தேவை ஒரு கள்ளக்காதல் பாதுகாப்பு இயக்கம்!

மனோரமாவும் கேப்டன் விஜயகாந்தும் தான் கவனிக்க வேண்டும்!

ஸ்ரீவில்லிபுத்தூர், அக்.3- 2009. செய்தி - தினத்தந்தி

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது பெருமாள்சேரி. இந்த பகுதியை சேர்ந்தவர் ராக்கப்பன் (வயது35). இவரது மனைவி பழனியம்மாள் (25). இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வாழ்ந்து வந்தார். அப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் மல்லபுரம் பகுதியை சேர்நத மாரிகுரு (29) என்ற வாலிபருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது.

இந்தக் கள்ளக்காதலால் பழனியம்மாள் தற்போது 7 மாதம் கர்ப்பமாக உள்ளார். இதற்கிடையில் மாரிகுரு (கள்ளக் காதலன்) தனது அக்கா மகள் தாமரைச் செல்வியை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் பழனியம்மாள் உறவை துண்டித்துக் கொண்டார். இதனால் பழனியம்மாள் குடும்ப நடத்த பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்துள்ளார்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்பம் நடத்த பணம் கேட்டு மாரிகுரு வீட்டிற்கு பழனியம்மாள் வந்துள்ளார். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த மாரிகுரு வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து பழனியம்மாள் மீது ஊற்றியதாக தெரிகிறது. இதில் மனமுடைந்த பழனியம்மாள் தனக்குதானே தீ வைத்துக் கொண்டுள்ளார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர்.

இந்தசம்பவம் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் சேகர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி மாரிகுருவை கைது செய்தார்.

1 மறுமொழி:

')) said...

இன்னொரு கள்ளக்காதல் கொலை:

அரூர் அருகே கள்ளக்காதலை கண்டித்த கணவன் வெட்டிக்கொலை
தாய் - மகன் கைது

அரூர்,செப்.29- 2009

அரூர் அருகே கள்ளக் காதலை கண்டித்த கூலித்தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தாய், மகனை போலீ சார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கூலித்தொழிலாளி

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள வீரப்பநாயக்கன்பட்டி காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் ராமு(வயது 42) கூலித் தொழிலாளி. இவரது மனைவி காஞ்சனா(38). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். ராமுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் காஞ்னாவுக்கும் பக்கத்து தோட்டத்தை சேர்ந்த முனுசாமி என்பவருக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்த தொடர்பை ராமு கண்டித்து வந்துள்ளார். இருந்தும் அவர்கள் 2 பேரும் கள்ளத் தொடர்பை கைவிட வில்லை. இதனால் கணவன்-மனை விக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதே போல நேற்று முன் தினம் ராமு குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத் திரமடைந்த மனைவி கஞ்சனா மகன் கார்த்திக்(15) 2 பேரும் சேர்ந்து அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் ராமு மயங்கி விழுந்தார். இதை கண்ட 2 பேரும் அங்கிருந்து தப்பி யோடிவிட்டனர்.

பரிதாப சாவு

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ராமுவை தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ராமு பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அரூர் போலீஸ் இன்ஸ் பெக்டர் வெள்ளைசாமி மற் றும் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப் பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக ராமு மனைவி காஞ்சனா, அவரது மகன் கார்த்திக் 2 பேரையும் இன்ஸ்பெக்டர் வெள்ளைசாமி கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் இந்த கொலையில் கள்ளக் காதலன் முனுசாமிக்கு தொடர்பு உண்டா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.