கள்ளக்காதலில் நல்லதா விளையும்!

திரு.வி.க.நகரில் 2-வது பயங்கர சம்பவம்:
கள்ளக்காதல் போட்டியில் குத்துச்சண்டை வீரர் படுகொலை
வெட்டி சாய்த்த நண்பர்கள் கைது

சென்னை, அக்.23- 2009. செய்தி - தினத்தந்தி

சென்னை திரு.வி.க. நகரில் குத்துச்சண்டை வீரர் ஒருவர் கள்ளக்காதல் போட்டியில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அவரது நண்பர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். இன்னொரு நண்பரை போலீசார் தேடுகிறார்கள்.

சென்னை திரு.வி.க.நகர் பகுதியில் உள்ள காந்திநகர் 2-வது தெருவை சேர்ந்தவர் சந்திரன் (வயது 23). திருமணம் ஆகாத இவர், புதிதாக கட்டப்படும் கட்டிடங்களுக்கு கான்கிரீட் கம்பி பதிக்கும் வேலை செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ், குட்டை சுரேஷ், ஜானி என்ற ஜானகிராமன் ஆகியோர் சந்திரனின் நண்பர்கள் ஆவார்கள். இவர்களும் கான்கிரீட் கம்பி பதிக்கும் வேலைதான் செய்து வந்தனர்.

சந்திரன் பார்க்க அழகாக இருப்பார். இவர் குத்துச்சண்டை பயிற்சி பெற்றுள்ளார். சாதாரண குத்துச்சண்டை போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். பாடிபில்டரும் கூட. இவருக்கு நிறைய பெண்கள் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

காதல் போட்டி

ரம்யா என்ற இளம் பெண் ஒருவரோடு ராஜேஷ் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்தார். ரம்யா கே.கே.நகரில் வசித்து வந்தார். அவரது தாய் வீடு திரு.வி.க.நகரில் உள்ளது. திருமணமான அவர் தாய் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும்போது ராஜேசுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ராஜேஷை அடிக்கடி சந்தித்து உல்லாச விருந்து படைத்து வந்தார். ராஜேஷின் நண்பர்களுக்கும் ரம்யா விருந்து படைப்பது உண்டு.

இந்த நிலையில், ரம்யாவுக்கு குத்துச்சண்டை வீரர் சந்திரனுடன் பழக்கம் ஏற்பட்டது. ராஜேஷ் கோஷ்டியை உதறிவிட்டு சந்திரனோடு நெருக்கமாக பழக ஆரம்பித்தார். சந்திரனுக்கும் இன்ப விருந்து படைத்தார்.

இந்த விஷயம் ராஜேசுக்கும், அவரது நண்பர்களுக்கும் தெரிந்து அவர்கள் கோபம் அடைந்தனர். சந்திரனை எச்சரித்தனர். ரம்யாவுடன் உள்ள தொடர்பை விட்டுவிடும்படி கூறினார்கள். "உனக்கு நிறைய பெண்கள் பழக்கம் உள்ளது. எங்களுக்கு ரம்யா ஒருத்திதான் இருக்கிறாள். அவளை தட்டிப் பறிப்பது நியாயமல்ல. அவளை எங்களுக்கு கொடுத்துவிடு" என்று ராஜேஷ், சந்திரனிடம் கெஞ்சினார்.

அதற்கு சந்திரன், "பல் இருக்கிறவன் கடிக்கத்தான் செய்வான், ரம்யாதான் என்னை விரும்பி காதலிக்கிறாள். என்னால் அவளை விடமுடியாது" என்று கூறிவிட்டார்.

இது சந்திரன் மீது அவர்களுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. ராஜேசும், அவரது நண்பர்களும் சந்திரன்மீது கடும் கோபம் கொண்டனர். காதலியை தட்டிப் பறித்த சந்திரனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர்.

வெட்டிக்கொலை

நேற்று முன்தினம் இரவு திரு.வி.க.நகர் சமூகநலக்கூடம் அருகே ராஜேஷ், அவரது நண்பர்கள் குட்டை சுரேஷ், ஜானி என்ற ஜானகிராமன் ஆகியோர் ஒன்றாக உட்கார்ந்து மது அருந்தினார்கள். அப்போது சந்திரன் அந்த வழியாக சென்றார். அவரையும் மது அருந்தும்படி அழைத்தனர். அவர்களுடைய சதித்திட்டம் தெரியாமல், சந்திரன் அவர்களோடு உட்கார்ந்து மது அருந்தினார்.

திடீரென்று 3 பேரும் சேர்ந்து சந்திரனை சரமாரியாக அரிவாளால் வெட்டினார்கள். சந்திரன் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். அவரை அப்படியே போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். சந்திரனை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சந்திரன் பரிதாபமாக இறந்து போனார்.

2-வது கொலை சம்பவம்

திரு.வி.க.நகரில் கடந்த வாரம்தான் பங்க் ராஜ் என்ற ரவுடி வெட்டி கொல்லப்பட்டார். அந்த கொலையின் ரத்தம் காயும் முன்பே, சந்திரன் கொலை செய்யப்பட்டது போலீஸ் வட்டாரத்துக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின்பேரில், இணை கமிஷனர் சேஷசாயி, துணை கமிஷனர் பாஸ்கர் ஆகியோர் மேற்பார்வையில் திரு.வி.க.நகர் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

கொலையாளிகள் குட்டை சுரேஷ், ஜானி என்ற ஜானகிராமன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ராஜேஷை கைது செய்ய போலீசார் தேடி வருகிறார்கள்.

சென்னை நகரில் நடக்கும் கொலை சம்பவங்களுக்கு பெரும்பாலும் கள்ளக்காதல் பிரச்சினைகளே காரணமாக இருப்பதாகவும், கள்ளக்காதல் கலாசாரம் அதிகரிப்பதால்தான் குற்ற செயல்களும் அதிகரிக்கிறது என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

5 மறுமொழிகள்:

')) said...

ஒரு சந்தோசமான செய்தி... இதொ வரதட்சணை வழக்கில் ஒரு வழக்கறிஞரும் (மன்னிக்கவும் இவர் போலீ வழக்கறிஞராம்)சிக்கியுள்ளார்... தொடரட்டும் இதுபோல் செய்திகள். இதுபோல் காவல் ஆய்வளர் அதிலும் குறிப்பாக மகளீர் காவல் நிலைய ஆய்வாளர் போன்றோர் மீது 498ஏ என்னும் விசவாய்வு தாக்கப்பட வேண்டுகிறேன்...

தமிழ்நாட்டிலையும் ஒரு ஜட்ஜய்யா மாட்டிகிட்டார்னா இன்னும் ரொம்ப சந்தோசப்படுவோம்...

வக்கீல் மனைவியை விட்டுவிட்டு 2வது திருமணம் செய்த போலி வக்கீல் கைது
அக்டோபர் 25,2009,00:00

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=13589

')) said...

'குடுகுடு' பாட்டிக்கு ஜீவனாம்சம்; தாத்தாவுக்கு ஐகோர்ட் உத்தரவு அக்டோபர் 25,2009,00:00 IST

http://www.dinamalar.com/court_detail.asp?news_id=4266

')) said...

//சென்னை நகரில் நடக்கும் கொலை சம்பவங்களுக்கு பெரும்பாலும் கள்ளக்காதல் பிரச்சினைகளே காரணமாக இருப்பதாகவும், கள்ளக்காதல் கலாசாரம் அதிகரிப்பதால்தான் குற்ற செயல்களும் அதிகரிக்கிறது என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். //


இது ஒரு காமேடிக் கூத்து!

யாராவது 498ஏ பொய்கேசு போட்டா சட்டப்படி தண்டணை வாங்க தர வேண்டியதை விட்டுவிட்டு..(ஏன்னா பொய்கேசுன்னு நமது காவல் தெய்வங்களுக்கு நன்றாகத்தெரியும்) கணவன் வீட்டாரை மிரட்டு மிரடடென்று மிரட்டுவது அல்லது விடியகாலை நள்ளிரவு நேரங்களில் வந்து கைது செய்து சிறையில் அடைப்பது... ஏமாந்தவனக இருந்தால் மிரட்டி சேர்த்துவைப்பது அப்புறம் கட்டப்பஞ்சாயத்து பண்ணி சேர்த்துவைங்கனு கெஞ்சி கூத்தாட வேண்டியது(ஆள்வைத்து அடித்து 498ஏ பொய்கேசு போட்ட என்னோட டார்லிங் (??) இப்போ என்கூட வாழனும்ன ரொம்ப விருப்பபடுதாம்)

இது பிள்ளையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டிவிடும் கதைதான்..

தொடரட்டும் கள்ளக்காதல் கொலைகள்! தொடரட்டும் 498ஏ விசவாய்வு

')) said...

கள்ளக்காதலன் ஜக்கிரதை :)


சட்டப்படி திருமணம் செய்து குடும்பம் நடத்திய மனைவிக்கு மட்டுமல்ல, பிரச்னை என்று வந்தால், "கள்ளத்தொடர்பு' கொண்டிருந்த இரண்டாவது, மூன்றாவது மனைவிக்கும், அவர்கள் மூலம் பிறந்த குழந்தைகளுக்கும் கூட ஜீவனாம்சம் தர வேண்டும். இதுதொடர்பாக சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும்.- தேசிய மகளிர் கமிஷன், இப்படி ஒரு அதிரடி பரிந்துரையை செய்துள்ளது. ஜீவனாம்ச விஷயத்தில் இது புதிய சர்ச்சையை கிளப்பும் என்று தெரிகிறது.


கணவன் - மனைவி என்ற தம்பதிக்கு உரிய சட்டப்பூர்வ விளக்கம், அரசின் பல சட்டத்திருத்தங்களில் வகை செய்யப்பட்டுள்ளது. பிரச்னை ஏற்படும் போது, தம்பதிகளில் பிரிவு ஏற்பட்டால், வாழ்வாதாரத்துக்குரிய ஜீவனாம்ச தொகை தருவது தொடர்பாகவும் சட்டத்தில் விளக்கம் தரப்பட்டுள்ளது.சட்டப்படி திருமணம் செய்து வாழ்ந்த மனைவி தொடர்பாக மட்டும் தான் சட்டத்தில் ஜீவனாம்சம் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், மனைவியை தவிர, குடும்பத்தலைவர் கள்ளத்தொடர்பு வைத்திருக்கும் பெண் அல்லது பெண்கள், அவர்கள் மூலம் பிறந்த குழந்தைகளுக்கு பிரச்னை வந்தால், அவர்களுக்கு சட்டப்படி எந்த வழியும் கூறப்படவில்லை.சட்டப்படியான மனைவியை தவிர, கள்ளத்தொடர்பில் வந்த பெண் அல்லது பெண்களை குற்றவாளியாகவே சட்டப்படி பார்க்கப்பட்டு வருகிறது.

http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=5414

Anonymous said...

எல்லா குற்றங்களுக்கும் நீதிமன்றங்களில் நீதி கிடைக்காது என்ற நம்பிக்கையிலும் குற்றம் செய்தவனுக்கு தண்டனை அளிக்க பல வருடங்கள் (சுமார் இருபது ௦) ஆகும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையிலேயே நடந்தேறி வருகின்றன !