வன்முறையில் ஆண்கள் மட்டும்தான் ஈடுபடுகிறார்கள் என்று சட்டம் (The Protection Of Women From Domestic Violence Act) இயற்றியிருக்கிறார்கள். அத்தகைய சட்டம் ஏற்படக் காரணமானவர்கள், அதை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்கள், அதனைக் கைக்கொண்டு குடும்பங்களைச் சிதைத்து, கணவனையும் அவனது பெற்றோர்களையும் நடுத்தெருவில் நிற்கவைக்கும் பெண் குலத்திலகங்கள், மனைவிகளின் பெயரைச் சொல்லி ஆதாயம் தேட முயற்சிக்கும் பெண்ணியவாதிகள், அரசியல்வாதிகள் போன்றோருக்கு இந்தச் செய்தியை சமர்ப்பிக்கிறோம்!
சேலம், அக்.22 - 2009. செய்தி - தினத்தந்தி
கள்ளக்காதல் மோகத்தில் கணவனை சதி திட்டம் தீட்டி கொலை செய்த வழக்கில் மனைவி மற்றும் கள்ளக்காதலனுக்கு 3 ஆயுள் தண்டனையும், 7 பேர் கொண்ட கூலிப்படைக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.
கள்ளக்காதல்
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள வைகுந்தம் சித்துக்குட்டை காடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 32). விவசாயி. அதே பகுதியைச் சேர்ந்தவர்
பெரியண்ணன் (32) விவசாயி. இருவரும் உறவினர்கள்.
பெரியண்ணனுக்கும், விஜயா என்ற பெண்ணுக்கும் 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை. இதனால் பெரியண்ணன் அதே பகுதியைச் சேர்ந்த ராணி சந்திரா (28) என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்ய முடிவு செய்தார். இதைத் தொடர்ந்து, இருவருக்கும் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக உருவானது.
கண்டித்தார்
இந்த நிலையில் பெரியண்ணனின் மனைவி விஜயா கர்ப்பமானார். இதனால் ராணி சந்திராவுக்கும், பெரியண்ணனுக்கும் திருமணம் நடைபெறவில்லை. இதன் பிறகு ராணி சந்திராவிற்கும், செல்வத்திற்கும் திருமணம் நடந்தது.
செல்வத்தை திருமணம் செய்த பிறகும், பெரியண்ணனுடன் ராணி சந்திரா பழக்கத்தை தொடர்ந்து வந்தார். மேலும் செல்போனில் மணிக்கணக்கில் பேசி வந்தார். இதை அறிந்த செல்வம் மனைவியை கண்டித்தார்.
கூலிப்படையை ஏவி கொலை
இதனால் ஆத்திரம் அடைந்த ராணி சந்திரா, பெரியண்ணனிடம், "எனது கணவர் உயிருடன் இருக்கும் வரை நான் உன்னிடம் பேச முடியாது'' என கூறினார்.
இதையடுத்து பெரியண்ணன், பவானியைச் சேர்ந்த கூலிப்படை கும்பலுடன் சேர்ந்து கடந்த 18.6.2007 அன்று செல்வத்தை கொலை செய்தார்.
இந்த கொலை தொடர்பாக அப்போதைய சங்ககிரி போலீசார் விசாரணை நடத்தி, பெரியண்ணன், ராணி சந்திரா, பவானியை சேர்ந்த கூலிப்படை கும்பல் அரைப்பள்ளன் என்கிற செந்தில் என்கிற செந்தில் குமார் (32), காசி என்கிற காசி விஸ்வநாதன் (29), ராமு என்கிற ராம்குமார் (23), சரா என்கிற சரவணன் (22), சக்தி என்கிற சக்திவேல் (23), ஒயிட் என்கிற வெள்ளையன் என்கிற செல்வம் (23), வீரான் என்கிற பீர்முகமது (27), முருகேசன் (35) ஆகிய 10 பேரை கைது செய்தனர்.
அவர்கள் மீது கொலை செய்தல், சதி திட்டம் தீட்டுதல், கூட்டமாக வருதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சேலம் 1-வது விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது.
3 ஆயுள் தண்டனை
வழக்கை விசாரித்த நீதிபதி கலைவாணி நேற்று தீர்ப்பு கூறினார்.
குற்றம் சாட்டப்பட்ட பெரியண்ணனுக்கு 3 ஆயுள் தண்டனையும், ரூ.32 ஆயிரம் அபராதமும், ராணி சந்திராவிற்கு 3 ஆயுள் தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. கூலிப்படையைச் சேர்ந்த அரைப்பள்ளனுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 3 ஆண்டு சிறையும் ரூ.23 ஆயிரம் அபராதமும், காசி விஸ்வநாதன், ராம்குமார், சரவணன், சக்திவேல், செல்வன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை, 6 ஆண்டு 2 மாதம் ஜெயில் தண்டனையும், ரூ.28 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
வீரான் என்கிற பீர்முகமதுவிற்கு இரட்டை ஆயுள், 9 ஆண்டு ஜெயில் மற்றும் ரூ.29 ஆயிரம் அபராதமும், முருகேசனுக்கு ஆயுள் தண்டனையும், பிற பிரிவுகளில் 6 ஆண்டு ஜெயில், 2 மாத சிறையும் ரூ.18 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த தண்டனைகளை அனைவரும் ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி கலைவாணி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவிக்கு 3 ஆயுள் தண்டனை
குறிச்சொற்கள் adultery, anti-male, biased laws, lust, manorama, paramour, vijayakanth, கள்ளக்காதல், கொலைவெறி, மனோரமா, ராமாத்தாள்
Subscribe to:
Post Comments (Atom)
1 மறுமொழி:
கூலிப்படையை ஏவி கணவனை கொன்ற பெண்ணுக்கு 3 ஆயுள் தண்டனை என்றால் அரசாங்கத்தையே (போலிசையே) கூலிப்படையாக ஏவி அப்பாவிகளை கொடுமை செய்யும் 498A கொலைகாரிகளுக்கு என்ன தண்டணை தருவார்கள்? எந்த தண்டணையும் கிடையாது. ஏனென்றால் கூலிப்படைக்கு உடந்தையாக நீதிமன்றங்களும் செயல்படுகின்றது. பொய் 498A கேசு பதிவு செய்ததும் கண்ணை மூடிக்கொண்டு ரிமாண்ட் செய்ய உத்தரவிடுவதே மாஜிஸ்ட்ரேட் தான். அப்படியிருக்க இந்த அரசாங்க ஆதரவோடு செயல்படும் கூலிப்படையை தண்டிப்பது யார். செய்தியில் சொல்லப்பட்ட பெண்ணைப் போல் சில அப்பாவிப் பெண்கள் இலவசமாக கிடைக்கும் அரசாங்க கூலிப்படையை மறந்து காசு செலவழித்து தனியார் கூலிப்படையை வேலைக்குப் பயன்படுத்தும்போது இது போன்று மாட்டிக்கொள்கிறார்கள். ஐயோ பாவம் அப்பாவிப் பெண்! இனிமேலாவது "நலச்சங்கங்கள்" இது போன்ற அப்பாவி பெண்களுக்கு அரசாங்கத்தில் கிடைக்கும் 498A போன்ற இலவச உதவித்திட்டங்களைப்பற்றி எடுத்துச் சொல்லுவார்களா?
உங்கள் கருத்தைத் தெரிவிக்க