சேச்சே, பெண்கள் மென்மையானவர்கள், வன்முறையே செய்யமாட்டார்கள்!

ஆமாம் அய்யா, அப்படித்தான் மெத்தப் படித்தவர்கள் சட்டம் இயற்றியிருக்கிறார்கள். குடும்ப வன்முறை தடுப்புச்சட்டம் (The Protection Of Women From Domestic Violence Act, 2005) வரையறுத்துள்ளபடி வன்முறை என்பது ஆண்கள் மட்டும்தான் செய்வான். பெண்கள் வன்முறையே செய்யமாட்டார்கள் என்றுதான் இந்தச் சட்டத்தில் நிறுவப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஆண்கள் மீது இந்தச் சட்டத்தை ஏவி விட்டு வன்கொடுமை செய்து கொண்டு வருகிறார்கள் நடுத்தர வர்க்க இளம் மனைவிகள். அதைத் தூண்டிவிடும் வகையில் பேசி வருகிறார் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் ராமாத்தாள் அவர்கள்.

இந்தச் செய்தியை வாசியுங்கள். மென்னியலாளரின் வக்கிரங்கள் வெளிப்படும்:

குழந்தைகள் கொலை: தாய், பாட்டி கைது
அக்டோபர் 09,2009, செய்தி: தினத்தந்தி.

தூத்துக்குடி: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் குறைப்பிரசவத்தில் பிறந்த இரட்டை பெண் குழந்தைகளை கொலை செய்த தாய், பாட்டி கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அடுத்த கவர்னகிரி சிலோன் காலனி ஆட்டோ டிரைவர் துரைப்பாண்டி.

அவருக்கும், அதே பகுதி சுப்பையா மகள் ரேவதிக்கும்(22), எட்டு மாதத்திற்கு முன் திருமணம் நடந்தது. கர்ப்பமடைந்த ரேவதிக்கு, செப்., 24ல் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. ஏழே மாதத்தில் பிறந்த அக்குழந்தைகள் இங்குபேட்டரில் வைத்து பாதுகாக்கப்பட்டன. படுகொலை: நேற்று காலை 7.30 மணியளவில் தாய்ப்பால் தருவதற்காக அக்குழந்தைகள் மருத்துவமனையில் இருந்த தாய் ரேவதியிடம் தரப்பட்டன. அதில் ரேவதி, ஒரு பெண் குழந்தையின் கழுத்தை திருகி கொலை செய்தார்.

மற்றொரு பெண் குழந்தையின் கழுத்தை ரேவதியின் தாயார் தேனிலா(42) கத்தி, பிளேடால் அறுத்துக் கொலை செய்தார். தாய்ப்பால் குடித்தவுடன் அக்குழந்தைகள் திடீரென மயங்கிவிட்டதாக, ரேவதி டாக்டர்களிடம் நாடகமாடினார். அக்குழந்தைகளை பரிசோதனை செய்த டாக்டர் லூர்டஸ் அல்பிலோ, அவை கொல்லப்பட்டதை உறுதி செய்தார். பிறந்த 14வது நாளில் ஈவு இரக்கமின்றி குழந்தைகளை கொலை செய்த தாய் ரேவதி, பாட்டி தேனிலாவை தென்பாகம் போலீசார் கைது செய்தனர்.

"தலைப்பிரவத்தில் பெண் குழந்தைகள் பிறந்ததோடு, அவை குறைப்பிரசவமாக இருந்ததால் அவற்றை எதிர்காலத்தில் நன்றாக வளர்க்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது. அதனால், கொலை செய்தோம்” என, இருவரும் தெரிவித்தனர். அரசு மருத்துவமனையில் நடந்த கொடூர கொலை சம்பவம் அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

3 மறுமொழிகள்:

')) said...

//அதில் ரேவதி, ஒரு பெண் குழந்தையின் கழுத்தை திருகி கொலை செய்தார். மற்றொரு பெண் குழந்தையின் கழுத்தை ரேவதியின் தாயார் தேனிலா(42) கத்தி, பிளேடால் அறுத்துக் கொலை செய்தார்.// வெளங்கும்!

')) said...

பாவம் அந்த குழந்தைகள் :((

')) said...

தேசிய பெண்கள் வாரியம், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் என்றெல்லாம் நம் வரிப்பணத்தில் கோடிக்கணக்கான ரூபாய்களைச் சிலவு செய்து கொண்டு சௌக்கியமாக ஏர்கண்டிஷன் ரூமில் என்ஞாய் பண்ணிக் கொண்டிருக்கிறார்களே, அவர்கள் மங்களூரில் பணக்கார இளம் பெண்களின் தண்ணி போடும் உரிமைக்கும், திருமணமான நடுத்தர மற்றும் உயர் நடுத்தர வர்க்க திமிர் பிடித்த பெண்கள் கணவர்களைக் கொடுமைப் படுத்தி பணம் பிடுங்குவதற்காக (extortion through false cases) சட்டங்களைப் போடுவதற்கும் பாடுபடுகிறார்களேயன்றி, இதுபோன்ற சின்னஞ்ச் சிறுசுகளை வதை செய்யும் கொடுமையைத் தடுப்பதற்கு எந்த வித முயற்சியையும் எடுக்கக் காணோம்.

ஒரு வேளை இதில் ஒன்றும் காசு பெயராது என்பதால் இருக்குமோ!