உப்பு, புளி, கரம் மசாலா சேர்க்காமல் பிரியாணி சுவை கூடுமா! அதனால் வரதட்சணை புகார் கூடவே செக்ஸ் கொடுமை, புளூ ஃபிலிம் பார்க்க வைத்தது, அடித்தது, தற்கொலைக்குத் தூண்டியது, அடிப்பேன் என்று சொன்னது... இப்படி பலவித ஜோடனைகளைச் சேர்த்து புகார் கொடுக்கிறார்கள். அப்போதுதானே பல வித குற்றப் பிரிவு எண்களைச் சேர்க்க முடியும்!
அடுத்தது வரதட்சணை வழக்கில் கஞ்சா கேசையும் சேர்ப்பார்களோ என்று பயமாக இருக்கிறது!
இதோ அடுக்கடுக்காக 498A கேசுகள்!
(செய்தி: தினமலர் + தினத்தந்தி)
1.
திருமணம் ஆன 3 மாதத்தில் புதுப்பெண்ணிடம் வரதட்சணை-செக்ஸ் கொடுமை. கணவர்-மாமனார் கைது
ராயபுரம், அக்.11- 2009
திருமணம் ஆன 3 மாதத்தில், புதுமணப் பெண்ணிடம் செக்ஸ் மற்றும் வரதட்சணை கொடுமை செய்ததாக, அந்த பெண்ணின் கணவர், மாமனார் கைது செய்யப்பட்டனர்.
புதுப்பெண்
சென்னை கொருக்குபேட்டை கைலாசம் தெருவைச் சேர்ந்த இப்ராகிம் மகன் சித்திக் (வயது 28). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவருக்கும், பல்லாவரத்தை சேர்ந்த ஹைக்கூக் என்பவரது மகள் சைபுன்னிசா (நிஷா) (23) என்ற பெண்ணுக்கும், 3 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது பெண்வீட்டார்,
"லட்சக்கணக்கில்" செலவு செய்து நகைகள், சீர் வரிசைகள் கொடுத்தனர்.
இந்த நிலையில், சைபுன்னிசாவிடம் மேலும் வரதட்சணை பணம் கேட்டு, அவரை மாமனார் இப்ராகிம் கொடுமை படுத்தியதாக தெரிகிறது. மேலும் சைபுன்னிசாவை, அவரது கணவர் சித்திக் செக்ஸ் கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது. கூடுதல் வரதட்சணை பணம் கேட்டு, சைபுன்னிசாவை, சித்திக் அடித்து கொடுமை படுத்தியதாகவும் தெரிகிறது.
மாமனார்-கணவர் கைது
கொடுமை தாங்காத சைபுன்னிசா, 4 நாட்களுக்கு முன் தாய் வீட்டுக்கு சென்று, கணவன் வீட்டில் நடந்தது பற்றி கூறினார். இதைத்தொடர்ந்து வண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. துணை கமிஷனர் செந்தாமரை கண்ணன், இன்ஸ்பெக்டர் வீரகுமார் ஆகியோர், இந்த புகார் பற்றி விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் சைபுன்னிசாவின் கணவர் சித்திக் மற்றும் மாமனார் இப்ராகிம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இருவரும் ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். இருவரையும் 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் 2 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
2.
குடியாத்தத்தில் வரதட்சணை கொடுமை வழக்கில் கணவர் கைது
குடியாத்தம், அக்.10- 2009
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த எர்த்தாங்கல் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். அவரது மகன் சிவா வயது (25), ஆட்டோ டிரைவர். அவருக்கும், வேலூரை அடுத்த பொய்கை ராமாபுரத்தை சேர்ந்த ஆஷா (20), என்பவருக்கும் கடந்த 28-8-2006 அன்று திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின்போது 10 சவரன் நகை சீர்வரிசை கேட்டதற்கு பெண் வீட்டார் 5 சவரன் நகையும் சீர்வரிசை பொருட்களும் கொடுத்தனர்.
3 ஆண்டுகள் சந்தோஷமாக குடும்பத்தை நடத்திய சிவா, தன் மனைவியிடம் அடிக்கடி பணம் மற்றும் நகை வாங்கி வா என கொடுமை செய்து வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன் ஆஷாவை கணவர் சிவா, மாமனார் கோவிந்தராஜ், மாமியார் ஜெகதம்மாள் உள்ளிட்ட குடும்பத்தினர் மீதம் போட வேண்டிய 5 சவரன் நகை, ஆட்டோ வாங்க 1 லட்சம் வாங்கி வா என்றும் இல்லை என்றால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.
கணவர் கைது
இதனால் பயந்து போன ஆஷா, தன் பெற்றோரிடம் கேட்டு 50 ஆயிரம் ரூபாய் வாங்கி கொடுத்துள்ளார். சிவா அந்த பணத்தில் ஆட்டோ வாங்கினார். சிவா மீண்டும் பணம் கேட்டு கொடுமை செய்யவே தாய் வீட்டிலிருந்து மேலும் 20 ஆயிரம் ரூபாய் வாங்கி வந்துள்ளார். அதனை வாங்கிக் கொண்டு ஆட்டோ ஓட்டிய பணத்தை குடித்து விட்டு வந்துள்ளார். மேலும் ஆஷாவை சந்தேகப்பட்டு இரவு 12 மணிக்கு அருகில் உள்ள ஏரி பகுதிக்கு அழைத்து சென்று ஆஷாவை அடித்து உதைத்து கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இந்த கொடுமைகளுக்கு சிவாவின் குடும்பத்தினர் உடந்தையாக இருந்துள்ளனர்.
தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து குடியாத்தம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஆஷா புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் வேணியம்மாள் வழக்குப்பதிவு செய்து கணவர் சிவாவை கைது செய்தனர்.
3.
போளூரில் வரதட்சணை கேட்டு பெண்ணுக்கு கொலை மிரட்டல். கணவர் கைது
போளூர், செப்.25- 2009
போளூரில் வரதட்சணை கேட்டு பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருவண்ணாமலை மாவட் டம் போளூர் டவுன் பகுதியை சேர்ந்தவர் மீனா, (வயது 29). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ் (33) என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு நிவேதா, நித்யா ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.
சுந்தர்ராஜுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. அதனால் தினமும் குடித்துவிட்டு வந்து மீனாவிடம் தகராறு செய்து வந்துள்ளார். மேலும் பெற்றோர் வீட்டுக்கு சென்று வரதட்சணை வாங்கி வரும்படி சித்ரவதை செய்துள்ளார். சுந்தர்ராஜவக்கு ஆதரவாக அவரது பெற்றோர் ரங்கநாதன், ராணி, சகோதரர்கள் இளங்கோ, இளம்வழுதி, தங்கை தமிழரசி ஆகியோரும் மீனாவை சித்ரவதை செய்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் மீனா தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று ரூ.1 லட்சம் வாங்கி வந்து கணவர் சுந்தர்ராஜிடம்கொடுத்துள்ளார். அதற்கு சுந்தர்ராஜும், அவரது வீட்டினரும் இந்த பணம் போதாது மேலும் பணம் வாங்கி வரும்படி கூறியுள்ளனர்.
இதனால் ஏற்பட்ட தகராறில் மீனா கணவர் சுந்தர்ராஜை பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். அங்குள்ள அதே பகுதியில் கூலி வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத் தன்று சுந்தர்ராஜவம், அவரது தந்தை ரங்கநாதனும் மீனா வேலை பார்த்த இடத்திற்கு சென்று அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் முகத்தில் ஆசிட் ஊற்றி கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாக கூறப் படுகிறது.
கணவர் கைது
இதுகுறித்து மீனா போளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செல்வி வழக்குப்பதிவு செய்து சுந்தர்ராஜை கைது செய்தார்.
=================
"கைது" - இதுதான் இந்த 498A செக்ஷன் புகார்களின் மேல் மனைவிகளுக்கும், அவர்களுக்குத் துணை போகும் வக்கீல்களுக்கும் அவ்வளவு அட்ரேக்ஷன்! இந்த சட்டப் பிரிவை, ஒரு மனைவி புகார் கொடுத்தவுடனேயே, இது நடந்திருக்கக் கூடிய முகாந்திரம் இருக்கிறதா என்னும் commonsense சார்ந்த வினாக்களுக்குக் கூட இடம் கொடுக்காமல் கைது செய்யக் கூடிய வகையில் கட்டமைத்திருக்கிறார்கள். இல்லாவிட்டால், பெரிய பணக்காரப் பையன் ஒரு ஏழைத் தொழிலாளியின் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு மணமானவுடனேயே மனைவி பேரில் ஒரு சொத்தையும் எழுதி வைத்தவர்கள் மேல் "அவர்கள் என்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்தினார்கள்" என்று அந்த மனைவி புகார் கொடுக்க முடியுமா! (நாகர்கோயில் கோபிகா)
பஞ்சமில்லாமல் 498A கேசுகள்!
குறிச்சொற்கள் 125, 498a, acid, anti-male, arrest, biased laws, ஆண்பாவம், பொய் வழக்கு, வரதட்சணை
Subscribe to:
Post Comments (Atom)
4 மறுமொழிகள்:
//"கைது" - இதுதான் இந்த 498A செக்ஷன் புகார்களின் மேல் மனைவிகளுக்கும், அவர்களுக்குத் துணை போகும் வக்கீல்களுக்கும் அவ்வளவு அட்ரேக்ஷன்! //- !!!!
இதோ இன்னொன்று. லேட்டஸ்ட் 498A.
வியாசர்பாடியில் வரதட்சணை கேட்டு மனைவியை சித்ரவதை செய்த கணவர் கைது. மாமியாருக்கு வலைவீச்சு
ராயபுரம், அக்.12- 2009. செய்தி - தினத்தந்தி
வரதட்சணை கேட்டு மனைவியை அடித்து கொடுமைப்படுத்திய கணவரை போலீசார் கைது செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்த அவரது தாயாரை போலீசார் தேடிவருகிறார்கள்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
சென்னை வியாசர்பாடி சர்மா நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 27). இவருக்கும், பரங்கிமலையைச் சேர்ந்த சசிகலா (26) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. அவர்களுக்கு தற்போது 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் சிவக்குமார் தனது மனைவியிடம் `உன் பெற்றோரிடம் இருந்து வரதட்சணை வாங்கி வரவேண்டும்' என்று வற்புறுத்தினார். இதற்கு அவரது தாயார் லட்சுமி (45)யும் உடந்தையாக இருந்ததாக தெரிகிறது.
பெற்றோரிடம் இருந்து கூடுதல் வரதட்சணை வாங்கி வருவதற்கு சசிகலா மறுத்து விட்டார். உடனே அவரை கணவர் அடித்து சித்ரவதை செய்ததாக தெரிகிறது. கடந்த சில மாதங்களாக வரதட்சணை கேட்டு அவர் மனைவியை கொடுமைப்படுத்தி வந்ததாக தெரிகிறது.
மனைவி புகாரில் கணவர் கைது
இதைத்தொடர்ந்து சசிகலா எம்.கே.பி.நகர் அனைத்து மகளிர் போலீசில் தனது கணவர் மற்றும் மாமியார் மீது புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்தியதாக சசிகலாவின் கணவர் சிவக்குமாரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் சசிகலாவின் மாமியார் லட்சுமி தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
கொய்யால 3 மாசம் கூட முழுசா மடியல அதுக்குள்ள பொய்கேசு அப்புறம் அதே போலீஸ் ஸ்டெசன் ல சேத்துவைங்கன்னு பஞ்சாயத்து வேற... என்னைக்கு இந்த இழவு முடியபோகுதொ தெரியல...
//இந்த வழக்கில் சசிகலாவின் மாமியார் லட்சுமி தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.//
வயசான காலத்துல பாவம் அந்த அம்மா... நல்ல வலைவீசித்தேடட்டும்.. நொச்சிக்குப்பம் பக்கம் போனா நல்ல வலைய வாங்கலாம்...
உங்கள் கருத்தைத் தெரிவிக்க