முந்திக்கிட்டான்யா!

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்து விடுவாரோ என்று பயந்து மனைவியை கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். மாலூரில் இந்த பயங்கர சம்பவம் நடந்து உள்ளது.

கோலார் தங்கவயல், அக்.21- 2009. செய்தி - தினத்தந்தி

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் அரிசிகெரே பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது 34). கல் உடைக்கும் தொழிலாளி. இவருக்கு நேத்ராவதி (28) என்ற மனைவியும், ஒரு பெண், ஒரு ஆண் குழந்தையும் இருந்தனர்.

தற்போது மஞ்சுநாத் கோலார் மாவட்டம் மாலூர் கொண்டசெட்டிஹள்ளி கிராமத்தில் குடும்பத்துடன் தங்கியிருந்து வேலை செய்து வந்தார். இவர் கள்ளக்காதல் விவகாரத்தில் தனது மனைவி நேத்ராவதியை எரித்துக் கொலை செய்ததாக போலீசாரிடம் ஒப்புக் கொண்டார். இதைத்தொடந்து, மஞ்சுநாத்தை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியானது.

கள்ளத்தொடர்பு

மஞ்சுநாத்தின் சொந்த ஊரான அரிசிகெரேயில் வசித்தபோது, அவரது மனைவி நேத்ராவதிக்கும், தும்கூர் மாவட்டம் பாவகடா பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் மஞ்சுநாத் தனது மனைவி நேத்ராவதியிடம், ரவிச்சந்திரன் உடனான உறவை துண்டித்து விடும்படி கண்டித்து இருக்கிறார். ஆனால், நேத்ராவதி அப்போது மட்டும் பேச்சுக்கு ஒப்புக் கொண்டு, ரவிச்சந்திரனிடம் தொடர்ந்து கள்ளத்தொடர்பு வைத்ததாக கூறப்படுகிறது.

இதனால் மஞ்சுநாத், நேத்ராவதியை அரிசிகெரேயில் விட்டு விட்டு கடந்த 9 மாதங்களுக்கு முன்பு மாலூருக்கு வந்து விட்டார். இந்த நிலையில், ஊர் பெரியவர்கள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கணவன்-மனைவி இருவரையும் அழைத்து பேசி சமரசம் செய்து, சேர்ந்து வாழும்படி அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். அதன்பிறகு மஞ்சுநாத் மனைவி மற்றும் குழந்தைகளுடன் கொண்டசெட்டிஹள்ளிக்கு வந்து குடியேறினார்.

ஆனாலும், அதன்பிறகும் நேத்ராவதி தனது கள்ளத்தொடர்பை விடவில்லை. கள்ளக்காதலன் ரவிச்சந்திரனுடன் செல்போனில் பேசுவதுடன் கள்ளதொடர்பும் வைத்திருந்தார்.

எரித்துக் கொலை

இதனால் வேதனை அடைந்த மஞ்சுநாத், தனது மனைவி நேத்ராவதியை சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பது என்று முடிவு செய்தார். அதன்படி, நேற்று முன்தினம் அதிகாலை 4 மணிக்கு நேத்ராவதியை எழுப்பி வெளியே அழைத்து வந்தார். அப்போது, அங்கு நேத்ராவதியின் கள்ளக்காதலன் ரவிச்சந்திரன் நின்று கொண்டிருந்தார்.

இதனால் மனைவி நேத்ராவதியும், கள்ளக்காதலன் ரவிச்சந்திரனும் சேர்ந்து தன்னை கொலை செய்து விடுவார்களோ என்று மஞ்சுநாத்துக்கு பயம் வந்து விட்டது. உடனே வீட்டுக்குள் ஓடி சென்று உருட்டுக்கட்டையை எடுத்து வந்து, ரவிச்சந்திரனை தலையில் ஓங்கி அடித்தார். இதில், பலத்த காயம் அடைந்த ரவிச்சந்திரன் அங்கிருந்து ஓடி விட்டார்.

அதன்பிறகு போலீசில் மனைவி நேத்ராவதி புகார் செய்து விடுவாளோ என்று பயந்து, அவரை உருட்டுக் கட்டையால் அடித்துக் கொலை செய்தார். பின்னர் பொழுது விடிவதற்குள் மனைவியின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி அருகே கம்பனஹள்ளி கிராமத்தில் உள்ள தைல மர தோப்புக்கு எடுத்து சென்றார். அங்கு நேத்ராவதியின் உடலை தீ வைத்து எரித்தார்.

அதன்பிறகு ஊருக்கு செல்வதற்காக மஞ்சுநாத் தான் வேலை செய்யும் குவாரி உரிமையாளரிடம் ரூ.1,500 வாங்கிக் கொண்டு புறப்பட்டார். ஆனால் அதற்குள் போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்து விட்டனர் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

2 மறுமொழிகள்:

')) said...

இந்தியாவைப் பொறுத்தவரை பொய் 498A கேஸானாலும் சரி, கள்ளக் காதல் கொலையானாலும் சரி, வன்முறை தாக்குதலானாலும் சரி முதலில் ஆயுதத்தை யார் கையில் எடுக்கிறார்களோ அவர்கள் தான் ஜெயிக்க முடியும். இது தான் உண்மை.

உதாரணத்திற்கு பொய் 498A கேசு போட்டவர் சார்பாக அரசாங்கமே ஒரு பைசா செலவில்லாமல் அப்பாவி கணவரையும் அவரது குடும்பத்தாரையும் சொல்லமுடியாத அளவிற்கு கொடுமை செய்யும். பிறகு நீதிமன்றத்தில் பல ஆண்டுகள் கழித்து பொய்யான கேசு என்று தீர்ப்பு சொல்லுவார்கள். பொய் கேசு போட்டவர் சந்தோஷமாக ஒரு பைசா செலவில்லாமல் அரசு ஆதரவோடு ஒரு அப்பாவியை கொடுமை செய்த திருப்தியோடு சென்று விடுவார். ஏனென்றால் முதலில் சட்டம் என்னும் ஆயுதத்தை கையில் எடுத்தது அவர்தான் அதனால் வெற்றி அவருக்குத்தான். தர்மத்திற்கு கட்டுப்பட்டு அமைதியாக வாழ்ந்த அப்பாவி கணவரும் அவரது குடும்பமும் வேதனையுடன் வாழ்க்கையைத் தொலைத்து அழுதுகொண்டிருக்க வேண்டும். இது தான் இந்திய நீதி.

விழித்துக்கொண்டவர்கள் தான் பிழைக்க முடியும்!

')) said...

ஒரு உறையில் இரண்டு கத்தி இருந்தா என்னைக்குமே பிரச்சனைதான்...
இந்த மாதிரி பொண்டாட்டிகூட குடும்பம் நடத்துறதுக்கு பதிலா ஜெயில்ல நிம்மதியா இருக்கலாம...