முதலில் இந்தச் செய்தியை முழுதும் வாசியுங்கள்!
---------------------------
ஈரோடு, ஜுலை.16- 2009. செய்தி - தினத்தந்தி
செக்ஸ் கொடுமை செய்யும் கணவரின் அண்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கிராம மக்களுடன் வந்த பட்டதாரிப்பெண், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவிடம் புகார் செய்தார்.
ஈரோடு நாதகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் சத்தியப்பிரியா (வயது 24). எம்.எஸ்சி. பட்டதாரி. இவர் தனது பெற்றோர் சந்திரசேகர்-வளர்மதி, எம்.எஸ்.மங்கலம் பஞ்சாயத்து தலைவர் குமரேசன் மற்றும் கிராம மக்கள் நூற்றுக்கணக்கானவர்களுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு புகார் கொடுக்க வந்தார். இதனால் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு பரபரப்பான சூழ்நிலை உருவானது. இதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு அவிநாஷ்குமாரை நேரில் சந்தித்து புகார் மனுவை கொடுக்க சத்தியப்பிரியாவுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
அதன்பின்னர் அவர் போலீஸ் சூப்பிரண்டை நேரில் சந்தித்து புகார் மனு கொடுத்தார்.
புகார் மனு குறித்து சத்தியப்பிரியா நிருபர்களிடம் கண்ணீர் மல்க கூறியதாவது (கண்ணீர் பெண்களுக்கு ஒரு கைவந்த கலை; அது ஒரு சிறந்த ஆயுதம். அதை வைத்து யாரை வேண்டுமானாலும் வீழ்த்தலாம்!):-
எனது சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் நாதகவுண்டன்பாளையம். எனக்கும் முள்ளாம்பரப்பு வீரப்பம்பாளையத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் மகேஷ் (32) என்பவருக்கும் கடந்த 25-5-2008 அன்று திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது 50 பவுன் நகையும், ரூ.50 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்பட்டது.
கணவர் மகேஷ், மாமனார் ஆறுமுகம், மாமியார் தமிழரசி மற்றும் கணவரின் அண்ணன் தியாகு என்கிற தியாகராஜன் (37) ஆகியோருடன் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்தேன். தியாகராஜனுக்கு திருமணம் முடிந்து 2 குழந்தைகள் உள்ளனர். கணவர் வீட்டார் அனைவருமே சாக்கு வியாபாரம் செய்து வருகிறார்கள்.
என் கணவர் எப்போதும் தனது தாயார், அண்ணன் பேச்சை கேட்டுத்தான் நடப்பார். தாயார் இருக்கும்போது என்னிடம் அவர் சரியாக கூட பேசமாட்டார். திருமணம் ஆன முதல் 4 மாதங்கள்தான் அவருடன் சந்தோசமாக குடும்பம் நடத்தினேன். இந்த நிலையில் நான் கருவுற்றேன். அந்த சந்தோஷம் நிலைப்பதற்குள் எதிர்பாராதவிதமாக கரு கலைந்து விட்டது.
இதற்கிடையில் தியாகராஜன் என்னிடம் தவறாக நடக்க முயன்றார். அடிக்கடி செக்ஸ் கொடுமை செய்தார். இது குறித்து என் கணவரிடம் கூறினேன். ஆனால் அவர் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. கூட்டுக்குடும்பம் என்றால் அப்படி, இப்படி இருக்கத்தான் செய்யும் என்றார்.
பின்னர் தனியாக தொழில் தொடங்க வேண்டும். உன் தந்தையிடம் சென்று ரூ.1 லட்சம் வாங்கி வா என்று கட்டாயப்படுத்தினார். நானும் என் தந்தையிடம் கேட்டேன். ஆனால் அவ்வளவு பணம் கொடுக்க வசதி இல்லை என்று என் தந்தை கூறிவிட்டார். மேலும் எங்களுக்கு செட்டிப்பாளையத்தில் சொந்தமாக உள்ள ரூ.25 லட்சம் மதிப்பிலான காலி இடத்தை தன் பெயரில் எழுதி தரும்படி கேட்டு அடித்து சித்ரவதை செய்தார்.
கணவரின் வீட்டாரும், அந்த நிலத்தை எழுதி வாங்கி வந்தால்தான் அவருடன் சேர்ந்து குடும்பம் நடத்த விடுவோம். இல்லை என்றால் உன் பெற்றோர் வீட்டுக்கே துரத்தி விடுவோம் என்று மிரட்டினார். கணவரும் அடிக்கடி பணம் வாங்கி வா, அல்லது நிலத்தை எழுதி வாங்கி வா என்று கொடுமைப்படுத்தினார்.
அதன்பின்னர் எனது நகைகளை பிடுங்கிக்கொண்டு, வீட்டை விட்டு விரட்டிவிட்டனர். இனிமேலும் இவருடன் வாழ முடியாது என்று முடிவு செய்து என் பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டேன். எனது நிலை குறித்து பெற்றோரிடம் கூறினேன்.
அதைத்தொடர்ந்து ஊர் பஞ்சாயத்து தலைவர் குமரேசன் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. என் கணவர் மகேஷை அழைத்து பேசினார்கள். அவரிடம் ஊர்க்காரர்கள் பலரும் பேசினார்கள்.
அதைத்தொடர்ந்து, ஆவணி மாதம் வந்து என்னை அழைத்து செல்வதாக உறுதி அளித்துச்சென்றார். ஆனால் அதற்குள் விவாகரத்து நோட்டீசு அனுப்பி விட்டார்.
இதனால் நானும் என் குடும்பத்தாரும் அதிர்ச்சி அடைந்தோம். இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவிடம் புகார் மனு ஒன்றை கொடுத்து இருக்கிறேன். அதில் எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும். வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்த என் கணவர், மாமனார், மாமியார், கணவரின் அண்ணன் தியாகராஜன் ஆகியோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அவரும், என் கணவரையும், அவரது குடும்பத்தையும் அழைத்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
என் கணவர் மட்டும் என்னுடன் தனியாக குடும்பம் நடத்த வந்தால் அவரை என்னால் திருத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு சத்தியப்பியா கூறினார்.
இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவிடம் கேட்டபோது, சத்தியப்பிரிவின் புகார் மனுவை ஈரோடு அனைத்து மகளிர்போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி இருக்கிறேன். சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவர், மாமனார், மாமியாரை அழைத்து வந்து டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு முன்னிலையில் விசாரணை நடத்த உத்தரவிட்டு இருக்கிறேன். அதன்பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
------------
முன்னுக்குப்பின் முரணான புகார்கள். கடைசியில் விஷயம் என்னவென்றால், 498ஏ சட்டத்தைக் கையிலெடுத்து பயமுறுத்தி கூட்டுக் குடும்பத்திலிருந்து கணவனைப் பிரித்து தனிக்குடுத்தனத்திற்கு வரவேண்டும்; அங்கு தன் ஆட்சி நடக்கவேண்டும். இதற்காக எந்தவித செக்ஸ் கொடுமைப் புகாரையும் ஜோடனை செய்து பதிவு செய்ய இக்காலப் பெண்கள் தயார்.
இதெல்லாம் என்ன ஜுஜிபி!
3 மாதக் குழந்தையும், 3 வயதுப் பையனும் வரதட்சணைக் கொடுமை செய்தனர், தன் கையையே தூக்க சக்தியில்லாத 80 வயது மாமனார் என் கையைப் பிடித்து இழுத்தார் என்றெல்லாம் பொய் வழக்கு போட்டு, யாதொரு விசாரணையுமின்றி மேலும் இது இயற்கைக்கு முரணாக, சாத்தியமில்லாத புகாராக இருக்கிறதே என்ற சிந்தனை கூட இல்லாமல் அவர்கள் கைது செய்யப்பட்ட நிகழ்வுகள் அநேகம்.
Sec 498A of IPC நம் நாட்டிற்கு பெண்ணிய வியாதிகள் அளித்துள்ள வரப்பிரசாதம். இதை கையிலெடுத்துக் கொண்டு கீழ்த்தரமான புத்தி கொண்ட மனைவிமார்களும் அவர்களுடன் கூட்டுச் சேர்ந்து சில கெடுமதி வக்கீல்களும் அடிக்கிறார்கள் பகல் கொள்ளை (Every 498A case ends in outright extortion). இதை “சட்டபூர்வமான பயங்கரவாதம்” (Legal terrorism) என்று வர்ணித்திருக்கிறார் ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி. என்ன சொன்னால் என்ன, தினந்தோரும் பல அப்பாவிகள் இந்தக் கொடுங்கோன்மைச் சட்டத்திற்கு தொடர்ந்து பலியாகி வருகின்றனர் என்பதுதான் நிதர்சனம்.
ஆகையால் இந்திய ஆண்கள் இத்தகைய 498A of IPC மற்றும் (வன்முறை என்பது ஆண்தான் செய்வான், பெண் வன்முறையே செய்யமாட்டள் என்று வரையறுத்திருக்கும்) குடும்ப வன்முறைச் சட்டங்கள் திருத்தப்படும் வரை அல்லது நீக்கப்படும் வரை திருமணம் என்னும் புதைகுழியில் விழாமல் இருத்தல் நலம் - அவர்களுக்கும் அவர்தம் பெற்றோருக்கும்!
498A கூட செக்ஸ் கொடுமையும் சேர்த்துப் போடுவோம்!
குறிச்சொற்கள் 498a, advocates, divorce, harassment, husbands, law, misuse, அராஜகம், ஆண்பாவம், கள்ளக்காதல், பொய் வழக்கு
Subscribe to:
Post Comments (Atom)
3 மறுமொழிகள்:
//என் கணவர் எப்போதும் தனது தாயார், அண்ணன் பேச்சை கேட்டுத்தான் நடப்பார். தாயார் இருக்கும்போது என்னிடம் அவர் சரியாக கூட பேசமாட்டார். திருமணம் ஆன முதல் 4 மாதங்கள்தான் அவருடன் சந்தோசமாக குடும்பம் நடத்தினேன். இந்த நிலையில் நான் கருவுற்றேன்.//
இந்த "அபலைப் பெண்" கருவுற்றதற்கு அவருடைய கணவர் தனது தாயார் மற்றும் அண்ணிடமிருந்து அனுமதி பெற்று தான் வழிமுறைகளைப் பின்பற்றினாரா என்று போலிஸ் அந்த "அபலையிடம்" விசாரணை செய்ய வேண்டும்.
//எப்போதும் தனது தாயார், அண்ணன் பேச்சை கேட்டுத்தான் நடப்பார்.//
//திருமணம் ஆன முதல் 4 மாதங்கள்தான் அவருடன் சந்தோசமாக குடும்பம் நடத்தினேன்.//
அப்படியிருந்தும் முதல் 4 மாதங்கள் சந்தோசமாக இருந்து விட்டார். என்ன ஆச்சரியம்!!!!!!!!!!
அடத்தே--- அருமையாண xxx கதை. என்ன இருந்தாலூம் என்னோட 498ஏ டார்லிங் போட்ட இந்தியாவின் நம்பர் 1 வக்கிர வரசதட்சணை கொடுமை fir யை beat செய்ய முடியாது!. இதைப்படித்துப்பார்க புண்ணியம் செய்த நண்பர்கள் மின்அஞ்சல் செய்யவும் "tamizhsaran at yahoo dot com"
விட்டுப்போ போறியே ஆத்தா!
இதோ ஒரு வீர தீர இளைஞரின் விவாகரத்து வழக்கு! மாட்னார்டி தாத்தா இன்னும் கொஞ்ச நாட்களில் இவர்மீது 498ஏ என்னும் பொய்கேசு போட்டு சுடுகாடு போறவறைக்கும் பெயிலு முன்ஐாமின்னு தாத்தாவை ஒரு வழி ஆக்கிவிடும் பாட்டி
இந்த செய்தியைப் படியுங்கள்...
மனைவி கொடுமை: 89 வயது தாத்தா விவாகரத்து மனு
http://www.dinamalar.com/kutramnewsdetail.asp?News_id=3493
உங்கள் கருத்தைத் தெரிவிக்க