ஆண் உயிரின் விலை என்ன?

நம் நாட்டில் திருமணமான ஆண்களின் தற்கொலை, பெண்கள் தற்கொலை எண்ணிக்கையைவிட இரண்டு மடங்கு என்று அரசின் தரவுகளே (தேசீய குற்றத் தரவுகள் மையம் (National Crime Records Bureau)) தெரிவிக்கின்றன. (சுட்டி) ஆனாலும் மணமான பெண்கள்தான் பெருமளவு தற்கொலை செய்து கொள்வது போன்ற ஒரு பொய்யான தோற்றத்தை சில பெண்ணியவாதிகளும், அவர்கள் சார்ந்த சில என்.ஜி.ஓ இயக்கங்களும் தங்கள் சுயநலத்திற்காகப் பரப்பி வருகின்றன. இந்த மாயத் தோற்றம் ஊடங்கள் மூலமும் திட்டமிட்டுப் பரப்பப்படுவதால் இதை (தமிழக சுகாதார அமைச்சர் உட்பட) பலர் அப்படியே நம்பி விடுகிறார்கள்.

மேலும் ஊடகங்களுக்கும் இது உதவியாக இருக்கிறது. ஏனெனில், "இளம் பெண் தற்கொலை", "அழகி தற்கொலை", "மாமியார் கொடுமையால் இளம் மனைவி தற்கொலை" - இப்படியெல்லாம் வெளிவந்தால்தான் அது பரபரப்பான நியூஸ்! "ஆண் தற்கொலை", "கணவன் மாண்டான்" என்று எழுதினால் ம்ஹூங், அதை யாரும் சீந்த மாட்டார்கள். சாதாரணமாகவே செய்தித்தாள்களில் செய்தி வெளியாவதில் ஒரு அமைப்புமுறை (pattern) இருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். ஒரு சம்பவத்தில் 10 பேர் மாண்டால், "3 இளம் பெண்கள் உட்பட 10 பேர் பலி" என்றுதான் எழுதுவார்கள்!

இத்தகைய பொய்மை பரவுவதால் பலர் ஆதாயம் அடைகின்றனர். "ஐயகோ, இந்த நாட்டில் இன்னமும் ஆயிரக் கணக்கான பெண்கள் ஆண்களின் கைகளில் சிக்கி கொடுமைப் படுவதால் தற்கொலை செய்துகொண்டு மடிகிறார்களே" என்னும் கூப்பாட்டை அணையாமல் ஊதிக் கொண்டிருந்தால்தான் ஐ.நாவைச் சார்ந்த UNIFEM மற்றும் மக்கள் வரிப்பணத்திலிருந்து கணிசமான துகை இந்த நபர்கள் கையில் சிக்கும்! அதை வைத்து பெண்களின் துயர் துடைப்பதாகச் சொல்லிக்கொண்டு, சில மேட்டுக்குடிப் பெண்கள் "பப்"பிற்குச் சென்று தண்ணி போடும் உரிமைக்காகவும், ஏர் ஹோஸ்டஸ்கள் பொய் வழக்கு போடும் உரிமைக்காகவும், குடும்பப் பெண்களை தங்கள் வாழ்வைச் சிதைத்துக் கொண்டு கோர்ட்டு வராண்டாவில் லோலோவென்று அலைய வைக்கவும் போராடுகிறோம் என்று சிலவுக் கணக்கு எழுதிக் கொண்டிருக்கலாம்!!

ஆணின் உயிரின் மதிப்பை அறிய இந்த வீடியோவைப் பாருங்கள்:



(நன்றி: "பெண்கள் நாட்டின் கண்கள்")

சரி. இப்போது இந்த அப்பாவி ஆணின் தற்கொலைக் கதையை வாசியுங்கள்:

திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை சந்தித்தபின் புதுமாப்பிள்ளை `திடீர்' தற்கொலை

தாயாருக்கு உருக்கமான `எஸ்.எம்.எஸ்.'

தாம்பரம், அக்.31- 2009. செய்தி - தினத்தந்தி

சென்னையை அடுத்த குரோம்பேட்டை சாஸ்திரி காலனியை சேர்ந்தவர் யோமஹாசன் (வயது 27). பி.பி.ஏ. பட்டதாரியான இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார்.

இவருக்கு சமீபத்தில் உறவினர் பெண்ணை திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை சந்தித்து விட்டு நேற்று முன்தினம் இரவு வந்த யோமஹாசன் வீட்டில் சோகமாக இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் வீட்டில் படுக்கையறையில் தூங்க சென்றவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

யோமஹாசன், இறப்பதற்கு முன்பு தனது செல்போனில் தாயாருக்கு எஸ்.எம்.எஸ். டைப் செய்து வைத்திருந்தார். அதில் `எனது சாவுக்கு யாரும் காரணமல்ல, எனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணிற்கு நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுங்கள்' என்று அதில் இருந்தது.

யோமஹாசன் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது மர்மமாக உள்ளது. இது தொடர்பாக குரோம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

2 மறுமொழிகள்:

Anonymous said...

/ஆண் உயிரின் விலை என்ன?/


செல்லா காசு :( குட்ட குட்ட குனிதல், நிலமை இதுதான்

')) said...

//ஆண் உயிரின் விலை என்ன? //

இதெ அந்த பெண் தற்கொலைசெய்திருந்தால் அந்த மணமகன் வீட்டாரின் ஒட்டுமொத்த குடும்பமும் புழல் சிறையை சுற்றிபார்க சென்றிருக்கும்.. கடவுளே! நொய்வந்து செத்தால் கூட வரதட்சணை கொடுமை என்று ISI முத்திரை குத்தப்பட்டு உள்ளே தள்ளிவிடுவார்கள்... என்ன கொடுமை சார் இது???????