தாயின் கள்ளக் காதலால் மனமுடைந்த மகன் தற்கொலை

மகளை தன் கள்ளக் காதலனுக்கே மணம் முடித்து வைக்க முயன்ற தாயைத் தடுக்க முடியாததால் மணமுடைந்து தூக்கில் தொங்கினார் மகன். நெல்லை அருகே நாசரேத்தில் இச் சம்பவம் நடந்துள்ளது.

நாசரேத் ஜனகராஜ் தெருவை சேர்ந்தவர் கலைச் செல்வன். இவரது மனைவி செல்லத்தாய் என்ற ராணி. இவர்களுக்கு பாக்கியராஜ் என்றொரு மகன் உள்ளார். கலைச்செல்வனை விட்டு சில ஆண்டுகளுக்குமுன் பிரிந்தார் செல்லத்தாய். பின்னர் தங்கத்துரை என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு லிசா, ஆஷா என்ற இரு மகள்கள் உள்ளனர்.

இதற்கிடையில் மனைவி வேறொருவரை திருமணம் செய்ததால் மனமுடைந்த முதல் கணவர் கலைச்செல்வன் சில ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்துகொண்டார்.

அதன் பிறகு அவரது மகன் பாக்கியராஜ், தாயுடன் இருக்கப் பிடிக்காமல் மதுரையில் உள்ள ஒரு பழைய இரும்பு கடையில் வேலை செய்து வந்தார். 2 மாதத்திற்கு முன்புதான் பாக்கியராஜ் மீண்டும் ஊர் திரும்பினார்.

ஊரில் தனது தாய்க்கு பஞ்சாயத்து கவுன்சிலர் உள்பட பல ஆண்களுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அப்படி கள்ளத் தொடர்பு வைத்திருந்தவர்களில் ஒருவர் செல்லத்தாயின் மகள் லிசாவை தனக்கு திருமணம் செய்து தர கேட்டுள்ளார். அதற்கு செல்லதாயும் சம்மதித்துள்ளார்.

இதற்கு பாக்கியராஜ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்படவே தங்கை லிசா கோபித்துக் கொண்டு வீட்டை விட்டுச் சென்று விட்டாராம். இதனால் மனமுடைந்த பாக்கியராஜ் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து நாசரேத் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
(செய்தி - தட்ஸ்தமிழ்)

==============
இப்போது கள்ளக் காதலையும் அதனைக் கண்டிக்கும் கணவன், தான் பெற்ற குழந்தைகள் மற்றும் பெற்றோரைக் கொலை செய்வதையும் நியாயப் படுத்தி பேசுவது பல பெண்ணியவாதிகளுக்கு ஒரு ஃபேஷனாகப் போய்விட்டது.

அனைத்து கணவன்மார்களும் தத்தம் மனைவிகளை செக்ஸில் முழு திருப்தி செய்ய லாயக்கற்று ஆண்மை போதாதவர்களாக இருக்கிறார்களே, என்ன செய்வது? கள்ளக் காதலர்களைத் தேடித்தானே அவள் ஓடவேண்டியிருக்கிறது. பாவம், அந்தப் பெண்கள்! அவளுடைய செக்ஸ் வேட்கை அடங்குவதுதானே குடும்ப வாழ்வின் உன்னத லட்சியம்! பெரியவர்களைப் பேணுதல், குழந்தைகளின் எதிர்காலம், கணவனின் நல் வாழ்வு, சமூகத்தில் மதிப்பான வாழ்க்கை - இதெல்லாம் முக்கியமா என்ன? செக்ஸில் விதவிதமான அனுபவங்களைப் பெறுவதுதானே முக்கியம்! அதிலும் திருட்டு செக்ஸ் என்றால் அதில்தான் “கிக்” இருக்கிறது அல்லவா? அதனால் கள்ளக் காதலைத் தாக்கும் மனப்பான்மையை எதிர்த்து மனோரமா தொடங்கியிருக்கும் இயக்கம் பாராட்டத் தக்கதுதான், இல்லையா!

இப்போதே ஆண்கள் எல்லோரும் ஆண்மையற்றவர்கள் என்பதுபோல் அவர்கள் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் “ஆண்மை” என்பதன் அளவுகோல் என்ன என்பதை அவர்கள் இன்னும் வரையறுக்கவில்லை!!

ஒரே ஆணிடம் ஒரு பெண் ஒரு நாள் திருப்தியடையாமல் இருக்கலாம், வேறொரு நாள் மாறுபட்ட சூழ்நிலையில் திருப்தியடையலாம். அதுபோல் ஒரே ஆண் ஒருவளுக்கு மிக இன்பம் கொடுப்பவனாகவும், இன்னொருவளுக்கு "turn on" உந்துதல் கொடுக்காதவனாக இருக்கலாம். இதெல்லாம் அந்தந்த நேரத்தில் அமைந்த உடல்நிலை, மன நிலை, சூழ்நிலை இவை போன்ற பற்பல கூறுகளின் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் சார்ந்த விஷயம். இதன் முழுப் பரிமாணங்களை அறியாமல், இந்த அம்மையார் இயக்கம் தொடங்கியிருக்கிறார்கள். இந்த நாட்டின் பாரம்பரிய குடும்ப வாழ்க்கை முறையை ஒழித்துக்கட்ட அவர் தன்னாலான கைங்கர்யத்தை செய்து கொண்டு வருகிறார் என்பது வருந்தத்தக்க விஷயம்.

ஏதோ ஒரு பெண்ணின் திருமணத்திற்குப் பின் கணவனுக்கு ஆண்மையில்லை என்பது தெரிய வந்ததாம், ”ஐயகோ, அந்தப் பெண்ணின் வாழ்க்கையே அஸ்தமனமாகி விட்டதே” என்று ஒப்பாரி வைக்கிறார் இந்த அம்மையார். ஆனால் சமீபத்தில் இதுபோன்று ஒரு பெண் தன் கணவன் ஆண்மையற்றவன், அதனால் அவன் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு தரவேண்டும் என்று வழக்கு போட்டிருக்கிறாரே, இதிலிருந்தே அவர்களது உள்நோக்கம் என்னவென்று புரிகிறதல்லவா? இத்தகைய நடவடிக்கைகளை ஊக்குவிப்பது மனோரமா போன்றோருக்கு அழகல்ல!

சரி. மேற்கணட நிகழ்வைப் பற்றி இதுபோன்ற பெண்ணியவாதிகளின் கருத்து என்னவாக இருக்கும்?
ஒருவேளை இப்படித்தான் இருக்குமோ:

அந்த தாயின் பாலியல் தேவைகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் அல்லவா? கள்ளக் காதல் என்பது ஒரு பெண்ணின் பிறப்புரிமை. அவளை செக்ஸில் திருப்தி செய்ய கணவன் மட்டும் போதாது என்னும் நிலையில் எவனோடு வேண்டுமானாலும் கள்ள உறவு வைத்துக் கொண்டு தன் பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள அவளுக்கு எல்லாவித உரிமையும் இருக்கிறது. அதுபோல் அவளுடைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு பூரண ஒத்துழைப்பு கொடுப்பது கணவன், குழந்தைகள், பெற்றோர் ஆகியோருடைய கடமையாகும்.

கள்ளக் காதலனை தன் பெண்ணுக்கே திருமணம் செய்து கொடுத்து ஒண்ணடி மண்ணடியாக இன்பம் துய்ப்பதில் என்ன தவறு? வேண்டுமானால் முறை வைத்துக் கொள்ளட்டுமே!
அந்தப் பெண் இதைப் பிடிக்காமல் ஓடிப்போனதும், கணவன் தற்கொலை செய்து கொண்டதும், தாயின் கள்ளக் காதல் லீலைகளைக் கண்டு பொறுக்காமல் மகன் தற்கொலை செய்து கொண்டதும் கண்டிக்கத்தக்கது. இல்லையா?

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

8 மறுமொழிகள்:

')) said...

// மேற்கணட நிகழ்வைப் பற்றி இதுபோன்ற பெண்ணியவாதிகளின் கருத்து என்னவாக இருக்கும்?//

//கள்ளக் காதல் என்பது ஒரு பெண்ணின் பிறப்புரிமை. அவளை செக்ஸில் திருப்தி செய்ய கணவன் மட்டும் போதாது என்னும் நிலையில் எவனோடு வேண்டுமானாலும் கள்ள உறவு வைத்துக் கொண்டு தன் பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள அவளுக்கு எல்லாவித உரிமையும் இருக்கிறது. அதுபோல் அவளுடைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு பூரண ஒத்துழைப்பு கொடுப்பது கணவன், குழந்தைகள், பெற்றோர் ஆகியோருடைய கடமையாகும்.

கள்ளக் காதலனை தன் பெண்ணுக்கே திருமணம் செய்து கொடுத்து ஒண்ணடி மண்ணடியாக இன்பம் துய்ப்பதில் என்ன தவறு? வேண்டுமானால் முறை வைத்துக் கொள்ளட்டுமே!//

முந்தைய செய்தியில் பெண்கள் நலத்தலைவி இதற்கு பதில்சொல்லியிருக்கிறார்- "ஜாதி, சமயம், கடவுளின் பெயரால் பெண்களுக்கு சம உரிமை மறுக்கப்படுகிறது. ஆண்களுக்கு உரிய அத்தனை உரிமைகளையும் பெண்களுக்கும் வழங்க வேண்டும்." இந்த லிஸ்டில் கலாசாரம் என்பதையும் சேர்த்துக்கொள்ளுங்கள். கலாசாரம் என்ற பெயரில் பெண்களின் கள்ளக் காதல் உரிமை மறுக்கப்படுகிறது!

anuz said...

ஆண்கள் எல்லோருக்கும் ஆண்மை இல்லை என்றால் கள்ள காதலனுக்கு எப்படி ஆண்மை வந்தது...அவனும் ஆண்மை அற்றவனாய் அல்லவா இருக்க வேண்டும்...பெண்களுக்கு எவ்வளவு செய்தாலும் அடங்காது...எதுக்கும் பெருமூச்சு...இது மனோரமாகு ஏன் புரியல...சமாளிக்க ஆண்மை இல்லை என்று புகார்..

')) said...

ஒரு ஜட்ஜய்யா டவுரி கேசுல மாட்டிகிட்டாரு... கூடிய விரைவில் போலீஸ் கமிஷ்னர்கள், முதல் அமைச்சர்கள்கள், மத்திய மந்திரிகள், போன்ற பெருந்தலைகளை இந்த 498ஏ என்னு வரதட்சணை கொடுமை மற்றும் குடும்ப வண்முறை சட்டம் ஆகியவை தீண்ட"வேண்டும்" - 498ஏ பொய் வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள்

தினமலரில் வெளியான ஆனந்த செய்தி...

வரதட்சணை கேட்டு கொடுமை: மாஜிஸ்திரேட் மீது வழக்கு

http://www.dinamalar.com/new/court_detail.asp?news_id=4139#

')) said...

மணமான பெண்களின் முறையற்ற நடவடிக்கைகள் பற்றி நன்கு ஆய்வு செய்து எழுதியுள்ளார் இந்தப் பதிவர்.

சென்று வாசியுங்கள்.

http://hayyram.blogspot.com/2009/10/2.html

')) said...

ஆச்சி மனோரமாவின் முட்டாள்தனமான கூற்றுக்களைப் பற்றி பதிவாளர் வினவு அறிவார்ந்த முறையில் எழுதியுள்ளார். வாசியுங்கள்:

//ஒரு தனி இயக்கம் ஆரம்பிக்கும் அளவுக்கு ஆண்மைக்குறைவு என்ன சர்வதேச பிரச்சினையா ? ஆச்சி குறிப்பிடுவதைப்போல பெருகிவரும் விவாகரத்திற்கும் கள்ளக்காதலுக்கும் ஆண்மைக்குறைவு தான் காரணமா ?

சரி, மனோரமா மீதான தனிப்பட்ட அன்பினால் முதல்வரே இவரின் கோரிக்கையை நிறைவேற்றுவதாகவே வைத்துக்கொள்வோம். அதன் விளைவுகளை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள், வாலி தலைமையில் ” ஆண்மையை ஆராயச்சொல்லி சட்டம் போட்ட ஆதவனே ” என்கிற தலைப்பில் கவியரங்கம் நடக்கும், டாக்டர் நாராயண ரெட்டி, காமராஜ் ஆகியோர்களின் மருத்துவமனை டோக்கன்களை தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் அராஜகமான வழிகளில் கைப்பற்றி அதிக விலைக்கு விற்பதாக ஜெயலலிதா அறிக்கை விடுவார், மருத்துவப்பரிசோதனையின் முடிவுகள் திமுக வினருக்கு மட்டும் பாசிடிவ் என்று வரும்படி கம்ப்யூட்டர் வடிவமைக்கப்பட்டு இருப்பதாக விஜயகாந்த் குற்றம் சாட்டுவார்.

இதையெல்லாம் தாங்கிக்கொள்ளும் சக்தி தமிழ்நாட்டில் எத்தனை பேருக்கு இருக்கும் ?

முதலில் ஆண்மைகுறைவு என்பதற்க்கு ஒரு முழுமையான வரையறை இதுவரை கிடையாது. இனியும் அது முடியாது. ஆச்சி குறிப்பிடும் ‘ ஆண்மை ‘ என்பது ஒரு ஆணின் பண்பியல் தொகுப்பு ( personality ) , வளர்க்கப்பட்ட முறை, இல்லத்துணை மீதான ஈர்ப்பு, அவரது புறச்சூழல் என ஏராளமான காரணிகளை உள்ளடக்கியது. ஒரு மருத்துவர் இதை சோதனை செய்து அறிக்கை அளிப்பது என்பது எந்த காலத்திலும் நடக்காது.

பெரும்பாலான விவாகரத்துக்களுக்கும் கள்ளக்காதலுக்கும் ஆண்மைக்குறைவு ஒரு காரணமாக இருப்பது இல்லை. தம்பதிகளிடையேயான புரிதலில் உள்ள முரண்பாடும் தன் இல்லத்துணைக்கான குறைந்தபட்ச அன்பையும் மரியாதையையும் தரத் தவறுவதும்தான் மிகப்பெரும்பாலான விவாகரத்துக்களுக்கு காரணமாக இருக்கிறது.

கள்ளக்காதலின் கதை வேறு, முறையற்ற காதல் என்பது எல்லா காலத்திலும் இருப்பதுதான். பத்திரிக்கைகள் அதற்கு அளிக்கும் அதீத முக்கியத்துவம்தான் இதை ஒரு பெரிய சமூக சிக்கலாக காட்டுகிறது. ( சரியாக கவனியுங்கள்.. சாதாரண மனிதனின் முறையற்ற காதல்தான் கள்ளக்காதல் என குறிப்பிடப்படுகிறது.. பிரபுதேவா & நயன் தாரா உறவை காதல் என்றுதான் எல்லா பத்திரிக்கையும் எழுதுகிறது).

திருமணமாகும் பெண்கள் மட்டும் ஏமாற்றப்படுவதில்லை. காதலிலும் ஏமாற்றப்படுகிறார்கள். காதலித்து ஏமாற்றப்படும் பெண்கள் நல்ல?! ஆண்மையுள்ள ஆண்களால்தான் கைவிடப்படுகிறார்கள்.

ஆண்மை இல்லாமல் திருமணம் செய்து ஏமாற்றுகிறார்கள், எனவே ஆண்மை உள்ளவன்தான் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்றால் (கட்டாய பரிசோதனை என்பதன் பொருள் இதுதான்)., ஆண்மை உள்ளவன் காதலித்து ஏமாற்றுகிறான் (பலர் தன் ஆண்மையை காதலியிடம் பரிசோதித்துவிட்டுத்தான் கைவிடுகிறார்கள்- ஒருவகையில் இவர்கள் ஆச்சியின் யோசனையை 50% கடைபிடிக்கிறார்கள்).

எனவே இதைத்தடுக்க காதலிப்பவனுக்கு ஆண்மையே இருக்கக்கூடாது என ஒரு சட்டம் போடலாமா ? இதற்கு நிகரான மடத்தனம்தான் ஆச்சி வைக்கும் கோரிக்கையும்.

பெண்களின் பிரச்சினைக்கு குரல் கொடுக்கவேண்டும் என்கிற மனோரமாவின் நோக்கம் நியாயமானது. அதில் தனிப்பட்ட காரணம் ஏதும் இருக்கமுடியாது. ஆனால் அவர் பிரச்சினைக்கு சொல்லும் காரணமும் அதற்கான தீர்வும் நகைப்புக்குரியவை. தனி இயக்கம் காணவேண்டிய அளவுக்கு கடுமையான பிரச்சினைகள் பெண்களுக்கு ஏராளம் உண்டு. அதற்கு ஆச்சி போராட முன்வந்தால் பின்தொடரவும் ஏராளமானவர்கள் இங்கு உண்டு… ஆச்சியை பின்தொடரவும் ஏராளமானவர்கள் இங்கு உண்டு.
//

http://www.vinavu.com/2009/10/07/manorama-infertility/

raja said...

என் முதல் மனைவி தன் காதலனை மறக்க முடியாமல் என் மீது ஆண்மையற்றவன் பழி சுமthதி விவாகரத்து பெற்றாள். தற்போது நான் என் இரண்டவது மனைவியுடன் இரண்டு ஆண் குழந்தைகளுடன் சுகமாக உள்ளேன்.

')) said...

நன்றி, ராஜா.

உங்கள் அனுபவத்தை தயவுசெய்து முழுதும் பகிர்ந்து கொள்ளுங்கள். பலருக்கு அது ஒரு பாடமாக அமையும்.

மேலும், இதுபோல் அபாண்டமாக “ஆண்மையற்றவன்” என்று பட்டம் சூட்டப்பட்டு அவமானப் படுத்தப்படும் ஆண்களுக்கும் தன்னம்பிக்கை ஊட்டும் விதமாக அமையும்.

இது பற்றி என்னை தனிப்பட்ட முறையில் tamil498a [at] gmail [dot] com என்னும் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளும்படி கோருகிறேன்.

Anonymous said...

Achi Manorama..had a troubled married life. She kicked her husband (Bhoopathy's father) out of her house, when she was at peak in cinema. All her speeches and ideas reflects her troubled marital life. She is yet another FCP (female chauvinist pi...ggg)