ஐயோ பாவம் செம்மலை!

1.
அதிமுக மாஜி அமைச்சர் மனைவி-மருமகள் அடிதடி
சனிக்கிழமை, டிசம்பர் 15, 2007

சேலம்: அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செம்மலை குடும்பத்தில் மாமியாருக்கும், மருமகளுக்கும் இடையே நடந்த சண்டை வீதிக்கு வந்து கைகலப்பில் முடிந்தது.

சேலத்தை சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை. இவர் மனைவி புஷ்பா. இவர்களது மகன் எழில் அமுதனுக்கும், மேட்டூரைச் சேர்ந்த டிஎஸ்பி முத்துசாமி மகள் வாணி பிரீதாவுக்கும் கடந்த 2004ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் தனது மாமியார் புஷ்பாவும், கணவரும் ரூ.10 லட்சம் வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்துவதாக மேட்டூர் மகளிர் காவல் நிலையத்தில் வாணி பிரீதா புகார் செய்தார். அந்த வழக்கு சூரமங்கலத்திற்கு மாற்றப்பட்டது.

அதன் பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி அந்த வழக்கு ஈரோடு மாவட்டத்திற்கு மாற்றப்பட்டது. பின்னர் எழில்அமுதன்-வாணி பிரீதா இருவரும் விவகாரத்து கேட்டு தொடர்ந்த வழக்கு சேலம் குடும்ப நல நீதிமன்றத்திற்கு வந்தது.

இந்த வழக்கு விசாரணைக்காக இருதரப்பினரும் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். அப்போது வாணி பிரீதாவுக்கும், அவரது மாமியார் புஷ்பாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கடைசியில் அடிதடியில் முடிந்தது.

இதில் மாமியாரும்-மருமகளும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். பின்னர் உடன் வந்திருந்த உறவினர்கள் அவர்களை சமாதனப்படுத்தி அழைத்து சென்றனர்.

இதனால் சேலம் நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

http://thatstamil.oneindia.in/news/2007/12/01/tn-minister-wife-and-daughter-inlaw-exchange-blows.html

2.
வரதட்சணை கொடுமை வழக்கு: அ.தி.மு.க. எம்.பி. குடும்பத்துடன் ஆஜர்

வரதட்சணை கொடுமை வழக்கு தொடர்பாக சேலம் தொகுதி அ.தி.மு.க. எம்.பி. செம்மலை, தனது மனைவி மற்றும் மகனுடன் சேலம் மகளிர் கோர்ட்டில் ஆஜரானார்.

அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சரும், தற்போதைய சேலம் தொகுதி எம்.பி.யுமான செம்மலையின் 2 வது மகன் எழில் அமுதன். இவருக்கும், சேலம் மாவட்டம் குஞ்சாண்டிழூரை சேர்ந்த முத்துசாமியின் மகள் வாணி பிரிதாவுக்கும் கடந்த 2004 ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் வாணி பிரிதா, தன்னுடைய கணவர் எழில் அமுதன், மாமியார் புஷ்பா, மாமனார் செம்மலை ஆகியோர் மீது மேட்டூர் போலீசில், வரதட்சணை கொடுமை புகார் செய்தார்.

புகார் அடிப்படையில் செம்மலை எம்.பி., அவருடைய மனைவி புஷ்பா, மகன் எழில் அமுதன் ஆகியோர் மீது சேலம் அனைத்து மகளிர் கோர்ட்டில் வரதட்சணை கொடுமை வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்தது.

இந்த நிலையில் நேற்று காலை மகளிர் கோர்ட்டு நீதிபதி கோபால் முன்னிலையில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது.

செம்மலை எம்.பி., அவருடைய மனைவி புஷ்பா, மகன் எழில் அமுதன் ஆகியோர் நேற்று கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள். அப்போது சாட்சிகள் அளித்த தகவல்களின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்ட 3 பேரிடமும் கேள்விகள் கேட்கப்பட்டு பதில்கள் பெறப்பட்டன.

அப்போது செம்மலை எம்.பி. இந்த வழக்கு பொய்யான வழக்கு என்றும், அரசியல் காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கு என்றும் பதில் அளித்தார். இந்த பதில்கள் பதிவு செய்யப்பட்டன. அதேபோல் அவருடைய மனைவி புஷ்பா, மகன் எழில் அமுதன் ஆகியோர் அளித்த பதில்களும் பதிவு செய்யப்பட்டன.

பின்னர் இந்த வழக்கு விசாரணை 14 ந் தேதிக்கு (நாளை) தள்ளி வைக்கப்பட்டது.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=18458

3.

சேலம், அக் 23-

சேலம் பேர்லேண்ட்ஸ் பகுதியில் வசித்து வருபவர் செம்மலை எம்.பி. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரான இவர் மீதும், இவரது மனைவி புஷ்பா, கணவர் எழில்அமுதன் மீதும் அவரது மருமகள் வாணிபிரித்தா வரதட்சணை புகார் கூறி இருந்தார்.

இந்த மனு மீது முதலில் மேட்டூர் போலீசார் விசாரித்தனர். பின்னர் இந்த வழக்கு ஈரோட்டுக்கு மாற்றப்பட்டது.

பிறகு சேலம் சூரமங்கலம் மகளிர் காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இதன் பின்னர் இந்த வழக்கு விசாரணை சேலம் மகளிர் கோர்ட்டில் நடந்தது.

இதனால் இன்று கோர்ட்டுக்கு செம்மலை எம்.பி, மற்றும் மனைவி குடும்பத்தினர் வந்து இருந்தனர். இதை நீதிபதி கோபால் விசாரித்து இன்று (வெள்ளிக்கிழமை) தீர்ப்பு கூறினார்.

இந்த வழக்கில் கூறப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் செம்மலை எம்.பி. உள்பட அனைவரையும் விடுதலை செய்வதாக நீதிபதி தீர்ப்பில் கூறி இருந்தார்.

இதை கேட்ட செம்மலை எம்.பி மற்றும் அவரது வீட்டார் மகிழ்ச்சி அடைந்தனர்.

பின்னர் செம்மலை எம்.பி கூறியதாவது:-

இந்த தீர்ப்பு குடும்ப கவுரவத்திற்கு கிடைத்த நல்ல அத்தாட்சி. எங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டு கூறி இருந்ததை மக்களும் நம்ப வில்லை, நீதிமன்றமும் நம்பவில்லை. எங்களுக்கு ஏற்பட்ட மன உளச்சலுக்கு இந்த தீர்ப்பு நல்ல மருந்து.

இவ்வாறு அவர் கூறினார்.

மருமகள் வாணிப்பிரித்தா கூறும்போது, மன வேறுபாடு காரணமாக அப்போது பிரச்சினை ஏற்பட்டது. கெட்ட நேரத்தில் நடந்த சம்பவம். இப்போது மன வேறுபாடுகளை நீங்கி கணவருடன் சேர்ந்து வாழ்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

(அடுத்த முறை 498A வழக்கு போடும்போது "டைட்"டாகப் போடுவார்!)
http://www.maalaimalar.com/2009/10/23164357/SLM05231009.html

2 மறுமொழிகள்:

')) said...

அரசியல் வியாதிகளுக்கு நல்லா வெச்சாங்க ஒரு ஆப்பு. இன்னும் பல ஆப்புகள் பெரிய தலை குடும்பங்களில் வைக்கப்படவேண்டும்.

Anonymous said...

அரசியல் சட்டங்களை இயற்றும் அரசியல்வாதிக்கு வரும் போதுதான் அதன் வழி தெரியும் . இதேபோல் எல்லா அரசியல்வாதிக்கும் வந்தால்தான் இது போன்ற சட்டங்களில் மாற்றம் வர வாய்ப்பு உண்டு. அரசியல்வாதி மருமகள்களே கொஞ்சம் கவனியுங்க இந்த வேண்டுகோளை ! காப்பாற்றுங்கள் பாதிக்கப்பட்ட அபலைகளை !