ஆண்களை அழிக்க இன்னொரு ஆயுதம்!

தினமலர் செய்தி ஆசிரியர் லெனின் எந்தக் குற்றத்தைப் புரிந்ததாக அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தார்கள் தெரியுமா? "தமிழ்நாடு பெண்களை செக்ஸ் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டம் 1998" (Tamil Nadu Prohibition of Harassment of Women Act, 1998). நீங்களே சொல்லுங்கள், அவர் எந்தப் பெண்ணை செக்ஸ் கொடுமை செய்தார்?

இதில் நகைமுறண் என்ன தெரியுமா? இந்தச் சட்டம் போடப்பட்டது சரிகா ஷா என்னும் எதிராஜ் கல்லூரி மாணவி 1998-ல் சிலரால் கடுமையாகத் தாக்கப்பட்டு இறந்து போனதன் பிறகு. அது போன்ற வெளிப்படையான தாக்குதல்கள் பெண்களுக்கு பொது இடங்களில் நடக்கக் கூடாது என்பதற்காகப் போடப்பட்ட கடுமையான சட்டம் அது. ஆனால் அன்று நிகழ்ந்தது போல் ஈவ்டீசிங் தாக்குதல்களுக்கு உண்மையிலேயே உட்படுத்தப்பட்ட அப்பாவிப் பெண்களுக்கு இந்தச் சட்டம் உதவுகிறதோ இல்லையோ, அரசியல் காரணங்களுக்காக சிலரைக் கைது செய்யவும், சில பெண்கள் ஆண்களைப் பழி வாங்குவதற்கு ஏதுவாகவும் தான் இது பயன்படுத்தப் படுகிறது.

ஏற்கனவே பெண்களுக்கு எதிரான இதுபோன்ற நடவடிக்கைகளைத் தண்டிப்பதற்கு இ.பி.கோ 354, 509, 294 என்னும் சட்டப் பிரிவுகள் இருக்கின்றன. இவைகளைக் கொண்டு இத்தகைய குற்றங்களைப் புரிவோர்களைக் கடுமையாகத் தண்டிக்க இயலும். ஆனால் நம் நாட்டில் பெண்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களைக் கையிலெடுத்தால் போதும். உடனே அரசியல்வாதிகளும், பெண்ணியவாதிகளும், வக்கீல்களும், நீதிபதிகளும் சேர்ந்து "சட்டங்களை இன்னும் கடுமையாக்க வேண்டும்" என்று கூக்குரலிடுவார்கள். ஒரே இறைச்சலாக இருக்கும். உடனே ஒரு knee- jerk reaction கொடுத்து, ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கடுக்காக ஒரே வித குற்றங்கள் பெயரைச் சொல்லி மேன்மேலும் கடுமையாக்கப்பட்ட பல சட்டங்களை இயற்றி விடுவார்கள். இதுதான் நம் நாட்டில் இருக்கும் நடைமுறை. இதுபோன்ற ஆக்டபஸ் சட்டங்கள்தான், கெடுமதிப் பெண்களுக்கும், அவர்களை வழி நடத்தும் வக்கீல்களுக்கும் நல்ல அறுவடைக் களமாக அமைகிறது. இந்தச் சட்டத்தின் உட்கூறுகளைக் கவனியுங்கள்:

The Tamil Nadu Prohibition of Harassment of Women Act defines public sexual harassment as harassment by a man, including any indecent conduct, which could cause or causes intimidation, shame, fear or embarrassment, including the threat or actual use of force.

இச்சட்டத்தின் இன்னொரு கொடுங்கோன்மைப் பகுதி என்னவென்றால் குற்றம் சாட்டப்பட்டவன் தான் தன்னை நிரபராதி என்று நிரூபிக்க வேண்டும். அதாவது குற்றம் சாட்டப்பட்டவுடனேயே (அதாவது ஒரு பெண் புகார் கொடுத்தவுடனேயே) அந்த ஆண் குற்றம் புரிந்தவனாகக் கருதப்படுவான். பிராசிக்யூஷன் நிரூபிக்க வேண்டிய தேவை இல்லை. ஆனால் அவன் அக்குற்றத்தை தான் செய்யவில்லை என்று அவன்தான் சாட்சிகளைக் கொண்டு நிரூபிக்க வேண்டும் (the onus of proving innocence lies on those accused). இதுதான் ஆண்களுக்கு எதிரான பலவிதச் சட்டங்களின் அடிப்படைக் கட்டமைப்பு!

இப்போது இந்த தமிழ்நாட்டு பெண்களுக்கு எதிரான செக்ஸ் கொடுமைச் சட்டத்தின் நடைமுறைப் பயன்பாட்டுக்கு வருவோம். இன்றைக்கு பொது இடங்களில் ஆண்களும் பெண்களும் கலந்துதான் நடமாட வேண்டியிருக்கிறது. லிஃப்ட், துணிக்கடை, சினிமா தியேட்டர், நடைபாதை, ஷாப்பிங் மால், மற்றும் அரசு அலுவலங்கள் இவற்றிலெல்லாம் அன்றாடம் ஆண்களும் பெண்களும் குறுகிய இடங்களில் செல்ல வேண்டியிருக்கிறது. அப்போது ஆணின் கை அருகிலிருக்கும் பெண்ணின் மேல் படும். உடனே அவள் அந்த ஆணின்மீது இந்த செக்ஸ் குற்றத்தை சுமத்தலாம். "அப்படியெல்லாம் பெண்கள் துணிந்து செக்ஸ் புகார் கொடுக்கத் தயங்கமட்டார்களா" என்று நீங்கள் ஐயப்பட்டால் உங்களுக்கு இந்தக் காலப் பெண்களைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை என்று பொருள். அவர்கள் இன்றைக்கு எந்தவித பொய்ப் புகார் கொடுக்கவும் ரெடி. ஏனென்றால் அவர்களுக்கு அதனால் முன்காலம் போல் சமூகத்தில் கெட்ட பெயரோ அவமானமோ ஏற்படுவது இல்லை. மேலும் இக்காலப் பெண்கள் பெரிசுகளின் அயிப்பிராயங்களைப்பற்றிக் கவலைப்படுவதும் இல்லை. அதுபோல் புகார் கொடுக்கும் பெண் ஒரு ஹீரோயினாக, ஆண்களை எதிர்த்துப் போராடத் துணிந்த வீராங்கனையாக கொண்டாடப் படுவார்!

சில நாட்களுக்கு முன் ஒரு இசையரங்கில் இரு நிகழ்ச்சிகளுக்குமிடையே எல்லோரும் கேண்டீனுக்கு எழுந்து செல்லும் போது, ஒரு கிழவனார் தட்டுத்தடுமாறி இரு பக்க இருக்கைகளுக்கு இடையே நடந்து சென்று கொண்டிருந்தார். எதிலோ கால் இடறித் தத்தளித்து தன் முன்னால் சென்று கொண்டிருந்த பெண்மணியின் (இவரும் நடுத்தர வயதுதான்) தோளில் கைவைத்து தாங்கி நின்று விட்டார். அவ்வளவுதான். அந்த பாப் தலைப் பெண்மணி திரும்பி அந்த கிழவனைப் பார்த்து கண்டபடி ஆங்கிலத்தில் உரத்த குரலில் ஏசத் தொடக்கி விட்டார். "உன்னை ஏழு சட்டப் பிரிவுகளில் உள்ளே தள்ளிவிடுவேன்" என்று மிரட்டவும் செய்தார். இதனால் அரண்டு போன கிழவர், "அம்மணீ, எனக்கு முடக்கு வாதம் உள்ளது. கீழே விழ இருந்தேன். என்னையறியாமல் உங்கள் மேல் கைவைத்துவிட்டேன். மன்னித்து விடுங்கள்" என்று கம்மிய குரலில் கெஞ்சுகிறார். ஊஹுங், அந்த மேட்டுக்குடிப் பெண்மணி விடுவதாக இல்லை. சுற்றிலும் நூற்றுக் கணக்கான ஆண்களும் பெண்களும் இருந்தனர். அனைவரும் நமக்கெதுக்கு வம்பு என்று கம்மென்றிருந்தனர். அந்தக் கிழவனார் கூனிக் குறுகி தட்டுத் தடுமாறி வெளியே சென்றார். ஒருவர் கூட உதவவில்லை. இந்த நிலை உங்கள் ஒவ்வொருவருக்கும் நேரலாம். லிஃப்டில் அடைத்துக் கொண்டு செல்லும் நேரத்தில் ஒரு மூலையில் இருக்கும் தளத்தெரிவு பட்டனை அழுத்துவதற்காக நீங்கள் அவசரமாக கைநீட்டும் போது அங்கு நின்று கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் மீது உங்கள் கரம் பட்டுவிடலாம். உடனே அவர் உங்கள் மீது இந்தச் சட்டத்தை எவிவிடும் சாத்தியம் உள்ளது. டேஞ்சர் ஐயா! ஆதலால் பொது இடங்களில் பெண்களைக் கண்டால் குறைந்த பட்சம் 10 அடியாவது இடைவெளி விட்டு நில்லுங்கள். உருப்படியாக வீடு வந்து சேரலாம்!

இப்போது நேற்றைய நிகழ்வுக்கு வருவோம். எப்படியெல்லாம் இந்தச் சட்டம் ஆண்களுக்கு எதிராக எய்யப்பட்டு ஆண்களை முழுதாக காயடித்து சமூகத்தில் இரண்டாம் தரப் பிரஜையாக மாற்றப் பயன் படுகிறது என்று பாருங்கள். திருமண நாளன்று இன்னொருவனுடன் ஓடும் புதுமைப் பெண்களைத் தண்டிக்க ஒரு சட்டமும் இல்லை. அந்த கணவனாகப் போகிறவன் மாலையும் கையுமாக "பே பே" என்று விழித்துக் கொண்டு நிற்கிறான். மணப்பெண்ணோ இன்னொருவனுடன் அன்று விடியற்காலையே "ட்ரியோ" என்று ஓடிவிட்டாள். போலீசார் பிடித்து வந்தால், "எனக்கு இவனுடன் போவதுதான் இஷ்டம்" என்கிறாள். அவளை விட்டு விடுகிறார்கள். அந்த ஆண் பட்ட அவமானம், தலை குனிவு இதெல்லாம் பற்றி சமூகத்திற்குக் கவலையில்லை. சட்டத்திலும் நிவாரணமில்லை. அத்துணை கேவலமான நிலைமை!

இந்த நாட்டில் ஒரு ஆண் பிறந்தவுடனேயே ஒரு கிரிமினல் குற்றவாளியாகிறான். அவனைப் பெற்றெடுத்த குற்றத்தை அவனுடைய பெற்றோர்களும் புரிகிறார்கள். அதற்கான தண்டனை நிச்சயம் உண்டு. It is only a question of time. சம்பிரதாயமான முறையில் குற்றம் பதிவு செய்யப்பட சில ஆண்டுகள் பிடிக்கலாம். அவ்வளவே!

இனி செய்தி:

சென்னை, அக்.28- 2009. தினத்தந்தி

நள்ளிரவில் ஜி.ஆர்.டி. நட்சத்திர ஓட்டல் அருகே நடுரோட்டில் காதலர்கள் இருவர் கடும் சண்டை போட்டபடி இருந்தனர். காதலர் காதலியை சரமாரியாக அடித்து உதைத்தார். காதலி கதறி அழுதார். இந்த காட்சியை பார்த்த பொதுமக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்து விட்டனர்.

போலீஸ் விசாரணையில் அந்த பெண்ணின் பெயர் கலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்றும், எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் அசோக்நகரில் வசிப்பதாகவும் கூறினார். அவருடன் வந்த வாலிபரின் பெயர் கார்த்தீஸ் (32) என்பதாகும். என்ஜினீயரிங் பட்டதாரியான கார்த்தீஸ் தியாகராயநகரில் கால்சென்டர் நடத்தி வருகிறார்.

கார்த்தீசும், கலாவும் உயிருக்குயிராக காதலித்து வந்துள்ளனர். `அலைபாயுதே' சினிமா பாணியில் இருவரும் முதலில் மோதிரம் மாற்றி ரகசிய திருமணம் செய்துள்ளனர். இந்த விஷயம் தெரிந்து கலாவின் பெற்றோர் ஏற்றுக்கொண்டனர். கார்த்தீசின் தாயார் இதை கடுமையாக எதிர்த்தார். பின்னர் அவரும் திருமணத்துக்கு சம்மதித்தார். இருவரும் வெவ்வேறு சாதி என்றாலும் காதலில் இணைந்து ஊரறிய திருமணத்துக்கு தயாரானார்கள்.

இந்த நிலையில், கலாவை ஊரறிய திருமணம் செய்துகொள்ள கார்த்தீஸ் திடீரென்று மறுத்தார். இதற்கு நியாயம் கேட்க சென்றபோதுதான், கலாவுக்கும், கார்த்தீசுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் கார்த்தீஸ் கலாவை அடித்து உதைத்தது தெரியவந்தது. போலீசார் கார்த்தீசிடமும், கலாவிடமும் கவுன்சிலிங் மூலம் பேசினார்கள். கார்த்தீஸ் இல்லாமல் என்னால் வாழ முடியாது என்று கலா சொன்னார்.

ஆனால் கார்த்தீஸோ, படையப்பா படத்தில் வரும் நீலாம்பரி போல கலாதான் என்னை விரட்டி, விரட்டி காதலித்து ரகசிய திருமணத்தையும் என்னோடு நடத்திக்கொண்டார். நீலாம்பரி போன்ற குணம் கொண்ட அவரோடு நான் வாழமாட்டேன் என்று பிடிவாதமாக கூறினார். அப்படியானால் ஜெயிலுக்கு போகவேண்டும் என்று போலீசார் கூறினார்கள். ஜெயிலுக்கு போகவும் தயார், ஆனால் கலாவோடு வாழமாட்டேன் என்று கார்த்தீஸ் கூறினார்.

இதனால் போலீசார் வேறு வழியில்லாமல் கலாவிடம் புகார் வாங்கி பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் கார்த்தீசை நேற்று கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தும்வரை போலீசார் சமாதானம் பேசி பார்த்தனர்.

கலாவும், "கார்த்தீசை ஜெயிலுக்கு அனுப்புவது எனது நோக்கமல்ல என்றும், அவர்மீது அளவில்லாத காதல் கொண்டுள்ளேன், அவர்தான் என்றைக்கும் எனது கணவர், அவர் ஜெயிலுக்கு போய் திருந்தி வந்தால் நல்லபடியாக அவரோடு வாழ தயார்" என்றும் போலீசாரிடம் கூறினார்.

அதன்பிறகு வேறு வழியில்லாமல் கார்த்தீஸ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் புழல் ஜெயிலுக்கு அனுப்பப்பட்டார். கார்த்தீஸ் மீது போட்டுள்ள வழக்கு தற்செயலாக நடந்துவிட்டது என்றும், அது நிரந்தரம் அல்ல என்றும், கண்டிப்பாக அவரோடு வாழ்ந்தே தீருவேன் என்றும் கலா போலீசாரிடம் உறுதிபட கூறினார்.

=============

இப்போதெல்லாம் பல ஆண்கள் இதுபோன்ற பெண்களுடன் வாழ்வதைவிட சிறைவாசமே மேல் என்னும் முடிவை எடுக்கின்றனர். இதேபோல் தன்னுடன் வாழாத முன்னாள் மனைவிக்கு அநியாயமாக பணம் கொடுக்கச் சொல்லி வற்புறுத்தும் நீதிமன்ற ஆணைகளுக்கும் பணியாமல் சிறை செல்லவும் இக்காலக் கணவர்கள் தயாராக இருக்கின்றனர்!

4 மறுமொழிகள்:

')) said...

உங்கள் இடுகைகளை வாசிக்க அடிவயித்தில இருந்து நெருப்புக் கிளம்புது... இங்க இலங்கையிலும் இவ்வாறான சட்டங்கள் இருக்கோ தெரியவில்லை... கொஞ்சம் பாத்துத்தான் நடக்கவேணும்..

')) said...

இந்தப் பொம்பளைய ஒண்ணும் செய்ய முடியாது. இதையே ஆம்பிளை செய்திருந்தா உடனே அரெஸ்டு தான்!

Bride dumps groom during wedding

28 October 2009. The Times of India

AMBALA: The new-age Indian woman has arrived. A bride from Ambala Cantt on Monday walked out on her groom the moment she set eyes on him after the "jai mala" (garlanding) ceremony, as if, in instant realisation that he wasn’t the man of her dreams. No amount of ranting and raving by the boy and his family or police intervention could bring about a change of heart.

“We tried a lot to persuade Reena but she just wouldn’t listen. She said she didn’t want to marry Dharamvir Singh because she didn’t like him. There was no way we could have forced our will on her,” said the bride’s father, Ramkishan.

')) said...

மதுவதனன் மௌ,

வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

உங்கள் நாட்டில் இதுபோல் இருக்காது என்று நம்புகிறேன்.

இந்தியாவில்தான் ஒநாயும் ஆட்டுக் குட்டியும் கதையைப் போல் எந்தக் காலத்திலோ நடந்ததற்காக இன்னாளைய ஆண்களைப் பழி வாங்குகிறார்கள்.

Anonymous said...

ஆண்கள் பாதுகாப்பிற்கு விரைவில் சட்டம் தேவை. பெண்ணினவாதிகள் கவனிக்க வேண்டிய முக்கிய செய்தி. சும்மா எப்போ பார்த்தாலும் ஆயிரம் வருஷம் கஷ்டப்பட்டோம் என்று சொல்லாமல் சரியான அறியுரை சொல்லுங்க பெண்ணின பெருமைக்கு !