கள்ளக்காதலனை எரித்துக்கொன்ற அபலைப்பெண்

துறையூர். தினமலர் - 30-10-2009

துறையூர் அருகே கள்ளத்தொடர்பை துண்டித்துக்கொள்வதாக கூறிய கள்ளக்காதலனை எரித்துக்கொன்ற காதலியை போலீஸார் கைது செய்தனர்.

துறையூர் அருகே கண்ணனூரை சேர்ந்த லாரி டிரைவர் சேகர்(35). இவர் கடந்த 27ம் தேதி கண்ணனூர் அரசு மேல்நிலைப்பள்ளி பின்புறம் குழந்தை என்பவரின் சோளைக்காட்டில் எரிந்து கருகிய நிலையில் நிர்வாணமாக இறந்து கிடந்தார். சேகரின் மர்ம மரணம் குறித்து புலிவலம் போலீஸார் விசாரித்து வந்தனர்.

போலீஸ் விசாரணையில், சேகருக்கும் அதே ஊரை சேர்ந்த கணவனால் கைவிடப்பட்டு தனியே வசித்த தனலட்சுமி(55)க்கும் கள்ளக்காதல் இருந்தது தெரிந்தது. இருவருக்கும் கடந்த 15 ஆண்டாக தொடர்பு இருந்துள்ளது.

இந்நிலையில் சேகர் மூன்று ஆண்டுக்கு முன் வளர்மதி(30)யை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பின்பும் சேகரை தன்னுடன் இருக்குமாறு தனலட்சுமி வற்புறுத்தி வந்ததால் இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது.

கடந்த 26ம் தேதி இரவு எப்போதும் தனிமையில் சந்தித்துக் கொள்ளும் சோளக்காட்டிற்கு சேகரை வருமாறு தனலட்சுமி வற்புறுத்தியுள்ளார். தனலட்சுமி தொல்லை பொறுக்காத சேகர், தனலட்சுமியை கொல்வது அல்லது இருவரும் சேர்ந்து தற்கொலை செய்து கொள்வது என்ற முடிவுடன் ஒரு கேனில் மண்ணெண்ணெயுடன் சென்றுள்ளார்.

இருவரும் உல்லாசமாக இருந்துவிட்டு மண்ணெண்ணெய் ஊற்றி தீ தங்களுக்குத் தானே தீ வைத்துக்கொள்வது என முடிவு செய்துள்ளனர். அதன்படி, ஒருவர் மீது ஒருவர் மண்ணெண்ணை ஊற்றி முதலில் சேகர் மீது தனலட்சுமி நெருப்பு பற்ற வைத்துள்ளார். நிர்வாணமான சேகரின் உடலில் "தீ' மளமளவென பரவி எரிந்தபோது வலி தாங்காமல் கத்தி அங்குமிங்கும் ஓடியுள்ளார். எங்கே தன்னையும் கட்டிப் பிடிப்பானோ என பயந்த தனலட்சுமி சேகரின் உடைகளை எடுத்துக்கொண்டு ஓடியுள்ளார்.

சேகரின் மரணம் குறித்து புலிவலம் போலீஸார் நடத்தி விசாரணையில், தனலட்சுமி சேகரை எரித்துக் கொன்றதை ஒப்புக்கொண்டு வாக்கு மூலமளித்தார். புலிவலம் போலீஸார், தனலட்சுமியை கைது செய்து துறையூர் கோர்ட்டில் நீதிபதி தோத்திரமேரி முன் நேற்று ஆஜர்படுத்தினர். 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிடப்பட்டதை அடுத்து திருச்சி மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்.

===========

அன்புள்ள வாசகர்களே,

498A பற்றி பதிவு எழுதத் தொடங்கி விட்டு, கள்ளக்காதல் நிகழ்வுகளைப் பற்றியும் அதனால் விளையும் கொலைகளைப் பற்றியும் விவரிக்கும் காரணம் என்ன என்னும் வினா உங்கள் மனத்தில் தோன்றினால் அதை மறுமொழியில் கேளுங்கள். தகுந்த விடையளிப்பது என் கடமை!

6 மறுமொழிகள்:

')) said...

உண்மையில் இவைகளை எழுதுவதன் மூலம் இவை போன்ற சம்பவங்களை ஊக்கிவிக்கத் துடிக்கிறீர்களா?அல்லது....
அளித்துவிடலாம்
என்றெண்ணுகின்றீர்களா?
ரமோனா

')) said...

ரமோனா,

இதுபோன்ற கள்ளக்காதல் நிகழ்வுகளையும், அதனால் உந்தப்பட்டு நடக்கும் கொலைகளையும் பற்றி எழுதுவதன் மூலம் கள்ளக்காதலைத் தடுக்க இயலாது என்பதை நன்கு அறிவோம். மேலும் அதை ஊக்குவிக்கும் கைங்கர்யத்தை செவ்வனே செய்ய ஊடகங்களும், சினிமாக்களும், பத்திரிக்கைகளும் மற்றும் கள்ளக்காதலை நியாயப்படுத்தும் சில பெரிய மனிதர்களும் இருக்கும்போது அதை இந்தப் பதிவு செய்ய வேண்டிய தேவை இல்லை!

நாங்கள் இத்தகைய நிகழ்வுகளைப் பற்றிப் பேசும் நோக்கம், பொய் வழக்கு போட்டு கணவர்களையும் அவர்களுடைய ரத்த உறவுகளையும் கைது செய்ய வைக்கும் செயலுக்கு கள்ளக்காதல் ஒரு முக்கிய காரணி என்பதையும், அத்தகைய கள்ளக்காதல் கயமைத்தனத்திற்கும் சேர்த்து பாதிக்கப்பட்ட கணவனே கப்பம் கட்டி அழவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படும் அவலத்தையும் மக்களுக்குப் புரியவைக்க வேண்டும் என்பதுதான்!

')) said...

நல்லது தோழரே,உண்மையில் நீங்கள் குறிப்பிடுகிற அந்தப் பெண்னிய வியாபாரிகளின் அராஜகம் உண்மையில் அழிக்க்கப்படவேண்டியதே. அதற்காக தனி வலையை அமைத்திருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.ஆனாலும் ஓரிருவர் செய்கிற தனிப்பட்ட உடலுபாதைகளுக்கு ஒட்டுமொத்த பெண்ணின் இனமுமே பொறுபேற்க அல்லது பழிசுமக்க வேண்டுமா??
ரமோனா

')) said...

வாக்குமூலம்,

ஒட்டுமொத்த ஆண்குலமே வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என்றும், பெண்கள் உள ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ வன்முறையே செய்ய மாட்டார்கள் என்றும், கணவன் என்பவன் மனைவி மற்றும் மாஜி மனைவியின் இலவச ஏ.டி.எம் மெஷீன் எனவும், ஒரே குற்றத்தை ஆண் செய்தால் கைது, பெண் செய்தால் யாதொரு நடவடிக்கையும் கிடையாது எனவும் ஒருதலைப் பட்சமாக பல்வேறு சட்டங்களை இயற்றியிருப்பதும், ஆண்களுக்கு முழுதும் எதிராக நீதிபதிகளின் மனப்பான்மை இருப்பதும் உங்களுக்குத் தெரியுமா? அத்தகைய பொய்மைத் தோற்றத்தை அழித்து நம் பெண்களின் உண்மை செயல்பாடுகளை வெளிக்காண்பித்து, இருபாலருக்கும் பொதுவாக அமையும்படி (gender-neutral) சட்டங்களையும் நீதிபதிகளின் கண்ணோட்டத்தையும் மாற்றுவது நம் தலையாய கடமை. இல்லையெனில் திருமணம் என்னும் வாழ்க்கை முறையே இல்லாது போய்விடும்.

Anonymous said...

நண்பரே உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகடடும். உங்கள் பணிக்கு எனது பாராட்டுக்கள். நான் ஒரு இஸ்லாமியன். இஸ்லாமியன் ஒருவன் இஸ்லாமிய முறைபடி திருமணம் செய்திருந்தால் (அதாவது வரதட்சனை வாங்காமல்) அவர் இந்த 498a வால் பாதிக்கப்படுவாரா ? அவரால் பிரச்சனை இல்லாமல் இஸ்லாமிய முறைபடி தலாக் சொல்ல முடியுமா ?

')) said...

இஸ்லாமிய அன்பரே,

வருகைக்கும் கேள்விக்கும் நன்றிகள்.

ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்: வரதட்சணை வாங்குவதற்கும் வரதட்சண கேசு போடுவதற்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. இத்தகைய 498A கேசுகளால் பாதிக்கப்பட்டவர்களில் 98% பேர்கள் வரதட்சணை என்ற பேச்சையே எடுக்காதவர்கள்தான். பொய்க் கேசு போட்டு கணவன் குடும்பத்தினரை மிரட்டிப் பணம் பறிப்பதற்காகவே உருவாக்கப்பட்ட சட்டப் பிரிவு இது!

தலாக் செய்வதால் விவாக ரத்துதான் செய்ய முடியும். ஆனால் 498A என்பது கிரிமினல் குற்றம். விவாக ரத்து ஆகி பல ஆண்டுகள் கழிந்தும் இன்னமும் 498A கேசுகள் முடியாமல் அல்லாடுபவர்கள் பலர்.

தங்கள் மனைவியரை மிகவும் நேசித்து உடன் குடும்பம் நடத்தி வரும் முஸ்லிம் நண்பர்கள் பலர் இத்தகைய 498A வழக்குகளில் சிக்கியிருக்கிறார்கள். இவர்கள் தலாக் பற்றி சிந்திக்க முயலும் முன்னரே வழக்கு பதிவாகி விடுகிறது!

விவாக ரத்து என்பது கணவன், மனைவியுடனான குடும்ப வழக்கு. ஆனால் 498A அரசாங்கத்திற்கும் குற்றம் சாட்டப்பட்டவருக்கும் இடையேயானது. அந்த "அப்பாவி"ப் பெண்கள் புகார் ஜோடித்து அளிப்பதோடு சரி. மீதமுள்ள செயல்பாடுகள், சிலவுகள் எல்லாம் மக்கள் வரிப்பணத்தில்!

கணவன் மீது பொய் கிரிமினல் கேசு போட்டு கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்படுவதற்கு கணவனே பணம் கொடுக்கிறான் என்னும் நிலை ஒரு நகை முரண்!