கள்ளக்காதல் - தீபாவளி சிறப்புச் செய்தி!

கள்ளக்காதல்களும் அவற்றின் விளைவால் நம் பெண்குலத்திலகங்கள் செயலாக்கும் கணவன் கொலை, பெற்ற குழந்தைகள் படுகொலை, பெற்றோர் கொலை, தற்கொலை போன்றவை நாள்தோறும் பொங்கிப் பெருகிவரும் வேகத்தைப் பார்த்தால் அனைத்து தினசரி நாளேடுகளும் "கள்ளக்காதல் சிறப்பு மலர்" வெளியிடவேண்டிய கட்டாயம் ஏற்படுமோ என்று தோன்றுகிறது. தவிர, கள்ளக்காதல்களைப் பற்றிய செய்திகளை உடனுக்குடன் மக்களுக்குத் தெரிவிக்க ஏதுவாக ஒரு தனி நாளேடு மற்றும் வாரப்பத்திரிக்கை வெளிவரும் சாத்தியங்கள் உள்ளதாகத் தோன்றுகிறது. நாமும் ஒரு தனி வலைப்பதிவு தொடங்கலாம்!

இந்தக் கள்ளக்காதல் சமாசாரத்தின் வீச்சையும், தாக்கத்தையும் நன்கு அறிந்ததால்தான் ஆச்சி மனோரமா அவர்கள் இதைக் கையிலெடுத்து கணவர்களின் "ஆண்மைக் குறைவு" என்னும் கோஷத்துடன் போராட்டக் களத்தில் குதித்திருக்கிறார்!

மேலும் தேசிய பெண்கள் வாரியமும் (National Commission for Women) கள்ளக்காதலை சட்டபூர்வமாக அங்கீகரிப்பதன் அவசியத்தை உணர்ந்து, அதை நாட்டின் தலையாய பிரச்னையாகக் கருதி, கள்ளக்காதல் மூலமாகப் பிறக்கும் குழந்தைகளுக்கும் (illegitimate children) சேர்த்து அந்தக் குழந்தைகளுக்கு சிறிதும் தொடர்பில்லாத கணவன்தான் படியளக்கவேண்டும்; அது அவனுடைய அடிப்படை கடமைகளில் ஒன்று என்று வரையறுத்து சட்டங்களை இயற்றும்படி அரசுக்கு தாக்கீது அனுப்பியுள்ளது. (Link)

அதேபோல் கள்ளக்காதலைக் காரணம் காட்டி கணவன் விவாகரத்து கேட்டாலும் அவனுக்கு கிட்டுவதில்லை. ஆனால் மனைவி மட்டும் ஜீவனாம்சம், மெயின்டெனென்ஸ் என்று பல வகைகளில் பல சட்டப்பிரிவுகளின் அடிப்படையில் பணம் கேட்டால் உடனே அதை கணவன் கொடுத்தே தீரவேண்டும், இல்லாவிட்டால் சிறைவாசம்; பணம் கைவசம் இல்லாவிட்டால் கிட்னியை விற்றாவது கொடு என்று ஆணையிட்டு விடுவார்கள். திருமணம் என்னும் ஒன்றைச் செய்துகொண்டு விட்டால் ஆணுக்கு கடமைகளும், மனைவிக்கு உரிமைகளும் சுமார் 46 வகை சட்டப் பிரிவுகளின் மூலம் உறுதி செய்யப்படுகின்றன.

உங்களுக்குத் தெரியுமா:

கள்ளக்காதலில் ஈடுபடும் மனைவியை தண்டிக்க இந்திய சட்டங்களில் இடமேயில்லை என்பது!

Women cannot be punished for adultery

இனி, ஒரு புதுவித கள்ளக் காதல் லீலையைப் பற்றிப் படியுங்கள்:-

கள்ளக்காதலால் வந்தவினை - கணவனிடமே ரூ.10 லட்சம் மோசடி

இன்ஜினியர் மனைவி- போலீஸ் ஏட்டு கைது

ஆலந்தூர், அக். 16, 2009. (தினகரன்)

கத்தார் நாட்டில் வேலை செய்யும் இன்ஜினியரின் மனைவிக்கு, போலீஸ் ஏட்டுவுடன் கள்ளக்காதல் ஏற்பட்டதால், கணவரிடமே ரூ.10 லட்சம் மோசடி செய்துள்ளார். இதுபற்றி கணவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், அந்தப் பெண்ணும், போலீஸ் ஏட்டும் கைது செய்யப்பட்டனர்.

பரங்கிமலை கணபதி காலனியை சேர்ந்தவர் சிவஞானம் (50). கத்தார் நாட்டில் இன்ஜினியராக வேலை செய்கிறார். இவர் சென்னை புறநகர் கமிஷனர் ஜாங்கிட்டிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

என் மனைவி மல்லிகா (46). நான் கத்தாரில் இருந்து 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊருக்கு வந்து மனைவி மற்றும் குடும்பத்தினருடன் ஒரு மாதம் தங்கிவிட்டுச் செல்வேன். காரம்பாக்கத்தில் வசிக்கும் முரளிதரன் (46) என்பவரிடம் இருந்து ரூ.18 லட்சத்துக்கு ஒரு இடத்தை வாங்கலாம் என்று என் மனைவி கூறினார். அதனால் முரளிதரனிடம் ரூ.10 லட்சம் அட்வான்ஸ் கொடுத்தேன். அதன்பின் 2007ல் ஊருக்கு மீண்டும் வந்தேன். அப்போது, முரளிதரனை சந்தித்து இடத்தை என் பெயருக்கு பதிவு செய்து தருமாறு கேட்டேன். அதற்கு அவர் தான் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் ஏட்டாக இருப்பதாகவும், விரைவில் ஏற்பாடு செய்கிறேன் என்றும் சாக்குப்போக்கு கூறினார்.

போலீஸ் என்பதால் ஏமாற்ற மாட்டார் என்று நம்பி நான் மீண்டும் கத்தார் நாட்டுக்கு சென்றுவிட்டேன். கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் ஊருக்கு வந்தேன். அப்போது என் மனைவி மல்லிகாவுக்கும் முரளிதரனுக்கும் கள்ளக்காதல் இருப்பது தெரிந்தது. அவர்கள் இருவரும் குடும்பம் நடத்தியதை நேரில் பார்த்து திடுக்கிட்டேன்.

கத்தாரில் இருந்து நான் அனுப்பிய பணத்தையெல்லாம், முரளிதரனுடன் சேர்ந்து செலவழித்து உல்லாசமாக இருந்துள்ளார். மேலும், அந்த இடத்தை மல்லிகா பெயருக்கே அவர் கிரயம் செய்து கொடுத்துள்ளார்.

இப்படி எனக்கு துரோகம் செய்த மனைவி மல்லிகா, போலீஸ் ஏட்டு முரளிதரன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, மனுவில் சிவஞானம் கூறியிருந்தார். அவருக்கு ஆதரவாக மல்லிகாவின் சகோதரர்களும் புகார் கொடுத்தனர்.

இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரிக்க கமிஷனர் உத்தரவிட்டார். அதன்படி உதவி கமிஷனர் நவநீத கிருஷ்ணன், இன்ஸ்பெக்டர்கள் ஆரோக்கிய பிரகாசம், மணி, சப் இன்ஸ்பெக்டர் சாலினி ஆகியோர் வழக்குப் பதிவு செய்து, முரளிதரனையும் மல்லிகாவையும் கைது செய்து, பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.