளாதாரம் படித்துள்ள ஸ்ரீராமுலு, ஆந்திர மாநிலத்தில் உள்ள சட்டக்கல்லூரி ஒன்றில் படிக்க சேர்ந்ததுடன் சரி, பட்டம் எதுவும் வாங்கவில்லை. எந்த கோர்ட்டிலும் வாதாடவில்லை என்பது தெரியவந்தது. இந்த மோசடி குறித்து கேட்ட போது, என்னுடன் தங்குவதை தவிர்த்து வந்தார். இந்த நிலையில், எனக்கு குழந்தை பிறக்கவில்லை என்பதை காரணம் காட்டி, தன்னுடைய சகோதரி மகள் சரிதா என்பவரை 2-வது திருமணம் செய்யப்போவதாக ஸ்ரீராமுலு கூறினார்.

இந்த நிலையில், ஸ்ரீராமுலு சரிதாவை எனக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டார். இது பற்றி அவரிடம் கேட்டதற்கு, என்னுடன் வாழ வேண்டும் என்றால் அதிக வரதட்சணை கொடுக்க வேண்டும் என்று மிரட்டி வருகிறார். அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு உஷா மோசஸ் புகாரில் கூறியிருந்தார்.

இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் இணை கமிஷனர் சேஷசாயி, துணை கமிஷனர் பெரியய்யா ஆகியோர் மேற்பார்வையில் கொத்தவால்சாவடி இன்ஸ்பெக்டர் ஹரிக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். ஸ்ரீராமுலு மீது 406, 420, 467 பிரிவு 4, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச்சட்டம் (இது எங்கிருந்து வந்தது!) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கைது

விசாரணையில் ஸ்ரீராமுலு திருத்தணியில் நடந்த அடிதடி வழக்கு ஒன்றில் தொடர்புடையவர் என்பதும், தன்னை போலீசார் தேடுகிறார்கள் என்பதை அறிந்தால் அவரை தலைமறைவாகி விடலாம் என்பதால் அவரை 'பொறி' வைத்து பிடிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஸ்ரீராமுலுவிடம் செல்போன் மூலம் உஷா மோசஸ் பேசினார்.

இனிமேல் சண்டை போடமாட்டேன் என்றும் கேட்ட வரதட்சணை பணத்தை தருவதாகவும், எனவே சென்னைக்கு வரவேண்டும் என்றும் ஸ்ரீராமுலுவிடம் கேட்டுக் கொண்டார். அவரது பேச்சை உண்மை என்று நம்பிய ஸ்ரீராமுலு நேற்று முன்தினம் சென்னை வந்த போது போலீசில் சிக்கிக் கொண்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் போலி வக்கீல் என்று கூறி ஏமாற்றியதையும், வரதட்சணை கேட்டு மிரட்டியதையும், 2-வது திருமணம் செய்ததையும் ஒப்புக் கொண்டார்.

அதைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

ஒட்டுமொத்த குடும்பத்தின் மீதும் 498A

இதற்கு முந்தைய இடுகையைப் படித்தீர்கள் அல்லவா. அதுபோல் 498A பொய் வழக்கில் எக்ஸ்ட்ராவாக சிறிது அஜால்குஜால் மசாலா சேர்க்கும் அளவிற்கு கற்பனை வளமில்லாத ஒரு வக்கீலை இந்த நங்கை மடவன்னம் அணுகியதால் கீழ்க்காணும் ஸ்டாண்டர்ட் டெம்பிளேட் புகார்தான் போட்டிருக்கிறார்.

ஆனால் இந்த 498A டெம்பிளேட்தான் 95% பொய்க் கேசுகளில் பயன்படுத்தப்படுகின்றன.

உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா? இன்னும் 498A பேய் பிடிக்கவில்லையா? கவலையை விடுங்கள் இந்த சீக்கு தற்போது பன்றிக் காய்ச்சலைவிட வெகுவேகமாகப் பரவி வருகிறது. ஆனால் ஒரு வேறுபாடு. காய்ச்சல் ஒருத்தர் ஒருத்தராகத்தான் பிடிக்கும். ஆனால் 498A கேசு குடும்பத்தில் உள்ள மொத்தப் பேரையும் ஹோல்சேலாக ஒரே கட்டில் அடைத்துவிடும்!

இப்பொது செய்தியைப் படித்துவிட்டு "பெண்கள் பாவம், ஒரு பாவமும் அறியாத பேதைகள்" என்று உரக்க கோஷமிடுங்கள்!

சாத்தூர் கோர்ட்டில் புகார்;
கூடுதல் வரதட்சணை வாங்கிவர மறுத்த புதுப்பெண் சித்ரவதை
கணவர் உள்பட 5 பேர் மீது வழக்கு

விருதுநகர், நவ.6 - 2009. தினத்தந்தி

சாத்தூர் அருகே கூடுதல் வரதட்சணை வாங்கி வர மறுத்த புதுப்பெண்ணை சித்ரவதை செய்ததாக கணவர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.

சாத்தூர் அருகே உள்ள மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலட்சுமி (வயது 30). இவர் சாத்தூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

எனக்கும், சென்னை திருவான்மியூரை சேர்ந்த மளிகைக் கடை வியாபாரி ராமச்சந்திரன் என்பவக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது எனது பெற்றோர் 10 பவுன் நகை மற்றும் சீர்வரிசை செய்தனர்.

ஆனால் கடந்த சில மாதங்களாக எனது கணவர் கூடுதல் வரதட்சணை வாங்கி வருமாறு என்னிடம் வற்புறுத்தி வந்தார். நான் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் எனக்கு சாப்பாடு போடாமல் சித்ரவதை செய்தார். எனவே இந்த சித்ரவதைகளை தாங்க முடியாமல் நான் எனது தாய் வீட்டுக்கு வந்து விட்டேன். இந்த சித்ரவதைக்கு உடந்தையாக மாமனார் காசிபெருமாள், மாமியார் சரோஜா, நாத்தனார் கலாராணி, அவரது கணவர் சங்கர் ஆகியோர் உள்ளனர். எனவே இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மகாலட்சுமி தனது மனுவில் கூறியிருந்தார்.

5 பேர் மீது வழக்கு

வழக்கை விசாரித்த மாஜிஸ் திரேட்டு, இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு சாத்தூர் அனைத்து மகளிர் போலீசுக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் ராமச்சந்திரன் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

இப்படியும் வழக்கு போடுவார்கள், உஷார்!

திருவண்ணாமலையில் உல்லாசத்துக்கு மறுத்த மனைவிக்கு கொலை மிரட்டல்.
கணவன் மீது போலீசில் புகார்

திருவண்ணாமலை, அக்.30- 2009 - தினத்தந்தி

திருவண்ணாமலை அருகே உல்லாசத்துக்கு மறுத்த மனைவியை கொலை செய்து விடுவதாக மிரட்டிய கணவர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அடுத்த பெருமணம் கிராமத்தை சேர்ந்தவர் அரிகரன் (வயது 25). இவருக்கும் ஜெயலட்சுமி (19) என்பவருக்கும் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்த நிலையில் ஜெயலட்சுமி திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:-

கொலை மிரட்டல்

எனது கணவர் அரிகரன் தினமும் குடித்து விட்டு என்னை அடித்து துன்புறுத்துகிறார். நேரம் காலம் பார்க்காமல் உல்லாசத்துக்கு அழைக்கிறார், மறுத்தால் கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறார்.

இதனால் அவரை விட்டு பிரிந்து தாய் வீட்டுக்கு வந்து விட்டேன். கணவர் வீட்டில் உள்ள எனது சீர்வரிசை பொருட்களை மீட்டு தர வேண்டும்.

5 பேர் மீது வழக்கு

என்னை சித்ரவதை செய்த கணவர் அரிகரன், அதற்கு துணையாக இருந்த மாமனார் வீராசாமி, மாமியார் பூங்கோதை, அரிகரனின் தம்பி சரவணன், அவரது மனைவி விமலா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேற்கண்டவாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

என்னை 'டார்ச்சர்' செய்யும் பெண்ணை என்ன செய்வது?

ஹலோ தோழியே ..! (தினமலர் 2-11-2009)

என்னை 'டார்ச்சர்' செய்யும் பெண்ணை என்ன செய்வது?

பெண்கள் தான் ஆண்களால் பாதிக்கப்படுகின்றனர் என்று சொல்வது தவறு; ஆண்கள் பலரும், பெண்களால் பாதிக்கப்படுகின்றனர் என்ற அர்த்தத்தில், பாதிக்கப்பட்ட வாசகர் ஒருவர் கடிதம் எழுதியுள்ளார். இனி அவர்...

எனக்கு திருமணமாகி எட்டு மாதமாகிறது. நான் எம்.ஏ., எம்.பில்., முடித்துள்ளேன். பெண் பார்க்கும் போது, அவளது வெள்ளை நிறத்தில் மயங்கிய நான், மற்றவற்றை பற்றி விசாரிக்கத் தவறிவிட்டேன். பெண் டிகிரி படித்திருப்பதாக கூறினர். எனக்கு அப்பா, அம்மா கிடையாது. அதனால், என்னை எதைப் பற்றியும் யோசிக்க விடாமல் அவசர அவசரமாக தேதியை குறித்து திருமணம் செய்து வைத்தனர்.

முதலிரவிலேயே எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவள் கன்னித்தன்மையோடு இல்லை. விசாரித்த போது, அவள் ஏற்கனவே திருமணமானவள் என்பது தெரியவந்தது. எட்டாவது மட்டுமே படித்து இருக்கிறாள். அவர்களது கிராமத்திலேயே ஒருவனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இவள் அவனை, "டார்ச்சர்' செய்து, அவனை பைத்தியக்காரனாக்கிவிட்டு ஓடி வந்துவிட்டாளாம். இதைப்பற்றி, திருமணத்துக்கு முன் யாரும் என்னிடம் எதுவும் கூறவில்லை.

இருந்தும், தாலி கட்டிய பாவத்திற்காக அவளோடு வாழ்ந்தேன். ஆனால், தற்போது, என்னையும், "டார்ச்சர்' செய்கிறாள். இவளைப் போன்ற பெண்களுடன், எந்த ஆணாலும் வாழமுடியாது. ஒவ்வொரு நாளும் நரக வேதனையாக உள்ளது. இனியும் இவளுடன் சேர்ந்து வாழமுடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.

இப்படிப்பட்ட பெண்களும் இருக்கத்தானே செய்கின்றனர்? பின், ஏன் இந்த சமூகம் எதற்கெடுத்தாலும் ஆண்களையே குறை சொல்கிறது? இவளை நான் விவாகரத்து செய்வது முறைதானே? இதில் தவறொன்றும் இல்லையே! வழிகாட்டுங்கள் தோழிகளே' என்று, பெயர் வெளியிட விரும்பாத வாசகர் ஒருவர் கடிதம் எழுதியிருக்கிறார்.

என்ன தோழியே... இந்த வாசகருக்கு வழிகாட்ட விருப்பமா? எடுங்கள் பேனாவை! எழுதுங்கள் எங்களுக்கு...

ஹலோ தோழியே, தினமலர், 219, அண்ணா சாலை சென்னை 600 002.

அநாதையாய் விடப்பட்ட ஆண் குழந்தை

Abandoned male childதொடங்கிவிட்டது ஆணழிப்பு மனப்பான்மையின் வெற்றி!

தற்போது மணமாகும் வயதில் ஆண் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர், அன்றாடம் நடக்கும் பொய் வரதட்சணை வழக்குகள், கைது, சிறைவாசம், மிரட்டல் பணம் பறிப்பு, கள்ளக்காதல் கொலைகள், ஆணின் பெற்றோரை சோத்துக்கு வழியில்லாமல் நடுத்தெருவில் நிறுத்தும் அவலங்கள், ஆண்களை அவர்கள் ஆணாகப் பிறந்ததாலேயே குற்றவாளியாகக் கருதும் நீதிபதிகள், இவற்றால் கதிகலங்கி திருமணம் என்றாலே காத தூரம் ஓடும் நிலைக்குத் தள்ளப்படுவதால் இனிமேல் "வேண்டாமய்யா ஆண்குழந்தை" என்னும் மனநிலைக்கு வந்துவிட்டனர் பெற்றோர்.

தூத்துக்குடியில் பிறந்த நிலையில் ஒரு ஆண் குழந்ததயை தவிக்க விட்டு ஓடிய தாயைப் பற்றி முந்தைய இடுகையொன்றில் பார்த்தோம்.

இப்போது இந்தச் செய்தியைப் படியுங்கள்:-

ராமேஸ்வரம் கோயிலில் அனாதையாக கிடந்த குழந்தை.

செய்தி: தினமலர். 2.11.2009

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் கோயிலில் நேற்று அதிகாலை சுவாமி சன்னதி அருகே யாரோ ஒரு தாய் பிறந்த 25 நாட்கள் ஆன ஆண் குழந்தையை பையில் போட்டு, விட்டு சென்றுள்ளார். கோயில் ஊழியர் மகாலட்சுமி பையில் குழந்தை இருப்பதை கண்டு குழந்தையை எடுத்து போலீசுக்கு தகவல் கொடுத்தார். குழந்தையை கேட்டு யாரும் வராத காரணத்தால் கோயில் ஊழியர் மகாலட்சுமியின் மகள் பேபி, "தானே குழந்தையை வளர்ப்பதாக" கூறியதையடுத்து போலீசார் குழந்தையை பேபியிடம் ஒப்படைத்தனர். பேபிக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளநிலையில் இந்த குழந்தையை தனது சொந்த குழந்தை போல் வளர்க்க உள்ளதாக கூறினார்.

மனைவி ஓடலாம், ஆனால் கணவன் ஓடினால் கைது ஆவான்

காதல் திருமணம் செய்த 3 நாளில் மனைவியை பிரிந்து சென்ற கணவன் கைது

புவனகிரி,அக்.30- 2009. தினத்தந்தி

கடலூர் மாவட்டம் புவன கிரி அருகே உள்ள கண்ணங்குடி கிராமத்தை சேர்ந்தவர் பிச்சைப் பிள்ளை. இவரது மகள் ஜெயந்தி (வயது 21).இவர் புவனகிரி யூனியன் அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக தற்காலிகமாக வேலை பார்த்து வந்தார்.

தற்போது கீரப்பாளையம் மேட்டுத்தெருவில் குடியிருந்து வருகிறார்.அப்போது அதே தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சரவணன்(21) என்பவருக்கும் ,ஜெயந்திக்கும் பழக்கம் ஏற்பட்டது.இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.அதையடுத்து 2 பேரும் வீட்டை விட்டு வெளி யேறி அங்குள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

கைது

அதன் பிறகு 3 நாட்கள் ஜெயந்தியோடு குடும்பம் நடத்திய சரவணன் பெருமாத்தூரில் உள்ள அவரது சித்தி வீட்டில் விட்டு சென்றார்.போகும் போது தாலியையும் கழற்றி வாங்கி கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.அதை தொடர்ந்து சரவணன் அங்கு செல்லவில்லை. இதனால் தான் ஏமாற்றப் பட்டதை அறிந்த ஜெயந்தி இது பற்றி புவனகிரி போலீசில் புகார் செய்தார்.அதில், தன்னுடைய கணவனை சேர்த்து வைக்குமாறு புகார் கூறினார்.அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.மேலும் சரவணனை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.விசாரணையில் சரவணன் ஜெயந்தியோடு வாழ மறுத்துவிட்டார். அதையடுத்து சரவணனை போலீசார் கைது செய்தனர்.
==================

திருமணம் செய்து கொண்டால் கட்டாயம் மனைவியின் புகாரின் பேரில் எல்லா கணவன்மார்களும் ஒரு நாள் கைது ஆகப் போவது நிச்சயம். சிலருக்கு உடனே சிறப்பு நடக்கும், பலருக்கு 14 ஆண்டுகள் கழித்து நிகழும். ஐயமிருந்தால் "என் வயதான பெற்றோர் நம் வீட்டில் நம்முடன் சேர்ந்து வாழப் போகிறார்கள்" என்று உங்கள் ஆசை மனைவியிடம் சொல்லிப் பாருங்களேன்!

பிறந்த ஆண் குழந்தையை உதறி விட்டு ஓடிய தாய்!

இனிமேல் இப்படித்தான் நடக்கும். ஆண் குழந்தையைப் பெற்றால் அந்தத் தாய் படப்போகும் துயரங்களை அவர்கள் உணரத் தொடங்கி விட்டனர். இனி ஆண் சிசுக் கொலை பரவலாகும் நிலை நிச்சயம் ஏற்படப்போகிறது. அந்த ஆண் வளர்ந்து பெரியவனாகி அவன் ஒரு பெண்ணைக் காதலித்து திருமணம் செய்தபின், மருமகள் போடப்போகும் 498A வழக்குகளில் சிக்கி சிறைக்குப் போகும் அவலத்தையும், கள்ளக்காதல் கொலையையும், அதற்கு அந்த ஆணையே காரணமாக்கும் மனோரமாவின் இயக்க நடவடிக்கைகளையும் தவிர்ப்பது எப்படி என்று தாய்மார்கள் யோசிக்கத் தொடங்கி விட்டனர்!

இப்போது செய்தியை வாசியுங்கள்:-

தூத்துக்குடி, அக்.30- 2009. செய்தி - தினத்தந்தி

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் தாய் உதறிவிட்டு சென்ற ஆண் குழந்தை சமூகநலத்துறையில் ஒப்படைக்கப்பட்டது.

ஆண் குழந்தை

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 10-ந் தேதி மாலை 61/4 மணிக்கு ஒரு இளம் கர்ப்பிணி பெண் சிகிச்சைக்காக சேர்ந்தார்.

அப்போது அவர் முத்தையாபுரத்தை சேர்ந்த செந்தில்குமார் மனைவி சகுந்தலா(24) என்ற முகவரி கொடுத்தார். இதைத்தொடர்ந்து சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சகுந்தலாவுக்கு மறுநாள் அதிகாலை 21/4 மணிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

தாய் ஓட்டம்

இந்தநிலையில் குழந்தையை உதறிவிட்டு சகுந்தலா ஆஸ்பத்திரியில் இருந்து ஓடிவிட்டார். இதனால் தவித்து கொண்டு இருந்த குழந்தையை ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் தனியாக வைத்து பாதுகாத்து வந்தனர்.

இது குறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையை போட்டுவிட்டு ஓடிய தாயை தேடிவந்தனர். ஆனால் இதுவரை கிடைக்கவில்லை.

ஒப்படைப்பு

இதைத்தொடர்ந்து அரசு ஆஸ்பத்திரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்த ஆண் குழந்தை நேற்று காலை சமூகநலத்துறையில் ஒப்படைக்கப்பட்டது.

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி டீன் ரவிசங்கர் குழந்தையை சமூகநலத்துறை அலுவலர் முத்துநாயகத்திடம் ஒப்படைத்தார். அப்போது அரசு ஆஸ்பத்திரி உறைவிட மருத்துவர் விசுவநாதன் உடன் இருந்தார்

ஐயோ பாவம் செம்மலை!

1.
அதிமுக மாஜி அமைச்சர் மனைவி-மருமகள் அடிதடி
சனிக்கிழமை, டிசம்பர் 15, 2007

சேலம்: அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செம்மலை குடும்பத்தில் மாமியாருக்கும், மருமகளுக்கும் இடையே நடந்த சண்டை வீதிக்கு வந்து கைகலப்பில் முடிந்தது.

சேலத்தை சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை. இவர் மனைவி புஷ்பா. இவர்களது மகன் எழில் அமுதனுக்கும், மேட்டூரைச் சேர்ந்த டிஎஸ்பி முத்துசாமி மகள் வாணி பிரீதாவுக்கும் கடந்த 2004ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் தனது மாமியார் புஷ்பாவும், கணவரும் ரூ.10 லட்சம் வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்துவதாக மேட்டூர் மகளிர் காவல் நிலையத்தில் வாணி பிரீதா புகார் செய்தார். அந்த வழக்கு சூரமங்கலத்திற்கு மாற்றப்பட்டது.

அதன் பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி அந்த வழக்கு ஈரோடு மாவட்டத்திற்கு மாற்றப்பட்டது. பின்னர் எழில்அமுதன்-வாணி பிரீதா இருவரும் விவகாரத்து கேட்டு தொடர்ந்த வழக்கு சேலம் குடும்ப நல நீதிமன்றத்திற்கு வந்தது.

இந்த வழக்கு விசாரணைக்காக இருதரப்பினரும் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். அப்போது வாணி பிரீதாவுக்கும், அவரது மாமியார் புஷ்பாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கடைசியில் அடிதடியில் முடிந்தது.

இதில் மாமியாரும்-மருமகளும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். பின்னர் உடன் வந்திருந்த உறவினர்கள் அவர்களை சமாதனப்படுத்தி அழைத்து சென்றனர்.

இதனால் சேலம் நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

http://thatstamil.oneindia.in/news/2007/12/01/tn-minister-wife-and-daughter-inlaw-exchange-blows.html

2.
வரதட்சணை கொடுமை வழக்கு: அ.தி.மு.க. எம்.பி. குடும்பத்துடன் ஆஜர்

வரதட்சணை கொடுமை வழக்கு தொடர்பாக சேலம் தொகுதி அ.தி.மு.க. எம்.பி. செம்மலை, தனது மனைவி மற்றும் மகனுடன் சேலம் மகளிர் கோர்ட்டில் ஆஜரானார்.

அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சரும், தற்போதைய சேலம் தொகுதி எம்.பி.யுமான செம்மலையின் 2 வது மகன் எழில் அமுதன். இவருக்கும், சேலம் மாவட்டம் குஞ்சாண்டிழூரை சேர்ந்த முத்துசாமியின் மகள் வாணி பிரிதாவுக்கும் கடந்த 2004 ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் வாணி பிரிதா, தன்னுடைய கணவர் எழில் அமுதன், மாமியார் புஷ்பா, மாமனார் செம்மலை ஆகியோர் மீது மேட்டூர் போலீசில், வரதட்சணை கொடுமை புகார் செய்தார்.

புகார் அடிப்படையில் செம்மலை எம்.பி., அவருடைய மனைவி புஷ்பா, மகன் எழில் அமுதன் ஆகியோர் மீது சேலம் அனைத்து மகளிர் கோர்ட்டில் வரதட்சணை கொடுமை வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்தது.

இந்த நிலையில் நேற்று காலை மகளிர் கோர்ட்டு நீதிபதி கோபால் முன்னிலையில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது.

செம்மலை எம்.பி., அவருடைய மனைவி புஷ்பா, மகன் எழில் அமுதன் ஆகியோர் நேற்று கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள். அப்போது சாட்சிகள் அளித்த தகவல்களின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்ட 3 பேரிடமும் கேள்விகள் கேட்கப்பட்டு பதில்கள் பெறப்பட்டன.

அப்போது செம்மலை எம்.பி. இந்த வழக்கு பொய்யான வழக்கு என்றும், அரசியல் காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கு என்றும் பதில் அளித்தார். இந்த பதில்கள் பதிவு செய்யப்பட்டன. அதேபோல் அவருடைய மனைவி புஷ்பா, மகன் எழில் அமுதன் ஆகியோர் அளித்த பதில்களும் பதிவு செய்யப்பட்டன.

பின்னர் இந்த வழக்கு விசாரணை 14 ந் தேதிக்கு (நாளை) தள்ளி வைக்கப்பட்டது.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=18458

3.

சேலம், அக் 23-

சேலம் பேர்லேண்ட்ஸ் பகுதியில் வசித்து வருபவர் செம்மலை எம்.பி. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரான இவர் மீதும், இவரது மனைவி புஷ்பா, கணவர் எழில்அமுதன் மீதும் அவரது மருமகள் வாணிபிரித்தா வரதட்சணை புகார் கூறி இருந்தார்.

இந்த மனு மீது முதலில் மேட்டூர் போலீசார் விசாரித்தனர். பின்னர் இந்த வழக்கு ஈரோட்டுக்கு மாற்றப்பட்டது.

பிறகு சேலம் சூரமங்கலம் மகளிர் காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இதன் பின்னர் இந்த வழக்கு விசாரணை சேலம் மகளிர் கோர்ட்டில் நடந்தது.

இதனால் இன்று கோர்ட்டுக்கு செம்மலை எம்.பி, மற்றும் மனைவி குடும்பத்தினர் வந்து இருந்தனர். இதை நீதிபதி கோபால் விசாரித்து இன்று (வெள்ளிக்கிழமை) தீர்ப்பு கூறினார்.

இந்த வழக்கில் கூறப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் செம்மலை எம்.பி. உள்பட அனைவரையும் விடுதலை செய்வதாக நீதிபதி தீர்ப்பில் கூறி இருந்தார்.

இதை கேட்ட செம்மலை எம்.பி மற்றும் அவரது வீட்டார் மகிழ்ச்சி அடைந்தனர்.

பின்னர் செம்மலை எம்.பி கூறியதாவது:-

இந்த தீர்ப்பு குடும்ப கவுரவத்திற்கு கிடைத்த நல்ல அத்தாட்சி. எங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டு கூறி இருந்ததை மக்களும் நம்ப வில்லை, நீதிமன்றமும் நம்பவில்லை. எங்களுக்கு ஏற்பட்ட மன உளச்சலுக்கு இந்த தீர்ப்பு நல்ல மருந்து.

இவ்வாறு அவர் கூறினார்.

மருமகள் வாணிப்பிரித்தா கூறும்போது, மன வேறுபாடு காரணமாக அப்போது பிரச்சினை ஏற்பட்டது. கெட்ட நேரத்தில் நடந்த சம்பவம். இப்போது மன வேறுபாடுகளை நீங்கி கணவருடன் சேர்ந்து வாழ்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

(அடுத்த முறை 498A வழக்கு போடும்போது "டைட்"டாகப் போடுவார்!)
http://www.maalaimalar.com/2009/10/23164357/SLM05231009.html

ஆண்களை அழிக்க இன்னொரு ஆயுதம்!

தினமலர் செய்தி ஆசிரியர் லெனின் எந்தக் குற்றத்தைப் புரிந்ததாக அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தார்கள் தெரியுமா? "தமிழ்நாடு பெண்களை செக்ஸ் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டம் 1998" (Tamil Nadu Prohibition of Harassment of Women Act, 1998). நீங்களே சொல்லுங்கள், அவர் எந்தப் பெண்ணை செக்ஸ் கொடுமை செய்தார்?

இதில் நகைமுறண் என்ன தெரியுமா? இந்தச் சட்டம் போடப்பட்டது சரிகா ஷா என்னும் எதிராஜ் கல்லூரி மாணவி 1998-ல் சிலரால் கடுமையாகத் தாக்கப்பட்டு இறந்து போனதன் பிறகு. அது போன்ற வெளிப்படையான தாக்குதல்கள் பெண்களுக்கு பொது இடங்களில் நடக்கக் கூடாது என்பதற்காகப் போடப்பட்ட கடுமையான சட்டம் அது. ஆனால் அன்று நிகழ்ந்தது போல் ஈவ்டீசிங் தாக்குதல்களுக்கு உண்மையிலேயே உட்படுத்தப்பட்ட அப்பாவிப் பெண்களுக்கு இந்தச் சட்டம் உதவுகிறதோ இல்லையோ, அரசியல் காரணங்களுக்காக சிலரைக் கைது செய்யவும், சில பெண்கள் ஆண்களைப் பழி வாங்குவதற்கு ஏதுவாகவும் தான் இது பயன்படுத்தப் படுகிறது.

ஏற்கனவே பெண்களுக்கு எதிரான இதுபோன்ற நடவடிக்கைகளைத் தண்டிப்பதற்கு இ.பி.கோ 354, 509, 294 என்னும் சட்டப் பிரிவுகள் இருக்கின்றன. இவைகளைக் கொண்டு இத்தகைய குற்றங்களைப் புரிவோர்களைக் கடுமையாகத் தண்டிக்க இயலும். ஆனால் நம் நாட்டில் பெண்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களைக் கையிலெடுத்தால் போதும். உடனே அரசியல்வாதிகளும், பெண்ணியவாதிகளும், வக்கீல்களும், நீதிபதிகளும் சேர்ந்து "சட்டங்களை இன்னும் கடுமையாக்க வேண்டும்" என்று கூக்குரலிடுவார்கள். ஒரே இறைச்சலாக இருக்கும். உடனே ஒரு knee- jerk reaction கொடுத்து, ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கடுக்காக ஒரே வித குற்றங்கள் பெயரைச் சொல்லி மேன்மேலும் கடுமையாக்கப்பட்ட பல சட்டங்களை இயற்றி விடுவார்கள். இதுதான் நம் நாட்டில் இருக்கும் நடைமுறை. இதுபோன்ற ஆக்டபஸ் சட்டங்கள்தான், கெடுமதிப் பெண்களுக்கும், அவர்களை வழி நடத்தும் வக்கீல்களுக்கும் நல்ல அறுவடைக் களமாக அமைகிறது. இந்தச் சட்டத்தின் உட்கூறுகளைக் கவனியுங்கள்:

The Tamil Nadu Prohibition of Harassment of Women Act defines public sexual harassment as harassment by a man, including any indecent conduct, which could cause or causes intimidation, shame, fear or embarrassment, including the threat or actual use of force.

இச்சட்டத்தின் இன்னொரு கொடுங்கோன்மைப் பகுதி என்னவென்றால் குற்றம் சாட்டப்பட்டவன் தான் தன்னை நிரபராதி என்று நிரூபிக்க வேண்டும். அதாவது குற்றம் சாட்டப்பட்டவுடனேயே (அதாவது ஒரு பெண் புகார் கொடுத்தவுடனேயே) அந்த ஆண் குற்றம் புரிந்தவனாகக் கருதப்படுவான். பிராசிக்யூஷன் நிரூபிக்க வேண்டிய தேவை இல்லை. ஆனால் அவன் அக்குற்றத்தை தான் செய்யவில்லை என்று அவன்தான் சாட்சிகளைக் கொண்டு நிரூபிக்க வேண்டும் (the onus of proving innocence lies on those accused). இதுதான் ஆண்களுக்கு எதிரான பலவிதச் சட்டங்களின் அடிப்படைக் கட்டமைப்பு!

இப்போது இந்த தமிழ்நாட்டு பெண்களுக்கு எதிரான செக்ஸ் கொடுமைச் சட்டத்தின் நடைமுறைப் பயன்பாட்டுக்கு வருவோம். இன்றைக்கு பொது இடங்களில் ஆண்களும் பெண்களும் கலந்துதான் நடமாட வேண்டியிருக்கிறது. லிஃப்ட், துணிக்கடை, சினிமா தியேட்டர், நடைபாதை, ஷாப்பிங் மால், மற்றும் அரசு அலுவலங்கள் இவற்றிலெல்லாம் அன்றாடம் ஆண்களும் பெண்களும் குறுகிய இடங்களில் செல்ல வேண்டியிருக்கிறது. அப்போது ஆணின் கை அருகிலிருக்கும் பெண்ணின் மேல் படும். உடனே அவள் அந்த ஆணின்மீது இந்த செக்ஸ் குற்றத்தை சுமத்தலாம். "அப்படியெல்லாம் பெண்கள் துணிந்து செக்ஸ் புகார் கொடுக்கத் தயங்கமட்டார்களா" என்று நீங்கள் ஐயப்பட்டால் உங்களுக்கு இந்தக் காலப் பெண்களைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை என்று பொருள். அவர்கள் இன்றைக்கு எந்தவித பொய்ப் புகார் கொடுக்கவும் ரெடி. ஏனென்றால் அவர்களுக்கு அதனால் முன்காலம் போல் சமூகத்தில் கெட்ட பெயரோ அவமானமோ ஏற்படுவது இல்லை. மேலும் இக்காலப் பெண்கள் பெரிசுகளின் அயிப்பிராயங்களைப்பற்றிக் கவலைப்படுவதும் இல்லை. அதுபோல் புகார் கொடுக்கும் பெண் ஒரு ஹீரோயினாக, ஆண்களை எதிர்த்துப் போராடத் துணிந்த வீராங்கனையாக கொண்டாடப் படுவார்!

சில நாட்களுக்கு முன் ஒரு இசையரங்கில் இரு நிகழ்ச்சிகளுக்குமிடையே எல்லோரும் கேண்டீனுக்கு எழுந்து செல்லும் போது, ஒரு கிழவனார் தட்டுத்தடுமாறி இரு பக்க இருக்கைகளுக்கு இடையே நடந்து சென்று கொண்டிருந்தார். எதிலோ கால் இடறித் தத்தளித்து தன் முன்னால் சென்று கொண்டிருந்த பெண்மணியின் (இவரும் நடுத்தர வயதுதான்) தோளில் கைவைத்து தாங்கி நின்று விட்டார். அவ்வளவுதான். அந்த பாப் தலைப் பெண்மணி திரும்பி அந்த கிழவனைப் பார்த்து கண்டபடி ஆங்கிலத்தில் உரத்த குரலில் ஏசத் தொடக்கி விட்டார். "உன்னை ஏழு சட்டப் பிரிவுகளில் உள்ளே தள்ளிவிடுவேன்" என்று மிரட்டவும் செய்தார். இதனால் அரண்டு போன கிழவர், "அம்மணீ, எனக்கு முடக்கு வாதம் உள்ளது. கீழே விழ இருந்தேன். என்னையறியாமல் உங்கள் மேல் கைவைத்துவிட்டேன். மன்னித்து விடுங்கள்" என்று கம்மிய குரலில் கெஞ்சுகிறார். ஊஹுங், அந்த மேட்டுக்குடிப் பெண்மணி விடுவதாக இல்லை. சுற்றிலும் நூற்றுக் கணக்கான ஆண்களும் பெண்களும் இருந்தனர். அனைவரும் நமக்கெதுக்கு வம்பு என்று கம்மென்றிருந்தனர். அந்தக் கிழவனார் கூனிக் குறுகி தட்டுத் தடுமாறி வெளியே சென்றார். ஒருவர் கூட உதவவில்லை. இந்த நிலை உங்கள் ஒவ்வொருவருக்கும் நேரலாம். லிஃப்டில் அடைத்துக் கொண்டு செல்லும் நேரத்தில் ஒரு மூலையில் இருக்கும் தளத்தெரிவு பட்டனை அழுத்துவதற்காக நீங்கள் அவசரமாக கைநீட்டும் போது அங்கு நின்று கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் மீது உங்கள் கரம் பட்டுவிடலாம். உடனே அவர் உங்கள் மீது இந்தச் சட்டத்தை எவிவிடும் சாத்தியம் உள்ளது. டேஞ்சர் ஐயா! ஆதலால் பொது இடங்களில் பெண்களைக் கண்டால் குறைந்த பட்சம் 10 அடியாவது இடைவெளி விட்டு நில்லுங்கள். உருப்படியாக வீடு வந்து சேரலாம்!

இப்போது நேற்றைய நிகழ்வுக்கு வருவோம். எப்படியெல்லாம் இந்தச் சட்டம் ஆண்களுக்கு எதிராக எய்யப்பட்டு ஆண்களை முழுதாக காயடித்து சமூகத்தில் இரண்டாம் தரப் பிரஜையாக மாற்றப் பயன் படுகிறது என்று பாருங்கள். திருமண நாளன்று இன்னொருவனுடன் ஓடும் புதுமைப் பெண்களைத் தண்டிக்க ஒரு சட்டமும் இல்லை. அந்த கணவனாகப் போகிறவன் மாலையும் கையுமாக "பே பே" என்று விழித்துக் கொண்டு நிற்கிறான். மணப்பெண்ணோ இன்னொருவனுடன் அன்று விடியற்காலையே "ட்ரியோ" என்று ஓடிவிட்டாள். போலீசார் பிடித்து வந்தால், "எனக்கு இவனுடன் போவதுதான் இஷ்டம்" என்கிறாள். அவளை விட்டு விடுகிறார்கள். அந்த ஆண் பட்ட அவமானம், தலை குனிவு இதெல்லாம் பற்றி சமூகத்திற்குக் கவலையில்லை. சட்டத்திலும் நிவாரணமில்லை. அத்துணை கேவலமான நிலைமை!

இந்த நாட்டில் ஒரு ஆண் பிறந்தவுடனேயே ஒரு கிரிமினல் குற்றவாளியாகிறான். அவனைப் பெற்றெடுத்த குற்றத்தை அவனுடைய பெற்றோர்களும் புரிகிறார்கள். அதற்கான தண்டனை நிச்சயம் உண்டு. It is only a question of time. சம்பிரதாயமான முறையில் குற்றம் பதிவு செய்யப்பட சில ஆண்டுகள் பிடிக்கலாம். அவ்வளவே!

இனி செய்தி:

சென்னை, அக்.28- 2009. தினத்தந்தி

நள்ளிரவில் ஜி.ஆர்.டி. நட்சத்திர ஓட்டல் அருகே நடுரோட்டில் காதலர்கள் இருவர் கடும் சண்டை போட்டபடி இருந்தனர். காதலர் காதலியை சரமாரியாக அடித்து உதைத்தார். காதலி கதறி அழுதார். இந்த காட்சியை பார்த்த பொதுமக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்து விட்டனர்.

போலீஸ் விசாரணையில் அந்த பெண்ணின் பெயர் கலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்றும், எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் அசோக்நகரில் வசிப்பதாகவும் கூறினார். அவருடன் வந்த வாலிபரின் பெயர் கார்த்தீஸ் (32) என்பதாகும். என்ஜினீயரிங் பட்டதாரியான கார்த்தீஸ் தியாகராயநகரில் கால்சென்டர் நடத்தி வருகிறார்.

கார்த்தீசும், கலாவும் உயிருக்குயிராக காதலித்து வந்துள்ளனர். `அலைபாயுதே' சினிமா பாணியில் இருவரும் முதலில் மோதிரம் மாற்றி ரகசிய திருமணம் செய்துள்ளனர். இந்த விஷயம் தெரிந்து கலாவின் பெற்றோர் ஏற்றுக்கொண்டனர். கார்த்தீசின் தாயார் இதை கடுமையாக எதிர்த்தார். பின்னர் அவரும் திருமணத்துக்கு சம்மதித்தார். இருவரும் வெவ்வேறு சாதி என்றாலும் காதலில் இணைந்து ஊரறிய திருமணத்துக்கு தயாரானார்கள்.

இந்த நிலையில், கலாவை ஊரறிய திருமணம் செய்துகொள்ள கார்த்தீஸ் திடீரென்று மறுத்தார். இதற்கு நியாயம் கேட்க சென்றபோதுதான், கலாவுக்கும், கார்த்தீசுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் கார்த்தீஸ் கலாவை அடித்து உதைத்தது தெரியவந்தது. போலீசார் கார்த்தீசிடமும், கலாவிடமும் கவுன்சிலிங் மூலம் பேசினார்கள். கார்த்தீஸ் இல்லாமல் என்னால் வாழ முடியாது என்று கலா சொன்னார்.

ஆனால் கார்த்தீஸோ, படையப்பா படத்தில் வரும் நீலாம்பரி போல கலாதான் என்னை விரட்டி, விரட்டி காதலித்து ரகசிய திருமணத்தையும் என்னோடு நடத்திக்கொண்டார். நீலாம்பரி போன்ற குணம் கொண்ட அவரோடு நான் வாழமாட்டேன் என்று பிடிவாதமாக கூறினார். அப்படியானால் ஜெயிலுக்கு போகவேண்டும் என்று போலீசார் கூறினார்கள். ஜெயிலுக்கு போகவும் தயார், ஆனால் கலாவோடு வாழமாட்டேன் என்று கார்த்தீஸ் கூறினார்.

இதனால் போலீசார் வேறு வழியில்லாமல் கலாவிடம் புகார் வாங்கி பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் கார்த்தீசை நேற்று கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தும்வரை போலீசார் சமாதானம் பேசி பார்த்தனர்.

கலாவும், "கார்த்தீசை ஜெயிலுக்கு அனுப்புவது எனது நோக்கமல்ல என்றும், அவர்மீது அளவில்லாத காதல் கொண்டுள்ளேன், அவர்தான் என்றைக்கும் எனது கணவர், அவர் ஜெயிலுக்கு போய் திருந்தி வந்தால் நல்லபடியாக அவரோடு வாழ தயார்" என்றும் போலீசாரிடம் கூறினார்.

அதன்பிறகு வேறு வழியில்லாமல் கார்த்தீஸ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் புழல் ஜெயிலுக்கு அனுப்பப்பட்டார். கார்த்தீஸ் மீது போட்டுள்ள வழக்கு தற்செயலாக நடந்துவிட்டது என்றும், அது நிரந்தரம் அல்ல என்றும், கண்டிப்பாக அவரோடு வாழ்ந்தே தீருவேன் என்றும் கலா போலீசாரிடம் உறுதிபட கூறினார்.

=============

இப்போதெல்லாம் பல ஆண்கள் இதுபோன்ற பெண்களுடன் வாழ்வதைவிட சிறைவாசமே மேல் என்னும் முடிவை எடுக்கின்றனர். இதேபோல் தன்னுடன் வாழாத முன்னாள் மனைவிக்கு அநியாயமாக பணம் கொடுக்கச் சொல்லி வற்புறுத்தும் நீதிமன்ற ஆணைகளுக்கும் பணியாமல் சிறை செல்லவும் இக்காலக் கணவர்கள் தயாராக இருக்கின்றனர்!