மாமியாரைக் கொடுமைப் படுத்தும் மருமகள்

இந்திய சட்டங்களின் அடிப்படையில் “குடும்ப வன்முறை” என்பது கணவணால் மட்டும் மனைவியின்மீது செய்யப்படுவது. ஆகையால் ஒரு மனைவி ஒரு தினசரி காலண்டரைக் கிழித்து, “என்னை கணவன், அவனது பெற்றோர், சகோதரி, அவளுடைய 3 வயது குழந்தை, சகோதரியின் கண்வன், கண்வனுடைய தம்பி, அண்ணன், அடுத்த வீட்டுக்காரன், எதிர்த்த வீட்டுக்காரன் போன்ற அனைவரும் என்னைக் கொடுமை செய்தனர்” என்று கிறுக்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பினால் அவளது பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள அனைவரும் யாதொரு விசாரணையும், முகாந்திரமுமின்றி கைது செய்யப்படுவர். இதுதான் இந்திய குற்றப் பிரிவு 498A சட்டம்.

தவிர Domestic Violence Act படி கணவன்தான் வன்முறை செய்வான். மனைவி செய்தால் அது வன்முறை அல்ல.

அப்படி ஒரு மனைவி உடல் நலமில்லாத தன் கணவனையோ, அவனது வயதான தாயாரையோ அடித்துத் துன்புறுத்தினால் அந்த மனைவியின்மீது நடவடிக்கை எடுக்க எந்த சட்டமும் கிடையாது. ஆனால் அவள் அடிக்கவும் அடித்துவிட்டு, அவர்கள் மேல் பொய் புகார் கொடுத்தால் உடனே அவர்களைக் கைது செய்து விடுவார்கள். அவ்வாறு மனைவி கொடுத்த புகார் பொய் என நிருபிக்கப்பட்டால் கூட அந்த புகார் கொடுத்த மனைவிமேல் எந்த வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என குறிப்பிட்டு அந்தச் சட்டத்தில் அடிக்கோடிடப்பட்டிருக்கிறது! என்ன விந்தயான சட்டங்கள்!!

அவ்வாறு மனைவியால் துன்புறுத்தப்படும் கணவனுக்கும், அவனது பெற்றோருக்கும் என்ன கதி? எங்கு நியாயம் கிடைக்கும்? தற்போதுள்ள சட்டங்களின்படி நிச்சயமாக இந்தியாவில் கிடைக்காது! சந்தேகமிருந்தல் உங்களுக்குத் தெரிந்த கிரிமினல் வக்கீலிடம் கேட்டுத் தெளிவு பெறுங்கள்!

இப்போது இந்த அவலச் செய்தியைப் படித்துவிட்டு, திருமணம் செய்துகொள்ளப் போகும் அப்பாவி ஆண்களிடம் எடுத்துச் சொல்லுங்கள், அவர்கள் எத்தகைய புதைகுழியில் விழப்போகிறார்கள் எனப்தை!

-------------------

பணம் கேட்டு மருமகள் கணவனையும் மாமியாரையும் அடித்துக்
கொடுமைப் படுத்துகிறாள்.புறநகர் கமிஷனரிடம் மாமியார் புகார்

ஆலந்தூர், ஜுன்.16- 2009. செய்தி: 2009

சென்னையை அடுத்த அனகாபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் கங்காராம். இவருடைய மனவூவி சாந்தி (வயது 55). இவர் புறநகர் போலீஸ் கமிஷனர் எஸ்.ஆர்.ஜாங்கிட்டிடம் ஒரு புகார் மனு அளித்தார்.

அதில், ``நாங்கள் பூ வியாபாரம் செய்து வருகிறோம். எங்களது ஒரே மகன் கண்ணனுக்கு ஜீவா என்ற பெண்ணை திருமணம் செய்து கொடுத்தோம். ஜீவா அடிக்கடி பணம் கேட்டு எனது மகனை அடித்து துன்புறுத்துகிறார். இதை தட்டி கேட்டதால் எங்களை செருப்பால் அடிக்கிறார். எனவே எனது மருமகளை கண்டித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை சங்கர் நகர் போலீசார் விசாரணை செய்ய கமிஷனர் ஜாங்கிட் உத்தரவிட்டார்.

புறநகர் கமிஷனரிடம் இதுவரை மாமியார் கொடுமைப்படுத்துகிறார் என்றே புகார்கள் வந்து உள்ளன. இந்த நிலையில் மருமகள் கொடுமைப்படுத்துகிறார் என்று முதல் முறையாக புகார் தரப்பட்டுள்ளது.