முறை தவறிய காதலை மறைக்க மாணவி நடத்திய நாடகம்

ஜூலை 28,2009. செய்தி: தினமலர்

கோவை: பெரியப்பா மகனுடனான தவறான உறவை மறைக்க, பிளஸ் 2 மாணவி கடத்தல் நாடகமாடியது அம்பலமானது.

சேலம் மாவட்டம், மொரப்பூரைச் சேர்ந்த ஜவுளி வியாபாரியின் 17 வயது மகள், கோவை, காந்திபுரத்தில் உறவினர் வீட்டில் தங்கி, சாய் பாபா காலனியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். கடந்த 24ம் தேதி பள்ளிக்கு சென்ற இவர், தலைமை ஆசிரியரிடம் திடுக் புகார் தெரிவித்தார். "நான் பள்ளி அருகே நடந்து வந்த போது, காரில் வந்த நான்கு பேர் கடத்திச் சென்று மானபங்கம் செய்தனர். பின்னர், கையில் கடிதத்தை திணித்துவிட்டு, மீண்டும் பள்ளி அருகே தள்ளிவிட்டு தப்பிவிட்டனர்' என தெரிவித்திருந்தார்.

அக்கடிதத்தில், ஆபாச வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் நடந்ததாகக் கூறப்பட்ட கடத்தல் சம்பவம், பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் போலீசார் மத்தியில் பரபரப்பு ஏற்படுத்தியது.

விசாரணையில் திருப்பம்:

சம்பவம் குறித்து அந்த மாணவி முன்னுக்குப் பின் முரணான தகவலை தெரிவித்ததால் போலீசார் குழப்பமடைந்தனர். உண்மை கண்டறிய மாநகர போலீஸ் துணைக் கமிஷனர் காமினி, இன்ஸ்பெக்டர் நேரு தலைமையில் தனி குழு அமைக்கப்பட்டது.
சம்பவம் நடப்பதற்கு முன் மாணவியுடன் மொபைல் போனில் பேசியதாகக் கூறப்பட்ட, மேட்டூரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.அவருக்கு தொடர்பில்லை என தெரிந்ததும் விடுவிக்கப்பட்டார்.

மாணவி மீது சந்தேகமடைந்த போலீசார், அவரது பள்ளி நோட்டு புத்தகங்களை கைப்பற்றி பார்வையிட்டனர். அதில், பல்வேறு விதமான மிரட்டல் கடிதங்கள், மாணவியின் கைப்பட எழுதப்பட்டிருந்தன. இது குறித்து விசாரித்த போது, கடத்தல் நாடகமாடியது அம்பலமானது.

போலீசாரிடம் மாணவி அளித்த வாக்குமூலம்:

எனது பெற்றோர், குடும்பப் பிரச்னை காரணமாக பிரிந்துவிட்டனர். படிக்க வசதியில்லாமல் அவதிப்பட்ட என்னை, காந்திபுரத்தில் வசிக்கும் பெரியப்பா அழைத்து வந்து படிக்க வைக்கிறார். அவ்வீட்டில் தங்கியிருந்த போது அவரது மகன் அருண்குமாருடன் பழக்கம் ஏற்பட்டது; இருவரும் எல்லை மீறி நடந்து கொண்டோம். படிப்பில் ஆர்வம் குறைந்த நிலையில் தேர்வும் வந்தது. தேர்வில் பங்கேற்காமல் தவிர்க்க, நானும் அருண்குமாரும் கடத்தல் நாடகமாடினோம்.

போலீசாரையும், உறவினர்களையும் நம்ப வைக்க, கடத்தல்காரர்கள் எழுதியது போன்று போலி கடிதங்களையும் தயார் செய்து, அதில் ஒரு கடிதத்தை எடுத்துச் சென்றேன். நான் கடத்தப்பட்டு மானபங்கம் செய்யப்பட்டதாக, தலைமை ஆசிரியரிடம் கூறி அழுதேன். எனினும், போலீஸ் விசாரணையின் போது, பதிலளித்து தப்ப முடியாமல் சிக்கிக்கொண்டேன்.

இவ்வாறு மாணவி தெரிவித்தார்.

இதையடுத்து, அருண்குமார்(20) மீது இந்திய தண்டனைச் சட்டம் 376 (கற்பழிப்பு) வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இவர், டிப்ளமோ முடித்து, தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.

வழக்கின் விசாரணை அதிகாரி, இன்ஸ்பெக்டர் நேரு கூறியதாவது: பிளஸ் 2 மாணவி, தவறான உறவை மறைக்கவும், தேர்வில் பங்கேற்காமல் தவிர்க்கவும் கடத்தல் நாடகமாடி எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். சந்தேக நபர்களை ஒவ்வொருவராக அழைத்து காண்பித்த போதிலும், "இவன், அவனல்ல' என்றே பதிலளித்தார். எங்களுக்கு சந்தேகம் வலுக்கவே, நோட்டு புத்தகங்களை பார்வையிட்டோம்; நாடகம் அம்பலமானது. இவ்வாறு நேரு தெரிவித்தார்.

========================

உங்கள் சிந்தனைக்கு:-

இந்த அநியாயத்தைப் பாருங்கள். நடத்தை கெட்டு அண்ணனுடன் ஜல்சா செய்தவள் பெண். கடத்தல் பொய் நாடகமாடியது பெண். ஆனால் கைது செய்யப்பட்டது மட்டும் ஆண்! வேலிமேல் வேட்டி விழுந்தலும் வேலி வேட்டி மேல் விழுந்தாலும் கிழிந்து கந்தலாவது வேட்டி மட்டும்தான். இதுதான் இந்த சமூகத்தின் ஆணெதிர்ப்புச் சட்டங்களின் நடைமுறை!

ஆமாம், "கற்பழிப்பு" என்றால் என்ன? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்!!

11 மறுமொழிகள்:

')) said...

மிகவும் வித்தியாசமான, வழக்கமான பாணியிலிருந்து மாறுபட்ட ஒரு வலைப்பதிவு. உள்ளடக்கமும் பிறர் சொல்லத் தயங்குபவற்றை பொட்டில் தெறித்தாற்போலச் சொல்லுகிற துணிச்சலையும் கொண்டிருக்கிறது. நாணயத்துக்கு எப்போதும் இன்னொரு பக்கமுண்டு என்று தெரிந்தும் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறவர்களைப் பற்றிக் கவலைப்படாமல், நிஜங்களைத் தோலுரிக்கிற உங்களது முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்.

தமிழன் வேணு

')) said...

\\ஆமாம், "கற்பழிப்பு" என்றால் என்ன? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்!!\\’கற்பழிப்பு’ என தினமலர் தலைப்பு கொடுத்திருந்தது.

படித்து நொந்து போனேன்.

இஷ்டப்பட்டு போனா அது கற்பழிப்பா??

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

')) said...

பெண்ணின் சம்மதத்துடன் நடந்த உறவு கற்பழிப்பது ஆகாது என்று நீதிமன்றமே தீர்ப்பு கூறியிருக்கிறது.. காவல் துறைக்கு அதெல்லாம் எங்கே தெரியப்போகிறது... ஆண் வர்க்கம் தான் முட்டாள்களாகிவிட்டோம்

')) said...

வாழ்த்துக்கூறியுள்ள தமிழன் வேணுவுக்கும் மற்றும் மறுமொழியிட்ட அனைவருக்கும் மிக்க நன்றி.

விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் இசைவுடன் கூடிய மணவாழ்வும் இனிமேல் காணக் கிடைக்காத அரிய பொருளாகிவிடும் சூழ்நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது.

"இம்" என்றால் சிறைவாசம் என்பது கொடுங்கோன்மை அரசுகளைக் குறிப்பிடும் சொல்லாட்சி. அதுபோல் இன்றைய நிலையில் கணவனோ, அவனது பெற்றோரோ உறவினரோ முகத்தைத் திருப்பினால் கூட உடனே மனைவி 498A பொய்க் கேசு போடும் சூழ்நிலை இருக்கிறது. ஏனெனில் அதற்குச் சட்டத்தில் அதற்கு மிகவும் சுலபமான இடமிருக்கிறது. எந்த சாட்சியமும் தேவையில்லை. எவ்வித விசாரணையுமில்லாமல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் புகார் கொடுத்தவுடனேயே கைதாகிறார்கள். வேறென்ன வேண்டும் ஒரு கோப வெறியுடன் கூடிய பெண்ணிற்கு! "Hell hath no fury like a woman scorned".

முதலில் அந்தப் பெண்ணின் ஈகோ திருப்திக்காக 498A கேசு போடப்படுகிறது. போலீஸ், கேசு, கைது, கோர்ட்டு என்று போனபிறகு மீண்டும் சேர்ந்து வாழ்வது என்பது இயலாது. அதன் பிறகு வக்கீல்களின் உபதேசத்தின் பேரில் பெரும் பணத்தை பிணையாக பிடுங்கிக்கொண்டு (extortion) கேசை quash மூலம் விலக்கிக் கொள்கிறார்கள். பிறகு கணவன், மனைவி இருவரின் ஒப்புமையுடன் (mutual consent) விவாகரத்து அடைகிறார்கள்.

98 சதம் 498A கேசுகள் இப்படித்தான் முடிகின்றன.

இதற்கிடையில் கணவனும் அவனுடைய பெற்றோர், சகோதரி, அவருடைய 3 வயதுக் குழந்தை ஆகியோரும் கைதாகி சிறையில் அடைக்கப்படுகிறார்கள். வயதான பெற்றோர்களில், மகனைப் பெற்ற பாவத்திற்காக சிறைக்குப்போன சிறுமையும் அவமானமும் தாங்காமல் தற்கொலை செய்துகொண்டவர்களும், மாரடைப்பால் காலமானவர்களும் அநேகம்.

பாதிக்கப்பட ஒரு நபரைச் சந்தித்து அவருடைய சோகக் கதையை கேட்டால் எந்த நடுநிலைச் சிந்தனையாளரும் இனிமேல் ஆண்களுக்குத் திருமணம் எனபதே வேண்டாம் என்று அறுதியிட்டுக் கூறிவிடுவார்கள்.

The situation is pretty serious.

சீக்கிரமே ஆன்களைப் பெற்ற தாய்மார்களும் அண்களின் சகோதரிகளும் வீதிக்கு வந்து போராடப் போகிறார்கள். இப்போதே Forgotten Women Association என்னும் அமைப்பை உருவாக்கியுள்ளார்கள். சீக்கிரமே சென்னையில் இதுபோன்ற மகளிர் தர்ணா ஒன்று இந்தச் சட்டத்தை எதிர்த்து நடக்கப்போகிறது.

')) said...

ஐந்து நிமிட சுகத்திற்காக பெற்ற பிள்ளையை அடித்துக்கொன்ற பத்தினித்தாய்... பாவம் 498ஏ என்னும் வரதட்சணை கொடுமை சட்டத்தை பற்றி விளிப்புணர்வு இல்லாத் பெண்குல விளக்கு... இவருடைய குழந்தைையும் வரதட்சணை கேட்டுத்துண்புறுத்துவதாக வெள்ளைத்தாளில் எழுதி மகளில் காவல் நிலையத்தில் கொடுத்திருந்தால் அந்த இரண்டு வயது குழந்தையையும் கைது செய்திருப்பார்கள் இவர் சந்தோசமாக ஜல்சாவில் ஈடுபட்டிருக்கலாம். பாவம் இந்த அபலை பெண் இவருக்கு மும்பையில் 2 மாத குழந்தைக்கு முன்ஜாமின் கொடுத்த கதை தெரியாது போல....

இரண்டு வயது குழந்தையை கள்ளக்காதலனுடன் சேர்ந்து அடித்துக் கொன்ற பெண் கைது

http://www.dinamalar.com/sambavamnewsdetail.asp?News_id=11787

Anonymous said...

what is the connection between this news and 498a ?

')) said...

//what is the connection between this news and 498a ?//

இது டோண்டுவின் வேலை. அவர் சிந்திக்கும் திறனையே இழந்துவிட்டார் என நினைக்கத் தோன்றுகிறது. இதுபோல் அனானி கமெண்டுகளையும், பொய்ப் பெயர்களில் "பின்னூட்டங்"களையும், "கேள்வியும் நானே, பதிலும் நானே" என்றும் எதையாவது எழுதி கிலுகிலுப்பை காட்டிக் கொண்டிருக்கிறார், பாவம்!

Anonymous said...

if u list the erroneous male related news in daily papers, that list will be bigger than your blog.

for u everything is related to 498?

WRONG AND CONFUSED VIEWS

-Reena

')) said...

//if u list the erroneous male related news in daily papers, that list will be bigger than your blog.
//

But no law avers that males are incapable of committing crimes, like what they do with regard to women!

There are umpteen gender-biased laws in this country which expressly hold that all crimes are committed only by males and women will not commit any violence. It is because of this anti-male bias that we have to highlight that there are enough criminals amongst women who commit even more heinous crimes than males. It is not to deny that males too commit them.

Hope you can understand it clearly.

So instead of putting anonymous comments here without understanding the meaning and purport of what is being written, go and write to the law makers and judges and feminists that all such laws must be made gender-neutral.

//for u everything is related to 498?
//

498A Law symbolizes the evil which comes in different set of laws and mindset of the players.

I think you are senile and devoid of cognitive capability.

You must be the fossil which is totally obsessed with blog comments and which spews anonymous comments all round.

')) said...

//for u everything is related to 498?//

Yes. Everything related to 498A and Dowry harassment. This is how government, police, judiciary and most of the people in the country think.

If a woman file a dowry complaint, almost all the family members including infants are roped for no reason. Even the lady lived with her husband separately far far away from husband's family members. No connection at all to those family members.

No body raise this question - how these people are related to 498A case?

Watch this video news: How this 2 months old infant related to 498A/Dowry Case? Who will give answer?

http://ibnlive.in.com/videos/95365/stepmom-names-twomonthold-in-dowry-fir.html

Now answer for you: This kind of blogs provoke people like you to think about the danger of 498A and make you to ask this question - How 498A is related to this?

If you really understand the concept of 498A and how it has been misused these days - you will know the answer for your question without anybody's explanation.

Hope you will find answer very soon.