கண்டவனோடு ஓடுவதற்கு வழி காட்டிய நல்லாசிரியை

கணவர்களுடன் வாழப்பிடிக்காததால் ஆசிரியை-மாணவி தப்பி ஓட்டம். சென்னை சென்று வேறு நபர்களை திருமணம் செய்தது அம்பலம்

அந்தியூர், ஜுலை.9- 2009. செய்தி: தினத்தந்தி

பெற்றோர்கள் பார்த்து திருமணம் செய்து வைத்த மாப்பிள்ளைகளுடன் வாழப்பிடிக்காததால், அந்தியூரைச் சேர்ந்த ஆசிரியை மற்றும் மாணவி, சென்னைக்குச் சென்று தங்களுக்கு பிடித்தமானவர்களை திருமணம் செய்து கொண்ட விவரம் அவர்களை போலீசார் மீட்டபோது தெரியவந்தது.

இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவுட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் மருப்பூரான். லாரி டிரைவர். இவரது மனைவி சரஸ்வதி (வயது 27). படிப்பை பாதியில் விட்டவர்களுக்காக அந்தியூர் அருகே நகலூர் முனியப்பன்பாளையத்தில் செயல்படும் அன்னை இந்திரா பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.

இதுபோல் அந்தியூர் பெருமாள்பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன். விவசாயி. இவரது மனைவி கவிதா (17). இவரும் அதே இந்திரா பள்ளிக்கூடத்தில் படித்து வந்தார். இதனால் ஆசிரியை சரஸ்வதியும், மாணவி கவிதாவும் தோழிகள்போல் பழகி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 23-5-09 அன்று பள்ளிக்கூடம் சென்ற சரஸ்வதியும், கவிதாவும் மாலையில் வீடு திரும்பவில்லை. இதனால் 2 பெண்களின் வீட்டாரும் அக்கம்பக்கத்தில் உள்ள வீடுகளிலும், உறவினர்களின் வீடுகளிலும் தேடிப்பார்த்தனர். ஆனால் அவர்கள் எங்கே சென்றார்கள் என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

இதைத்தொடர்ந்து சரஸ்வதியைக் காணவில்லை என்று அவரது கணவர் மருப்பூரான் அந்தியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். மாணவி கவிதாவைக் காணவில்லை என்றும் போலீசில் புகார் செய்யப்பட்டது.

அதன்பேரில், பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் உத்தரவின் பேரில் சித்தோடு சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலும், பவானி சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலும் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவர்கள் ஆசிரியை சரஸ்வதியையும், கவிதாவையும் தேடி வந்தார்கள்.

இதுபற்றி அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று சரஸ்வதி சென்னையிலும், கவிதா திருவாரூரிலும் தனிப்படை போலீசாரிடம் சிக்கினார்கள்.

"மிஸ்டுகாலால்'' வந்த பழக்கம்

இதைத்தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டு உடனடியாக பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டனர். அவர்களிடம் பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் தீவிர விசாரணை நடத்தினார்.

சரஸ்வதிக்கும், மருப்பூரானுக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதனால் கணவன்-மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த நிலையில் சரஸ்வதிக்கு அவரது செல்போனில் ஒரு "மிஸ்டுகால்" வந்தது. சென்னையை சேர்ந்த பாலாஜி என்பவர் அந்த மிஸ்டு காலில் பேசியிருக்கிறார். இதன்பின்னர் அவர்கள் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி பழகிக்கொண்டனர். ஒருவரையொருவர் பார்க்காமலேயே காதல்மொழி பேசி தங்களது காதலை வளர்த்துக்கொண்டனர்.

கணவனை பிடிக்கவில்லை

இதுபோல் மாணவி கவிதாவும் ஏற்கனவே வேறு ஒருவரை காதலித்து திருமணம் செய்தவர். இதை அறிந்த அவரது பெற்றோர்கள் காதலனிடம் இருந்து கவிதாவை பிரித்து வந்து முருகேசனுக்கு திருமணம் செய்து வைத்தனர். இதனால் அவர்களும் தங்களுக்குள் பிரியம் இல்லாமல் இருந்தனர்.
இதுபற்றி சரஸ்வதியும், கவிதாவும் அடிக்கடி பேசி வந்தனர்.

இதில் தங்களுக்கு பிடிக்காத கணவர்களுடன் ஏன் வாழவேண்டும் என்று அவர்கள் இருவரும் முடிவு செய்தனர். அப்போது சரஸ்வதி, தனக்கு சென்னையில் பாலாஜி என்ற காதலர் இருக்கிறார், நாம் இருவரும் சென்னை செல்வோம். நான், பாலாஜியை திருமணம் செய்துகொள்கிறேன். உனக்கும் பாலாஜி மூலமாக வேறு ஒரு நல்ல பிடித்தமான வாலிபரை தேர்ந்தெடுத்து திருமணம் செய்துவைக்கிறேன் என்று கவிதாவிடம் கூறினார்.

இதை கவிதாவும் ஏற்றுக்கொண்டார். அதன்படி கடந்த 23-5-09 அன்று வழக்கம்போல் பள்ளிக்கூடம் செல்வதாக இருவரும் அவரவர்கள் வீட்டில் சொல்லிவிட்டு சென்றனர். ஆனால் அவர்கள் பள்ளிக்கூடத்துக்குச் செல்லாமல் சென்னைக்கு சென்றனர். அங்கு சென்றதும் கவிதாவை சரஸ்வதி, தனது காதலன் பாலாஜிக்கு அறி முகப்படுத்திவைத்தார்.

ஏற்கனவே திட்டமிட்டபடி சரஸ்வதியும், பாலாஜியும் திருமணம் செய்து கொண்டார்கள். பாலாஜி, திருவாரூரை சேர்ந்த பிரபாகரன் என்பவரை கவிதாவுக்கு அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் அவர்களும் திருமணம் செய்து கொண்டார்கள்.

மேற்கண்ட விவரங்களை சரஸ்வதியும், கவிதாவும் போலீசாரிடம் தெரிவித்தர்கள்.

இதன்பின்னர் அவர்களது பெற்றோர்களுக்கு போலீசார் தகவல் கொடுத்து அவர்களையும் வரவழைத்து பேசினார்கள். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து சரஸ்வதியையும், கவிதாவையும் பவானி கோர்ட்டில் ஆஜர் படுத்தினார்கள்.

மாணவி கவிதாவை தனது நண்பர் பாலாஜி மூலம் திருமணம் செய்த வாலிபர் பிரபாகரன் மீது போலீசார் கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்து அவரையும் கைது செய்தனர். (கற்பே இல்லாத கேசு இது. “கற்பழிப்பு எங்கேயிருந்து வந்தது! இருந்தால் தானே அழிக்க முடியும்!) அவரை நேற்று மாலையில் பவானி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவருக்கு இன்று மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது.

--------------

பார்த்தீர்களா கொடுமையை!

1. மனைவி உயிருடன் இருக்கும்போது விவாகரத்து பெறாமல் கணவன் இன்னொருத்தியை திருமணம் செய்து கொண்டால் உடனே அவன் கைது செய்யப்படுவான். ஆனால் மனைவி “கணவனைப் பிடிக்கவில்லை” என்று சொல்லி இன்னொருவனை இழுத்துக்கொண்டு போகலம். அவள் கைது செய்யப்படமட்டாள்

2. அந்தப் பெண் இன்னொருவனோடு ஓடிவிட்டாள். ஆனால் கைது செய்வது அந்த ஆணைத்தான். அதுவும் “கற்பழிப்பாம்”! கணவனை அம்போ என்று விட்டுவிட்டு கண்டவனோடு ஓடியவளுக்கு “கற்பு” எங்கிருந்து வந்தது? அதை எப்படி ஒருவன் “அழித்தானாம்”!

விந்தையான சட்டங்கள், நடைமுறைகள்!

மொத்தத்தில் கலாசாரச் சீரழிவு முழுமையாக நடந்து முடிந்து விட்டது!

ஆகையால் ஆண்களே, திருமணம் என்னும் பாம்புப் புற்றில் கை வைக்காதீர்கள்!

3 மறுமொழிகள்:

')) said...

Follow-up news:

அந்தியூர், ஜுலை.10 - 2009. செய்தி: தினத்தந்தி

திருவாரூரில் இருந்து போலீசார் பிடித்து வந்த அந்தியூர் மாணவிக்கு ஈரோடு அரசு மருத்துவமனையில் நேற்று மருத்துவ பரிசோதனை நடந்தது. மாணவியை ஆசைவார்த்தை கூறி அழைத்துச் சென்று திருமணம் செய்து வைத்த ஆசிரியை மீது மாணவியை கடத்தியதாக போலீசார் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.

அந்தியூர் அருகே உள்ள நகலூர் முனியப்பம்பாளையம் அன்னை இந்திரா பள்ளிக்கூட ஆசிரியை சரஸ்வதி (வயது27) யும், அந்த பள்ளிக்கூட மாணவி கவிதா (17) வும் கடந்த மே மாதம் 23-ந் தேதி திடீர் என்று காணாமல் போனதும் ஆசிரியை சரஸ்வதியை சென்னையில் இருந்தும், மாணவி கவிதாவை திருவாரூரில் இருந்தும் போலீசார் பிடித்து வந்ததும் தெரிந்ததே.

போலீஸ் விசாரணையில், ஆசிரியை சரஸ்வதியும், மாணவி கவிதாவும் ஏற்கனவே திருமணம் ஆனவர்கள் என்பதும், திருமண வாழ்க்கை சரியாக அமையாததால் கணவருடன் வாழப்பிடிக்காமல் இருந்ததும் தெரியவந்தது. மேலும் ஆசிரியை சரஸ்வதி தனக்கு சென்னையில் ஒரு காதலன் இருப்பதாகவும் அங்கு சென்று அவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், தன்னுடன் வந்தால் நல்ல வரன் பார்த்து திருமணம் செய்து வைப்பதாக ஆசை வார்த்தை கூறி மாணவி கவிதாவை சென்னைக்கு அழைத்து சென்றதும் தெரிய வந்தது.

சென்னையில் காதலன் பாலாஜியை ஆசிரியை சரஸ்வதி திருமணம் செய்து கொண்டதும், அவரது உதவியுடன் திருவாரூரைச் சேர்ந்த பிரபாகரன் என்பவரை கவிதாவுக்கு திருமணம் செய்து வைத்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து, ஆசிரியை சரஸ்வதியையும் மாணவி கவிதா மற்றும் அவரை 2-வது திருமணம் செய்த திருவாரூர் பிரபாகரன் ஆகியோரை போலீசார் பவானி கோர்ட்டில் ஆஜர் செய்து மாஜிஸ்திரேட்டு உத்தரவின்பேரில் பவானி சப்-ஜெயிலில் அடைத்தனர்.

இந்த நிலையில், போலீசாரின் கோரிக்கை மனுவை ஏற்று, மாணவி கவிதாவை 2 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கி பவானி மாஜிஸ்திரேட்டு பகவதிஅம்மாள் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து மாணவி கவிதாவை போலீசார் அழைத்துச் சென்று விசாரித்தனர்.மேலும், நேற்று மாணவி கவிதா, பிரபாகரன் ஆகியோரை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது.

பிறகு கவிதாவும், பிரபாரகரனும் பவானி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது மாணவி கவிதாவிடம், காப்பகத்துக்கு செல்கிறாயா அல்லது பெற்றோருடன் செல்கிறாயா என மாஜிஸ்திரேட்டு பகவதி அம்மாள் கேட்டார். அதற்கு கவிதா, தனது பெற்றோருடன் செல்வதாக கூறியதால் அவர் பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டர். பிரபாகரனை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். (கட்டிக்கிட்டவன் பாடு அதோகதிதான். உல்லாசப் பெண்களுக்கு ஒன்றும் ஆகாது. அவர்கள் அடுத்தவனைத் தேடிப் போய் விடுவர்!)

')) said...

பாவம் இவர் இனிமேல் கோர்ட்டு கேசுன்னு சும்மா நாலஞ்சி வருசம் நாய்மாதிரி அலையனும்... அப்புறம் இவரு பசையுள்ள பார்டின்னா ஒரு பெரிய அமொன்டு புடிக்கிட்டு உட்டுருவாங்க...

')) said...

பாவம் இவர் இனிமேல் கோர்ட்டு கேசுன்னு சும்மா நாலஞ்சி வருசம் நாய்மாதிரி அலையனும்... அப்புறம் இவரு பசையுள்ள பார்டின்னா ஒரு பெரிய அமொன்டு புடிக்கிட்டு உட்டுருவாங்க...