சட்டையைக் கழற்றுவது போன்றதுதான் தாலியைக் கழற்றுவதும்!

ஆகா! இதுவல்லவோ, தெய்வீகக் காதல்!

காதலனிடம் தாலியை கழற்றி கொடுத்து விட்டு, பெற்றோருடன் சென்ற பெண். சென்னையில் ருசிகர சம்பவம்

ராயபுரம், அக். 3- 2009 - தினத்தந்தி

"எங்களுக்குள் எந்த தவறும் நடக்க வில்லை'' என்று கூறிய பெண், காதலன் கட்டிய தாலியை அவரிடமே கழற்றி கொடுத்துவிட்டு, பெற்றோருடன் சென்று விட்டாள்.
சென்னையில் நடந்த இந்த ருசிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை சோலையப்பன் தெருவை சேர்ந்தவர் சிதம்பரம். இவரது மகள் திலகா(வயது22), ராயபுரத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேவூபார்த்து வந்தார். தொலை தூர கல்வி மூலமாக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. படிப்பும் படித்து வந்தார்.

திலகா வேலை பார்த்த கம்பெனியில், வியாசர்பாடியை சேர்ந்த ஹாரி டிசல்வா (25) என்ற வாலிபரும் வேலை பார்த்தார். அவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இந்த காதல் பற்றி, திலகாவின் தந்தை சிதம்பரத்துக்கு தெரிய வந்தது. அவர் தனது மகளை கண்டித்தார்.

தாலி கட்டினார்

கடந்த 29-ந் தேதி வேலைக்கு சென்ற திலகா, வீடு திரும்ப வில்லை. அவர், தனது காதலனோடு வேளாங்கண்ணி கோவிலுக்கு சென்றார். அங்கு திலகா கழுத்தில் ஹாரி டிசல்வா தாலி கட்டினார். பின்னர் இருவரும் அறை எடுத்து தங்கினார்கள்.
இதற்கிடையில் சிதம்பரம் தனது மகளை காணவில்லை என்றும், கண்டு பிடித்து தருமாறும் கோரி, தண்டையார்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் சவரிநாதன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

தாலியை கழற்றி விட்டேன்

நேற்று திடீர் என்று திலகா, தண்டையார் பேட்டை போலீஸ் நிலையத்துக்கு வந்தார். அப்போது அவர் கொடுத்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

"நானும் ஹாரி டிசில்வாவும் காதலித்தது உண்மை. அவர் எனக்கு தாலி கட்டினார். ஆனால் எங்களுக்குள் எந்த தவறும் நடக்க வில்லை.

எனக்கு காதல் பிடிக்க வில்லை. என் குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. நான் தவறு செய்து விட்டேன். எனவே, ஹாரி டிசில்வா கட்டிய தாலியை கழற்றி அவரிடமே கொடுத்து விட்டேன். இனி எனக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் கிடையாது.''

இவ்வாறு திலகா கூறினார்.

பின்னர் திலகாவை, அவரது பெற்றோருடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.

3 மறுமொழிகள்:

')) said...

நல்லவேல அந்த தாலி கட்டுன ஆளு தப்பிச்சார்... 498ஏ கேசு போடா உட்டாங்களே..

')) said...

/என் குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு

:))

Anonymous said...

/சட்டையைக் கழற்றுவது போன்றதுதான் தாலியைக் கழற்றுவதும்/

திருத்தம்

சட்டையைக் கழற்றுவது போன்றதுதான்
கணவனை,கள்ளக் காதலனை கழற்றுவதும்