பாட்டு டீச்சர் கொலை. கள்ளக்காதல் அம்பலம்(செய்தி: தினமலர், தினகரன், தினத்தந்தி)

முந்தைய செய்திகள்:

சென்னை அசோக்நகர் இரட்டைக் கொலையில் புதிய திருப்பம்
அனந்தலட்சுமிக்கு, நள்ளிரவில் வந்த செல்போன் அழைப்புகள்
போலீசார் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

சென்னை, செப்.27- 2009

சென்னை அசோக்நகரில் நடந்த இரட்டைக் கொலையில் புதிய திருப்பமாக, கொலையுண்ட அனந்தலட்சுமிக்கு நள்ளிரவில் வந்த செல்போன் அழைப்புகள் பற்றி பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

தாய்-மகன் கொலை

சென்னை அசோக்நகர் போஸ்டல் காலனியில் வசித்து வந்த அனந்தலட்சுமி (வயது 39), அவரது மகன் சூரஜ் (13) ஆகியோர் பட்டப்பகலில் கத்திரிக்கோலால் குத்தி படுகொலை செய்யப்பட்டனர். அனந்தலட்சுமியின் கணவர் ராமசுப்பிரமணி, பெங்களூர் மருந்து கம்பெனியில் மாதம் ரூ.70 ஆயிரம் சம்பளத்தில் வேலை பார்த்து வருகிறார். அவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்தவர்கள்.

கொலை செய்யப்பட்ட அனந்தலட்சுமி அணிந்திருந்த நகைகள் மற்றும் பணத்தை பறித்துச்சென்ற கொலையாளி, வீட்டில் பீரோவில் இருந்த 40 பவுன் நகைகளை அப்படியே விட்டுச்சென்று இருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது. சென்னையை உலுக்கிய இந்த இரட்டைக் கொலை பற்றி விசாரிப்பதற்காக 8 தனி போலீஸ் படைகள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு படையும் வெவ்வேறு கோணத்தில் விசாரணையை மேற்கொண்டன.

புதிய திருப்பம்

முதல் கட்ட விசாரணையில், தெரிந்த நபர்தான் இந்தக் கொலையை செய்திருக்கிறார் என்பது தெரியவந்தது. இத்தகைய கொலைகளில் துப்பு துலக்குவதில் செல்போன் உரையாடல்கள் முக்கிய பங்கு வகித்து உள்ளன. இந்த வழக்கிலும் செல்போன் தொடர்புதான், புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

மிகவும் முன் எச்சரிக்கையாக நடந்துகொள்வதாக கருதி, அனந்தலட்சுமி மற்றும் சூரஜின் செல்போன்களை கொலையாளி எடுத்துச் சென்றுவிட்டான். ஆனால், போலீசார் மிகவும் சாதுரியமாக செயல்பட்டு, அவர்களுடைய தொலைபேசி எண்களைக்கொண்டு, அந்த செல்போன் நிறுவன அலுவலகம் மூலம் பல விவரங்களை போலீசார் சேகரித்து உள்ளனர். அதில் பரபரப்பான தகவல்கள் கிடைத்து உள்ளன.

நள்ளிரவு அழைப்புகள்

குறிப்பிட்ட செல்போன் எண்களில் இருந்து அனந்தலட்சுமிக்கு அடிக்கடி அழைப்புகள் வந்திருந்தன. மேலும் அனந்தலட்சுமியின் செல்போனில் இருந்தும் அந்த எண்களுக்கு பல முறை பேசப்பட்டு இருந்தது. இவர்கள் எந்த நேரத்தில், எங்கிருந்து பேசினர் என்ற விவரங்கள் அனைத்தும் செல்போன் எக்ஸ்சேஞ்சில் இருந்து கிடைத்தது.

அதை பரிசோதித்துப் பார்த்ததில் சில `அழைப்பு'கள் நள்ளிரவு நேரத்தில் மட்டுமே பேசப்பட்டு இருப்பது தெரிய வந்தது. அதிலும் குறிப்பாக சில அழைப்புகள், ஒன்றரை மணி நேரம் வரை நீடித்துள்ளது.

அந்த வகையில் கடைசியாக அனந்தலட்சுமி பேசிய `செல்போன் அழைப்பு' 40 நிமிடங்கள் பேசப்பட்டதாக தெரிய வந்தது. கொலை நடந்த அன்று, குறிப்பிட்ட அந்த எண்ணுக்கு அனந்தலட்சுமி அதிகமாக பேசி இருந்தார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆட்டோ டிரைவர் உள்பட 15 பேர்

அனந்தலட்சுமியுடன் செல்போனில் பேசிய 15 நபர்களை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். அவரது வீட்டுக்கு அடிக்கடி வரும் ஆட்டோ டிரைவரிடமும் தனியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த விசாரணையில் போலீசாருக்கு கொலைக்கான முக்கிய துப்பு கிடைத்துள்ளது. சந்தோஷ் என்ற 35 வயது வாலிபரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சில தகவல்கள் கூறுகின்றன. அனந்தலட்சுமிக்கு யாருடன் நட்பு உள்ளது என்பது பற்றியும் விசாரிக்கப்படுகிறது.

வித்தியாசமான கொலை

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

இரட்டைக் கொலை விவகாரத்தில் ஒரே கோணத்தில் மட்டும் விசாரணையை நடத்தவில்லை. பிடிபட்ட நபர்களிடம் மேற்கொள்ளப்படும் விசாரணையில்தான் சில விவகாரம் உறுதி செய்யப்படும். தற்போது எங்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகம் ஓரளவு உறுதியாகி இருக்கிறது.

கத்திரிக்கோலால் கொலை செய்வது சற்று வித்தியாசமானது. ஏனென்றால், மிகுந்த வேகத்தில் குத்தினால்தான் உடலுக்குள் கத்திரிக்கோல் இறங்கும். எனவே கொலை செய்து கொள்ளை அடிக்கும் நோக்கம் இருந்திருந்தால், கொலையாளி கத்தி அல்லது அரிவாளைத்தான் கொண்டு வந்திருப்பான்.

வாக்குவாதம்

ஏதோ ஒரு விவகாரம் பற்றி பேசுவதற்காக தெரிந்த நபர்தான் வீட்டுக்கு வந்திருக்க வேண்டும். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் நடந்திருக்கிறது. அப்போது தகராறு முற்றி, அருகில் இருந்த கத்திரிக்கோலால் அனந்தலட்சுமியின் கழுத்தில் கொலையாளி குத்தி இருக்கிறான். ரத்தம் பீரிட்டு வந்ததும், தன் மீது தெளித்து விடக் கூடாது என்பதற்காக கழுத்தை அவன் அழுத்திப் பிடித்து இருக்கிறான். அப்போது கழுத்து எலும்பில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.

தாயைத் தாக்கிய போது தடுக்க வந்த மகனும் அதே வகையில் குத்தி கொலை செய்யப்பட்டு இருக்கிறான். அதே நேரத்தில் ஆதாயத்துக்காக (கொள்ளையடிப்பதற்காக) கொலை நடந்ததா? என்ற கோணத்தில் நடத்தும் விசாரணையையும் நாங்கள் கைவிடவில்லை.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
== =============

அசோக்நகர் இரட்டைக் கொலையில் திருப்பம்.
பாட்டு டீச்சரின் நண்பர் தலைமறைவு
பதிவு செய்த நாள்: செப்டம்பர் 30, 2009

சென்னை, : சென்னை அசோக் நகர் போஸ்டல் காலனி 3வது தெருவை சேர்ந்தவர் ராமசுப்பிரமணியம். இவரது மனைவி அனந்தலட்சுமி, மகள் சோபனா, மகன் சூரஜ். அனந்தலட்சுமி, சூரஜ் ஆகியோர் வீட்டில் தனியாக இருந்தபோது படுகொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து, தனிப்படை தீவிரமாக விசாரித்து வருகிறது.

அனந்தலட்சுமியுடன் 5 ஆண்கள் அடிக்கடி செல்போனில் பேசியிருப்பது தெரிந்தது. பெங்களூரில் ராமசுப்பிரமணியம் வேலை செய்வதால், அசோக் நகர் வீட்டில் அனந்தலட்சுமி தனியாக இருக்கும் போது அவர்கள் வந்து சென்றுள்ளனர்.

அதில் கேரள ஜோசியர் சந்தோஷடீம் ஒருவர். அவரிடம் விசாரணை நடத்திய போது, கொலைக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறியுள்ளார்.

மற்றவர்களில் 2 பேர், அனந்தலட்சுமியின் கணவர் ராமசுப்பிரமணியத்தின் சென்னை அலுவலகத்தில் பணியாற்றிய வர்கள். இவர்களில் கணேஷ் என்பவர் வேறு கம்பெனிக்கு சென்று விட்டார். ஆனாலும், ராமசுப்பிரமணியம் கேட்டுக் கொண்டபடி, வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி அனந்தலட்சுமியிடம் கொடுத்து வந்துள்ளார் கணேஷ். கிறிஸ்டோபர் என்பவரும் அனந்தலட்சுமிக்கு உதவி செய்து வந்துள்ளார். இதனால் 2 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தினர்.

கிறிஸ்டோபரின் நண்பர் வேல்முருகன், மருந்து கம்பெனி விற்பனை பிரதிநிதி. கிறிஸ்டோபருடன் அனந்தலட்சுமியின் வீட்டுக்கு சென்று வந்துள்ளார்.

அவர் தனியாக இருப்பதை அறிந்து கிறிஸ்டோபருக்கு தெரியாமல் அடிக்கடி அனந்தலட்சுமியை சந்தித்துள்ளார். போனில் இருவரும் மணிக்கணக்கில் பேசியுள்ளனர். இதனால் ஈக்காடுதாங்கலில் தங்கி இருக்கும் வேல்முருகனின் வீட்டுக்கு சென்றனர். ஆனால், அனந்தலட்சுமி கொலை செய்யப்பட்ட 24ம் தேதி முதல், வீட்டை பூட்டி விட்டு சென்றது தெரியவந்தது. அவருடைய சொந்த ஊரான நெல்லையில் போலீசார் விசாரித்தனர். அங்கும் வேல்முருகன் வரவில்லை.

இதனால், அவரது உறவினர்கள் உள்ள திருச்சி, மதுரை, புதுவை ஆகிய இடங்களுக்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர். இவர் 24ம் தேதி வரை சென்னையில் இருந்துள்ளார். அன்று பகலில்தான் கொலை நடந்துள்ளது. இதனால் அவர் மீதான சந்தேகம் வலுத்துள்ளது.

அவரது செல்போன் எண்ணை வைத்து நடத்திய விசாரணையில், அனந்தலட்சுமி மட்டுமின்றி மேலும் பல பெண்களுடன் அவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. திருமணமான பெண்களையே தனது வலையில் வீழ்த்தியுள்ளார். வெளி ஊர்களுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளார். இதுபற்றிய புகார் எழுந்ததால், வேல்முருகனை வேலையில் இருந்து மருந்து கம்பெனி நிர்வாகம் நீக்கியுள்ளது. எனினும், 6 மாதமாக சம்பளம் இல்லாமலேயே வீட்டு வாடகை,
சாப்பாடு, ஊர் சுற்ற என்று எல்லாவற்றுக்கும் பணத்துக்கு கஷ்டப்படாமல் ஜாலியாக இருந்துள்ளார். அதற்கு தேவையான பணத்தை பல பெண்களிடம் கறந்துள்ளார். இதனால் அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
===========

இன்றைய செய்தி:

சென்னை, அக்.2, 2009:

சென்னை அசோக் நகர் போஸ்டல் காலனியை சேர்ந்த பாட்டு டீச்சர் அனந்தலட்சுமி, அவரது மகன் சூரஜ் ஆகியோர் கடந்த 24ம் தேதி வீட்டில் படுகொலை செய்யப்பட்டனர். விசாரணையில் அனந்தலட்சுமிக்கு ஆண் நண்பர்கள் அதிகம் இருந்தது தெரிய வந்தது.

அவர்களில் நெல்லையை சேர்ந்த வேல்முருகன் என்பவர் அனந்தலட்சுமியுடன் நெருங்கி பழகியது தெரிந்தது. அவர் சென்னை ஈக்காட்டுதாங்கலில் வசித்தார். திருமணமாகாதவர். மெடிக்கல் ரெப். வேலை பார்த்து வந்தார். வேல்முருகன் பற்றி பகீர் தகவல்கள் தெரிய வந்தன.

திருமணமான பெண்கள் பலரிடம் நெருங்கி பழகி தன் வலையில் விழ வைத்துள்ளார் வேல்முருகன். அனந்தலட்சுமி வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார். மேற்கு மாம்பலத்தில் வசிக்கும் சானியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண், அனந்தலட்சுமி வீட்டுக்கு வந்து செல்வார். இவர் கேரளாவை சேர்ந்தவர், திருமணமானவர். அவருடன் பழக ஆரம்பித்து அவரது வீட்டுக்கும் சென்று வந்துள்ளார் வேல்முருகன். இந்த விஷயம் தெரிந்து ஆத்திரம் அடைந்த அனந்தலட்சுமி, இருவரையும் பிரித்து வைத்துள்ளார். இது தொடர்பாக ஒரு வாரமாக அனந்தலட்சுமியுடன் வேல்முருகன் தகராறு செய்துள்ளார்.

சானியாவுடன் தன்னை சேர்த்து வைக்குமாறு கூறியுள்ளார். அனந்தலட்சுமி கேட்கவில்லை. தன்னுடன்தான் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி இருக்கிறார். (அப்படிப்போடு! கள்ளக்காதலில் கூட சக்களத்தி சண்டை டோய்!) வேல்முருகன் சகவாசத்தை நிறுத்தாவிட்டால், கணவரிடம் கூறிவிடுவதாக சொல்லி சானியாவையும் அனந்தலட்சுமி மிரட்டி உள்ளார். வேல்முருகன் மற்றும் சானியாவுடன் அனந்தலட்சுமி தகராறு செய்ததே கொலையில் முடிந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மேலும், அனந்தலட்சுமியின் பிரேதப் பரிசோதனையில் அவர் பகல் ஒரு மணிக்கும், சூரஜ் 2 மணிக்கும் இறந்தது தெரிய வந்தது. பகல் 1.30 மணிக்கு சூரஜ் வீட்டுக்கு வெளியே விளையாடி இருக்கிறான். இதனால் வேல்முருகன் வந்ததும் சூரஜ்ஜை விளையாட அனந்தலட்சுமி அனுப்பி இருக்கலாம். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் அனந்தலட்சுமியை வேல்முருகன் கொலை செய்திருக்கலாம்.

வீட்டுக்கு தான் வந்தது சூரஜுக்கு தெரிந்ததால், அவனை வீட்டுக்குள் அழைத்து சமையல் அறையில் அவனையும் கொலை செய்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

வேல்முருகனின் செல்போனை ஆய்வு செய்ததில், அனந்தலட்சுமி தவிர வேறு 4 பெண்களின் எண்களும் இருந்தன. அவற்றில் விருகம்பாக்கம் பெண் டாக்டரும் ஒருவர். மாதக் கணக்கில் அவருடன் வேல்முருகன் பழகியுள்ளார்.

செலவுக்கு அவ்வப்போது பணமும் பெற்றுள்ளார். அவரது நடவடிக்கை பிடிக்காததால் தொடர்பை பெண் டாக்டர் துண்டித்துள்ளார். பின்னர், அம்பத்தூரை சேர்ந்த பெண் ஊழியரை வேல்முருகன் வளைத்துள்ளார், அவரும் திருமணமானவர். கிண்டியில் ஒரு பெண்ணுடன் வேல்முருகன் தொடர்பு வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், அனந்தலட்சுமியின் கணவர் ராமசுப்பிரமணியத்தின் கம்பெனியில் பணியாற்றிய கிறிஸ்டோபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இவரும் நெல்லையை சேர்ந்தவர். வேல்முருகனும் கிறிஸ்டோபரும் நெருங்கிய நண்பர்கள். இருவருக்கும் திருமணமாகவில்லை. இதனால் அடிக்கடி அனந்தலட்சுமியை இருவரும் சந்தித்து வந்துள்ளனர். அதில் வேல்முருகன் வலையில் அனந்தலட்சுமி வீழ்ந்திருக்கிறார்.

விசாரணையில் இதுபோன்ற பல தகவல்கள் கிடைத்ததால், வேல்முருகனை பிடிக்க தமிழகம் முழுவதும் போலீசார் வலை விரித்தனர். இந்நிலையில் அவர் ஊட்டி நீதிமன்றத்தில் சரணடைய முயன்றார். ஆனால், மாஜிஸ்திரேட் விடுமுறை என்பது தெரிய வந்ததால், அங்கிருந்து மேட்டுப்பாளையம் வந்து நீதிமன்றத்தில் நேற்று மாலை சரணடைந்தார். அதைத் தொடர்ந்து அவர் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனால் அவரை காவலில் எடுத்து சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

================

இந்தக் கள்ளக்காதல் தகராறில் ஒரு பாவமும் அறியாத அந்தச் சிறுவன் சூரஜ் பலியானதுதான் பரிதாபம்.

ஆனால் அனந்த லட்சுமியின் பெண் தப்பினாள். கணவனும் தப்பினான். அவன் பெங்களூரில் இருந்ததால் உயிர் தப்பியிருக்கிறான். ஏனெனில் சமீபத்தில் டஜன் கணக்கில் நிகழ்ந்துள்ள கள்ளக்காதல் கொலைகளைப் பார்க்கும்போது, கணவன் தான் முதலில் பலியாகியிருப்பான்!

அதுசரி, ஒரு வயது வந்த பெண் தன்னுடன் வளரும்போது ஒரு தாய் இதுபோல் கணடவனோடு உறவு வைத்துக் கொண்டிருந்தாரே, அந்தப் பெண்ணும் அந்தப் பையனும் எப்படிப்பட்ட சூழலில் வளர்ந்திருந்திருக்கிறார்களோ!

5 மறுமொழிகள்:

Anonymous said...

நல்ல வுட்.

Anonymous said...

காமத்திற்கு கண் இல்லை.ஆசைக்கு வயதில்லை, அதே போல் கண்ணியமும் இல்லை

ஆக மொத்தம் அறிவு இல்லை.

கம-வெறியர்களின் ,வளர்ப்பை என்ன பேசி என்ன பயன்?

Anonymous said...

லஞ்சம் வாங்குபவர்கள் முகத்திரையை கிழிக்கும் ஒரு பதிவு.

http://ulalmannargal.blogspot.com/

')) said...

இவருடைய காம விளையாட்டுகளுக்கு பலியானது ஒரு பாவம்மும் அறியாத அந்தச்சிறுவன்... மிக மிக கொடுயாண நிகழ்வு... ஆனால் எது நடந்தாலும் நாங்கள் திருந்தமாட்டொம்.. .இது ஒரு தொடர் கதை..

என்று நாட்டில் உள்ள சில சட்டங்கள் திருத்தப்படுமோ தெரியவில்லை....?

தொடரட்டும் தொடர் கொலைகள்!! வாழ்க கள்ளக்காதல்!!

')) said...

திருமணம் செய்தால் தேவையில்லாமல் பொய் 498A, வரதட்சணை கேசு போன்றவற்றில் மாட்டி ஆயுசு முழுக்க போலிசிடமும் நீதிமன்றத்திலும் அலையவேண்டும் என்பதற்காக வேல்முருகன் இந்த சுலபமான வழியை தேர்ந்தெடுத்திருக்கலாம். நாட்டில் இது போன்ற தவறான சட்டங்கள் இருந்தால் இது போல பல வேல்முருகன்கள் உருவாவதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. விபச்சாரிகள், கள்ளக்காதல் பெண்கள் போன்றவர்களை ஆதரித்து காப்பற்றத்தான் ஊரில் பல பேர் பெண்ணுரிமை என்ற பெயரில் திரிந்து கொண்டிருக்கிறார்களே! இங்கு விபச்சாரிகள் என்று குறிப்பிட்டது பொய் 498A கேசு போடும் சண்டாளிகளை. பணத்திற்காக சேவை செய்யும் மதிப்பிற்குறிய பெண்களை அல்ல.