http://thatstamil.oneindia.in/news/2008/04/03/tn-swc-presidents-advise-to-house-wives.html
நெல்லை: கணவன் அடித்தால திருப்பி அடியுங்கள், உடல் ரீதியான வன்முறைக்கு இடம் கொடுக்காதீர்கள் என்று குடும்பத் தலைவிகளுக்கு மாநில மகளிர் ஆணைய தலைவர் ராமாத்தாள் கூறினார்.
தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் மற்றும் நெல்லை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி இணைந்து குடும்ப வன்முறைகளிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் குறித்த கருத்தரங்கை நடத்தியது.
கல்லூரி வாளகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரகாஷ் தலைமை வகித்தார். இதில் தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் ராமாத்தாள் பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், பொருளாதார வன்முறை, பாலியல் வன்முறை, குடும்ப வன்முறை உள்ளிட்ட பல்வேறு கொடுமைகளால் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். கணவன் மனைவியை அடிப்பது இயல்பானது என்றும் அன்பின் வெளிப்பாடு என்றும் கூறப்படுகிறது.
ஜாதி, சமயம், கடவுளின் பெயரால் பெண்களுக்கு சம உரிமை மறுக்கப்படுகிறது. ஆண்களுக்கு உரிய அத்தனை உரிமைகளையும் பெண்களுக்கும் வழங்க வேண்டும்.
அல்வாவும், பூவும் கொடுத்து பெண்களை சமாதானம் செய்து விடலாம் என்பது போன்ற காட்சிகள் திரைப்படங்களில் சித்தரிக்கப்படுகிறது.
போலி சாமியார்களை நம்பி பெண்கள் ஏமாந்து விடுகின்றனர். பெண் பிள்ளைகளுக்கு தைரியம் மற்றும் தன்னம்பிக்கையை ஊட்ட வேண்டும்.
குட்ட குட்ட குனிவதை தவிர்த்து எதிர்த்து நில்லுங்கள். கணவன் அடித்தால் திருப்பி அடியுங்கள். உடல் ரீதியான வன்முறைக்கு இடம் கொடுக்காதீர்கள். குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம் என்றார் அவர். (ஆமாம். முழுத் தீர்வு கண்டு விடலாம்! ஏனென்றால் அந்தச் சட்டத்தின் மூலம் மனைவிமார்களுக்கு வன்முறையில் ஈடுபட முழு உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. எவ்வளவு கொடிய வன்முறையை மனைவிமார்கள் அவர்களுடைய கணவன் மற்றும் அவர்தம் பெற்றோர் மீது செய்தாலும் குடும்ப வன்முறைச் சட்டத்தின் அடிப்படையில் அவர்கள் மேல் எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாது. ஏனெனில் வன்முறை என்பதை ஆண் தான் செய்வான். மனைவி ஒருவித வன்முறையும் செய்யமாட்டாள். இப்படித்தான் Prevention of Domestic Violence Act- ல் வறையறுக்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி ஒட்டுமொத்த ஆண்குலத்தையும் காயடித்து வெத்து வெட்டாக ஆக்கி விடலாம்! வாழ்க பெண் விடுதலை. ஒழிக ஆணினம்!)
===========================
கணவன் அடித்தால் திருப்பி அடியுங்கள்- மகளிர் ஆணைய தலைவர் அட்வைஸ்
குறிச்சொற்கள் 498a, anti-male, biased laws, dv act, maintenance, அராஜகம், ஆண்பாவம், பொய் வழக்கு, வன்முறை
மனைவி கேவலமாக திட்டினாலும் பொறுத்து கொள்ள வேண்டும் : மும்பை ஐகோர்ட் தீர்ப்பு
அக்டோபர் 03,2009. செய்தி: தினமலர்
மும்பை : "மனைவி, எவ்வளவு கேவலமாக திட்டினாலும் அதை கொடுமையாக நினைத்து விவாகரத்து கோரக்கூடாது" என, மும்பை கோர்ட் தெரிவித்துள்ளது. (ஆனால், அந்தக் கணவன் மனைவியிடம் பேசாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டால்கூட அது குடும்ப வன்முறையாகக் கருதப்பட்டு அந்தக் கணவனுக்கு தண்டனை அளித்து விடுவார்கள் இந்த நீதிபதிகள். ஏனெனில் சட்டம் அப்படித்தான் சொல்கிறது)
மகாராஷ்டிர மாநிலம் புனேவை சேர்ந்த நபர், மும்பை ஐகோர்ட்டில் விவாகரத்து கோரி மனு செய்தார். இந்த மனுவை, நீதிபதிகள் பி.பி.மஜும்தார் மற்றும் ஆர்.வி.மோரே அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது.
தனியார் நிறுவனத்தில் அக்கவுன்டன்டாக பணிபுரியும் 33 வயதான நபர் தாக்கல் செய்துள்ள மனுவில், "எனக்கு திருமணமாகி 20 மாதங்கள் ஆகின்றன. என் மனைவி, என்னை சகட்டு மேனிக்கு திட்டி தீர்க்கிறாள். என்னுடன் அமர்ந்து சாப்பிட மறுக்கிறாள். படுக்கை அறையிலும் போதிய ஒத்துழைப்பு இல்லை. காலம் முழுக்க இவளது கொடுமையான பேச்சை கேட்டுக் கொண்டு குடும்பம் நடத்த முடியாது. எனவே, விவாகரத்து அளிக்க வேண்டும்' என்றார். இது குறித்து, அந்த நபரின் இளம் மனைவியிடம் நீதிபதிகள் விசாரித்தனர். "சி.ஏ., படித்துள்ளதாக பொய் சொல்லி நிறைய சீதனங்களுடன் என்னை திருமணம் செய்து கொண்டார். ஆனால், தனியார் நிறுவனத்தில் சாதாரண குமாஸ்தாவாக தான் வேலைப் பார்க்கிறார். இந்த உண்மை தெரிந்ததால் கோபப்பட்டு அவரை திட்டினேன்' என்பதை, மனைவி ஒப்புக் கொண்டார்.
இது குறித்து, நீதிபதிகள் குறிப்பிடுகையில், "ஆரம்பத்தில் இந்த பெண் கணவனுடன் அன்பாகத்தான் பழகியிருக்கிறார். கணவர் சி.ஏ.,படிக்கவில்லை என்பது தெரிந்த பிறகு தான், கோபம் ஏற்பட்டு, திட்டியிருக்கிறார். மனைவி திட்டுவதையெல்லாம் ஒரு கொடுமை என கூறி விவாகரத்து கோருவதை, ஏற்க முடியாது. மனைவியும் குடும்ப வாழ்க்கை பாதிக்காத அளவுக்கு சொற்களை பயன்படுத்த வேண்டும்' என கூறி மனுவை தள்ளுபடி செய்து விட்டனர்.
============
திருமணம் ஆண்களைப் பொறுத்தவரை பாம்புப் புற்றில் கையை விடுவது போன்றதுதான்.
வேண்டாமய்யா இந்தக் கல்யாணம்!
குறிச்சொற்கள் anti-male, biased laws, அராஜகம், ஆண்பாவம், திருமணம், விவாகரத்து, வெறி
ஒண்ணும் தெரியாத பாப்பா போட்டுக் கிட்டாளாம் தாப்பா
அனைத்துப் பழியும் ஆண்மேலே!
ஐயா, ஆண்பிள்ளைகளே, சின்னப் பொண்ணு கண்ணடிச்சுக் கூப்பிடறா, மிஸ்டு கால் கொடுக்கிறான்னு, வாயைப் பொளந்துக்கிட்டு பின்னாலயே ஒடாதீங்கப்பா. உல்லாசம் ரெண்டு பேருக்கும்தான் என்றாலும், பழி முழுவதும் உங்கள் மேல்தான் விழும். அவ போயிடுவா, இன்னொருத்தனைப் பாக்க; நீங்க போகணும் மாமனார் வீட்டுக்கு, கம்பி எண்ண! (எதுக்கும் Birth Certficate வங்கிப் பார்த்துக்கிடறது நல்லது!)
இப்ப, இன்றைய நியூஸ்!
ஆசைவார்த்தைகள் கூறி16 வயது பெண்ணை கடத்தி கோவிலில் திருமணம். மருத்துவ பிரதிநிதி கைது
திருச்சி, செப்.22- 2009. செய்தி - தினத்தந்தி
திருச்சி கோட்டை பகுதியில் ஆசை வார்த்தைகள் கூறி 16 வயது பெண்ணை கடத்திச் சென்று (பார்த்தீங்களா, அவளுக்கு ஆசையே இல்லையாம். இவன் தான் "ஆசை வார்த்தை" கூறி "கடத்திச் சென்றானாம்". என்னங்கடா இது. கபடு சூது இல்லாம சோரம் போயிட்டேங்கிற மாதிரி இல்ல இருக்கு இது!) கோவிலில் வைத்து திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
16 வயது பெண்
திருச்சி தாராநல்லூர் அருகே உள்ள அலங்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரியா (வயது 16) (பெயர் மாற்றப்பட்டு உள்ளது). 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இதே பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் (இவர் பெயரை மாற்ற மாட்டார்கள். ஏனென்றால் இவன் ஆண். பெண்ணுடைய பெயர்தான் வெளியே தெரியக்கூடாது. ஆண் எக்கேடு கெட்டுப் போனால் என்ன!. இதில கூட ஓரவஞ்சனை பாருங்கப்பா!) (வயது 23). மருத்துவ பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார்.
கோபிநாத்தும், பிரியாவும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் இருவரும் அடிக்கடி சந்திக்க நேர்ந்தது. இந்த நிலையில் கோபிநாத், பிரியாவை காதலிப்பதாகவும் வீட்டைவிட்டு வெளியேறி வந்தால் திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தைகள் கூறினார். (யார் யாரிடம் "ஆசை வார்த்தைகள் கூறினார்கள், யார் யாரை மயக்கினார்கள் என்ப்தை அந்த ஆணிடம் கேட்டல்தானே தெரியும். ஆனால் அவன் தான் குற்றவாளியாயிற்றே!)
கோவிலில் திருமணம்
கோபிநாத்தின் ஆசை வார்த்தைகளில் மயங்கிய பிரியா, கோபிநாத்தை காதலிக்க தொடங்கினார். இந்த நிலையில் பிரியா திடீரென்று வீட்டை விட்டு மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் பிரியாவை பல இடங்களிலும் தேடிப்பார்த்தார். ஆனால் அவரை எங்கும் காணவில்லை.
அக்கம்பக்கத்தில் விசாரித்ததில் பிரியாவை, கோபிநாத் கடத்தி சென்று கோவிலில் வைத்து மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய தாயார் இது குறித்து கோட்டை மகளிர் போலீசில் புகார் செய்தார்.
கைது
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் வளர்மதி இருவரும் தற்போது எங்கு உள்ளனர் என்பது குறித்து விசாரணை நடத்தினார். விசாரணையில் இருவரும் திருச்சி சத்திரம் பஸ் நிறுத்தத்தில் இருப்பது தெரியவந்தது. உடனடியாக மகளிர் போலீசார் விரைந்து சென்று இருவரையும் மீட்டனர்.
கோபிநாத்தை கைது செய்து அவர் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பிரியாவுக்கு மகளிர் போலீசார் அறிவுரைகள் கூறி அவரை பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
மருமகளுக்கு உரிமைகள் மட்டுமே, கடமையேதும் கிடையாது!
மருமகளிடம் வாடகை வசூலிக்க ஐகோர்ட் தடை
செப்டம்பர் 15,2009. தினமலர் செய்தி
புதுடில்லி: "தங்களுக்கு சொந்தமான வீட்டில் வசிக்கும் மருமகளிடம், கணவன் வீட்டார் வாடகை கேட்கக்கூடாது' என, கோர்ட் தெரிவித்துள்ளது.
டில்லியை சேர்ந்தவர் கவிதா; இவருக்கு இரண்டு குழந்தைகள். கணவர் இவருடன் வாழவில்லை.
எனினும், மாமனாருக்கு சொந் தமான மூன்றடுக்குமாடி முதல் தளத்தில், கவிதா வசித்து வந்தார். கணவன் உடன் இல்லாத நிலையில், கவிதாவிடம் வீட்டு வாடகை கேட்டு மாமனாரும், மாமியாரும் நச்சரித் தனர். இதை எதிர்த்து, கோர்ட் டில் வழக்கு தொடர்ந்தார் கவிதா. இந்த வழக்கை விசாரித்த கீழ் கோர்ட், வீட்டுக்கு மாத வாடகையாக, 3, 250 ரூபாய் செலுத் தும் படி, கவிதாவுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து கவிதா, டில்லி ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி பாஷின், "திருமணமானதும், பிறந்த வீட்டை விட்டு புகுந்த வீட்டுக்கு செல்லும் பெண், அந்த வீட்டின் ஒரு அங்கத்தினராகி விடுகிறாள். கவிதாவுடன் அவர் கணவர் சேர்ந்து வாழாத போதும், புகுந்த வீட்டில் அவரும் ஒரு உறுப்பினர் தான். எனவே, அவரிடம் வாடகை வசூலிக்கக் கூடாது' என, உத்தரவிட்டுள்ளார்.
குறிச்சொற்கள் dv act, father, fools, harassment, husbands, maintenance, misuse, அராஜகம், ஆண்பாவம், ஓரவஞ்சனை, பொய் வழக்கு
கள்ளக்காதலில் உள்ள ரிஸ்குகள்
இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு 57,500 மணமான ஆண்கள் குடும்பச் சச்சரவின் காரணமாக, அதாவது மனைவியின் நடத்தைகளின் காரணமாக, தற்கொலை செய்துகொண்டு சாகிறார்கள். ஆனால் ஆண்டொன்றுக்கு மணமான பெண்கள் தற்கொலை அளவு 30,000 தான். இந்தத் தரவு இந்திய அரசே வெளியிட்டது (National Crime Records Bureau).
ஆனால் தாங்கள் கொள்ளை அடிப்பதற்காக இந்த உண்மையை மறைத்து ஏதோ இன்னமும் இந்தியாவில் மணமான பெண்கள் வரதட்சணைக்காக அன்றாடம் கொலை செய்யப்படுவது போன்ற பிரமையை உண்டாக்கி அந்தப் புனைசுருட்டை நாளிதழகள் மற்றும் ஊடகங்கள் மூலம் பரப்பி வருகிறார்கள் ஒரு கூட்டத்தினர். அவர்கள் ஏன் அப்படிச் செய்கின்றனர் என்பதைத் தெரிந்துகொள்ள நீங்கள் ராக்கெட் தொழில்நுட்பம் பயில வேண்டியதில்லை. ஆங்கிலத்தில் "vested interests" என்று அழைக்கப்படும் அதிசுயநல ஆர்வம்தான்!
தேசிய பெண்கள் வாரியம் (National Commission for Women) என்னும் தனி அமைப்பு உள்ளது. இதன் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் சிலவுக்கு பல கோடி ரூபாய்களை அரசு ஒதுக்குகிறது. தவிர ஐக்கிய நாடுகள் சபை (UNIFEM) மூலம் பல கோடி டாலர்கள் கொட்டுகின்றன. மேலும் பல வக்கீல்களுக்கு இத்தகைய கேசுகள் மூலம் ஏராளமான வருமானம் கிட்டுகிறது. தவிர All India Democratic Women Association போன்ற அரசியல் கட்சி சார்ந்த அமைப்புகள் பல பெண்கள் பெயரைச் சொல்லி பகல் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கின்றன. வரதட்சணைக் கொடுமைப் பிரச்னை இன்னும் இருக்கிறது என்று தொடர்ந்து கூக்குரலிட்டுக் கொண்டிருந்தால் தானே இவர்களின் உண்டியல் நிரம்பிக் கொண்டிருக்கும்! அதனால் இந்த மேட்டுக்குடி ரவிக்-டை-லிப்ஸ்டிக் பெண்மணிகள் "ஐயகோ, நம் நாட்டில் இன்னமும் பல கோடி பெண்கள் ஆண்களாலும் அவர்களுடயை பெற்றோர் மற்றும் உடன்பிறப்புகளாலும் வரதட்சணைக் கொடுமையால் எரிக்கப் படுகிறார்களே, அவர்களைத் தண்டிக்க இன்னமும் கடுமையான சட்டங்கள் தேவையாயிற்றே" என்று கோஷ்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அத்தகைய சட்டங்களில் ஒன்றுதான் இபிகோ 304-B என்னும் "வரதட்சணைச் சாவு" சட்டம். அதாவது சாதாரண மனிதர்கள் செத்தால் சாதாரணச் சட்டம்; மணமாகி 7 வருடங்களுக்குள் மனைவி செத்தால் அது சிறப்புச் சட்டம். இந்தச் சட்டத்தின் அடிப்படையில் மனைவியின் பெற்றோரோ உறவினர்களோ, அந்த மனைவியின் சாவுக்கு வரதட்சணைதான் காரணம் என்று சொன்னால் பொதும், as an afterthought. யாதொரு சாட்சியமோ, நிரூபணமோ தேவையில்லை. மற்ற எல்லாவித வழக்குகளுக்கும் பொருந்தும் Evidence Act இந்தச் சட்டத்திற்குப் பொருந்தாது. எவ்வித தடயமோ, சாட்சியமோ, ஆதாரமோ தேவையில்லாமல் விசாரணையுமில்லால் அந்த கணவனையும் அவனது பெற்றோரையும் 7 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை போட்டுத் தள்ளி விடுவார்கள் அதற்கு இந்தச் சட்டம் வழி செய்கிறது. அதற்குத் தேவை அந்த மனைவி இறந்து போன பிறகு அந்தப் பெண்ணின் பெற்றோரோ, அல்லது ஒன்றுவிட்ட மாமனின் மைத்துனன் மகளோ, "அவள் வரத்ட்சணைக் கொடுமையால்தான் இறந்தாள் என்று எனக்குத் தோன்றுகிறது" என்று புகார் கொடுத்தால் போதும்!
சாதாரண சொத்து விவரம் வெளியிடுவதற்கே அது தவறாகப் பயன்படுத்தப்படுமோ என்று பயப்படுவதாகச் சொல்லி அந்த விவரங்களை வெளியிடத் தயங்கும் நீதிபதிகள், இந்த 304-B, 498A சட்டங்கள் எல்லாவித விதிவிலக்குகளும் செய்யப்பட்டு தவறாகப் பயன்படுத்துவதற்கென்றே கட்டமைக்கப்பட்டுள்ளதை ஏன் மாற்றச் சொல்லக்கூடாது!
அதிருக்கட்டும், கள்ளக் காதல்கள் பெருகிவிட்ட தற்காலத்தில் கள்ளக் காதலனுடன் "உல்லாசமாக" இருக்கும் வேளையில் அல்லது அவனுடன் ஏற்படும் பிணக்கினால் இறந்தால் எப்படி வரதட்சனை வழக்கு போடுவது? பிரச்னைதான். ஆனால் சொல்ல முடியாது, இந்தச் சட்டங்கள் கள்ளக் காதலனுக்கும் பொருந்தும்படியான மாற்றங்கள் வந்தாலும் வரும்.
இந்தச் செய்தியை வாசியுங்கள்:
ஸ்டவ்' கசிந்து தீப்பிடித்ததால் கள்ளக்காதலன் வீட்டில் சமையல் செய்த பெண் கருகி சாவு
அம்பத்தூர், ஆக.26- 2009. செய்தி - தினத்தந்தி
கள்ளக் காதலன் வீட்டில் சமையல் செய்தபோது `ஸ்டவ்' கசிந்து தீப்பிடித்ததால் பெண் கருகி செத்தாள். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொளத்தூர் பொன்னியம்மன்மேடு லட்சுமியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வேணு. இவர் துணிப்பின்னல் (எம்பிராய்டரி) வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி பாரதி (வயது 35). சித்தாளாக வேலை பார்த்து வந்தாள். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.
பாரதி வேலை பார்த்த இடத்தில் மேஸ்திரியாக இருந்தவர் ரவி (42). இவருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மகள்களுக்கு திருமணமாகி விட்டது. இவர் அம்பத்தூர் சூரப்பேடு கிராமத்தில் வசித்து வருகிறார்.
கடந்த 2 வருடங்களாக ரவிக்கும், பாரதிக்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. கொளத்தூர் அம்பேத்கார் நகர் 3-வது தெருவில் தனியாக வீடெடுத்து பாரதியுடன், ரவி குடும்பம் நடத்தி வந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை வேலைக்கு செல்வதாக கூறி விட்டு இருவரும் அங்கு சென்றனர். அங்கு தங்கி இருந்து மது அருந்தினார்கள். பின்னர் சமையல் செய்தபோது `ஸ்டவ்' கசிந்து வீட்டில் தீப்பிடித்தது.
இதில் பாரதி தீக்காயம் அடைந்தாள். அவளை காப்பாற்ற சென்ற ரவிக்கு லேசான காயம் ஏற்பட்டது. கருகிய நிலையில் பாரதி, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டாள். அங்கு சிகிச்சை பலனின்றி பாரதி பரிதாபமாகச் செத்தாள்.
இது குறித்து கொளத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருணாபாய் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
குறிச்சொற்கள் 498a, husbands, lust, misuse, paramour, அராஜகம், ஆண்பாவம், கள்ளக்காதல், பொய் வழக்கு
ஆண்கள் ஆசிட் வீசினால் என்கவுண்டர். பெண்கள் வீசினால்?
சில மாதங்களுக்கு முன் ஹைதராபாத்தில் இரு பெண்கள் மீது ஆசிட் வீசியதற்காக மூன்று ஆண்களை என்கவுண்டரில் போட்டுத் தள்ளினார்கள் போலீசார். உடனே பல பெண்கள் இயக்கத்தினரும், பெண்ணிய வியாதிகளும், "பெண்" என்ற சொல்லைக் கேட்டவுடனேயே ஜொள்ளு விட்டு ஸ்கலிதமாகும் வெத்துவேட்டு ஆண்களும், "அவர்களை அப்படித்தான் கொல்ல வேண்டும். அநியாயமாக பெண்கள்மேல் ஆசிட் வீசியதற்கு அந்த ஆண்களை அப்படித்தான் கேள்வி முறையின்றி சுட்டுக் கொல்ல வேண்டும்" என்று கிரீச்சென்று கூக்குரலிட்டுக் கூத்தாடினார்கள்.
ஆனால் நேற்று ஒரு பெண், ஒரு போலீஸ்காரர் மீதே கலெக்டர் ஆபீசில் ஆசிட் ஊற்றினாளே, அவளை ஏன் என்கவுண்டரில் போடச் சொல்லிக் கேட்கவில்லை? எங்கே போனீங்க பெண்ணியவியாதிகளே! அன்று டை அடித்த தலையை பரப்பி வைத்துக் கொண்டு லிப்ஸ்டிக் போட்டு, கால் மேல் கால் போட்டுக்கொண்டு டிவி சேனலில் "அப்படிதான் ஆண்களை கொல்லவேண்டும். அதுதான் மிகவும் சரியான தண்டனை" என்று கோஷம் போட்ட பெரிய இடத்துப் பெண்மணிகள் எங்கே போனார்கள் இப்போது?
இந்த நாட்டில் வெகு சிக்கிறமே ஆண் குழந்தைகளை கருவிலேயே கொன்று விடுவார்கள். அல்லது கள்ளக் காதலுக்கு இடைஞ்சலாக இருக்கிறான் என்று வளர்ந்த பிறகு கொன்று விடுவார்கள் நம் பாரதி கண்ட புதுமைப் பெண்கள்.
சீ, வெட்கங்கெட்ட சமுதாயமடா இது!
இனி படியுங்கள் அந்த கண்றாவி செய்தியை:
திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம்
திருவள்ளூர் கலெக்டர் ஆபீசில் பரபரப்பு போலீஸ் காதலன் முகத்தில் ஆசிட் வீசிய காதலி கைது
திருவள்ளூர், ஆக. 26-
'திருமணம் செய்ய மாட்டேன்' என்று கூறிய காதலனின் முகத்தில் ஆசிட் வீசிய இளம்பெண் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரி முன்னிலையில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பாக்கம் முருகன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முத்து. இவரது மகள் சாந்தினி (எ) புவனேஸ்வரி (30). சென்னையில் உள்ள தனியார் ஏற்றுமதி கம்பெனியில் வேலை செய்கிறார். தினமும் பஸ்சில் வேலைக்கு செல்லும்போது சென்னை ராமாபுரம் வெங்கடேஸ்வரா நகர் பகுதியைச் சேர்ந்த சரவணன் (25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. சரவணன், சென்னை ஆயுதப்படையில் போலீஸ்காரராக இருக்கிறார். பஸ்சில் ஏற்பட்ட பழக்கம், காதலாக மாறியது.
இந்நிலையில், திருமணம் செய்துகொள்ளும்படி சாந்தினி வற்புறுத்தி வந்தார். திருமணத்துக்கு மறுத்த சரவணன், சாக்குபோக்கு சொல்லி தட்டிக் கழித்துவந்தார். ஆத்திரமடைந்த சாந்தினி, இதுபற்றி திருவள்ளூர் கலெக்டர் பழனிகுமாரிடம் புகார் செய்தார். புகாரை விசாரிக்க சமூகநலத் துறைக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
அதன்படி, சமூக நல அலுவலர் லதா, கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் வைத்து சாந்தினி, சரவணனிடம் நேற்று விசாரணை நடத்தினார். அப்போது சாந்தினிக்கும் சரவணனுக்கும் திடீரென தகராறு ஏற்பட்டது. கோபத்தில் எழுந்த சாந்தினி, கைப்பையில் மறைத்து வைத்திருந்து ஆசிட்டை எடுத்து சரவணன் முகத்தில் வீசினார். முகம் வெந்து வலியால் துடித்த அவரை உடனடியாக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சரவணன் கொடுத்த புகாரின்பேரில், திருவள்ளூர் நகர போலீஸ் எஸ்ஐ லட்சுமிபதி வழக்குபதிவு செய்து சாந்தினியை கைது செய்தார். பின்னர் அவரை திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, புழல் மத்திய சிறையில் அடைத்தார். கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
(செய்தி: தமிழ் முரசு. 27-08-2009)
ஓட்டப் பந்தய வீராங்கனை!
கணவனை கைவிட்டு விட்டு கள்ளக் காதலனுடன் மனைவி ஓட்டம்.
செய்தி: தினமலர் - 13-08-2009
கொடுமுடி: கொடுமுடி அருகே உள்ள வருந்தியாபாளையத்தில், கணவனை கைவிட்டு விட்டு காதலனுடன் ஓடிய பெண்ணிடம் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
கொடுமுடி அருகே வருத்தியாபாளையத்தைச் சேர்ந்தவர் நித்யா (23); விளக்கேத்தியைச் சேர்ந்த உலகநாதன் (28). இருவருக்கும் மூன்றாண்டுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப்பின், டி.பார்ம்., படிக்க நித்யா விரும்பினார். மனைவியின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு, பெருந்துறையில் உள்ள கல்லூரியில் படிக்க வைத்தார் உலகநாதன்.படிப்பு முடிந்த நிலையில், ஏற்கனவே தன்னை காதலித்த கல்வெட்டுப் பாளையத்தைச் சேர்ந்த துளசிமணியுடன் (30), நித்யா சில நாட்களுக்கு முன் மாயமானார். மனைவி வேறொருவருடன் மாயமானது குறித்து கொடுமுடி போலீசில் முறையிட்டார். துளசிமணியுடன் மாயமான நித்யாவை அழைத்து வந்த போலீசார், கணவருடன் சேர்ந்து வாழும்படி அறிவுரை கூறினர்;
ஆனால், கணவனுடன் செல்ல நித்யா மறுத்துவிட்டார்.கோபமான உலகநாதன், படிப்புக்காக செலவழித்த பணத்தை திருப்பித் தருமாறு கேட்டார்; அதற்கும் நித்யா மறுத்துவிட்டார். நொந்துபோன போலீசார், இருவரையும் நீதிமன்றம் சென்று தங்களது பிரச்னையை தீர்த்துக்கொள்ள அறிவுறுத்தினர்; இருவரும் தனித்தனியே பிரிந்து சென்றனர்.
===========
கள்ளக் காதலனுடன் ஓடிப் போனவளுடன் "பேச்சு வார்த்தை" நடத்துகிறார்களாம்! வெட்கக் கேடு!
அது சரி, இதேபோல் கணவன் மனைவியை விட்டுச் சென்றால் உடனே அவனைக் கைது செய்கிறார்களே, அது ஏன்?
மனைவி எப்போது வேண்டுமனாலும் கணவனை அம்போ என்று விட்டுவிட்டு கள்ளக் காதலனுடன் கைகோர்த்துச் சென்றுவிடலாம். அப்போது போலிசார் அவளுக்கு அறிவுரை கூறி தாஜா செய்வார்கள். அவள் முறுக்கிக் கொண்டு முடியாது என்று போய் விடுவாள். அவளை ஒன்றும் செய்யாமல் விட்டுவிடுவார்கள். ஆனால் கணவன் அதுபோல் செய்தால் அவனை உடனே கைது செய்து உள்ளே போட்டு விடுவார்கள். ஏனென்றால் சட்டங்கள் அப்படித்தான் சொல்கின்றனவாம்!
வெட்கக் கேடு ஐயா!
இப்போது இந்த நாட்டில் திருமணம் செய்துகொண்டு அடிமைப்பட்டுக் கிடக்கும் ஆண்களுக்கு சுதந்திர தினம் வேறு ஒரு கேடா!!
ஆணாகப் பிறந்த குற்றம்!
சில்மிஷத்தில் ஈடுபட்டது ஆணும் பெண்ணும் - முழுதும் இஷ்டப்பட்டு திருட்டுத்தனமாக. ஆனால் கைதாவது ஆண் மட்டும்தான். பெண்ணைக் கண்டித்து வீட்டு அனுப்பி விடுவார்களாம். ஆணை மட்டும் சிறையில் தள்ளுவார்களாம். ஏனெனில் அவன் ஆணாகப் பிறந்து விட்டானாம்!
இதுபோன்ற ஒருதலைப் பட்சமான கண்ணோட்டம் சமுதாயத்தின் ஒவ்வொரு அங்கத்திலும் இருக்கிறது. இது போன்ற ஆணெதிர்ப்பு அணுகுமுறையும், அவனை மட்டும் தண்டிக்கும் போக்கும் மாறாமல் இந்தத் தவறான போக்கு தொடருமேயானால் சீக்கிறமே ஆண்களில் பலர் வெறுப்பு மேலோங்கி சீரியல் கில்லர்களாக மாறக்கூடிய அபாயம் இருக்கிறது!
இனி செய்தி:-
நெல்லை, ஆக.9- 2009. செய்தி - தினத்தந்தி
நெல்லை சந்திப்பு மீனாச்சிபுரத்தை சேர்ந்த இஸ்ரேல் மைசன் பீட்டர்(23), ஜெபராஜ் ஆகிய வாலிபர்கள் நேற்று முன்தினம் பாளை. பஸ் நிலையம் பகுதிக்கு காரில் வந்தனர். அங்கு பள்ளிக்கு சென்று கொண்டிருந்த தங்களுக்கு தெரிந்த 2 மாணவிகளிடம் பேசி தங்களது காரில் ஏறும்படி கூறினார்கள். இதன்படி இஸ்ரேல் சைமன் பீட்டர் தனது காதலியுடன் சொகுசு காரில் முன்சீட்டிலும், ஜெபராஜ் தனது காதலியுடன் காரின் பின்சீட்டிலும் ஏறிக்கொண்டார்.
பின்னர் காரை மெதுவாக ஓட்டி இலந்தகுளம் கரை அருகே உள்ள ஒதுக்குப்புறமான சாலை ஓரத்தில் நிறுத்தினார்கள். அங்கு 2 வாலிபர்களும் மாணவிகளிடம் செக்ஸ் குறும்பில் ஈடுபட்டு உள்ளனர். இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து பாளை. போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் குருநாதன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று 2 வாலிபர்கள் மற்றும் மாணவிகளை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
2 பேர் கைது
பின்னர் மாணவிகளின் பெற்றோரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் மாணவிகளை கண்டித்து அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து மாணவியின் தந்தை ஒருவர் பாளை. போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். பாளை. போலீசார் ஈவ்-டீசிங் வழக்குப்பதிவு செய்து இஸ்ரேல் மைசன் பீட்டர், ஜெபராஜ் ஆகிய 2 பேரையும் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கார் மற்றும் 1 ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
திருமணமாகி 9 ஆண்டுகளுக்குப்பின் 498A
9 ஆண்டுகள் என்ன, 100 ஆண்டுகள் கழித்துக்கூட கணவன் மற்றும் அவனது பெற்றோர், உறவினர், நண்பர்கள், மேலும் ரோட்டில் போகிறவர், வருகிறவர் அனைத்துப் பேருக்கும் எதிராக 498A கேசு போடலாம் என்கிறது அந்தச் சட்டம்.
இந்தச் செய்தியை வாசியுங்கள்:-
கூடுதல் வரதட்சணை கேட்டு பெண்ணை துன்புறுத்திய வர்மகலை வைத்தியர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேவகோட்டை ராம்நகர் வீட்டுவசதிவாரிய குடியிருப்பில் வசிப்பவர் ஜெபக்குமார். வர்மகலை வைத்தியர். இவரது மனைவி அமலா (வயது 26). சித்த மருத்துவ டாக்டர். இவர்களுக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் ஜெபக்குமார் மனைவி அமலாவிடம் அவரது தங்கையை தனக்கு 2-வது திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். (அநேகமாக இதுதான் உண்மையில் பிரச்னையாக இருக்கலாம். ஆனால் கையிலெடுப்பது என்னவோ வரதட்சணைக் கொடுமை (498A) புகாரைத்தான். ஏனென்றால் அதன் மூலமாகத்தானே அனைவரையும் கைது செய்ய வைக்கலாம்!). மேலும் 30 பவுன் நகை, ரூ. 2லட்சம் பணம் கேட்டு, அடித்து துன்புறுத்தினாராம். இதுகுறித்து அமலா தேவகோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அனுராதா, சிவக்குமாரின் தந்தை அன்பையா, தாயார் ரெசிலம்மாள், அண்ணன் கிறிஸ்து ராஜா, அண்ணன் மனைவி டெய்சி, மற்றொரு அண்ணன் ராஜசேகர், அவரது மனைவி லதா, அக்கா ஜெயந்தி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து ஜெபக்குமார், ரெசிலம்மாள், கிறிஸ்து ராஜா, டெய்சி ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
செய்தி - தினத்தந்தி - 22-07-2009
---------------
இதைப் படிக்கும் வலைப் பதிவர்களில் மணமான பெண்கள் யாரேனும் இருக்கிறீர்களா? உங்களுக்கு ஒரு இலவச டிப்ஸ் :-
சக வலைப் பதிவர்களில் யாரேனும் உங்களிடன் பின்னூட்டக் குசும்பு செய்து அதனால் அந்த நபர்மேல் உங்களுக்கு அதீத கோபம் வந்து, அவரை எப்படியாவது பழி வாங்கவேண்டும் என்று துடிக்கிறீர்களா? உடனே அருகாமையிலுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குச் சென்று ஒரு வெள்ளைப் பேப்பரை எடுத்து (பழுப்புப் பேப்பராக இருந்தலும் பரவாயில்லை) அந்த நபர் வரதட்சணைக் கொடுமை செய்தார் என்று புகார் கொடுத்து விடுங்கள். இதற்காக (498A) சட்டப் பிரிவுக்கு ஏற்றபடி அங்கு அநேகமாக ஒரு டெம்பிளேட் செய்து வைத்திருப்பார்கள். அப்படி கைவசம் ரெடியாக இல்லாவிட்டலும் இந்த 498A கேசு ஸ்பெஷலிஸ்டுகளான வக்கீல்கள் சிலர் இருப்பார்கள். அவர்கள் தகுந்த புகார்களை நன்கு ஜோடித்துக் கொடுப்பார்கள்.
வெறும் சோறு போதுமா? அதன்மேல் மசாலா, உப்பு புளி மிளகாய் வேண்டாமா! அதனால் அந்த நிபுணர்கள் 498A கூட இன்னும் சில செக்ஷன்கள் சேர்கிறமாதிரி, புளு ஃபிலிம் பார்த்தார்கள், அந்த நபர் என்னைக் கையைப் பிடித்து இழுத்தார் என்று ஜிகினா வேலை செய்து கொடுப்பார்கள். எந்த முகாந்திரமும் வேண்டாம்; எந்த விசாரணையும் வேண்டாம்; அந்த வலைப் பதிவர் உடனே கைது செய்யப் படுவார். பிறகு அவரிடமிருந்து ஒரு கணிசமான துகையைக் கறந்து கொண்டு உங்கள் புகாரை Quash செய்து விடலாம்.
இது போல்தான் இந்த சட்டப் பிரிவு பயன்படுத்தப் படுகிறது. குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பல நீதிபதிகள் இந்த சட்டத்தின் முழு துஷ்பிரயோகத்தை ஒப்புக் கொண்டாயிற்று. ஆனாலும் இது ஒரு கற்பக விருக்ஷம், காம தேனு, அட்சய பாத்திரமாக கணிசமான வக்கீல்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும், மற்றும் இதர துறை சார்ந்த எனையோருக்கும் விளங்குவதால் ஒரு மாற்றமும் நடக்க மாட்டேனென்கிறது.
குறிச்சொற்கள் 498a, advocates, harassment, husbands, victims, அராஜகம், ஆண்பாவம், பொய் வழக்கு, வக்கீல், வரதட்சணை
மனப்பூர்வமான காதல் முடிவதும் 498-A கேசில்தான்!
இருவரும் நன்கு படித்தவர்கள். ஒருவரையொருவர் தீவிரமாகக் காதலித்தனராம். தற்கால சினிமா யுகத்தில் காதல் காவலர்களைச் சேர்த்து வைக்கும் இடமான காவல் நிலையத்தில் கல்யாணம் நடந்தது. திருமணம் நடந்த மூன்று மாதத்திற்குள்ளாகவே காதல் கணவனைச் சேர்த்து 13 பேர்கள் மேல் வரதட்சணைப் புகார் (498A) கொடுத்துவிட்டாள் மகராசி. உடனே அந்த “மனப்பூர்வமாகக் காதலித்த” கணவனையும் அவனது பெற்றோரையும் சகோதரி புருஷனையும் கைது செய்து விட்டனர். ஏனையோரைத் தேடி வருகின்றனராம்!
காதலாக இருந்தாலும், ஜாதகம் பார்த்து முடித்தாலும், சுயம்வரங்கள், மேட்ரிமனி வலைத்தளங்கள் மூலம் முடிவு செய்தாலும், அறிந்தவர்கள், நண்பர்கள் உறவினர்கள் மூலம் ஏற்பாடு செய்திருந்தாலும், கடைசியில் திருமணங்கள் சங்கமம் ஆவது 498A கேசுகளில்தான். அந்தரங்கமாக அன்பு அரவணைப்பில் குடும்பம் நடத்தவேண்டிய தம்பதிகள் அனைவரும் வக்கீலகள், போலீஸ்காரர்கள் சகிதமாக கோர்ட்டு வராண்டாக்களில் அலைந்து கொண்டிருக்கிறார்கள். இத்தகைய பெண்கள் திருமணம் செய்துகொள்வதே கணவனிடமிருந்து 498-A கேசு போட்டு உள்ளே தள்ளி பிறகு செட்டில் பண்ணுவதற்கு காசு பிடுங்குவதற்குத்தான். அப்போதுதானே இஷ்டப்படி கண்டவனோடு “உல்லாசமாக” இருக்கலாம்!!
இனி செய்தி:-
சேலம்,ஜுலை.17- 2009 - செய்தி: தினத்தந்தி
காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்ட பட்டதாரி பெண்ணிடம் 100 பவுன்நகை மற்றும் ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாக காதல் கணவர், மாமியார் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
சேலம் தாதகாப்பட்டி அம்மன்நகரை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் தியாகராஜன்(வயது24). இவர் எம்.காம் முடித்து விட்டு சேலம் சட்டக்கல்லூரியில் பி.எல். இறுதியாண்டு படித்து வந்தார்.
சேலம் அருகே உள்ள இளம்பிள்ளையை சேர்ந்த சுந்தரவடிவேல்-நீலாவதி தம்பதிகளின் மகள் கிருஷ்ணபிரியா(22). இவர் திருச்செங்கோட்டில் உள்ள கல்லூரி ஒன்றில் எம்.சி.ஏ. படித்து பட்டம் பெற்றவர். தியாகராஜனும், கிருஷ்ணபிரியாவும் கடந்த 2003-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டுவரை 3 ஆண்டுகள் ஒரே கல்லூரியில் பி.காம் படித்துள்ளனர்.
இருவரும் இறுதியாண்டு படிக்கையில் இருவரும் மனப்பூர்வமாக காதலிக்க தொடங்கி விட்டனர். அதே நேரத்தில் தங்களது படிப்பையும் தொடர்ந்தனர்.இந்த நிலையில் இவர்களின் காதல் விஷயம் பெற்றோருக்கு தெரிந்து எதிர்ப்பு வலுத்தது. காதலன் தியாகராஜன் வீட்டில் வேறுபெண் பார்த்து திருமணம் ஏற்பாட்டை செய்தனர். இதையறிந்த தியாகராஜன், காதலியை சென்னைக்கு அழைத்து சென்று அங்கு ராயபுரத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 16-ம் தேதி பதிவு திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் ஊர் திரும்பிய காதல்ஜோடி அவரவர்கள் வீட்டிலே இருந்தனர். இந்த நிலையில் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்ட விவரம் அறிந்து இருவீட்டாரும் ஊர்மக்கள் மத்தியில் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, கடந்த மார்ச் மாதம் ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் உள்ள கோவிலில் இருவீட்டார் சம்மதத்துடன் திருமண ஏற்பாடு நடந்தது. அதற்குள் காதலன் வீட்டில் உறவினர் தலையிட்டு, விவாகரத்து செய்யும் முடிவுக்கு வந்து விட்டனர்.
அதைத் தொடர்ந்து திருமணத்துக்கு காதலன் சம்மதிக்கவில்லை என்ற முடிவுக்கு வந்த கிருஷ்ணபிரியா சேலம் மாநகர துணை கமிஷனர் ஜான் நிக்கல்சனை சந்தித்து புகார் கொடுத்தார்.
இது குறித்து சேலம் அனைத்து மகளிர் போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டது. அப்போது காதலன் தியாகராஜன் திருமணத்துக்கு சம்மதித்தார். அதன்பின்னர் தியாகராஜன்,கிருஷ்ணபிரியா இருவரும் போலீசார் முன்னிலையில் மாலைமாற்றி கொண்டனர்.
ஒருவாரம் காதலி வீட்டில் இருவரும் தங்கி இருந்த நிலையில், காதலனின் பெற்றோர் ஊரார் அறிய முறைப்படி திருமணம் நடத்த முடிவு செய்து மகன் தியாகராஜனை தங்களது வீட்டுக்கு அழைத்து சென்று விட்டனர். திருமணத்தை முறைப்படி நடத்துவதற்கான நாட்களை தள்ளி வந்தனர். கடந்த ஜுன் மாதம் திருமணநாள் குறித்தனர்.
இந்த நிலையில் தற்போது காதலனின் பெற்றோர், தங்கள் மகனுக்கு கிருஷ்ணபிரியாவை திருமணம் செய்வதென்றால் ரூ.5 லட்சம் ரொக்கம், 100 பவுன் நகை வரதட்சணையாக தரவேண்டும். அப்படி கொடுத்தால் மட்டுமே இருவருக்கும் திருமணம் நடக்கும். இல்லையேல் முடியாது என மறுத்ததாகவும், மேலும் மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து சேலம் அனைத்து மகளிர் போலீசில் காதல் கணவர், மாமியார், மாமனார், இவர்களது மருமகன் மற்றும் உறவினர்கள் 13 பேர் மீது கிருஷ்ணபிரியா நேற்று புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜெயம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
காதல் கணவர்-மாமியார் கைது
அதைத்தொடர்ந்து நேற்று காதல் கணவர் தியாகராஜன், மாமியார் உமாராணி(43), அவரது மருமகன் மனோகரன்(28) ஆகியோரை கைது செய்தார். மாமனார் செல்வம் உள்பட 10 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்
குறிச்சொற்கள் 498a, husbands, lawyer, lust, அராஜகம், ஆண்பாவம், பொய் வழக்கு, வரதட்சணை, விவாகரத்து
498A கூட செக்ஸ் கொடுமையும் சேர்த்துப் போடுவோம்!
முதலில் இந்தச் செய்தியை முழுதும் வாசியுங்கள்!
---------------------------
ஈரோடு, ஜுலை.16- 2009. செய்தி - தினத்தந்தி
செக்ஸ் கொடுமை செய்யும் கணவரின் அண்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கிராம மக்களுடன் வந்த பட்டதாரிப்பெண், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவிடம் புகார் செய்தார்.
ஈரோடு நாதகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் சத்தியப்பிரியா (வயது 24). எம்.எஸ்சி. பட்டதாரி. இவர் தனது பெற்றோர் சந்திரசேகர்-வளர்மதி, எம்.எஸ்.மங்கலம் பஞ்சாயத்து தலைவர் குமரேசன் மற்றும் கிராம மக்கள் நூற்றுக்கணக்கானவர்களுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு புகார் கொடுக்க வந்தார். இதனால் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு பரபரப்பான சூழ்நிலை உருவானது. இதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு அவிநாஷ்குமாரை நேரில் சந்தித்து புகார் மனுவை கொடுக்க சத்தியப்பிரியாவுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
அதன்பின்னர் அவர் போலீஸ் சூப்பிரண்டை நேரில் சந்தித்து புகார் மனு கொடுத்தார்.
புகார் மனு குறித்து சத்தியப்பிரியா நிருபர்களிடம் கண்ணீர் மல்க கூறியதாவது (கண்ணீர் பெண்களுக்கு ஒரு கைவந்த கலை; அது ஒரு சிறந்த ஆயுதம். அதை வைத்து யாரை வேண்டுமானாலும் வீழ்த்தலாம்!):-
எனது சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் நாதகவுண்டன்பாளையம். எனக்கும் முள்ளாம்பரப்பு வீரப்பம்பாளையத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் மகேஷ் (32) என்பவருக்கும் கடந்த 25-5-2008 அன்று திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது 50 பவுன் நகையும், ரூ.50 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்பட்டது.
கணவர் மகேஷ், மாமனார் ஆறுமுகம், மாமியார் தமிழரசி மற்றும் கணவரின் அண்ணன் தியாகு என்கிற தியாகராஜன் (37) ஆகியோருடன் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்தேன். தியாகராஜனுக்கு திருமணம் முடிந்து 2 குழந்தைகள் உள்ளனர். கணவர் வீட்டார் அனைவருமே சாக்கு வியாபாரம் செய்து வருகிறார்கள்.
என் கணவர் எப்போதும் தனது தாயார், அண்ணன் பேச்சை கேட்டுத்தான் நடப்பார். தாயார் இருக்கும்போது என்னிடம் அவர் சரியாக கூட பேசமாட்டார். திருமணம் ஆன முதல் 4 மாதங்கள்தான் அவருடன் சந்தோசமாக குடும்பம் நடத்தினேன். இந்த நிலையில் நான் கருவுற்றேன். அந்த சந்தோஷம் நிலைப்பதற்குள் எதிர்பாராதவிதமாக கரு கலைந்து விட்டது.
இதற்கிடையில் தியாகராஜன் என்னிடம் தவறாக நடக்க முயன்றார். அடிக்கடி செக்ஸ் கொடுமை செய்தார். இது குறித்து என் கணவரிடம் கூறினேன். ஆனால் அவர் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. கூட்டுக்குடும்பம் என்றால் அப்படி, இப்படி இருக்கத்தான் செய்யும் என்றார்.
பின்னர் தனியாக தொழில் தொடங்க வேண்டும். உன் தந்தையிடம் சென்று ரூ.1 லட்சம் வாங்கி வா என்று கட்டாயப்படுத்தினார். நானும் என் தந்தையிடம் கேட்டேன். ஆனால் அவ்வளவு பணம் கொடுக்க வசதி இல்லை என்று என் தந்தை கூறிவிட்டார். மேலும் எங்களுக்கு செட்டிப்பாளையத்தில் சொந்தமாக உள்ள ரூ.25 லட்சம் மதிப்பிலான காலி இடத்தை தன் பெயரில் எழுதி தரும்படி கேட்டு அடித்து சித்ரவதை செய்தார்.
கணவரின் வீட்டாரும், அந்த நிலத்தை எழுதி வாங்கி வந்தால்தான் அவருடன் சேர்ந்து குடும்பம் நடத்த விடுவோம். இல்லை என்றால் உன் பெற்றோர் வீட்டுக்கே துரத்தி விடுவோம் என்று மிரட்டினார். கணவரும் அடிக்கடி பணம் வாங்கி வா, அல்லது நிலத்தை எழுதி வாங்கி வா என்று கொடுமைப்படுத்தினார்.
அதன்பின்னர் எனது நகைகளை பிடுங்கிக்கொண்டு, வீட்டை விட்டு விரட்டிவிட்டனர். இனிமேலும் இவருடன் வாழ முடியாது என்று முடிவு செய்து என் பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டேன். எனது நிலை குறித்து பெற்றோரிடம் கூறினேன்.
அதைத்தொடர்ந்து ஊர் பஞ்சாயத்து தலைவர் குமரேசன் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. என் கணவர் மகேஷை அழைத்து பேசினார்கள். அவரிடம் ஊர்க்காரர்கள் பலரும் பேசினார்கள்.
அதைத்தொடர்ந்து, ஆவணி மாதம் வந்து என்னை அழைத்து செல்வதாக உறுதி அளித்துச்சென்றார். ஆனால் அதற்குள் விவாகரத்து நோட்டீசு அனுப்பி விட்டார்.
இதனால் நானும் என் குடும்பத்தாரும் அதிர்ச்சி அடைந்தோம். இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவிடம் புகார் மனு ஒன்றை கொடுத்து இருக்கிறேன். அதில் எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும். வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்த என் கணவர், மாமனார், மாமியார், கணவரின் அண்ணன் தியாகராஜன் ஆகியோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அவரும், என் கணவரையும், அவரது குடும்பத்தையும் அழைத்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
என் கணவர் மட்டும் என்னுடன் தனியாக குடும்பம் நடத்த வந்தால் அவரை என்னால் திருத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு சத்தியப்பியா கூறினார்.
இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவிடம் கேட்டபோது, சத்தியப்பிரிவின் புகார் மனுவை ஈரோடு அனைத்து மகளிர்போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி இருக்கிறேன். சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவர், மாமனார், மாமியாரை அழைத்து வந்து டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு முன்னிலையில் விசாரணை நடத்த உத்தரவிட்டு இருக்கிறேன். அதன்பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
------------
முன்னுக்குப்பின் முரணான புகார்கள். கடைசியில் விஷயம் என்னவென்றால், 498ஏ சட்டத்தைக் கையிலெடுத்து பயமுறுத்தி கூட்டுக் குடும்பத்திலிருந்து கணவனைப் பிரித்து தனிக்குடுத்தனத்திற்கு வரவேண்டும்; அங்கு தன் ஆட்சி நடக்கவேண்டும். இதற்காக எந்தவித செக்ஸ் கொடுமைப் புகாரையும் ஜோடனை செய்து பதிவு செய்ய இக்காலப் பெண்கள் தயார்.
இதெல்லாம் என்ன ஜுஜிபி!
3 மாதக் குழந்தையும், 3 வயதுப் பையனும் வரதட்சணைக் கொடுமை செய்தனர், தன் கையையே தூக்க சக்தியில்லாத 80 வயது மாமனார் என் கையைப் பிடித்து இழுத்தார் என்றெல்லாம் பொய் வழக்கு போட்டு, யாதொரு விசாரணையுமின்றி மேலும் இது இயற்கைக்கு முரணாக, சாத்தியமில்லாத புகாராக இருக்கிறதே என்ற சிந்தனை கூட இல்லாமல் அவர்கள் கைது செய்யப்பட்ட நிகழ்வுகள் அநேகம்.
Sec 498A of IPC நம் நாட்டிற்கு பெண்ணிய வியாதிகள் அளித்துள்ள வரப்பிரசாதம். இதை கையிலெடுத்துக் கொண்டு கீழ்த்தரமான புத்தி கொண்ட மனைவிமார்களும் அவர்களுடன் கூட்டுச் சேர்ந்து சில கெடுமதி வக்கீல்களும் அடிக்கிறார்கள் பகல் கொள்ளை (Every 498A case ends in outright extortion). இதை “சட்டபூர்வமான பயங்கரவாதம்” (Legal terrorism) என்று வர்ணித்திருக்கிறார் ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி. என்ன சொன்னால் என்ன, தினந்தோரும் பல அப்பாவிகள் இந்தக் கொடுங்கோன்மைச் சட்டத்திற்கு தொடர்ந்து பலியாகி வருகின்றனர் என்பதுதான் நிதர்சனம்.
ஆகையால் இந்திய ஆண்கள் இத்தகைய 498A of IPC மற்றும் (வன்முறை என்பது ஆண்தான் செய்வான், பெண் வன்முறையே செய்யமாட்டள் என்று வரையறுத்திருக்கும்) குடும்ப வன்முறைச் சட்டங்கள் திருத்தப்படும் வரை அல்லது நீக்கப்படும் வரை திருமணம் என்னும் புதைகுழியில் விழாமல் இருத்தல் நலம் - அவர்களுக்கும் அவர்தம் பெற்றோருக்கும்!
குறிச்சொற்கள் 498a, advocates, divorce, harassment, husbands, law, misuse, அராஜகம், ஆண்பாவம், கள்ளக்காதல், பொய் வழக்கு
சீரழியும் குடும்பங்கள்
ஜூனியர் விகடன் (01-07-2009) இதழில் வெளி வந்துள்ள கட்டுரை இது.
(இதன் மின் வடிவத்தை அனுப்பி வைத்த தமிழ் சரவணன் அவர்களுக்கு நன்றி)
---------------------------------
'புதருக்குள் பெண் பிணம், கணவனை கட்டையால் அடித்துக் கொன்ற மனைவி, ரயில் முன் பாய்ந்து கள்ளக் காதல் ஜோடி தற்கொலை' - தினம் இப்படி ஆவடியைச் சுற்றி சம்பவங்கள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது! ஆவடி குறித்து நம் ஆக்ஷன் செல்லுக்கு (எண்:9790962188) வந்திருந்த அதிகபட்ச புகார்களும் இதே ரேஞ்சில்தான் இருக்கிறது.
'போலீஸ் ஸ்டேஷனில் கட்டப் பஞ்சாயத்து செய்கிறார்கள், வீட்டை விற்கச் சொல்லி ரவுடிகள் மிரட்டுகிறார்கள், கள்ளக் காதலியுடன் சேர்ந்துகொண்டு கணவர் துன்புறுத்துகிறார், கொலையைத் தற்கொலையாக மாற்றிவிட்டார்கள், பள்ளிக்கூடம் போன பெண்ணை கடத்திக்கொண்டு போய்விட்டார்கள். ஈவ் டீசிங் தொல்லை தாங்க முடியவில்லை...' இப்படியாக வரிசையான குற்றச் சாட்டுகள். ஆவடியில் மட்டும் ஏன் இப்படி?
இப்பகுதியில் குடியிருக்கும் இந்து மக்கள் கட்சிப் பிரமுகர் சம்பத் நம்மிடம், ''பிரமாண்டமான தொழில் நகரமாக வளர்ந்திருக்க வேண்டிய பகுதி இது. ஆனால், பத்தாண்டுகள் பின்தங்கி நிற்கிறது. காரணம், ரவுடியிஸம்.
இப்பகுதி இளைஞர்கள் தாங்கள் ரோட்டில் நடந்தால், எல்லோரும் பயப்படவேண்டும் என ஆசைப்படுகிறார்கள். கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள்கூட கட்டப்பஞ்சாயத்து அஸைன்மென்டுகளில் ஈடுபடுகிறார்கள். சென்னையைச் சேர்ந்த ரவுடி கும்பலுக்கும் இவர்களுக்கும் நெருக்க மான தொடர்பு இருக்கிறது. புறநகர்ப் பகுதி களில் திட்டமிட்டு ரவுடிக் குழுக்களை உருவாக்குவது இவர்கள்தான். இப்பகுதியைச் சேர்ந்த அரசியல் கட்சிகளுடன் இந்த ரவுடி கும்பல் பின்னிப் பிணைந்துள்ளது.
ரயில் போக்குவரத்தே இல்லாத ஸ்ரீபெரும்புதூர் ஏரியாவில் நல்ல தொழில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆனால், தொழிற்பேட்டையான அம்பத்தூர், ஆவடி ஏரியாக்களில் புதிதாக எந்தத் தொழிற்சாலையும் தொடங்கப்படவில்லை. காரணம், ஒரு தொழிற்சாலை ஆரம்பிப்பதற்கு முன்பே, கும்பலாக மாமூல் கேட்டு வந்துவிடுகிறார்கள். ரியல் எஸ்டேட் துறையும் இப்படித்தான். கிழக்குக் கடற்கரைச் சாலை, தாம்பரம் ஏரியாக்களைவிட இங்கே 25 சதவிகிதம் விலை குறைவாக இருக்கிறது. இப்படியாக ஆவடியின் பொருளாதாரமே ரவுடிகளால் சீரழிந்து விட்டது.
பொருளாதாரச் சீரழிவு ஒரு புறம் என்றால், சமுதாயச் சீரழிவு அதைவிட மோசம். புறநகர் பகுதியின் குறிப்பிட்ட சில தியேட்டர்களில் பலான படங்கள் தவிர, வேறெதையும் ஓட்டுவதில்லை. இந்தப் படங்களைப் பார்க்கும் ரசிகர்களின் ஈவ் டீசிங் தொல்லையிலிருந்து யாரும் தப்ப முடியாது. யாராவது எதிர்த்துப் பேசிவிட்டால், வீட்டுக்கே வந்து கலாட்டா செய்வார்கள். போலீசுக்குப் போனாலும் பயனில்லை. எனவே, பாதிக்கப்பட்டவர்கள் வேறு ஒரு ரவுடிக் கும்பலை நாடி, ஆதரவு கேட்கிறார்கள்.
அதேபோல், கள்ளக் காதல் விவகாரங்களும் இந்தப் பகுதிகளில் ஏராளம். வெளியே சொல்ல முடியாத அளவுக்கு முறையற்ற உறவுகளும் அதிகரித்திருக்கின்றன. மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரிகளை அரசு இப்பகுதியில் ஆய்வு செய்ய அனுப்பி னால், ஏதாவது நன்மை கிடைக்கலாம்'' என்றார் சம்பத்.
''ஆவடியில் இருந்து எங்களுக்கு வரும் புகார்கள் பெரும்பாலும், கள்ளக் காதல் சம்பந்தப்பட்டவையாகவே இருக் கின்றன!'' என்கிறார் கலைச்செல்வி கருணாலயா என்கிற தொண்டு நிறுவனத் தின் நிறுவனர் புருஷோத்தமன். அவர் நம்மிடம், ''ஒரு முஸ்லிம் குடும்பம். பக்கத்துப் பக்கத்து வீடுகளில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள். ஒரு நாள் தன் கணவன், அவருடைய அண்ணன் மனைவியுடன் அந்தரங்கமாக இருந்ததை நேரில் பார்த்துவிட்ட மனைவி, அங்கேயே சத்தம் போட்டு கலாட்டா செய்திருக்கிறார். அதற்குப்பிறகு அந்தக் குடும்பம் செய்ததுதான் அநியாயம். சத்தம் போட்டு கலாட்டா செய்த அந்தப் பெண்ணை வீட்டுக்குள்ளேயே சிறை வைத்து, ஜன்னல் வழியே சாப்பாடு கொடுத்துள்ளனர். இந்த விஷயம் அந்தப் பெண்ணின் அப்பா மூலமாக சமூக நல வாரியத்தின் கவனத்துக்கு வந்து, போலீஸ் மூலமாக அந்தப் பெண்ணை மீட்டோம். ஆனால், கணவன் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு, இவளை நட்டாற்றில் விட்டுவிட்டான்.
இன்னொரு புகார் ஒரு இளைஞனைப் பற்றியது. அவனும் அவனுடைய அம்மாவும் ரோட்டோரம் தள்ளு வண்டியில் பழ வியாபாரம் செய்து வந்திருக்கிறார்கள். இவர்களின் கடைக்கு எதிரே நாற்பது வயது விதவைப் பெண்மணி ஒருவரின் வீடு. அந்தப் பையனுக்கும் விதவைப் பெண்மணிக்கும் தொடர்பு ஏற்பட்டு, இப்போது அவன் அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டான். இருவருக்கும் இருபது வயது வித்தி யாசம்! இந்தத் தவறான உறவு எதிர்காலத்தில் இரண்டு குடும்பங்களையும் பாதிக்கும் என்பதால் விதவைப் பெண்மணியிடமிருந்து பையனை மீட்டுக் கொடுக்கச் சொல்லி, அவனுடைய அம்மா போராடிக்கொண்டு இருக்கிறார்.
இன்னொரு வீட்டில், கட்டிய புருஷனை விட்டுவிட்டு அவனுடைய தம்பியுடன் ஓடிவிட்டாள் ஒரு பெண். வியாபாரம், வியாபாரம் என்று பணமே குறிக்கோளாக இருந்ததால், மனைவியைக் கோட்டை விட்டுவிட்டார் அந்தக் கணவர்'' என்றவர்,
''தனி மனித ஒழுக்கம் பற்றிய மதிப்பீடுகளை இங்குள்ள இயந்திர வாழ்க்கை தவிடு பொடியாக்கி வருகிறது. இதுதான் இவ்வாறான மனசாட்சியற்ற செயல்களுக்கு அடிப்படைக் காரணம். இதில் தொலைக்காட்சியும் முக்கியப் பங்கு வகிக்கிறது. வசதிக்கு மீறிய வாழ்க்கை மீதான ஆசையும், அதற்குப் போதாத பொருளாதார நிலையும்கூட கள்ளக் காதலுக்கு ஒருவகையில் காரணி. தன்னு டைய எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத புருஷனை விட்டு விட்டு வேறொருவரை தேடிப் போகும் பெண்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள். மாமனார், மாமியார், கணவன் ஆகியோரைப் பழி வாங்குவதற்காகவும் சில பெண்கள் இந்த மாதிரியான காரியங்களில் இறங்கி விடுகிறார்கள். மனம்விட்டுப் பேசக்கூடிய, முதிர்ச்சியோடு அறிவுரை சொல்லக்கூடிய நண்பர்களையோ தோழிகளையோ இன்றைய நடுத்தர வயதினர் வளர்த்துக் கொள்ளாமல் இருப்பதும்கூட இந்தப் பக்குவமற்ற போக்குக்கு ஒரு காரணம்.
அடுத்த தலைமுறையையாவது கவனத்தில் கொண்டு இனிமேல் பள்ளி, கல்லூரிகளில் வாழ்க்கைக் கல்வியைக் கட்டாயப் பாடமாக்குவதுதான் சரியான தீர்வாக இருக்கும். அதேபோல், ஒவ்வொரு குடும்பத் தலைவரும் தன்னுடைய பிள்ளைகளுக்கு ரோல் மாடலாக விளங்கவேண்டும். இது நம் சமுதாயத் தலைவர்களுக்கும் பொருந்தும். இல்லையென்றால், 'அவரே இப்படி... நாம செஞ்சா என்ன?' என்று எண்ணவைத்துவிடும்'' என்று புருஷோத்தமன் பலமாக எச்சரிக்கை மணியடித்துப் பேசினார். அதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது.
ஆவடியில் நடக்கும் விதிவிலக்கான சம்பவங்களுக்கு மட்டுமா இது பொருந்தும்? நிம்மதியைத் தொலைத்து, தவறான பாதை நாடுபவர்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கும் இது பொருந்துமே!
- எம்.பாலச்சந்திரன்படம்: வி.செந்தில்குமார்
--------------------------
இந்த செய்தியின் கீழ் பதியப்பட்டுள்ள மறுமொழி இது:-
---------------------
//மாமனார், மாமியார், கணவன் ஆகியோரைப் பழி வாங்குவதற்காகவும் சில பெண்கள் இந்த மாதிரியான காரியங்களில் இறங்கி விடுகி றார்கள்.//
ஆம் இந்த கட்டுரை நூத்துக்கு நூறு உண்மை... பழிவாங்குகிறேன் என்ற போர்வையில் "வரதட்சணை கொடுமை சட்டம்" போன்ற அப்பாவி பெண்களுக்கா இயற்றப்பட்டதை இது போல் பெண்கள் பயன்படுத்தி அணைவரையும் சிறையில் அடைப்பது போன்ற கொடுமைகள் தினம் தொறும் நடந்தேறிவருகின்றது...
இச்சட்டத்தால் நாட்டில் இதுவரைக்கும் சுமார் ஒருலட்சடத்தி ஐம்பதாயிரம் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்(எல்லாம் விசாரனை கைதிகள்தாம்) மற்றும் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 20 ஆயிரம் தந்தையில்லா குழந்தைகள் வளர்ந்து வருகின்றனர்... ஆனால் இதில் கொடுமை என்னவேன்றால் இது போல் பொய் கேசுகளில் 100 - க்கு 2 - மட்டுமே உண்மை என்று நிரூபிக்கப் பட்டிருக்கிறது. மீதி 98% சதவீதம் பொய் கேசுகள். இது அரசு கொடுத்துள்ள புள்ளி விவரம்!
இன்னும் சில ஆண்டுகளில் திருமணம் குடும்பம் என்ற அமைப்பே இல்லாமல் போகும்... நம் நாட்டில் என்பது நிச்சயம்!
இரண்டு மாத குழந்தைமீது வரதட்சணை புகார்!
”ஜோயா” (Zoya) என்னும் இரண்டே மாதக் குழந்தை (அதுவும் பெண் குழந்தை) மீது அக்குழந்தை தன்னை வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்தியதாக 498A வழக்கு பதிவு செய்துள்ளார் ஒரு பெண் குலத் திலகம். இதுவரை 3 வயதுக் குழந்தை மீதுதான் இத்தகைய புகார் கொடுக்கப்பட்டது. தற்போது இரண்டு மாதக் குழந்தை மேல் வரதட்சணைப் புகார் கொடுத்து சாதனை புரிந்துள்ளார் ஷகீலா என்னும் பெண் பேய்.
சும்சுதீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதனால், அவரின் சார்பில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டு, அது இன்று விசாரணைக்கு வருகிறது.ஜோயா குடும்பத்தினரின் வக்கீல் அனில் போலே இதுபற்றி கூறுகையில், "முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவில், குழந்தை ஜோயாவின் பெயர் மற்றும் வயதை குறிப் பிட்டிருந்தேன். ஆனால், போலீசாரோ, அரசு தரப்பு வக்கீலோ அதை கவனத்தில் கொள்ளவில்லை' என்றார்.
பெருகும் கள்ளக் காதல் கொலைகள்
பெண்ணியவாதிகளும், “பாப்” கட்டிங், லிப்ஸ்டிக் பெண்மணிகளும், ஊடகங்களும், திரைப்படங்களும், அரசியல் வியாதிகளும் சேர்ந்து கும்மியடித்து நம் பாரம்பரிய பண்பாடு சார்ந்த நன்னடத்தை விதிகள் அனைத்தும் தவறு, தூக்கி எறியப்பட வேண்டியவை என ஓயாமல் போதனை செய்து வருவதின் விளைவு என்ன?
ஒவ்வொரு நாளும் பல பெண்கள் கள்ளக் காதல் உல்லாசங்களைத் தேடி அலைவதும், பள்ளிப் பருவத்திலேயே பார்க்கிலும், பீச்சிலும் பலர் கண்ணெதிரேயே கூச்சமில்லாமல் உல்லாசங்களில் ஈடுபடுவதும் அதன் விளைவாக கொலைகளும், தற்கொலைகளும் மலிந்து போனதும்தான். நம் முன்னோர்கள் சொல்லியவை அனைத்தும் முட்டாள்தனம் என்னும் மனக் கட்டமைப்பை இன்றைய பெண்கள் மனத்தில் ஆழப் பதித்துவிட்டனர். இதனால் பெண்கள் தங்கள் பெற்றோரையோ, உற்றாரையோ, கட்டின கணவனையோ ஒரு பொருட்டாக மதியாமல் சிற்றின்ப சுகம்தான் முக்கியம் என்ற ஓயாத தேடலில் இறங்கிவிட்டனர்.
அதற்குத் தேவையான பணத்தை பெற்றுத் தருவதற்காக அரசு பல ஒருதலைப் பட்சமான சட்டங்களை இயற்றியிருக்கிறது. அதை கையிலெடுத்து ஒரு அப்பாவி கணவன் கிடைத்தானென்றால் அவன் மேல் பல பொய்க்கேசுகளைப் போட்டு அவனை ஒரு இலவச ஏ.டி.எம் மெஷீனாக ஆக்கி தன் மனம் போன போக்கில் இன்பம் துய்த்து வருகின்றனர். மிருகங்களினும் கேடாய் நடந்து வருகின்றனர்.
இவர்களை ஊக்குவிப்பதற்காக ஒரு பிரபல நாட்டியப் பெண்மணி முத்து உதிர்த்திருக்கிறார், ” கற்பு, பண்பாடு என்று சொல்லி பெண்களை நம் சமுதாயத்தில் பெண்களை அடக்கி வைத்துவிட்டனர். அதையெல்லாம் உடைத்தெரிந்து இஷ்டப்படி அனுபவியுங்கள்” என்று. ஒரு பெண்கள் நல அமைச்சர் ”மணமான பெண்களை எப்பொதும் கைப்பையில் ஆணுறை ஒரு பக்கெட் வைத்திருங்கள். கணவன் என்ன எண்ணுவான் என்று கவலைப் படாதீர்கள். நமக்கு நம் சுகம்தன் முக்கியம். குடும்ப வாழ்வு அல்ல” என்று முழங்கியிருக்கிறார். இவர்கள் எவ்வளவு தூரம் நம் சமுதாயத்தை கீழ் நோக்கி இழுத்துச் சென்றிருக்கிறார்கள் பாருங்கள்!
இனி செய்திகள்:-
சென்னை வண்ணாரப்பேட்டையில் பயங்கரம்இரும்பு கம்பியால் அடித்து நண்பன் படுகொலைமனைவியுடன் உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்ததால் வாலிபர் ஆத்திரம்
சென்னை, ஜுன்.18- 2009. செய்தி - தினத்தந்தி
சென்னை வண்ணாரப்பேட்டையில் தனது மனைவியுடன் உல்லாசமாக இருந்த நண்பனை வாலிபர் ஒருவர் அடித்து கொலை செய்தார்.
சென்னை வண்ணார்பேட்டை கெனால் தெருவை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 26). கூலித் தொழிலாளி. இவருக்கும் சரண்யா (22) என்ற பெண்ணுக்கும் கடந்த 2005-ம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் நடந்தது. நிவேதா (2) என்ற பெண் குழந்தை உள்ளது.
திருமணத்திற்கு முன்பே அருண்குமாரும், அதே தெருவை சேர்ந்த பாலாஜி (24) என்பவரும் நண்பர்களாக பழகிவந்தனர். அருண்குமாரின் திருமணத்தின்போது, பாலாஜி தான் அனைத்து வேலைகளையும் முன்நின்று செய்தார்.
திருமணம் முடிந்ததும் புது மனைவியுடன் அருண்குமார் வாழ்க்கையை இனிமையாக தொடங்கினார். நண்பனை பார்ப்பதற்காக பாலாஜி அடிக்கடி வீட்டிற்கு வருவார். அப்போது, சரண்யாவுடன் பேசும் வாய்ப்பு ஏற்பட்டது. இதை, அருண்குமார் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. நண்பனால் தான் தனது வாழ்க்கை சீரழியப்போகிறது என்று, அப்போது அருண்குமாருக்கு தெரியவில்லை.
அருண்குமார் தினமும் கூலி வேலைக்கு சென்றுவிடுவதால், அந்த நேரத்தில் பாலாஜி வந்து சரண்யாவுடன் சிரிக்க... சிரிக்க... பேசியுள்ளார். நாளடைவில், அது இருவருக்குள்ளும் கள்ளத் தொடர்பை ஏற்படுத்தியது. பலமுறை உல்லாசம் அனுபவித்தனர். இவர்கள் இருவரையும் பற்றி அக்கம் பக்கத்தினர் தவறாக பேசியது அருண்குமாரின் காதுக்கும் எட்டியது. மனைவி மற்றும் நண்பனை அவர் கண்டித்தார்.
சரண்யாவும் இனிமேல் தவறு செய்யமாட்டேன் என்று கணவர் அருண்குமாரிடம் உறுதி அளித்தார். ஆனால், கள்ளக்காதலன் பாலாஜி மீது கொண்ட தீராத மோகம், கணவரிடம் கொடுத்த வாக்குறுதியை தூக்கி எறிய சரண்யாவை தூண்டியது.
உள்ளூரில் சுற்றினால் மாட்டிக்கொள்வோம் என்று, வெளியிடங்களில் பாலாஜியும், சரண்யாவும் சேர்ந்து சுற்றத் தொடங்கினர். சந்திக்க முடியாத நேரங்களில் செல்போன் மூலமும் பேசிவந்தனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு அருண்குமார், அவரது மனைவி சரண்யா, குழந்தை நிவேதா ஆகியோர் வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவு 2 மணியளவில் குழந்தை அழும் சத்தம் கேட்டு அருண்குமார் கண் விழித்தார். அருகில் படுத்திருந்த மனைவியை தேடியபோது அவரை காணவில்லை.
இதனால், மனைவி சரண்யாவை தேடி அருண்குமார் வீட்டைவிட்டு வெளியே வந்தார். அப்போது, வீட்டின் அருகே உள்ள ஒரு சந்துப் பகுதியில் சரண்யாவும், நண்பன் பாலாஜியும் உல்லாசமாக இருப்பதை பார்த்து அருண்குமார் அதிர்ச்சி அடைந்தார்.
ஆத்திரம் அடைந்த அருண்குமார், அருகில் கிடந்த இரும்பு கம்பியை கையில் எடுத்துக் கொண்டு மெதுவாக நடந்து சென்றார். பாலாஜியின் தலையில் ஓங்கி அடித்தார். அவர் அலறியபடி கீழே விழுந்தார். ஆத்திரம் தீரும் வரை, பாலாஜியை அருண்குமார் தாக்கினார்.
பின்னர், அவரது ஆத்திரம் மனைவி சரண்யாவின் மீது திரும்பியது. ஆனால், அதற்குள் சரண்யா அங்கிருந்து ஓடிவிட்டார். சப்தம் கேட்டு அருகில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் ஓடிவந்தனர். இதை பார்த்த அருண்குமார் அங்கிருந்து தப்பித்துவிட்டார்.
உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பாலாஜியை அருகில் இருந்தவர்கள் அவரை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். ஆனால், அவர் வழியிலேயே பரிதாபமாக செத்தார்.
இந்த சம்பவம் குறித்து வண்ணாரப்பேட்டை போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உதவி போலீஸ் கமிஷனர் ராஜாராம், இன்ஸ்பெக்டர் சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
இந்த நிலையில், திருவொற்றினிரில் பதுங்கி இருந்த அருண்குமாரை நேற்று காலை போலீசார் கைது செய்தனர். "மனைவியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததால் நண்பனை கொன்றேன்'' என்று அருண்குமார் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கள்ளத்தொடர்பால் அரங்கேறிய இந்த கொலை சம்பவம், வண்ணார்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மூன்று வயது பெண் குழந்தை இருந்தும் காமம் கண்ணை மறைத்த நிலையில் கணவன் அருகிலேயெ கள்ளக் காதலனுடன் இன்பம் துய்த்துள்ள புதுமைப் பெண் வாழ்க! ஆகா, பெண் விடுதலை என்பது இதுதானே!
இவள் என்னதான் செய்யமாட்டாள். அந்த கணவன்மீது வரதட்சணை வழக்குகூட போடுவாள்!
(லேட்டஸ்ட் செய்தி: “அப்போது, "கணவர் பல முறை கண்டித்தும், பாலாஜியுடனான உறவை துண்டித்துக் கொள்ள முடியவில்லை.காமம் என் கண்ணை மறைத்து விட்டது. இப்போது எதிர்காலம் போய்விட்டது. இதற்கு, காரணமான எனக்கு தண்டனை கொடுங்கள். என் கணவரை காப்பாற்றுங்கள்,' என்று சரண்யா புலம்பினார்.”
ஆனால் அவளைத் தண்டிக்க இந்திய சட்டங்கள் எதிலும் இடமில்லை. கணவன் கொலைக் கேசில் தண்டனை பெறுவது உறுதி. இப்போது பசப்பு மொழி பேசி கண்ணீர் விட்டு அந்தப் பெண் எல்லோர் இரக்கத்தையும் சம்பாதித்து விட்டாள். கணவன் அருகிலேயே கள்ளக் காதலனைக் கட்டி அணைத்தவள் அவன் கம்பி எண்ணப் போனபின் என்னதான் செய்யமாட்டாள். சைடில் இன்னொருவனையும் வைத்துக் கொள்வாள்! பாவம் அய்யா, அந்தப் பேதை!)
இதோ இன்னொரு கேசு:-
(செய்தி: தினமலர் 19-06-2009)
கள்ளத் தொடர்பு தகராறில் கார் டிரைவர் கொலை
சென்னை : கள்ளத் தொடர்பு தகராறில், கார் டிரைவர் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். தப்பியோடிய கொலையாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை வளசரவாக் கம் பெரியார் தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீதரன்(26). கார் டிரைவர். இவர் நேற்று முன் தினம் இரவு வேலை முடித்து விட்டு வீட்டிற்கு சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தார். இந்திராநகர் சாலையில் வந்து கொண்டிருந்தபோது அவரை இரண்டு பேர் வழிமறித்து தாக்கினர். பின்னர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஸ்ரீதரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.இது குறித்து, வளசரவாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை மேற் கொண்டனர்.
போலீஸ் விசாரணையில், கொலையுண்ட ஸ்ரீதரின் மனைவி கலா(23)விற்கும், விருகம் பாக்கம் காந்தி நகர் தமயந்தி தெருவைச் சேர்ந்த பிரியாணி கடை வியாபாரி மகேந்திரன்(27) என்பவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்து வந்தது தெரிய வந்தது.இது பற்றி அறிந்த ஸ்ரீதரன் சில தினங்களுக்கு முன் இருவரையும் அழைத்து கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மகேந்திரன், தனது தம்பி ராஜேந்திரனுடன் சேர்ந்து இந்த படுகொலையை நிகழ்த்தியதாக தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த மகேந்திரனை போலீசார் மடக்கிப் பிடித்தனர். ரகசிய இடத்தில் வைத்து கொலை செய்த விதம் குறித்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில், தேடப்படும் மற்றொரு நபரான ராஜேந்திரன் போலீஸ் விசாரணைக்கு பயந்து வெளியூருக்கு தப்பியோடி விட்டார். அவரை பிடிக்கும் பணியில் வளசரவாக்கம் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
498A வார்ப்புரு
இந்த செய்தியின்படி கைது செய்யப்பட்டிருக்கும் முத்தமிழ்ச் செல்வன், மல்லிகா மற்றும் கைது செய்யப்படப்போகும் ராமசாமி, கவிதா - இவர்களுடைய பெயருக்குப் பதில் உங்கள் பெயரைப் பொருத்திப் பார்த்துக் கொள்ளுங்கள். இத்தகைய கேசுகளுக்கு அரசும், வக்கீல்களும், பெண்ணியவாதிகளும் கொடுத்துவரும் ஊக்கத்தைப் பார்க்கும்போது உங்கள் ஒவ்வொருவர் குடும்பத்திலும் ஒருவராவது 498A - யால் தீண்டப்படப்போவது நிச்சயம். எல்லாம் தெரிந்த டோண்டு போன்றவர்களும், பெண்ணியவாதம் பேசும் செல்வன் போன்றவர்களும் பட்டபின் உணர்வார்கள். ஆனால் அதற்குள் காலம் கடந்திருக்கும். இனி செய்தி:- ராமநாதபுரத்தில் ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டு ஆசிரியைக்கு கொலை மிரட்டல் கணவர்-மாமியார் கைது ராமநாதபுரம்,ஜுன்.17- 2009. செய்தி - தினத்தந்தி ராமநாதபுரத்தில் ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டு ஆசிரியைக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவர்-மாமியாரை போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் வடக்கு புதுத்தெருவை சேர்ந்தவர் முத்தமிழ் செல்வன். இவர் வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் கிளார்க் காக பணியாற்றி வருகிறார். இவருக்கும் ராமநாதபுரம் சவேரியார் கோவில் தெருவை சேர்ந்த மஞ்சுளா(30) என்ப வருக்கும் கடந்த 9 மாதங்க ளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மஞ்சுளா ராமநாதபுரத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணி யாற்றி வருகிறார். இந்த நிலையில் முத்தமிழ் செல்வன் வேலூரில் சொந்த வீடு கட்ட ரூ.5 லட்சம் ரொக்கம், 20 பவுன் நகை ஆகியவற்றை வரதட்சணையாக வாங்கி வரும்படி தனது மனைவியிடம் கூறியுள்ளார். இதற்கு மஞ்சுளா தனது பெற்றோரிடம் வசதி இல்லாததால் இவ் வளவு பெரிய தொகையை வாங்க முடியாது என்று மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முத்தமிழ் செல்வன் கூடுதல் வரதட்சணை வாங்கி வந்தால் தான் உன்னோடு குடும்பம் நடத்துவேன் என்றும், இல்லா விட்டால் தீவைத்து கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டினாராம். இதற்கு அவரது தந்தை ராமசாமி, தாய் மல்லிகா, தங்கை கவிதா ஆகியோர் உடந்தையாக இருந்தனராம். இதுகுறித்து மஞ்சுளா ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மல்லிகா வழக்கு பதிந்து முத்தமிழ் செல்வன், அவரது தாய் மல்லிகா ஆகியோரை கைது செய்தார். மேலும் இதுதொடர்பாக தந்தை ராமசாமி, தங்கை கவிதா ஆகியோரை போலீ சார் தேடிவருகின்றனர்.
குறிச்சொற்கள் 498a, advocates, arrest, harassment, husbands, misuse, victims, அராஜகம், ஆண்பாவம், பொய் வழக்கு
மாமியாரைக் கொடுமைப் படுத்தும் மருமகள்
இந்திய சட்டங்களின் அடிப்படையில் “குடும்ப வன்முறை” என்பது கணவணால் மட்டும் மனைவியின்மீது செய்யப்படுவது. ஆகையால் ஒரு மனைவி ஒரு தினசரி காலண்டரைக் கிழித்து, “என்னை கணவன், அவனது பெற்றோர், சகோதரி, அவளுடைய 3 வயது குழந்தை, சகோதரியின் கண்வன், கண்வனுடைய தம்பி, அண்ணன், அடுத்த வீட்டுக்காரன், எதிர்த்த வீட்டுக்காரன் போன்ற அனைவரும் என்னைக் கொடுமை செய்தனர்” என்று கிறுக்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பினால் அவளது பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள அனைவரும் யாதொரு விசாரணையும், முகாந்திரமுமின்றி கைது செய்யப்படுவர். இதுதான் இந்திய குற்றப் பிரிவு 498A சட்டம்.
தவிர Domestic Violence Act படி கணவன்தான் வன்முறை செய்வான். மனைவி செய்தால் அது வன்முறை அல்ல.
அப்படி ஒரு மனைவி உடல் நலமில்லாத தன் கணவனையோ, அவனது வயதான தாயாரையோ அடித்துத் துன்புறுத்தினால் அந்த மனைவியின்மீது நடவடிக்கை எடுக்க எந்த சட்டமும் கிடையாது. ஆனால் அவள் அடிக்கவும் அடித்துவிட்டு, அவர்கள் மேல் பொய் புகார் கொடுத்தால் உடனே அவர்களைக் கைது செய்து விடுவார்கள். அவ்வாறு மனைவி கொடுத்த புகார் பொய் என நிருபிக்கப்பட்டால் கூட அந்த புகார் கொடுத்த மனைவிமேல் எந்த வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என குறிப்பிட்டு அந்தச் சட்டத்தில் அடிக்கோடிடப்பட்டிருக்கிறது! என்ன விந்தயான சட்டங்கள்!!
அவ்வாறு மனைவியால் துன்புறுத்தப்படும் கணவனுக்கும், அவனது பெற்றோருக்கும் என்ன கதி? எங்கு நியாயம் கிடைக்கும்? தற்போதுள்ள சட்டங்களின்படி நிச்சயமாக இந்தியாவில் கிடைக்காது! சந்தேகமிருந்தல் உங்களுக்குத் தெரிந்த கிரிமினல் வக்கீலிடம் கேட்டுத் தெளிவு பெறுங்கள்!
இப்போது இந்த அவலச் செய்தியைப் படித்துவிட்டு, திருமணம் செய்துகொள்ளப் போகும் அப்பாவி ஆண்களிடம் எடுத்துச் சொல்லுங்கள், அவர்கள் எத்தகைய புதைகுழியில் விழப்போகிறார்கள் எனப்தை!
-------------------
பணம் கேட்டு மருமகள் கணவனையும் மாமியாரையும் அடித்துக்
கொடுமைப் படுத்துகிறாள்.புறநகர் கமிஷனரிடம் மாமியார் புகார்
ஆலந்தூர், ஜுன்.16- 2009. செய்தி: 2009
சென்னையை அடுத்த அனகாபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் கங்காராம். இவருடைய மனவூவி சாந்தி (வயது 55). இவர் புறநகர் போலீஸ் கமிஷனர் எஸ்.ஆர்.ஜாங்கிட்டிடம் ஒரு புகார் மனு அளித்தார்.
அதில், ``நாங்கள் பூ வியாபாரம் செய்து வருகிறோம். எங்களது ஒரே மகன் கண்ணனுக்கு ஜீவா என்ற பெண்ணை திருமணம் செய்து கொடுத்தோம். ஜீவா அடிக்கடி பணம் கேட்டு எனது மகனை அடித்து துன்புறுத்துகிறார். இதை தட்டி கேட்டதால் எங்களை செருப்பால் அடிக்கிறார். எனவே எனது மருமகளை கண்டித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை சங்கர் நகர் போலீசார் விசாரணை செய்ய கமிஷனர் ஜாங்கிட் உத்தரவிட்டார்.
புறநகர் கமிஷனரிடம் இதுவரை மாமியார் கொடுமைப்படுத்துகிறார் என்றே புகார்கள் வந்து உள்ளன. இந்த நிலையில் மருமகள் கொடுமைப்படுத்துகிறார் என்று முதல் முறையாக புகார் தரப்பட்டுள்ளது.
குறிச்சொற்கள் 498a, dv act, harassment, husbands, அராஜகம், ஆண்பாவம், சட்டம், தாய்மை, பொய் வழக்கு
இவர்கள் பெண்கள் இல்லையா!
இந்தியாவில் இதுவரை 1,20,000 பெண்கள் Sec 498A IPC சட்டத்தின் கீழ் ஒரு விசாரணையுமின்றி கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் செய்த ஒரே குற்றம் ஒரு ஆணுக்கு ரத்த உறவினராக இருந்ததுதான்!
குறிச்சொற்கள் 498a, arrest, harassment, law, misuse, parents, அராஜகம், ஆண்பாவம், பொய் வழக்கு, வரதட்சணை
498A உங்களை நெருங்கி விட்டது!
வரதட்சணை கேட்டு பெண் சித்ரவதைகணவர் உள்பட 6 பேர் மீது வழக்கு. கோபிசெட்டிபாளையம், மே.29- 2009. செய்தி - தினத்தந்தி
வரதட்சணை கேட்டு பெண்ணை சித்ரவதை செய்ததாக கணவர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
ஈரோடு மாவட்டம் நம்பினிர் அருகில் உள்ள எலத்தூர் செம்மாண்டம்பதியைச் சேர்ந்தவர் குமார்(வயது28) விவசாயி. அவருடைய மனைவி செல்வி(வயது27). இவர்களுக்கு கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அப்போது செல்வியின் பெற்றோர் வரதட்சணையாக 7 பவுன் தங்க நகை மற்றும் பணம் ரூ.10 ஆயிரம் கொடுத்து உள்ளனர்.
இந்தநிலையில் செல்வி கோபி அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்தப்புகாரில், கணவர் குமார் மற்றும் அவருடைய தாய் சரஸ்வதி, தம்பி பிரகாஷ், அக்காள் சத்திய பாமாவாசு மற்றும் உறவினர்கள் பொன்மணி, சம்பூரணம் ஆகியோர் சேர்ந்து தலை பொங்கலுக்கு பெற்றோரின் வீட்டிற்கு சென்ற தன்னை, பெற்றோர் வீட்டில் இருந்து ஏன் மோதிரம் வாங்கி வரவில்லை என்று கூறி சித்ரவதை செய்தனர்.
மேலும் 15 பவுன் நகை மற்றும் ரூ. 5 லட்சத்து 50 ஆயிரம் வரதட்சணையாக வாங்கி வரும்படி கூறி என்னை கொடுமைப்படுத்தினார்கள். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அந்தப்புகார் மனுவில் கூறி இருக்கிறார்.
அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன், செல்வியின் கணவர் குமார் மற்றும் மாமியார் சரஸ்வதி, கொழுந்தனார் பிரகாஷ், கொழுந்தியாள் சத்தியபாமாவாசு, பொன்மணி, சம்பூரணம் ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
----------------------------
எந்தவித முகாந்திரமோ தொடர்போ இல்லாமல் யாரை வேண்டுமானாலும் 498A புகாரில் சேர்த்து குற்றவாளியாக்கலாம் என்பதுதான் இந்தச் சட்டத்தின் செயல்பாட்டில் இருக்கும் நிலை.
இப்படியே போனால் இந்த லிஸ்டில் செந்தழல் ரவி, டோண்டு போன்ற அப்பாவிகள் பெயர்களும் சேர்க்கப்படும் நாள் தொலைவில் இல்லை. அதற்குள் நம் அரசு இந்தப் பொல்லாங்கு சட்டத்தை துஷ்பிரயோகம் (இதற்கு நல்ல தமிழ்ச்சொல் ஒன்று பரிந்துரைத்தால் நன்றியுடையோனாயிருப்பேன்!) செய்து பொய் வழக்கு போடமுடியாத வகையில் ஏதேனும் திருத்தம் கொண்டுவந்தால் நல்லது. இல்லையெனில் சீக்கிறமே தமிழ்மணத் திரட்டி முழுதும் 498A ஒப்பாரிதான் கேட்கும்!
குறிச்சொற்கள் 498a, harassment, husbands, misuse, அராஜகம், பொய் வழக்கு, வரதட்சணை
தாயைக் கொலை செய்த தையல்!
பெற்றதாயை கொன்ற ஆசிரியை, நண்பருடன் டில்லியில் கைது
புதுடில்லி : பெற்ற தாயை திட்டமிட்டு கொலை செய்த பள்ளி ஆசிரியை, நண்பருடன் கைது செய்யப்பட்டார்.
போலீசாருக்கு இதுதான் வேலையா!
ஏற்கனவே அரசியல்வாதிகளுக்கு பாராஉஷார் செய்து நொந்து போயிருக்கும் போலீசாருக்கு இந்த சினிமாவைப் பார்த்து அதுபோல் காப்பி அடித்து காதல் பண்ணும் பெண்குலங்கள் கொடுக்கும் டார்ச்சர் தாங்க முடியவில்லை.
தினசரி இதுபோல் பள்ளிக்குச் செல்லும் பெண்கள் “காதல் பன்ணிட்டேன், பெற்றோரை ஏமாற்றி சேர்த்து வையுங்கள்” என்று கிளம்புகிறார்கள். இல்லையெனில், “உல்லாசமாக” இன்னாருடன் இருந்தேன் (யாருடன் இருந்தாளோ!), அவனை கட்டாயப் படுத்தி கட்டி வையுங்கள் என்று ஒரு பெரிய கோஷ்டி பெண்கள்.
போலீசார் பாடு பாவம் அய்யா!
கீழ்க்காணும்ச் செய்தி இதுபோல் தினந்தோரும் வெளிவரும் டசன் கணக்கான செய்திகளில் ஒரு சாம்பிள்தான்!
திருமணத்துக்கு 2-நாட்களுக்கு முன்பு காதலன் மாயம் புறநகர் கமிஷனரிடம் காதலி புகார் ஆலந்தூர், மே. 29- 2009.
திருமணம் நடைபெற 2 நாட்கள் இருந்த நிலையில் காதலன் மாயமானதால் புறநகர் போலீஸ் கமிஷனரிடம் காதலி புகார் செய்தார். சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் எஸ்.ஆர்.ஜாங்கிட்டிடம் மடிப்பாக்கத்தை சேர்ந்த ஜெயலட்சுமி என்பவர் ஒரு புகார் மனு தந்தார். அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-
காதல் சென்னையில் உள்ள கால்சென்டரில் நான் பணிபுரிகிறேன். என்னுடன் ஒன்றாக பணிபுரியும் திருச்சியை சேர்ந்த செந்தில்குமார் என்பவரை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தேன். நாங்கள் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் செந்தில்குமாரின் பெற்றோர் திருமணத்தை ஏற்கவில்லை. இதனால் செந்தில்குமார் சம்மதத்துடன் சென்னையில் 28-ந் தேதி (நேற்று) திருமணம் செய்ய முடிவு செய்து ஏற்பாடு செய்தோம். இந்த நிலையில் கடந்த 2 தினங்களாக செந்தில்குமார் பற்றி எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. அவர் தங்கியிருந்த விடுதியிலும் சென்று பார்த்தோம். செந்தில்குமார் திடீரென மாயமாகி விட்டார். திருமணத்திற்கு 2 தினங்களுக்கு முன்பு மாயமாகிவிட்ட செந்தில்குமாரை மீட்டு எங்கள் திருமணத்தை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகார் மனுவில் ஜெயலட்சுமி கூறியிருந்தார்.
இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க மடிப்பாக்கம் போலீசாருக்கு புறநகர் கமிஷனர் எஸ்.ஆர்.ஜாங்கிட் உத்தரவிட்டார். மடிப்பாக்கம் உதவி கமிஷனர் சங்கரபாண்டியன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கரிகாலன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் திருச்சிக்கு விரைந்தனர்.
அங்கு இருந்த செந்தில்குமாரின் தந்தையிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது செந்தில்குமார் திருச்சிக்கு வரவில்லை என தெரியவந்தது. இதையடுத்து `திருமண ஏற்பாடுகளை செய்ய சொல்லிவிட்டு தலைமறைவான காதலனை திருமணம் செய்ய விருப்பம் இல்லை' என புதுமணப்பெண் ஜெயலட்சுமி போலீசாரிடம் எழுதிக்கொடுத்து விட்டு சென்றார். காதலன் ஓடியதால் திருமணம் நின்று போனது.