மனைவி கேவலமாக திட்டினாலும் பொறுத்து கொள்ள வேண்டும் : மும்பை ஐகோர்ட் தீர்ப்பு

அக்டோபர் 03,2009. செய்தி: தினமலர்

மும்பை : "மனைவி, எவ்வளவு கேவலமாக திட்டினாலும் அதை கொடுமையாக நினைத்து விவாகரத்து கோரக்கூடாது" என, மும்பை கோர்ட் தெரிவித்துள்ளது. (ஆனால், அந்தக் கணவன் மனைவியிடம் பேசாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டால்கூட அது குடும்ப வன்முறையாகக் கருதப்பட்டு அந்தக் கணவனுக்கு தண்டனை அளித்து விடுவார்கள் இந்த நீதிபதிகள். ஏனெனில் சட்டம் அப்படித்தான் சொல்கிறது)

மகாராஷ்டிர மாநிலம் புனேவை சேர்ந்த நபர், மும்பை ஐகோர்ட்டில் விவாகரத்து கோரி மனு செய்தார். இந்த மனுவை, நீதிபதிகள் பி.பி.மஜும்தார் மற்றும் ஆர்.வி.மோரே அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது.


தனியார் நிறுவனத்தில் அக்கவுன்டன்டாக பணிபுரியும் 33 வயதான நபர் தாக்கல் செய்துள்ள மனுவில், "எனக்கு திருமணமாகி 20 மாதங்கள் ஆகின்றன. என் மனைவி, என்னை சகட்டு மேனிக்கு திட்டி தீர்க்கிறாள். என்னுடன் அமர்ந்து சாப்பிட மறுக்கிறாள். படுக்கை அறையிலும் போதிய ஒத்துழைப்பு இல்லை. காலம் முழுக்க இவளது கொடுமையான பேச்சை கேட்டுக் கொண்டு குடும்பம் நடத்த முடியாது. எனவே, விவாகரத்து அளிக்க வேண்டும்' என்றார். இது குறித்து, அந்த நபரின் இளம் மனைவியிடம் நீதிபதிகள் விசாரித்தனர். "சி.ஏ., படித்துள்ளதாக பொய் சொல்லி நிறைய சீதனங்களுடன் என்னை திருமணம் செய்து கொண்டார். ஆனால், தனியார் நிறுவனத்தில் சாதாரண குமாஸ்தாவாக தான் வேலைப் பார்க்கிறார். இந்த உண்மை தெரிந்ததால் கோபப்பட்டு அவரை திட்டினேன்' என்பதை, மனைவி ஒப்புக் கொண்டார்.


இது குறித்து, நீதிபதிகள் குறிப்பிடுகையில், "ஆரம்பத்தில் இந்த பெண் கணவனுடன் அன்பாகத்தான் பழகியிருக்கிறார். கணவர் சி.ஏ.,படிக்கவில்லை என்பது தெரிந்த பிறகு தான், கோபம் ஏற்பட்டு, திட்டியிருக்கிறார். மனைவி திட்டுவதையெல்லாம் ஒரு கொடுமை என கூறி விவாகரத்து கோருவதை, ஏற்க முடியாது. மனைவியும் குடும்ப வாழ்க்கை பாதிக்காத அளவுக்கு சொற்களை பயன்படுத்த வேண்டும்' என கூறி மனுவை தள்ளுபடி செய்து விட்டனர்.

============

திருமணம் ஆண்களைப் பொறுத்தவரை பாம்புப் புற்றில் கையை விடுவது போன்றதுதான்.

வேண்டாமய்யா இந்தக் கல்யாணம்!

3 மறுமொழிகள்:

')) said...

அருமையாண கருத்துஉள்ள வலைபதிவு... ஒய்விருந்தால் படித்துப்பார்கvum

http://pinnokki.blogspot.com/2009/10/blog-post_03.html

')) said...

இந்தியக் கணவன் என்று முத்திரை குத்தப்பட்டுவிட்டால் மனைவி திட்டினால் என்ன மனைவி வீட்டு நாய் வந்து செருப்பால் அடித்தால் கூட வாங்கிக் கொள்ள வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஒருவர் ஏற்கனவே சொல்லியிருக்கிறாரே. அது தான் வெற்றிகரமான வாழ்க்கையின் ரகசியம் என்றும் சொல்லியிருக்கிறார்!

Anonymous said...

who knows the personal problems faced by the judge, who delivered this judgement ?