பொங்கிப் பெருகுது 498A கேசுகள்!

தொடரட்டும் பொய் 498A கேசுகளின் அறுவடை!

கூடிய சீக்கிறமே இந்திய ஜனத்தொகையில் பாதி இத்தகைய கேசுகளில் சிக்கி அல்லாடும் காலம் வரும். அப்பொதுதான் இந்தியா முழு வளர்ச்சி அடைந்துவிட்டதாகக் கருத முடியும்!

================
1.

சின்னமனூர் அருகே மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமை
சென்னை போலீஸ்காரர் மீது வழக்குபதிவு

உத்தமபாளையம்,செப்.29- 2009

சின்னமனூர் அருகே மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக சென்னையில் பணிபுரியும் போலீஸ்காரர் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

போலீஸ்காரர்

தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே உள்ள வெள்ளையம்மாள்புரத்தில் தெற்கு தெருவில் வசித்து வருபவர் தெய்வ கணேசன்(வயது 36). இவர் சென்னையில் போலீஸ் காரராக பணிபுரிந்து வருகி றார். இவருக்கும் வெள்ளை யம்மாள்புரம் தெற்கு தெரு வினை சேர்ந்த பிரியதர் சிணி(22) என்பவருக்கும் கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் நடை பெற்றது.

அப்போது 36 பவுன்தங்க நகையை வரதட்சணையாக பெண்வீட்டார் வழங்கி உள்ளனர். பின்னர் ஒரு ஆண்டு கூட்டுக்குடும்பமாக இருந்து விட்டு, அதன்பிறகு மதுரை மாநகர ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் இருந்த போது, ஆசிரியர் பயிற்சி பெறுவதற்கு ரூ.1 லட்சம் பணத்தை உனது பெற்றோரிடம் வாங்கிவா என்று தெய்வகணேசன் பிரியதர்சிணியிடம் கூறி அவரின் பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி உள்ளார்.

ஆனால் பிரியதர்சிணியின் பெற்றோர், திருமணத்திற்கு செலவு செய்து விட்டோம் பணம் இல்லை என்று சொன்னதால், திருமணத்தின் போது 100 பவுன் தங்க நகை பேசி போடவில்லை, 60 பவுன் நகையும், ரூ.40 ஆயிரம் பணமும் வரதட்சணையாக கொடுக்க வேண்டும் என்று பிரியதர்சிணியை அவரது கணவர் தெய்வகணேசனும், மாமியார் லீலாவதி(55) ஆகியோர் தினமும் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

வரதட்சணை கொடுமை புகார்

இதனை அடுத்து பிரியதர்சிணி உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அவர் தனது புகாரில், தனது கணவரும்,மாமியாரும் வரதட்சணை கேட்டு தினமும் கொடுமைப்படுத்தியதாகவும், என் மீது அவர்கள் மண் எண்ணையை ஊற்றி தீவைக்க முயற்சித்த போது, தப்பி வந்து போலீசில் புகார் அளிப்ப தாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதன்பேரில் உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து தெய்வகணேசன் மற்றும் லீலாவதியை தேடி வருகின்றனர்.
===============================

2.

காதலியிடம் வரதட்சணை கேட்ட வாலிபர் கைது

காரைக்குடி,செப்.27- 2009

காதலியிடம் வரதட்சணை கேட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

காரைக்குடி அருகே உள்ள குன்றக்குடி அமரகாரத் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 24). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் மணிகண்டன் ஊருக்கு வந்தபோது, அவருக்கும் அதே தெருவை சேர்ந்த ரேகா (23) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது.

இருவரும் தனிமையில் சந்தித்து தங்களது காதலை வளர்த்துக்கொண்டனர். கடந்த ஜுன் மாதம் இருவரும் திருமயத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் அவரவர் வீட்டிலேயே வசித்து வந்தனர்.

தனது தங்கைக்கு திருமணம் ஆனவுடன் உன்னை என் வீட்டுக்கு அழைத்து செல்கிறேன் என்று மணிகண்டன் கூறினாராம். இதற்கிடையில் ரேகா தன்னை அழைத்துச் செல்லும்படி மணிகண்டனிடம் கூறியுள்ளார். அதற்கு மணிகண்டன் 25பவுன்
தங்கநகை கொண்டு வந்தால்தான் அழைத்து செல்வேன் கூறியதாக தெரிகிறது.

இது குறித்து ரேகா காரைக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜோஸ்பின் அமலராணி வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தார்.

===================

3.

காதலித்து திருமணம் செய்த 2 மாதத்தில் அழகு இல்லை எனக்கூறி, மனைவியிடம் வரதட்சணை கேட்ட கணவன் சித்ரவதை செய்ததாக கைது

கோவை,செப்.26- 2009

கோவையில் திருமணமான 2 மாதத்தில் அழகு இல்லை எனக்கூறி காதல் மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கணவனை போலீசார் கைது செய்தனர்.

கோவை செல்வபுரம் தெற்கு உக்கடம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜ். இவரது மகன் விக்னேஷ் (வயது 22). பெயிண்டர். இவர் கோவை குனியமுத்தூர் பிள்ளையார்புரம் கஸ்தூரி கார்டனை சேர்ந்த காவேரியை (19) காதலித்தார். அவர் ஒரு பிளாஸ்டிக் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இருவரும் கடந்த இரு மாதத்துக்கு முன்பு காதல் திருமணம் துகொண்டனர். இருவரது காதலை விக்னேஷின் பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை. அதையடுத்து இருவரும் பிள்ளையார் புரத்தில் உள்ள காவேரியின் வீட்டில் அவரது தாய், தங்கையுடன் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் விக்னேஷ் திடீரென மனைவி காவேரியிடம் `நீ அழகாக இல்லை. உன்னை காதலித்து திருமணம் செய்ததால் எந்த பயனும் இல்லை. அதனால் உன் அம்மாவிடம் கூறி மோட்டார் சைக்கிளை வரதட்சணையாக வாங்கி வரவேண்டும்'
என்று கூறி மிரட்டியதாக தெரிகிறது. மேலும் காவேரியை அவர் சித்ரவதை செய்ததாகவும் கூறப்படுகிறது.

அவரது தொந்தரவு தாங்கமுடியாமல் காவேரி வீட்டில் தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். படுகாயம் அடைந்த அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக கோவை குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஷை கைது செய்தனர்.
================

4.

இன்னொரு வழக்கு

கேரள மாநிலம் கோவில்கடவு ஸ்ரீ ஜெயலட்சுமி ஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் சவுந்தரராஜ். இவரது மகள் ஸ்ரீ ஜெயா. இவருக்கும் கோவை சுந்தராபுரம் இடையர்பாளையத்தை சேர்ந்த மூக்காண்டி மகன் ராஜா (32)வுக்கும் கடந்த 2005-ம் ஆண்டு ஜுன் மாதம் திருமணம் நடந்தது. அப்போது பெண்வீட்டார் தரப்பில் ராஜாவுக்கு 75 பவுன் நகையும், ரூ.1 லட்சம் ரொக்கப்பணமும் வரதட்சணையாக கொடுத்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் ராஜா தனது மனைவியிடம் ரூ.4 லட்சம் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின்பேரில் போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் ஸ்ரீ ஜெயாவின் கணவர் ராஜா, அவரது மாமியார் பிரமுயம்மாள், மைத்துணர் ராஜாரத்தினம், சுகுணா ஆகிய 4 பேர் மீது வரதட்சணை சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
==============

5.

வரதட்சணைக் கொடுமை - மனைவியை துன்புறுத்தியதாக கன்னட பாடகர் கைது
திங்கள்கிழமை, செப்டம்பர் 28, 2009

வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய பிரபல கன்னட பின்னணி பாடகர் ஹேமந்த் கைது செய்யப்பட்டார்.

இவருக்கும், பிரியதர்ஷினி என்பவருக்கும் 2007ம் ஆண்டு திருமணம் நடந்தது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கணவர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறி பிரிஷயதர்ஷினி தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

மேலும், கணவருடன், மாமியார், நாத்தனாரும் இவரை துன்புறுத்தியதாக தெரிகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அவர் பெங்களூர் பசவன்குடி மகளிர் காவல் நிலையத்தில் வரதட்சணை புகார் கொடுத்தார்.

இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீஸார் ஹேமந்தை கைது செய்தனர்.

3 மறுமொழிகள்:

')) said...

செய்தி 1

//சின்னமனூர் அருகே மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமை
சென்னை போலீஸ்காரர் மீது வழக்குபதிவு//

அருமை. மேலும் ஒரு போலிஸ்!

//உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து தெய்வகணேசன் மற்றும் லீலாவதியை தேடி வருகின்றனர்.//

தலைமறைவாக தப்பியோடிய போலிஸ். பிரமாதம்.
===================
செய்தி 2

//இருவரும் தனிமையில் சந்தித்து தங்களது காதலை வளர்த்துக்கொண்டனர்.//

ஆகா! இருவரும் தனிமையில் சந்தித்து "எதை" வளர்த்துக் கொண்டனர் என்று தெரியவில்லை?
==================
செய்தி 3

//அதையடுத்து இருவரும் பிள்ளையார் புரத்தில் உள்ள காவேரியின் வீட்டில் அவரது தாய், தங்கையுடன் வசித்து வந்தனர்.//

கேசு குப்பையை கிளரினால் தான் உண்மை வெளிவரும். செய்தியை பாருங்கள் தங்கை ஒன்று இருக்கிறது....

==========

செய்தி 5

// மேலும், கணவருடன், மாமியார், நாத்தனாரும் இவரை துன்புறுத்தியதாக தெரிகிறது//

கூட்டமாக கைது செய்யவில்லையென்றால் நீதி தேவதைக்கு சித்தம் களங்கிவிடுமல்லவா!

')) said...

//சின்னமனூர் அருகே மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமை
சென்னை போலீஸ்காரர் மீது வழக்குபதிவு//

படிக்கவே ரொம்ப சந்தோசமா இருக்கு.. இதுமாதிரி ஜட்ஜய்யா மேல போலீஸ் இன்சுபெக்டர் அதுவும் மகளிர் காவல் நிலைய இனுசுபெக்டர் போன்றவர்கள் மீது வரதட்சணை கொடுமை சட்டம் பாயவேண்டும்... அப்போழுதுதான் பாதிக்கப்பட்டவர்கள் படும் பாடு இவர்களுக்குத்தெரியும்..

//2. காதலியிடம் வரதட்சணை கேட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.//

சரியா மாட்னடி மாப்பு... கொய்யால நீ வெளிநாட்ல சம்பாதிச்ச காசு எல்லாத்தையும் பெயில் ஜெயிலுன்னு அலைஞ்சி உன் காச புறத்தையும் புடுங்கிகிட்டு உட்டுடுவாங்கா
டோன்டு வொரி பி ஹேப்பி

//3. காதலித்து திருமணம் செய்த 2 மாதத்தில் அழகு இல்லை எனக்கூறி, மனைவியிடம் வரதட்சணை கேட்ட கணவன் சித்ரவதை செய்ததாக கைது//

உட்காந்து யோசிப்பாங்களோ???
--இல்ல இல்ல படித்துகிட்டோ நின்னுகிட்டொ கூட யோசிப்பாங்கய்யா யோசிப்பாங்கய்யா...

இதெ பயபுல்ல அவன் அலைஞ்சி திரிஞ்சி பெயில் எடுத்தபிறகு இனிமெல் ஒன்னும் இவன பன்னமுடியிதுன்னு பன்ன பிறகு கட்டப்பஞ்சாயத்து பேச வரும்.. இதுபோல வர்ர பெண்களுக்கு பெரிய போராட்டம் எல்லாம் வேற நடக்கும்...


---அய்யோ அப்பா இதுக்கு மெல என்னால பின்னுட்டம் எழுத முடியுது... கொய்யால புத்துல உள்ள கரையான் மாதிரி வந்துகிட்டெ இருக்கு

Anonymous said...

வாழ்க Sec 498a ,வாழ்க வளமுடன்,பல்லாண்டு வாழ்க