பணம் பறிப்பதெற்கென்றே ஒரு சட்டம்!

இ.பி.கோ செக்ஷன் 498A யில் கட்டமைக்கப்பட்டுள்ள முக்கிய பகுதிகள்தான் அதன் பரவலான துஷ்பிரயோகத்திற்கு வழி வகுக்கின்றன:

1. சுவிட்சைப் போட்டவுடனேயே லைட் எரிவது போல் புகார் கொடுத்தவுடனேயே எந்தவித விசாரணையுமின்றி கணவரும், மாமியாரும், நாத்தனாரும் (ஆகா, ஜாலி!!) கைது செய்யப் படுவார்கள். ஆங்! மாமனாரை விட்டுட்டேனே! என்ன திமிர் புடிச்சவன்யா அந்த ஆளு. போடு உள்ளார! நாத்தனாருக்கு 3 வயசுல புள்ளை இருக்கா, அவனும் கொடுமை பண்ணினான்னு எழுது. ஜெயில்ல போயி சாகட்டும், களுதைங்க! - இதுதான் இந்த புதுமைப் பெண்குலத் திலகங்களின் மனப்பான்மை. இல்லாவிடில் 80 வயது கிழவர்கள் மீதும் 3 வயதுக் குழந்தைகள் மீதும் புகார் கொடுப்பார்களா!

2. இந்தச் சட்டம் cognizable, non-bailable and non-compoundable ஆக இருப்பதால் பழி வாங்குவது சுலபமாக இருக்கிறது

3. பொய்ப்புகார் என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தாலும் புகாரின் மேல் நடவடிக்கை எடுக்க வற்புறுத்தல்கள் இருப்பதால் பொய் வழக்கு போடுவதை ஊக்குவிப்பதற்காகவே இயற்றப்பட்டுள்ள சட்டமாக இது அமைந்திருக்கிறது. மேலும் 15 ஆண்டுகளுக்கு முன் வரதட்சனை கேட்டார்கள் என்று இன்று கூட புகார் கொடுக்கும் வகையில் இதன் நடைமுறை இருக்கிறது.

4. "வரதட்சணைக் கொடுமை" என்ற சொல்லாட்சி வந்தவுடனேயே பெண்ணியவாதிகளும் ஜொள்ளுக் கிழங்களும் சேர்ந்து "ஐயகோ! இளம் பெண்கள் வரதட்சணைக் கொடுமைகளுக்கு ஆளாகிறார்களே; கணவன், மாமியார், மாமனாரை கைது செய்வது சமூகக் கட்டாயம் அல்லவா!" என்று கோஷ்டிகானமாக ஒப்பாரி வைப்பார்கள். இது இந்தச் சட்டத்தை வைத்து வியாபரம் செய்பவர்களுக்கு சாதகமாக அமைகிறது.

5. கெடுமதி கொண்ட பெண் பிசாசுகளும், அவர்களுக்குத் துணைபோகும் வக்கீல்களும் சேர்ந்து இந்தச் ச்ட்டத்தை கையிலெடுத்து கணவன் மற்றும் அவனுடைய ரத்த உறவுகளைக் கொடுமைப்படுத்தி மிரட்டிப் பணம் பறிக்கும் ஈனச் செயல்தான் இப்பொது நடந்து கொண்டிருக்கிறது. உண்மையில் கஷ்டப்படும் பெண்கள் எவருக்கும் இச்சட்டத்தால் யாதொரு பயனும் இல்லை.

இதன்கீழ் காணும் செய்தியைப் பாருங்கள்:

ஒரு ஆண்டு காலமாக கணவன் வீட்டிலேயே அந்த மனைவி வசிக்கவில்லை. ஆனால் அந்த நேரத்தில் கணவன் வீட்டார் அவளைக் கொடுமை செய்தார்களாம்.

கொடுமைகள் செய்து கொலை செய்ய முயற்சித்தார்களாம். அதனால்தான் பிறந்த வீட்டிற்கு ஓடினாளாம். ஆனால் திரும்பி அங்கு சென்று வாழ முயற்சி செய்கிறாளாம். ஆனால் கணவன் உள்ளே விடவில்லையாம். எவ்வளவு முறணான புகார்கள் பாருங்கள்!

எல்லாவற்றிற்கும் மேல் காந்தியடிகளையே அவமானப்படுத்தும் வகையாக, பொய்க் கேசு போட்டு நடவடிக்கை எடுக்க வற்புறுத்தி உண்ணா விரதம் வேறு!

வெட்கக்கேடு!

சரி. செய்தியை படியுங்கள்.

ஆண்டிப்பட்டி அருகே வரதட்சணை கேட்டு பெண்ணை கொலை செய்ய முயற்சி.
கணவர் உள்பட 6 பேர் மீது வழக்கு

கண்டமனூர்,அக்.19- 2009. செய்தி - தினத்தந்தி

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது,

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா சித்தார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் காமராஜ் (வயது 35) இவருக்கும் தெப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்த பாண்டியராஜன் என்பவருடைய மகள் உமா ராணிக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் உமா ராணி யிடம் வரதட்சணை கேட்டு கணவர் காமராஜ் அடிக்கடி சண்டைபோட்டு வந்ததாக கூறப்படுகிறது. தீ வைத்து கொலை செய்யவும் முயற்சி செய்ததாக தெரிகிறது. இதன்காரணமாக கடந்த 1 ஆண்டாக உமாராணி கணவரை பிரிந்து தெப்பம்பட்டியில் உள்ள தாய் வீட்டில் வீட்டில் வசித்து வருகிறார்.

உண்ணா விரதம்

இதனையடுத்து கடந்த மாதம் உமாராணி தன்கண வருடன் சேர்ந்து வாழ்வதற்காக மீண்டும் கணவர் வீட்டிற்கு சென்றார். அப்போது கணவர் வீட்டில் உமாராணியையாரும் ஏற்றுக்கொள்ள வில்லை. மேலும் உமா ராணியை அவரது கணவர் வீட்டினர் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆனால் இவரது புகார் குறித்து போலீசார் முறையான விசாரணை செய்ய வில்லை என்று தெரிகிறது. இதனையடுத்து நேற்று காலை உமாராணி தனது கணவர் வீட்டு முன்பு உண்ணாவிரதம் இருக்க முயற்சி செய்தார்.

வழக்கு பதிவு

இது குறித்த தகவல் கிடைத்ததும் ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பூங்கோதை உத்தரவின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுசிலா மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். உண்ணாவிரதம் இருக்க முயன்ற உமாராணியை அவர்கள் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இருதரப்பினரிடமும் விசாரணை செய்வதற்காக கணவர் குடும்பத்தாரை போலீசார் அழைத்தனர். ஆனால் யாரும் வரவில்லை. (இதற்குப் பெயர்தான் "கட்டப் பஞ்சாயத்து"!)

இதனைத்தொடர்ந்து கணவர் காமராஜ், மாமனார் ராஜ்(62), மாமியார் செல்லத்தாய்(58), கொளுந் தனார் சுந்தரம்(34), நாத்தனார் புனிதா(37) புனிதாவின் கணவர் ராஜாக்கனி(39) ஆகிய 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.