முன்னாள் அமைச்சரும் இன்னாள் எம்.பியுமான செம்மலை மற்றும் அவர் குடும்பத்தினர் மீது 498A கேசு தொடுத்துள்ளனர்.
எம்.பி வரை படர்ந்துள்ள 498A பாம்பு சீக்கிறமே அமைச்சர்கள், நீதிபதிகள் போன்று சமூகத்தில் அனைத்து நிலைகளில் உள்ள பல பெரிய மனிதர்களையும் பீடித்த பின்னர்தான், பொய்க் கேசு போடுவதற்கென்றே அமைக்கப்பட்டுள்ள Sec 498A of IPC, Domestic Violence Act, Sec 125 of CrPC போன்ற கொடுங்கோன்மை சட்டங்களிலிருந்து மக்களுக்கு விமோசனம் கிடைக்கும்.
இப்போதெல்லாம் உங்களுக்கு யாரையாவது பிடிக்கவில்லை, அவர்களைப் பழி வாங்க வேண்டுமென்று தோன்றினால் அதற்கு சும்மா அடிச்சான், பிடிச்சான் போன்ற ஜுஜுபி கேசெல்லாம் வேலைக்கு ஆகாது! அதுக்குத்தான் கைவசம் நல்ல தீபாவளி லட்டு கணக்காக பொம்பளை சம்பந்தமான பல சட்டங்களைப் போட்டு வைத்திருக்கிறார்களே ஐயா! சமீபத்தில் தினமலர் செய்தி ஆசிரியரை எந்த சட்டத்தில் கைது செய்தார்கள் பார்த்தீர்கள் இல்லையா - பெண்கள் வன்கொடுமை சட்டத்தில்! அது தான் கூரான ஈட்டி. அதுபோல் 498A மற்றும் குடும்ப வன்முறைச் சட்டம் - இப்படி எதேனும் ஒரு பெண் கொடுமை தொடர்பான சட்டத்தை ஏவி விட்டால், ஆசாமி காலி!
குடும்ப வன்முறைச் சட்டம் (Prevention of domestic violence against women act) ஒரு கந்தல் சட்டம். இதை வைத்துக் கொண்டு யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் சிக்க வைக்கலாம். உதாரணத்திற்கு திருவாளர் டோண்டு தன் வீட்டில் மௌனமாக வலைப்பதிவு எழுதிக் கொண்டு குடும்ப வன்முறை செய்கிறார் என்று நீங்கள் (அவருக்குச் சம்பந்தமில்லாதவர்) புகார் கொடுக்கலாம். அதன் மீது ஆக்ஷன் எடுப்பார்கள். இது போல் நிகழ்ந்த சில கேசுகளைப் பற்றி சீக்கிறமே விரிவாக எழுதுகிறேன்.
இப்போதைக்கு செம்மலையின் நிலையைப் பாருங்கள்:-
வரதட்சணை கொடுமை வழக்கு.
அ.தி.மு.க. எம்.பி. செம்மலை மனைவி, மகனுடன் கோர்ட்டில் ஆஜர்.
சேலம், அக்.13- 2009. செய்தி - தினத்தந்தி.
சேலம் தொகுதி அ.தி.மு.க. எம்.பி. செம்மலை, மனைவி மற்றும் மகனுடன் சேலம் மகளிர் கோர்ட்டில் ஆஜரானார். வரதட்சணை கொடுமை வழக்கில் அவரிடம் விசாரணை நடந்தது.
அ.தி.மு.க. எம்.பி.
அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சரும், தற்போதைய சேலம் தொகுதி எம்.பி.யுமான செம்மலையின் 2-வது மகன் எழில் அமுதன். இவருக்கும், சேலம் மாவட்டம் குஞ்சாண்டினிரை சேர்ந்த முத்துசாமியின் மகள் வாணி பிரிதாவுக்கும் கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் வாணி பிரிதா, தன்னுடைய கணவர் எழில் அமுதன், மாமியார் புஷ்பா, மாமனார் செம்மலை ஆகியோர் மீது மேட்டூர் போலீசில், வரதட்சணை கொடுமை புகார் செய்தார். இந்த புகார் தொடர்பான விசாரணை சேலம் சூரமங்கலம் மகளிர் போலீசாராலும், பின்னர் ஈரோடு மகளிர் போலீசாராலும் நடத்தப்பட்டது.
விசாரணையை தொடர்ந்து செம்மலை எம்.பி., அவருடைய மனைவி புஷ்பா, மகன் எழில் அமுதன் ஆகியோர் மீது சேலம் அனைத்து மகளிர் கோர்ட்டில் வரதட்சணை கொடுமை வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்தது.
இந்த நிலையில் நேற்று காலை மகளிர் கோர்ட்டு நீதிபதி கோபால் முன்னிலையில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது.
கோர்ட்டில் ஆஜர்
செம்மலை எம்.பி., அவருடைய மனைவி புஷ்பா, மகன் எழில் அமுதன் ஆகியோர் நேற்று கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள். அப்போது சாட்சிகள் அளித்த தகவல்களின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்ட 3 பேரிடமும் கேள்விகள் கேட்கப்பட்டு பதில்கள் பெறப்பட்டன.
அப்போது செம்மலை எம்.பி. இந்த வழக்கு பொய்யான வழக்கு என்றும், அரசியல் காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கு என்றும் பதில் அளித்தார். இந்த பதில்கள் பதிவு செய்யப்பட்டன. அதேபோல் அவருடைய மனைவி புஷ்பா, மகன் எழில் அமுதன் ஆகியோர் அளித்த பதில்களும் பதிவு செய்யப்பட்டன.
விசாரணை தள்ளி வைப்பு
பின்னர் இந்த வழக்கு விசாரணை 14-ந் தேதிக்கு (நாளை) தள்ளி வைக்கப்பட்டது.
எம்.பி வரை எம்பியிருக்கும் 498A கேசுகள்!
குறிச்சொற்கள் 498a, anti-male, biased laws, dv act, law, M.P, maintenance, misuse, குடும்வ வன்முறை, செம்மலை, பொய் வழக்கு
Subscribe to:
Post Comments (Atom)
1 மறுமொழி:
//அப்போது செம்மலை எம்.பி. இந்த வழக்கு பொய்யான வழக்கு என்றும், அரசியல் காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கு என்றும் பதில் அளித்தார்.//
அரசியல்வாதிக்கு 498A கேசு வந்தால் அது அரசியல் காழ்ப்புணர்ச்சி என்று சிம்ப்பிளாக சொல்லி தப்பித்து விடலாம். அப்பாவி பொது ஜனம் மீது பொய்கேசு போட்டால் அது எதிரி நாட்டின் சதி என்று அரசாங்கம் கையை விரித்து அப்பாவிகளை காப்பாற்ற மறுக்கிறது. அரசியல் வியாதிகள் நல்லா வியாபாரம் பார்க்கிறார்கள் இந்த நாட்டில்.
உங்கள் கருத்தைத் தெரிவிக்க