காதல் திருமணம் செய்த 3 நாளில் மனைவியை பிரிந்து சென்ற கணவன் கைது
புவனகிரி,அக்.30- 2009. தினத்தந்தி
கடலூர் மாவட்டம் புவன கிரி அருகே உள்ள கண்ணங்குடி கிராமத்தை சேர்ந்தவர் பிச்சைப் பிள்ளை. இவரது மகள் ஜெயந்தி (வயது 21).இவர் புவனகிரி யூனியன் அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக தற்காலிகமாக வேலை பார்த்து வந்தார்.
தற்போது கீரப்பாளையம் மேட்டுத்தெருவில் குடியிருந்து வருகிறார்.அப்போது அதே தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சரவணன்(21) என்பவருக்கும் ,ஜெயந்திக்கும் பழக்கம் ஏற்பட்டது.இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.அதையடுத்து 2 பேரும் வீட்டை விட்டு வெளி யேறி அங்குள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
கைது
அதன் பிறகு 3 நாட்கள் ஜெயந்தியோடு குடும்பம் நடத்திய சரவணன் பெருமாத்தூரில் உள்ள அவரது சித்தி வீட்டில் விட்டு சென்றார்.போகும் போது தாலியையும் கழற்றி வாங்கி கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.அதை தொடர்ந்து சரவணன் அங்கு செல்லவில்லை. இதனால் தான் ஏமாற்றப் பட்டதை அறிந்த ஜெயந்தி இது பற்றி புவனகிரி போலீசில் புகார் செய்தார்.அதில், தன்னுடைய கணவனை சேர்த்து வைக்குமாறு புகார் கூறினார்.அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.மேலும் சரவணனை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.விசாரணையில் சரவணன் ஜெயந்தியோடு வாழ மறுத்துவிட்டார். அதையடுத்து சரவணனை போலீசார் கைது செய்தனர்.
==================
திருமணம் செய்து கொண்டால் கட்டாயம் மனைவியின் புகாரின் பேரில் எல்லா கணவன்மார்களும் ஒரு நாள் கைது ஆகப் போவது நிச்சயம். சிலருக்கு உடனே சிறப்பு நடக்கும், பலருக்கு 14 ஆண்டுகள் கழித்து நிகழும். ஐயமிருந்தால் "என் வயதான பெற்றோர் நம் வீட்டில் நம்முடன் சேர்ந்து வாழப் போகிறார்கள்" என்று உங்கள் ஆசை மனைவியிடம் சொல்லிப் பாருங்களேன்!
மனைவி ஓடலாம், ஆனால் கணவன் ஓடினால் கைது ஆவான்
குறிச்சொற்கள் 498a, biased laws, அநீதி, ஆண்பாவம், பொய் வழக்கு
Subscribe to:
Post Comments (Atom)
2 மறுமொழிகள்:
தினமும் செய்தித்தாள்களில் வரும் செய்தியை பார்த்தால் கள்ளத்தொடர்பு, பொய் வழக்குகள் போன்றவையே முழுமையாய் இருக்கிறது. இது போன்ற விஷயங்களில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியே பொய் வழக்குகள் பற்றி தெளிவாக கூறிய போதும், இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க அரசாங்கமோ, நீதித்துறையோ, போலீசோ முயற்சிக்காமல், பணம் ஒன்றே குறிக்கொளாக்கொண்டு நாட்டை அழித்து கொண்டிருக்கிறார்கள். அட கடவுளே ! நீ பூமிக்கு வந்து அப்பாவி ஆண்களை காப்பாற்ற மாட்டாயா!
//"மனைவி ஓடலாம், ஆனால் கணவன் ஓடினால் கைது ஆவான்"//
என்ன கொடுமை சார்!
உங்கள் கருத்தைத் தெரிவிக்க