கள்ளக் காதலனுடன் இணைந்து கணவனைக் கொளுத்திய காரிகை

ஆகா! இவளல்லவோ பாரதி கண்ட புதுமைப் பெண்!

பெற்றுவிட்டோமே பெண் விடுதலை!

33 சதம் என்ன, முழு ஒதுக்கீடும் இந்தப் பெண் திலகங்களுக்கே!

அய்யோ பாவம், அடங்காத வெறி, என்ன செய்வாள் பேதை! கணவன், குடும்பம், கற்பு, பண்பாடு என்று எத்தனை விலங்குகள் பெண்களுக்கு! அவள் ஆசைப்பட்டபடி உல்லாசமாக இருக்க வேண்டி கணவனைக் கொலை செய்யவேண்டியுள்ளதே. இது தகுமா?

கள்ளக் காதலுக்காக கணவனைக் கொலை செய்வது தவறல்லவே. அந்தக் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் மேல்தானே தவறு. அந்தக் குற்றத்திற்காக அவனைப் பெற்ற தாய், தந்தையரைத் தூக்கிலிட வேண்டுமல்லவா! (கணவனைத்தான் கொலை செய்தாகி விட்டதே!). இத்தகைய சட்டத்தை உடனடியாக கொண்டு வரவேண்டுமே, எங்கே பெண்ணியவாதிகள், சமூக நல ஆர்வலர்கள், 498ஏ சிறப்பு வக்கீல்கள்!

இதோ இந்தச் செய்தியைப் படியுங்கள். இது அறிஞர் டோண்டு அவர்களுக்கு சமர்ப்பணம்!

--------------------

செய்தி: தினமலர். 25 ஜூன் 2009.

திருவண்ணாமலை: ஆரணி அருகே ஊராட்சி தலைவர் கொலையில், அவரது மனைவி மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

ஆரணி அடுத்த மருசூர் ஊராட்சி தலைவர் சுந்தரமூர்த்தி; தி.மு.க.,வை சேர்ந்தவர். கடந்த 22ம் தேதி வீட்டில் தூங்கிய சுந்தரமூர்த்தி, வெடிவிபத்தில் உடல் கருகி இறந்தார்.

ஆரணி போலீசார் விசாரணை நடத்தியதில், சுந்தரமூர்த்தியின் மனைவி செந்தாமரை மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரது குடும்ப பின்னணி குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

செந்தாமரையின் அக்காவுக்கு சுந்தரமூர்த்தியை திருமணம் நிச்சயம் செய்த நிலையில், அவரது அக்கா வேறு ஒருவருடன் காதல் திருமணம் செய்து கொண்டார். அதனால் வேறு வழியின்றி, செந்தாமரைக்கும், சுந்தரமூர்த்திக்கும் திருமணம் செய்து வைத்தனர்.செந்தாமரைக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை.

திருமணமான சில நாட்களில் வேறொரு வாலிபருடன் கள்ளத்தொடர்பு வைத்துக் கொண்ட அவர், தன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார். அவரை பெற்றோர் சமாதானம் செய்து, கணவருடன் அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த மதியழகன் (27) என்ற வாலிபருடன் செந்தாமரைக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. தங்களுக்கு இடையூறாக இருந்த சுந்தரமூர்த்தியை கொலை செய்ய கள்ளக்காதலர்கள் திட்டமிட்டனர்.

கடந்த 22ம் தேதி இரவு, திருவிழாவில் வெடிக்கும் உயர்ரக வகை பட்டாசுகள், ஐந்து லிட்டர் பெட்ரோலை மதியழகன் வாங்கி வந்து செந்தாமரையிடம் கொடுத்தார்.

பட்டாசு, பெட்ரோல் கேன் ஆகியவற்றை சுந்தரமூர்த்தி படுக்கையின் கீழ் அவரது மனைவி வைத்து விட்டார். சென்னை சென்று வந்த சுந்தரமூர்த்தி, இரவு 11 மணிக்கு படுக்கைக்கு சென்றார். அதிகாலை வேளையில் அவர் அயர்ந்து தூங்கிய போது, கேனில் இருந்த பெட்ரோலை, அவரது படுக்கை அறையில் மதியழகன் ஊற்ற, செந்தாமரை தீ வைத்துள்ளார். பின் மதியழகன் அங்கிருந்து தப்பிவிட்டார்.

தீ வைத்தவுடன் பட்டாசு வெடிக்க ஆரம்பித்தது. தீ கரும்புகை மூட்டத்துடன் இருந்ததால் அறையிலிருந்து சுந்தரமூர்த்தி தப்பி வெளியே வர முடியாமல் பரிதாபமாக இறந்தது விசாரணையில் தெரிந்தது.

வெடிவெடித்ததில் அவர் இறக்கவில்லை என்பதும், பெட்ரோல் தீ விபத்தில் அவர் இறந்திருப்பது பிரேதப் பரிசோதனையிலும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து செந்தாமரையையும், மதியழகனையும் போலீசார் கைது செய்தனர்.

போலீசாரிடம் செந்தாமரை கொடுத்த வாக்குமூலத்தில், "என் கணவருடன் தாம்பத்ய வாழ்க்கையில் திருப்தி இல்லை. மதியழகனுடன் எட்டு மாதமாக கள்ளத்தொடர்பு வைத்து உல்லாசமாக இருந்தேன். இந்த சந்தோஷத்துக்கு, சுந்தரமூர்த்தி தடையாக இருப்பார் எனக் கருதி, அவரை மதியழகனுடன் சேர்ந்து கொலை செய்தேன்' என்று கூறியுள்ளார்.

-------------------------

இதையே அந்தக் கணவன் செய்திருந்தால் அதற்கு வரதட்சணைக் கொலை என்று நாமகரணம் சூட்டி அதற்கான சிறப்புச் சட்டங்களைப் பயன்படுத்தி ஏனைய குற்றவியல் சட்டங்கள் ஏதும் இதற்குப் பொருந்தாத வகையில் சாட்சியம் எதுவும் தேவையில்லை என்றும், தான் கொலை செய்யவில்லை என்று குற்றம் சாட்டப்பட்ட கணவன்தான் நிரூபிக்க வேண்டும் என்று கூறும் அடாவடி சட்டங்கள் பேரில் தூக்கிலிடப் படுவான்.

ஆனால் இந்தப் பத்தினித் தெய்வத்தைப் பாருங்கள், ஏதோ, கடையில் கம்மர்கட்டு வாங்கித் தின்பதுபோல் கணவனை வெடி வைத்து எரித்துவிட்டு சர்வ சாதாரணமாக கள்ளக் காதலனுடன் நின்று போஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறாள். (கணவனைக் கொலை செய்தவள் என்பதற்காக “ள்” விகுதி போடுவது தவறு “ர்” என்றுதான் குறிப்பிடவேண்டும் என்பார் சில அறிஞர்கள்!)

திருமணத்திற்கு மாற்று என்னென்ன என்பது பற்றி சிந்திப்போம்!

திருமணம் என்பது ஆண்களுக்கும் அவனது பெற்றோருக்கும் ஒரு பாம்புப் புற்றில் கைவிடுவது போன்றது.

9 மறுமொழிகள்:

Anonymous said...

super figure.

')) said...

இச்செய்தி குறித்த எனது பதிவு.
http://rajasabai.blogspot.com/2009/06/blog-post_25.html

')) said...

என்ன பாஸ் இது?
வாழமுடியாது போல..

epowerx said...

your anger is not justified. this society still treats women folks like objects. the very fact that you got all worked up over a news item like this and wrote this blog states that.
Agreed that the dowry act is being misused a lot. but it's misused only in the upper-middle and well to do classes. however, it's one deterrance that has worked very well in the lower, low-middle classes.
the day we all accept that women are equal to us and have every right to do the things that men do (including committing heinous crimes such as this), we won't have the need for any 33% reservation /dowry law/ etc.

')) said...

இவளுக்கெல்லாம் எதற்கு கல்யாணம்...? பெண்ணியம் காக்க பெருசா குரல்கொடுக்கும் மாதர் சங்கங்கள் இதற்கு என்ன பதில் சொல்லபோரங்க...?

')) said...

அட நீங்க வேற இந்த மாதிரி கேசுங்க எல்லாம் சேட்டொட ஆட்டோ மாதிரி... லைசன்சு சேட்டு பேர்ல ஆனா ஆட்டோ ஒட்றது பாட்ஷா... இத எதுத்துக்கேட்டா அப்புறம் வழக்கம் போல டவுரி கேசுதான் அதாங்க 498ஏ....

')) said...

கொஞ்சமும் சிந்திக்க தெரியாமல் இருக்கும் ஒரு சமுதாயத்தின் நிகழ்வு , அதற்கேற்ற பதிவு,

அந்த பெண், தனக்கு பிடிக்காத ஆணை விவாகரத்து செய்து விட்டு, பிடித்தவருடன் வாழ அந்த ஊரும், உலகமும் ஒப்புக்கொண்டு இருக்குமா? நிச்சயம் கிடையாது. கொலை செய்து மாட்டிக்கொண்டால் தண்டனை என்று அறிந்தே அத்தனை பெரிய காரியத்தில் மாட்டிகொள்கிறார்களே இம்மாதிரியான மக்கள் ஏன் விவாகரத்தை நினைத்து பார்ப்பதில்லை என்பதை சிந்தியுங்கள்.

கடுமையான பாலியல் வறட்சியே தமிழ் சமுதாயத்தில் இவ்வாறான குற்றங்கள் நிகழ காரணங்கள், ஒரு பக்கம், மிக ஆபாசமான திரைப்படங்கள், மறுபக்கம் மிகக்கடுமையான பாலியல் வறட்சி, இன்னும் பல நூறு கொலைகள் காத்திருக்கின்றன. நன்றாக பதிவிடலாம், கற்பனையிலேயே வாழலாம் .. Enjoy...

')) said...

//அந்த பெண், தனக்கு பிடிக்காத ஆணை விவாகரத்து செய்து விட்டு, பிடித்தவருடன் வாழ அந்த ஊரும், உலகமும் ஒப்புக்கொண்டு இருக்குமா? நிச்சயம் கிடையாது. கொலை செய்து மாட்டிக்கொண்டால் தண்டனை என்று அறிந்தே அத்தனை பெரிய காரியத்தில் மாட்டிகொள்கிறார்களே இம்மாதிரியான மக்கள் ஏன் விவாகரத்தை நினைத்து பார்ப்பதில்லை என்பதை சிந்தியுங்கள்.//

நம்ம ஊர் நீதிமன்றங்களில் போய் பாருங்கள் விவாகரத்துக்காக எத்தனை பேர் நீதிமன்றங்களில் என்ன பாடு பட்டுக் கொண்டிருக்கிறhர்களென்று தெரியும். விவாகரத்து வேண்டும் என்பதற்காக எத்தனை கணவர்கள் இது போன்று மனைவியை கொலைசெய்திருக்கிறhர்கள்?

இந்த "அப்பாவிப் பெண்" கணவணை வாணவேடிக்கையுடன் அனுப்பிவைத்திருக்கிறhள். அதற்காக இந்த காரிகைக்கு சிலை வைக்க பெண்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரகம் கண்ணகி சிலையருகே இடம் பார்த்துக்கொண்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

')) said...

//விவாகரத்து வேண்டும் என்பதற்காக எத்தனை கணவர்கள் இது போன்று மனைவியை கொலைசெய்திருக்கிறhர்கள்?//

அடடே அவ்வளவு நல்லவர்களா நமது ஆண்கள் .. நம்பவே முடியலையே.

அய்யா, இங்கே பிரச்சினை ஆண் பெண் இல்லை, பெண்களே இவ்வளவு செய்யும்பொழுது ஆண்கள் செய்யாமல் இருப்பார்களா, நிச்சயம் செய்வார்கள், பெண்கள் நல்லவர்கள் என்று நான் வாதாடவும் வரவில்லை, என்னை பொறுத்தவரை மனிதமனம் பெண்ணுக்கும் ஆணுக்கும் ஒரே மாதிரிதான் வேலை செய்யும்.

இங்கே புரிய வேண்டிய பிரச்சினையே வேறு , பிரச்சினையின் வேரை புரிந்து கொள்ளாமல் , மேலேயே விவாதித்து கொண்டு இருக்கின்றோம் என தோன்றுகிறது, மேலை நாடுகளில் இம்மாதிரியான கொலைகள் (கள்ளகாதல் கொலைகள்) மிக மிக அரிது, அதற்க்கு காரணம், அங்கே இருக்கும் சுதந்திரம் , அங்கே இம்மாதிரியான extra marital affair தோன்றினால் , உடனே நடப்பது விவாகரத்து , இங்கே அதை பண்பாடு கலாச்சாரம் என்று பொத்தி வைப்பதால், அந்த பாலியல் அழுத்தம் கொலையாக முடிகிறது.மீண்டும் கேட்கிறேன் இம்மாதிரியான கொலை செய்யும் பெண்கள் ஏன் விவாகரத்தை யோசித்து பார்ப்பதில்லை?

தமிழகம் போன்று ஒரு கடுமையான பாலியல் வறட்சி (இந்த பதமே நிறைய பேருக்கு புதுசு) நிலவும் நிலத்தில் இவை எதிர்பார்க்க கூடியதே , ஆனால் இதனை திறந்த மனதுடன் அறிவியல் பூர்வமாக, மனோத்தத்துவ முறையில் யோசிக்கும் நேர்மை தைரியம் பெரும்பாலான மக்களுக்கு இல்லை , உங்களையும் சேர்த்து.

சற்றே நினைத்து பாருங்கள், கணவனை / மனைவியை பிடிக்காமல் அவர்களுடன் கடனே என்று வாழ்ந்து வருபவர் எத்தனை லட்சம் பேர்? இதில்

- கணவனோ அல்லது மனைவியோ உடல் அல்லது மன ரீதியான வன்முறையில் இறங்கினால்

அல்லது

-கணவன் அல்லது மனைவி இந்த வாழ்க்கை வேண்டாம், நான் பிடித்தவருடன் வாழப்போகிறேன் என்று தைரியமாக முடிவெடுத்தால்

அல்லது

-வரதட்சினை போன்ற பொருளாதார காரணங்களுக்காக

மட்டுமே விஷயம் கோர்ட்டிற்கு வருகிறது.

இங்கே நான் பாலியல் வறட்சியை , தமிழ் சினிமா என்னும் ஆபாச களஞ்சியத்துடன் அதனை தினம் தினம் வீட்டில் வரவேற்பறையில் பார்க்கும் கலாச்சாரத்துடன் சேர்த்து பார்க்க வேண்டும்.