வக்கீலின் மனைவி கட்சிக்காரருடன் ஓட்டம்!

இது புதுசு!

28 வயதான வக்கீலின் மனைவி 20 வயது வாலிபனான தனது கணவரின் கட்சிக்காரருடன் ஓடிப் போய்விட்டார்.

கும்பகோணம் கல்யாணராமன் தெருவில் வசிப்பவர் வக்கீல் பாலமுருகன். இவர் கும்பகோணம் பார் அசோசியேஷன் செயலராகவும், அஇஅதிமுக வக்கீல் அணிச் செயலராகவும் பதவி வகிக்கிறார்.

இவருடைய மனைவியின் பெயர் சரோஜினி (வயது 28). இவர்களுக்கு 7 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி ஒரு ஆண் குழந்தை இருக்கிறது.

இந்த வக்கீலின் வீட்டுக்கு மேலக்காவேரியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்னும் 20 வயது இளைஞர் ஒரு வழக்கு தொடர்பாக, கடந்த ஆறு மாத காலமாக அடிக்கடி வந்து சந்தித்துச் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த இளைஞருக்கும் வக்கீல் மனைவி சரோஜினிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது.

அந்த வக்கீலின் மனைவி சரோஜினி, சுப்பிரமணியன் என்னும் அந்த இளைஞருடன் ஓடிப்போய் விட்டாள் (மன்னிக்கவும், "விட்டார்". கள்ளக் காதலில் ஈடுபடும் பெண் குலத்திலகங்களை மரியாதையுடன் விளிக்கவேண்டும் அல்லவா!) என்று வக்கீல் கணவர் பாலமுருகன் கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அந்தப் புகாரின் பேரில் கட்சிக்காரர் சுப்பிரமணியன் மீது, வக்கீல் மனைவியை கடத்திச் சென்றதாக வழக்குப் பதிவு செய்து அந்த ஜோடியை போலீசார் தேடி வருகின்றனர்.

இதில் ஒரு முக்கியமான விஷயத்தை நீங்கள் கவனிக்க வேண்டும். கள்ளக்காதல் (adultery), இழுத்துக் கொண்டு ஓடுதல் (elopement) இதுபோன்ற புகார்களின் மேல் அதில் சம்பந்தப் பட்டுள்ள ஆண் மேல்தான் வழக்குப் பதிவு செய்யமுடியும். கள்ளக்காதலில் ஈடுபடும் பெண்களுக்கு முழுதாக சட்டங்களிலிருந்து விதிவிலக்கு அளிப்பட்டுள்ளது நம் நாட்டில்.

உங்கள் மனைவி உங்கள் கண்ணெதிரிலேயே இன்னொருவனுடன் செக்ஸில் ஈடுபட்டுக் கொண்டிருந்தால் கூட அந்த ஆணுக்கு எதிராகத்தான் நீங்கள் வழக்கு தொடுக்கலாமேயன்றி உங்கள் மனைவியின்மீது எந்தவித நடவடிக்கையையும் எடுக்க இயலாது; அதற்கு இந்திய சட்டங்களில் இடமில்லை. சந்தேகமிருந்தால் சட்டம் தெரிந்த யாரையாவது கேட்டுத் தெளிவு பெறுங்கள். மேலும் அதைக் காரணம் காட்டி விவாகரத்து கூட பெற முடியாது. மனைவி சொல்வதைத்தான் நீதிபதிகள் நம்புவார்கள். "நான் பத்தினித் தெய்வம். என் கணவர் ஒரு சந்தேகப் பிராணி. என்மேல் அபாண்டமாக பழி சுமத்துகிறார். இந்த அபலையின் பரிதாப நிலையைப் பாருங்கள்" என்று நீதிபதியின் முன் கண்ணீர் சிந்தி ஒரு டிராமா போடுவாள். அவவ்ளவுதான். அப்படியே உருகி அவள் கேட்டபடி தீர்ப்பு வழங்குவார்கள். உடனே பெண்ணியவாதிகளும் ஜொள்ளியவாதிகளும் சேர்ந்து கோரசாக "ஐயோ பாவம், அந்த அபலைப் பெண். இந்த ஆணாதிக்க சமுதாயத்தில் எத்தகைய கொடுமைகளுக்கு அவள் ஆளாகிறாள்" என்று கட்டிப் பிடித்து அழுவார்கள். அவ்வளவுதான். கணவனின் புகார் அம்பேல்!

அப்படியே கணவனுக்கு வீரம் வந்து கள்ளக்காதலில் ஈடுபடும் மனைவியிடம் அவன் அதுபற்றி கேள்வி கேட்டால், அவள் உடனே 498A, D.V. Act, Sec 125 of CrPC போன்ற ஆயுதங்களைக் கையிலெடுத்து உங்களையும், உங்கள் வயதான பெற்றோரையும் கைது செய்ய வைத்து, உங்களுக்குச் சொந்தமான வீடு, பணம் அனைத்தையும் பிடுங்கிக் கொண்டு நடுத்தெருவில் நிறுத்தி விடுவாள்!

எதிர்வரும் காலம் திருமணம் செய்துகொள்ளும் ஆண்களுக்கு மிகச் சிரமமான காலம் தான்!

அது சரி. இதுபோன்ற வக்கீல்களும் நீதிபதிகளும் சேர்ந்துதானே கணவனிடம் பணத்தைப் பிடுங்கி ஓடிப்போன மனைவியிடம் கொடுக்க வைக்கிறார்கள்!

இப்போது வக்கீலின் முறை ஆகி விட்டது. அடுத்தது யார்?

(செய்தி: Deccan Chronicle)

9 மறுமொழிகள்:

')) said...

//28 வயதான வக்கீலின் மனைவி 20 வயது வாலிபனான தனது கணவரின் கட்சிக்காரருடன் ஓடிப் போய்விட்டார்.//

ஆகா.. வருங்காலத்தில் கள்ளக்காதல் ஒட்டத்திற்கு நமது நாட்டு விளையாட்டு துறையில் இடம் பெற்றாலும் அச்சரியப்படுவதற்கில்லை...

ஆமா இரண்டு பேரும் "ரன்" படம் பார்க ஒடிப்போயிருப்பாங்களோ? இன்னும் சில நாட்களில் 498ஏ மனைவிகள் வழக்கறிஞர்களை இழத்துக்கொண்டு ஓடிநாலும் ஓடலாம். வழக்கறிஞர்களின் மனைவிகளே உசார்! உசார்!

')) said...

செவிகளுக்கினிய செய்தி. நன்றி!

Anonymous said...

குடும்ப பிரச்சினையில் பொய் வழக்கு போட தூண்டுவது வக்கீல். ஆதரிப்பது நீதிபதிகள். இவர்களுக்கு அடியாட்கள் போலீஸ். கடைசியில் பணம் பறிப்பது மட்டுமே குறிக்கோள். பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வயிற்று எரிச்சல் நீதிபதிகளின் குடும்பங்களை தாக்க வேண்டும். பணத்தாசை கொண்டு திரியும் போலீஸ் வக்கீல் நீதிபதி குடும்பங்களுக்கு இதே நிலை ஏற்பட இறைவனை பாதிக்கப்பட்ட அனைவரும் மற்றும் பாதிக்க படாதவர்களும் நாடு நலம் பெற பிராத்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

')) said...

:-)

')) said...

இப்போது அது மட்டும் இல்லை வக்கிலோடுபலருடன் உல்லாச வாழ்க்கை வாழ சேர்ந்து கொண்டு பணம் பறிக்க நூதன மன முறையில் ... .
தான் கணவன் தம்பதிய உறவை படம் பிடித்தி என்னை கொலை மிரட்டல் என்று புகார் கொடுத்து பல லட்சம் கேட்கிறார்கள் மிரட்டி ஜெயில் க்கு அனுப்பியும் விட்டார்கள் பாவம் இதற்க்காக அந்த எறிய காட்ட பண்சயத்து ஒரு இயகக்மும் செயல் படுகிறதுஇப்போ

வக்கீல்....... நல்ல ஸபோர்ட் பண்ண சொல்லுங்க
பொண்னுக்ளுக்கு நல்ல ஆதரவு ( கெடுத்து ) .கொடுக்க சொல்லணும் . .

Anonymous said...

பொன்மொழிகள்

ஸ்ரீபிரியா பேசுகையில், "யாரோ ஒரு கேடு கெட்ட நல்ல தாய், தந்தைக்கு பிறக்காத ஈனபிறவிகள் எழுதியது வலியை ஏற்படுத்தியுள்ளது,' என்றார்.


விஜயகுமார், "செய்தி வந்த தகவல் கிடைச்சதுமே, நேராக அந்த பத்திரிகை ஆபிசுக்குள்ளே புகுந்து நாலு பேரையாவது வெட்றதுனு தான் முடிவு பண்ணினேன்,' என்றார்.


சத்யராஜ், "உள்காயம் தெரியாமல் சம்பந்தப்பட்டவர்களை அடிக்க வேண்டும்,' என்றார்.


சூர்யா, "கண்ட கண்ட ஈனப்பசங்க எழுதுறாங்கன்னு அவங்க பின்னாடி நாம் ஓடிக்கிட்டு இருக்க முடியாது,' என்றார்.


அருண்விஜய், "பத்திரிகை அலுவலகத் தில் புகுந்து அதை அடித்து நொறுக்கி எழுதியவரை அடித்து இழுத்து வந்து மஞ்சுளா காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைப்பேன்,' என்றார்.


சரத்குமார், "என்னை பற்றி எழுதின போது 200 பேரோட போய் அந்த ஆபிசை அட்டாக் செய்தேன்,' என்றார்.


சேரன், "நடிக்க வரும் பெண்களுக்கும் இதயம் உண்டு என்பதை மறந்து அந்த ராஸ்கல்ஸ்....உன் வீட்டுபிள்ளை ஓடும்போது தெரியும்டா வலி,' என்றார்.


விவேக், "எழுதிய நபர் இந்த கூட்டத்தில் இருக்கலாம். அவன் ஒரு அப்பன், ஆத்தாவிற்கு பிறந்தவன் என்றால் இங்கே மேடையேறி எழுதியதற்கு ஆதாரம் காட்டட்டும். ஒரு குவார்ட்டருக்கும், கோழி பிரியாணிக்கும் செய்தி போடுகிறவர்கள் தானே இவர்கள்,' என்றா


:) :) :) :) :) :) :)

Anonymous said...

வாழவைக்கும் கள்ளக்காதலுக்கு ஜே
வாலிபத்தின் பாடலுக்கும் ஜே
தூதுவிட்ட கண்கள் உன்னை தேடுதே
அம்பு விட்ட காமனுக்கும் ஜே
வாசம் உள்ள பூவெடுத்து தூவுதே
நம் வாசல் வந்த கள்ளக்காதல் தென்றலுக்கு ஜே

Anonymous said...

// உங்கள் மனைவி உங்கள் கண்ணெதிரிலேயே இன்னொருவனுடன் செக்ஸில் ஈடுபட்டுக் கொண்டிருந்தால் கூட அந்த ஆணுக்கு எதிராகத்தான் நீங்கள் வழக்கு தொடுக்கலாமேயன்றி உங்கள் மனைவியின்மீது எந்தவித நடவடிக்கையையும் எடுக்க இயலாது; அதற்கு இந்திய சட்டங்களில் இடமில்லை.//

”உங்கள் மனைவி” என்ற வரிக்கு பதிலாக ’’ஒருவர் மனைவின்னு’’ இருந்தால் நல்லா இருக்குமே!
இது என் தாழ்மையான கருத்து..

-சரவணன்

')) said...

ஐயா, சரவணன்,

உங்கள் என்று முன்னிலைப் படுத்தி எழுதுவது வழக்கில் உள்ளதுதான். அது இந்த இடத்தில் ஒரு கற்பனைப் பாத்திரத்தைக் குறிக்கும்.

மேலும் உங்களைக் குறிப்பிட்டு எழுதினால்தானே ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டு, உண்மை நன்கு உறைக்கும்!!

இதை வாசிக்கும் மக்களுக்கு இதுபோன்ற அனுபவம் ஏற்படாமலிருக்க அவர்கள் வணங்கும் தெய்வம் துணை இருக்கட்டும்!