ஆகா! இதுவல்லவோ தெய்வீகக் காதல்!

முதல் காதலனுடன் திருமணம் நிச்சயம் ஆன மறு நொடியில் அவனுடைய நண்பனுடன் 'ஓட்டம்' பிடித்தாள் புதுமைப் பெண்.

நல்ல வேளை. முதல் காதலனின் தலை தப்பியது. திருமணம் மட்டும் நடந்து முடிந்திருந்தால் அவனைப் “போட்டுத் தள்ளியிருப்பாள்” அந்தப் புதுமைப் பெண்!

வாழ்க பெண்கள் முன்னேற்றம். வாழ்க மனோரமா, ராமாத்தாள், விஜயகாந்த் போன்ற பெண்ணியக் காப்பாளர்கள். வளர்க இது போன்ற தெய்வீகக் காதல்கள்!

சைதாப்பேட்டை : தந்தை இறந்து போன நாளன்று, நண்பருடன் ஓடிப்போன காதலியால் பரபரப்பு ஏற்பட்டது.

சைதாப்பேட்டை சுப்ரமணிய தெருவைச் சேர்ந்தவர் ஞான வினாயகம் (57). இவரது மகள் உமா மகேஸ்வரி(19). பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை பார்க்கிறார். அவருடன் வேலை பார்க்கும் சூப்பரவைசர் குமார் என்பவரை காதலித்தார்.

தனது காதலை தந்தையிடம் கூறினார். மகள் மீதுள்ள பாசத்தினால், அவரது காதலுக்கு ஞான வினாயகம் பச்சைக்கொடி காட்டினார். இந் நிலையில், கடந்த 26ம் தேதி, எதிர் பாராத விதமாக ஞான வினாயகம் இறந்துபோனார்.

அவரது கடைசி ஆசையை நிறைவேற்ற, அவரது உடலின் முன்னிலையிலேயே, உமாவுக்கும், குமாருக்கும் நிச்சயதார்த்தம் நடத்தப்பட்டது. நிச்சயம் நடந்த சிறிது நேரத்திலேயே, குமார் அங்கிருக்க உமா மட்டும் மாயமானார்.

சைதாப்பேட்டை போலீசார் நடத்திய விசாரணையில், உமா, குமாரின் நண்பரான பிரவீன்குமார் என்பவருடன் நெருங்கிப் பழகியதும், அவருடன் பெங்களூரு சென்றிருப்பதும் தெரியவந்தது. அதையடுத்து, அவரை பெங்களூருக்கு சென்ற தனிப்படை போலீசார் மீட்டனர்.