தர்மம் கடைசியில்தான் வெல்லுமாம்!

நீலு சோப்ரா என்பவருக்கு வயது 80. அவருடைய மனைவி க்ரிஷன் சரூப்பின் வயது 76. இவர்கள் மீதும் இவர்களுடைய மகனான ராஜேஷ் மீதும், இவர்களுடைய மருமகள் 498A மற்றும் 406, 114 போன்ற சட்டப் பிரிவுகளிலும் புகார் கொடுத்து வழக்குத் தொடுத்திருந்தார். இது நடந்தது 1993-ல்.

இந்தப் புகார் பொய்யானது, இதில் துளிக்கூட உணமையில்லை என்று அந்தப் புகாரை தள்ளுபடி செய்யும்படி கோரி அவர்கள் வழக்குத் தொடுத்தனர்.

இந்த விஷயத்தில் ஒரு முக்கியமான நுணுக்கத்தை நீங்கள் அவதானிக்க வேண்டும் ஒரு மனைவி தன்னை கணவனும் அவனுடைய பெற்றோர் மற்றும் உறவினர்களும் கொடுமைப்படுத்துவதாக ஒரு புகாரைக் கொடுத்தால் போதும். அதன் மேல் நடவடிக்கை எடுத்து வழக்கு நடத்துவது அரசின் பொறுப்பு. புகார் கொடுப்பதோடு சரி. மற்றச் சிலவு முழுதும் மக்களின் வரிப்பணத்தில்!

ஆனால் அந்தப் புகார் பொய்யானது என்றால் கணவன் தரப்பினர்தான் தன் சொந்தக் காசில் வழக்காடவேண்டும்!

சரி, இப்போது இந்தக் கிழவர்கள் கதைக்கு வருவோம்!

தங்கள் மேல் தொடுக்கப்பட்ட பொய் வழக்கை எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று அவர்கள் கோரிக்கை கீழ்க் கோர்ட்டிலும் டில்லி உயர்நீதி மன்ரத்திலும் தள்ளுபடி செய்துவிட்டனர்.

அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

இந்தப் போராட்டத்தினிடையே கணவன் ராஜேஷ் செத்தே போயிட்டான்!

ஆனால் அவனுடைய வயதான பெற்றோர் தொடர்ந்து போராடினர்.

உச்ச நீதி மன்றத்தில் நேற்றைய முன் தினம் (19-10-2009) அந்தப் பொய்ப் புகாரைத் தள்ளுபடி செய்து (quash) தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் சொல்லப்பட்டிருப்பது என்ன?

தன் புடவைகளையும் நகைகளையும் அவர்கள் திருடி விட்டனர் என்றும் வரதட்சனைக் கொடுமை செய்தனர் என்று பொத்தம் பொதுவாக அந்த மருமகள் புகார் கொடுத்திருக்கிறாரேயன்றி, அந்தப் புகாரில் எந்தவொரு விவரமும் இல்லை. இதன் அடிப்படையில் செயல்படுவது நீதிக்கு விரோதமனது என்று கூறியிருக்கின்றனர். அந்த நீதிபதிகள்.

A bench of justices VS Sirpurkar and Deepak Verma said:

"Under such circumstances, it would be an abuse of the process of law to allow the prosecution to continue against the aged parents of Rajesh, the present appellants herein, on the basis of vague and general complaint which is silent about the precise acts of the appellants," the bench said while quashing the case registred nearly 16 years ago."

இதனிடையே 16 ஆண்டுகள் கழிந்து விட்டன!

இந்தப் பதினாறு ஆண்டுகளில் தன் மகனையும் இழந்த வயதான அந்தப் பெற்றோர்கள் எந்தப்பாடு பட்டிருப்பார்கள் என்பதை எண்ணிப் பாருங்கள்!

இந்தப் பதினாறு ஆண்டுகளுக்கு யார் பதில் சொல்வது?

தன் வேலையில் ஒரு அரசு அதிகாரி தவறு செய்தால் அவருக்கு தண்டனை உண்டல்லவா? நிதிபதிகளும் அரசு பணியாளர்கள் தானே? தவறான தீர்ப்பு வழங்கி இந்த வயதான தம்பதிகளை 16 ஆண்டுகள் அலைக்கழித்து தன் மகனுடைய சாவையும் அனுபவிக்கச் செய்த கீழக்கோர்ட்டு நிதிபதிகளுக்கு என்ன தண்டனை?

அதுபோல் பொய் வழக்கு போட்ட அந்த பெண்குலத் திலகத்திற்கு என்ன தண்டனை?

மக்களே, சிந்திப்பீர்!

"பெண்ணியவாதம் ஒரு தீவிரவாதம்"

"சட்டத்தின் மூலம் குடும்ப வாழ்வை தாங்கிக் காக்க இயலாது; அதை அழிக்கத்தான் இயலும்"

" இன்றைக்கு காந்திஜி உயிருடன் இருந்தால் அவரையும் குடும்ப வன்முறைச் சட்டத்தில் கைது செய்து உள்ளே தள்ளச் செய்திருப்பார்கள் நம் நாட்டின் பெண்னியவாதிகள்!"

செய்தி இங்கே.

6 மறுமொழிகள்:

')) said...

செத்தபிறகு பால் உத்துன கதைதான்...
இன்னும் கொஞ்ச நாள்ல 498ஏ கேச விசாரிக்கறதுக்குன்னே தனிக்கோர்ட்டு கொண்டு வந்தாலும் அச்சரியபடுறதிக்கில்ல...

')) said...

ஒரு உறையில் இரண்டு கத்தி இருந்தா என்னைக்குமே பிரச்சனைதான்...
இந்த மாதிரி பொண்டாட்டிகூட குடும்பம் நடத்துறதுக்கு பதிலா ஜெயில்ல நிம்மதியா இருக்கலாம...

')) said...

தப்பிச்சார் ஒரு புண்ணியவான்...

தியெட்டருக்கு படத்துக்கு கூட்டிட்டு போயி எஸ்கேப் ஆன புதுமனப்பெண்...

498ஏ, போலீஸ் அரஸ்ட் என்று யாருக்கும் சிரமத்தை கொடுக்காமல் விலகியய அந்த பெண்குல மணிக்கத்துக்கு வாழ்த்துக்கள்..


இதொ தினத்தந்தியில் வெளியான ஒரு செய்தி:

http://www.dailythanthi.com/article.asp?NewsID=521828&disdate=10/22/2009&advt=2

')) said...

உன் மனைவியோடு ஒருவன் ஓடிப் போய்விட்டால்....

http://tamilgopi.blogspot.com/2009/10/blog-post_22.html

ஒய்விருந்தால் வாசிக்கவும் இந்த வலைபூ பக்கத்தை...

')) said...

///மக்களே, சிந்திப்பீர்!

"பெண்ணியவாதம் ஒரு தீவிரவாதம்"///

நடப்பதைப் பார்த்தால் அது தான் சரின்னு தோனுது

')) said...

தர்மம் இருப்பதாக நம்புகிறார்களே அதுவரை சந்தோகஷம் தான். அது செத்த பாம்பு போல இருக்கிறது அவ்வளவு தான்.