திருமணமாகி 16 ஆண்டுக்குப்பின் வந்ததே 498A வழக்கு!

"எங்கோ யாருக்கோ என்னவோ வரதட்சணை வழக்கு நடக்குது, நமக்கென்ன அக்கறை. நம்ப பொண்டாட்டியா, சேச்சே, அது மாதிரி கேசெல்லாம் போடமாட்டா, இது என்னவோ லூசு உளறிகிட்டு கெடக்குது"

இதுபோலத்தான் இந்த வலைப்பதிவை வாசிக்கும் பல எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்கள் கெக்கேலி கொட்டி சிரித்துவிட்டு, பெரண்டு படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்!

ஆனால் அவர்களுக்குத் தெரியாது, இந்த வழக்கு பூதங்களின் வீச்சும் தாக்கமும்.

காதல் மணம் புரிந்து கொண்டு 15 ஆண்டுகள் மகிழ்ச்சியான மண வாழ்வில் இரண்டு குழந்தைகள் பிறந்த பின்னும், ஒரு நாள் கணவன் தன் வயதான பெற்றோரை உடன் அழைத்துக் கொள்ளப் போகிறேன் என்று சொன்ன மாத்திரத்தில் குழந்தைகளோடு வீட்டை விட்டு ஓடிப் போய் 498A கேசு போட்ட நிகழ்வுகளை நேரில் கண்டிருக்கிறோம்.

அதனால், யாரும் தங்களுக்கு இது நடக்காது என்று குறட்டை விட்டுக் கொண்டிருக்க வேண்டாம். பொய் கேசு போட்டு பழி வாங்குவதற்கு சுலபமாக வழி வகுத்துக் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், என்றைக்கு வேண்டுமானாலும் உங்களை இது போன்ற வழக்குகள் தீண்டலாம். The enemy will choose the time and place of attack!

இப்போது இந்த 498A கேசைப் பற்றிப் படியுங்கள்:

தேனி அருகே வரதட்சணை கேட்டு பெண்ணிடம் கொடுமை
கணவர் கைது

தேனி,அக்.15- 2009. செய்தி - தினத்தந்தி

தேனி அருகே பெண் ஒருவரிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக அந்த பெண்ணின் கணவரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வரதட்சணை கொடுமை

தேனி அருகே உள்ள வடபுதுப்பட்டி ரைஸ்மில் தெருவில் வசித்து வருபவர் ராஜா. இவரது மனைவி வீரலட்சுமி (வயது 31). இவர் களுக்கு திருமணம் ஆகி 16 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஜவுளி வியாபாரம் செய்வதற்காக வீரலட்சுமி தனது 221/2பவுன் தங்க நகையை கணவரிடம் கொடுத்துள்ளார்.

ஆனால் ஜவுளி வியாபாரம் செய்த ராஜாவுக்கு தொழில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, மீண்டும் வேறு தொழில் செய்ய வேண்டும் என்று கூறி ரூ.50 ஆயிரம் பணத்தை தனது மனைவி வீரலட்சுமியின் பெற்றோரிடம் வாங்கி வா என்று ராஜா வரதட்சணை கேட்டு மனைவியை துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் பணம் வாங்கி வராவிட்டால் தீ வைத்து கொளுத்தி விடுவேன் என்றும் அவர் மிரட்டியதாக தெரிகிறது.

கைது

இதுகுறித்து வீரலட்சுமி தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மனைவியை வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக ராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

3 மறுமொழிகள்:

Anonymous said...

15 varusam thaane..enkai enaku thereensavanka 20 varusathuku apuram court poyerukeranka 3 pereya pillaikal college porranka, evalavukum antha pompillaiku vellaikaara boy friend erukunko..ethu epade eruku, kaalam kali kaalam .

')) said...

http://thatstamil.oneindia.in/news/2009/10/20/tn-youth-stabs-2-medical-students-in-chennai.html

இதொ ஒரு காதல் கத்திக்குத்து செய்தி...

')) said...

நம் நாட்டில் வரதட்சணை கொடுமை சட்டத்தை பாதிக்கப்பட்ட பல சகோதரிகள் யாரும் பயன்படுத்துவது இல்லை... பெரும்பாலும் கள்ளக்காதல்.. பணம் பிடுங்கி கூட்டம்.. போன்ற பெண்உருவில் இருக்கும் ஜென்மங்கள் தான் பெரும்பாலும் இச்சட்டத்தை கையிலேடுத்து பலகுடும்பங்களை நடுத்தெருவுக்குக்கொண்டுவந்து குழந்தைகளின் வாழ்வையும் சந்தியில் அடித்து வெறியாட்டம் அடிக்கொண்டிருக்கின்றது...

விரைவில் இதுபோல் ஜென்மங்களுக்கு தகுந்த தண்டனை கிடைக்கும்..